நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு – Namakkal Kavignar
நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு: தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் தேசிய போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டு பெற்றவர். ராஜாஜியின் மனதிற்கினிய சோழர் உப்பு சத்தியாகிரக போராட்டங்களில் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருவது” என்றும் பாடல்களை இவர் எழுதி பாடி புகழ்பெட்டனர். இந்த பாடலின் பெருமைகள் எல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.
இவர் தேசியத்தையும் காந்தியையும் போற்றியவர் பால சங்கதாரா திலகர் போன்றவர்களை தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டனர். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் அறப்போராட்டம் செய்தால் மட்டுமே நாம் விடுதலை பெற முடியும் என்று முடிவெடுத்தனர். இந்த பதிவில் புகழ்பெற்ற மனிதனைப் பற்றி குறிப்புகள் நாம் பார்க்கலாம்.
நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு:
வெ. ராமலிங்கம் பிள்ளை பழைய சேலம் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் மோகனூர் என்னும் ஊரில் வெங்கட்ராமன் அம்மணியம்மாள் இருவருக்கும் மகனாக பிறந்தார். மோகனூரில் உள்ள காவல் துறையில் பணிபுரிந்து வந்தார் மற்றும் இவரின் தாயார் ஒரு கடவுள் பக்தியுள்ள பெண்மணி ஆவார். இவர் வெங்கட்ராமன் அம்மணியம்மாள் ஆகியோருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தவர்.
நாமக்கல் கவிஞர் பள்ளி வாழ்க்கை வரலாறு:
நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள நம்மாழ்வார் பள்ளிக் கல்வியில் அவர் பயின்றார். 1909 இல் திருச்சியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியில் பி ஏ கல்வி பயின்றார். இவர் ஆரம்ப காலங்களில் நாமக்கல்லில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும் பின்னர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காங்கிரஸின் செயலாளராகவும் கரூர் வட்டார காங்கிரஸ் தலைவராகவும் நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
யாரு இவன் தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல்லாயிரம் இளைஞர்களை தேச தொண்டர்களாக மாற்றினார் அரசின் தடை விதிமுறை மீறி கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றவர் 1930ல் நடைபெற்ற உப்பு சத்தியாகரக போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றவர். தமிழ்நாட்டின் முதல் அரச கவிஞர் பாதையும் பத்ம பூசன் பட்டமும் பெற்றவர் இவர் சாகித்ய அகாடமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு ஏற்றனர்.
தமிழனென்று என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவர் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் இருக்கும் அரசு தலைமைச் செயலகம் பத்து மாடி கட்டிடத்தில் இவரது பெயர் சூட்டப்பட்டு இருக்கும்.
நாமக்கல் கவிஞரின் நாட்டுப்பற்று:
முத்தமிழனும் ஓவிய காலையிலும் வள்ளுவர் சிறந்த விடுதலை போராட்ட வீரரும் ஆவார் இவர் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றால் சிறை தண்டனையும் அனுபவித்து வந்தார்.
‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு”
“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
“பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்’
என்னும் பாடல்களை உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் தொண்டர்களின் வாழிநடை பாடலாக பாடி செல்வதற்கு இயற்றி கொடுத்தார்.
நாமக்கல் கவிஞர் படைப்புகள்:
• இசை நாவல்கள்-3
• கட்டுரைகள்-12
• தன் வரலாறு-3
• புதினங்கள்-5
• இலக்கிய திறனாய்வுகள்-7
• கவிதை தொகுப்புகள்-10
• சிறு காப்பியங்கள்-5
• மொழிபெயர்கள்-4
நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள்:
1. மலைக்கள்ளன் (நாவல்)
2. காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
3. பிரார்த்தனை (கவிதை)
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள்
5. திருக்குறளும் பரிமேலகரும்
6. திருவள்ளுவர் திடுக்கிடுவார்
7. திருக்குறள் புது உரை
8. கம்பனும் வால்மீகியும்
9. என் கதை (சுயசரிதம்)
10. அவனும் அவளும் (கவிதை)
11. தமிழ் மொழியும் தமிழரசும்
12. மரகதவல்லி (புதினம்)
காந்திய கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்:
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19,1888 ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும்,கவிஞரும் ஆவார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேச பக்தி பாடல்களை பாடியவர் இவர் தேசியத்தையும் காந்தியத்தையும் போற்றியவர்.
மத்திய அரசும் மாநில அரசும் செய்த சிறப்புகள்:
கவிஞரின் நாட்டுப்பற்றை போற்றும் முறையில் அரசவை கவிஞராகவும் பின்னால் தமிழக சட்ட மேலாக உறுப்பினராகவும் நியமித்து சிறப்பித்தது மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதுகளை அளித்தனர்.
நாமக்கல் கவிஞர் பிறப்பு:
• இயற்பெயர் – ராமலிங்கம் இல்லை
• பிறப்பு – அக்டோபர் 19, 1888
• நமக்கு கவிஞர் பிறந்த ஊர் – மோகனூர்- நாமக்கல் மாவட்டம்
• இவரின் பெற்றோர்கள் – வெங்கட்ராமன், அம்மணிம்மாள்
• மறைவு – ஆகஸ்ட் 24, 1972
சாந்தியை இழக்காதே:
சுதந்திரம் தருகிற மகிழ்சியைக் காட்டிலும்
சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ”
அமிழ்தும் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்’
“நாட்டைக் காட்டிக் கொடுத்ததனால்
லாபம் அடைந்தவன் சண்டாளன்”
காந்தீயம் நம் உடமை – அதைக்
காப்பதும் நம் கடமை
பெண்மை:
“அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்து
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்”
எங்கள் தமிழ்:
“அருள் நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழின் குரலாகும்”
“பொருள்பெற யாரையும் புகழாது போற்றா தாரையும் இகழாது
அன்பும் அறனும் ஊக்கிவிடும் அச்சமென்பதை போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன் மொழியாம்’
நாட்டு வாழ்த்து:
‘இந்திய நாடிது என்னுடைய நாடே
என்று தினந்தினம் நீயதைப் பாடு
சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள
தூங்கிக் கிடந்தது போனது மாள
வந்தவர் போனவர் யாரையும் நம்பி
வாடின காலங்கள் ஓடின தம்பி
இந்தத் தினம் முதல் இந்திய நாடு
என்னுடை நாடெ ன்ற எண்ணத்தைக் கூடு’
முதல் கவிஞர் என போற்றப்படும் கவிஞர் யார்:
முதல் கவிஞர் என போற்றப்படுபவர். ராமலிங்கம் பிள்ளை. 15.08.1949 இல் அவர் அன்றைய ஆளுநரால் பதவியில் அமர்த்தபட்டனர்.
நாமக்கல் கவிஞர் இயற்றிய நூல்கள் எது:
இவர் இயற்றிய நூல்கள்-மலைக்கள்ளன் என் கதை (சுயசரிதம்) அவனும் அவளும், இலக்கிய இன்பம், காணாமல் போன கல்யாண பெண், பிரார்த்தனை, சங்கொலி, மாமன் மகள், தமிழன் இதயம், கவிதாஞ்சலி, தாயார் கொடுத்ததணம், தேமதுரத் தமிழோசை.
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்கள்:
தேன் பல ஆண்டுகள் வரை கெடாமல் இருப்பதை போலவே தமிழும் என்றும் கெடாமல் பாதுகாப்புடன் திகழ்கிறது.தேன் சாப்பிடு சாப்பிட உடல் நலம் பெருகும் தமிழ் கற்க கற்க உள்ள வளம் பெருகும்.அதனால் கவிஞர் தமிழை தேனுடன் ஒப்பிடுகிறார்கள்.
திருப்பூர் குமரன் வரலாறு |
[…] நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு […]
[…] நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு […]