கல்வி பற்றிய பழமொழி – Education Proverbs in Tamil
கல்வி பற்றிய பழமொழி:- கல்வி என்பது ஒரு தனி மனிதனின் அறிவுகள் மட்டுமில்ல அவரின் நல்லொழுக்கம் உடல் மனது மற்றும் சமுதாயத்தின் மதிப்பு நல்ல சிந்தனைகள் இது அனைத்தையும் உயர்த்தும் ஒரு சமூக அமைப்புகள் ஆகும். கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம் அறிவு திறமைகள் போன்ற அனைத்தும் நமக்கு தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பயன்பெறுதல் தான்.
Education Proverbs in Tamil:- இந்த கல்வி மற்றும் பண்பாடுகள் நடத்தை போன்றவற்றையும் நமக்கு தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் அறிவுள்ள மனிதனாக மாற்றி அமைப்பது கல்வி. இந்த உலகத்தில் மனிதனுக்கு மிகத் தேவை முக்கியமான ஒன்று கல்வி கற்றால் அதுவே அவர்களுக்கு மிகச்சிறந்த செல்வம் ஆகும். நம் எல்லோருக்கும் கல்வி வேண்டும் என்று கல்வியை கொடுத்தவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள்தான்.
1. தீய பண்பைத் திருத்திடும் கல்வி.. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும்.
2. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
3. கற்காதவன் அறியாதவன்.
4. அறிவைப் பெருக்குபவன் துயரத்தை பெருக்குவான்.
5. கல்வியால் பரவும் நாகரிகம்.
6. கல் மனம் போல் பொல்லாப்பில்லை.. கற்ற மனம் போல் நற்பேறில்லை.
7. கல்வியே நாட்டின் முதன் அரண்.
8. கல்லாதவரே கண்ணில்லாதவர்
தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
9. ஐயமே அறிவின் திறவுகோல்.
10. மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கு வேற்றுமை இல்லை.
கல்வி அறிவு பற்றிய பழமொழிகள்
11. அறிவே ஆற்றல்.
12. அறிவைப் பெருக்குபவன் துயரத்தை பெருக்குவான்.
13. அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது.
14. அனுபவமில்லாத அறிவு அரை கலைஞனை உருவாக்கும்.
15. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.
16. நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.
17. நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.
18. அரைக் கல்வி முழு மொட்டை.
19. அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.
20. அனுபவமில்லாத அறிவு அரை கலைஞனை உருவாக்கும்.
21. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
22. சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
23. கற்கையில் கல்வி கசப்பு கற்றபின் அதுவே இனிப்பு.
24. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.
25. கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
26. கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே.