காந்தி பற்றிய முழு தகவல்கள் || Mahatma Gandhi History In Tamil
காந்தியின் வாழ்க்கை வரலாறு:
காந்தி பற்றிய முழு தகவல்கள்: இந்தியா விடுதலை பெறுவதற்கு அகிம்சை வழியை கடைப்பிடித்து அதில் வெற்றியும் கண்டு இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தியடி அவர்கள். அகிம்சை அல்லது சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்ட அவரது அமைதியான போராட்டம் இந்திய மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டியதோடு அல்லாமல் விடுதலைப் போராட்டத்திற்காக அவர்களை போராட வைக்கும் செய்து பின்னர் விடுதலையும் பெற்றுக் கொடுத்தவர் தான் இந்த மகாத்மா காந்தி.
Biography of Mahatma Gandhi in Tamil
காந்தியின் முழு பெயர் – மோகன்தாஸ் கரண்சந்த் காந்தி
காந்தியின் பிறந்தநாள் –10/02/1968
காந்தியின் பெற்றோர் பெயர் – கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, புத்லி பாய்
காந்தியின் மனைவி பெயர் – கஸ்தூரிபாயை
காந்தியடிகள் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் – இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும்
காந்தியின் பிள்ளைகள் பெயர் – ஹரியால், மோகன்லால், ராம்தாஸ், தேவதாஸ்
காந்தி திருமணம் செய்த போது அவருக்கு வயது – 13 வயது
காந்தி இறந்த நாள் – 01/30/1948
மகாத்மா காந்தியின் பிறப்பு:
விடுதலைப் போராட்டத்திற்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில் அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் 1869 ஆம் ஆண்டு கரன்சன் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்லி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
மகாத்மா காந்தியடிகள் தான் இவர்கள் குடும்பத்தின் கடைசி வாரிசு. பின்னாளில் அவரே இவ்வுலகம் முழுவதும் போற்றக்கூடிய ஒரு மிகப்பெரிய தனிமனிதராய் உருவெடுத்து நின்றார்.
மகாத்மா காந்தியடிகளுக்கு 16 வயது இருக்கும் பொழுது அவருடைய தந்தையான கரன்சிந்த் காந்தியை இழந்தார்.
மகாத்மா காந்தியின் திருமணம்:
காந்தியடிகளுக்கு 13 வயது இருக்கும் பொழுது கஸ்தூரிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் காந்தி மற்றும் கஸ்தூரிபாய் தம்பதிகளுக்கு ஹரிலால் மணிலால் ராம்தாஸ் தேவதாஸ் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தன.
காந்தியடிகளின் இளமை பருவம்:
காந்தி பற்றிய முழு தகவல்கள்: திருமண வாழ்க்கையோடு தன்னுடைய பள்ளிப் படிப்பையும் காந்தியடிகள் படித்துக் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பில் சுமாரான மாணவராக திகழ்ந்த காந்தியடிகள் தன்னுடைய 18 ஆம் வயதில் வழக்கறிஞர் படிப்பின் மீது ஆர்வம் அதிகம் கொண்டமையால் அதனை கற்க இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார்.
வெற்றிகரமாக வழக்கறிஞர் படிப்பை முடித்த காந்தியடிகள் பின்னர் மும்பையில் ஒரு நீதிமன்றத்தில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இந்த வேலை அவருக்கு வெற்றிகரமாக இல்லாததால் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் விண்ணப்பங்களை நிரப்பும் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கே இருந்த ஆங்கிலேயர்கள் முறையற்ற ஆட்சியைக் கண்ட புங்கியிருந்த காந்தியடிகள் அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விண்ணப்பம் நிரப்பும் பணியும் பறிபோனது.
பின்னர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தனக்கு ஏற்ற வேலை இருப்பதைக் கண்ட காந்தியடிகள் தாதா அப்துல்லா எனும் கம்பெனியின் உதவியுடன் அங்கே சென்று சிறிது காலம் பணியாற்றினார்.
காந்தியடிகள் விடுதலைப் போராட்ட உணர்வு தூண்டியதற்கான முழு காரணங்கள்:
• இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா நாட்டில் தான் முதன் முதலில் விடுதலை ஏற்பட வேண்டும் என்ற உணர்வு அவருக்குள் எழுந்துள்ளது.
• 1893 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சென்ற காந்தியடிகள் அங்கு நிலவும் கருப்பு மற்றும் வெள்ளை இன மக்களுக்கு இடையேயான பாகுபாட்டை கண்டு மிகவும் வியந்து போனார் காந்தியடிகள்.
• வெள்ளையர் இல்லாத மக்களை துன்புறுத்துவதும், அவர்களுக்கு மதிப்பளிக்காமலும் சட்டவிரோதமான செயல்களில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்துவதையும் கண்டு பொங்கி எழுந்தார் காந்தியடிகள்.
• தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் என்னும் நகரில் ஒரு நீதிமன்றத்தில் பாலக்காடுவதற்காக காந்தி அவர்கள் அவருடைய தலையில் தலப்பாகை அணிந்து கொண்டு சென்றுள்ளார்.
• அதனைப் பார்த்த அங்கிருந்து நீதிபதிகள் அந்த தலப்பாகையை அகற்றும்படி கூறினார்கள் ஆனால் அதற்கு காந்தியடிகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.
• அதன்பின்பு இந்தியா செல்வதற்காக ரயில் பெட்டியில் முதல் வகுப்பில் தகுந்த பயணச்சீட்டுடன் செல்ல தயாராக இருந்தார்.
• இப்போது முதல் வகுப்பில் பயணித்த வெள்ளையர்கள் வெள்ளையர் அல்லாத மக்கள் முதல் வகுப்பில் பயணிக்க தகுதியற்றவர்கள் என்று கூறி காந்தியை அந்த ரயில் நிலையத்திலிருந்து துரத்தி அடித்தனர்.
• இத்தகைய துயரங்களைக் கண்ட காந்தியடிகள் விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டு ஒரு காரணமாக அமைந்தது.
காந்தியடிகள் காங்கிரஸ் என்னும் கட்சியை தொடங்குதல்:
காந்தி பற்றிய முழு தகவல்கள்: இத்தகைய துரங்களுக்குப் பார்த்த காந்தியடிகள் மீண்டும் தென்னாப்பிரிக்கா நாட்டில் 1894 ஆம் ஆண்டு ‘காங்கிரஸ்’ என்னும் புதிய கட்சியை ஆரம்பித்தார். இதன் நோக்கம் அனைவருக்கும் சுதந்திரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்பன போன்ற பல்வேறு கருத்துக்களை காந்தியடிகள் இந்த கட்சியின் மூலம் மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் அவர் ஆரம்பித்த காங்கிரஸ் கட்சிக்கு அவரே பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். குறிப்பாக 1906 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அகிம்சை வழிப் போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையேற்று நடத்தியதால் பலமுறை அதனால் அவர் சிறைக்கு சென்று வரவும் நேர்ந்தது.
பின்னர் அந்நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகள் காந்தியடிகளால் ஓரளவுக்கு சரி செய்யப்படவே அவர் மீண்டும் இந்தியா திரும்பினார்.
காந்தியடிகள் மீண்டும் இந்தியா திரும்புதல்:
1. காந்தியடிகள் மீண்டும் இந்தியா வந்த பிறகு ரவீந்திரநாத் தாகூர் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோருடன் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் மற்றும் சிறை சென்று திரும்பிய அனைத்து தகவல்களும் சொல்லப்பட்டு அவர்களுடன் நட்பு ஏற்பட்டது.
2. 1914 ஆம் ஆண்டு முதன்முறையாக காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக களம் இறங்கினார்.
3. அப்பொழுது உறுதுணையாக இருந்த பால கங்காதர திலகர் போராட்டத்தினால் உயிரிழக்கவே, அதன் பின்னர் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற மிகப்பெரும் நோக்கத்தோடு காந்தியடிகள்
முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
4. பால கங்காதர திலகர் போராட்டம் என்பது ஒரு தீவிரவாத அமைப்பு போன்ற செயல்களைக் கொண்டதாகும். ஆனால் காந்தியடிகள் அகிம்சை வழியை பின்பற்றியதால் பாலகங்காதர திலகரின் பல்வேறு நடைமுறைகள் காந்தியடிகளால் தகர்த்தெறியப்பட்டன.
காந்தியடிகளும் சுதந்திரப் போராட்டத்தின் பங்களிப்பும்:
1. சம்பரன் சத்தியாகிரகம் (1917)
2. கேடா சத்தியாகிரகம் (1918)
3. ஒத்துழையாமை இயக்கம் (1920-1922)
4. உப்பு சத்தியாகிரக போராட்டம் (1930)
5. வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)
காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு சில வரிகளில்:
• காந்தியடிகள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர் பந்தலில் பிறந்தார்.
• இவருடைய தந்தை பெயர் கரன்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் தாயார் பெயர் போர்பந்தர் என்பதாகும்.
• காந்தியடிகள் தன்னுடைய 13 வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.
• காந்தியடிகள் உடைய 16 வது வயதில் தன்னுடைய தகப்பனாரை இழந்தார்.
• மேலும் காந்தியடிகள் உடைய 19 ஆவது வயதில் தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர்வதற்காக இங்கிலாந்து பயணம் செய்தார்.
• இங்கிலாந்து நாட்டில் படிப்பை முடித்த காந்தியடிகள் 1893 ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்து பின்னர் மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டார்.
• தென்னாப்பிரிக்க நாட்டில் வெள்ளையர்கள் அல்லாத மக்களை ஆங்கிலேயர்கள் கொடுமைப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்த காந்தியடிகள் அவர்களுக்காக போராட்டத்தை தொடங்கி காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்பித்தார்.
• 1902 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டின் ஓரளவு பிரச்சனைகளை சமாளித்துவிட்டு இந்தியா திரும்பியபோதுதான் தெரிந்தது இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவை விட, ஆங்கிலேயர்கள் பல்வேறு மக்களை கொடுமைப்படுத்தியும் கொன்று குவித்து வந்ததையும் அறிந்து மிகப்பெரும் துன்பமுற்று விடுதலைப் போராட்டத்தில் இயங்கினார்.
காந்தி பற்றிய முழு தகவல்கள்
காந்தியடிகளின் இறப்பு:
காந்தி பற்றிய முழு தகவல்கள்: 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காந்தியடிகள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு வருடமும் நடந்தது:
• 1869 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் காந்தியடிகள் பிறந்தார்.
• 1882 ஆம் ஆண்டு கஸ்தூரிபாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
• 1885 ஆம் ஆண்டு அவருடைய தந்தையை இழந்தார்.
• 1888 ஆம் ஆண்டு ஹரிலால் முதல் குழந்தை பிறந்தது.
• 1890 ஆம் ஆண்டு தேவதாஸ் என்னும் குழந்தை பிறந்தது.
• 1892 ஆம் ஆண்டு மணிலால் என்னும் இரண்டாவது குழந்தை பிறந்தது.
• 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லா கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவிற்கு வேலைக்கு சென்றார்.
• 1894 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல் முறையாக இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார்.
• 1897 ஆம் ஆண்டு ராம்தாஸ் என்னும் மூன்றாவது குழந்தை பிறந்தது.
• 1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஜோக்கர்னெஸ் பேக் எனும் நகரில் முதல்முறையாக சத்தியாகிரகம் என்னும் அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
• 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு வந்தார்.
• மேலும் அதே வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி மும்பையில் உள்ள பெட்டார் சாலையில் காந்தியடிகளுக்கு வரவேற்பு விழா வழங்கப்பட்டது.
• 1919 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரவுலட் சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராட்டத் தொடங்கினார் காந்தியடிகள்.
• மேலும் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் காந்தி.
• 1921 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• 1922 ஆம் ஆண்டு ஒத்துழையாமை என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார் காந்தியடிகள்.
• மேலும் அதே ஆண்டு சவுரி சவுரா பகுதியில் போராட்டக்காரர்கள் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து ஐந்து நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
• 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கி அதற்காக 21 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டமும் இருந்தார் காந்தியடிகள்.
• 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி சுமார் 240 மைல் தூரம் அகமதாபாத்தில் இருந்து தண்டியை நோக்கி உப்பு சத்தியாகிரகம் பயணத்தை ஆரம்பித்தார்.
• 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ஆங்கிலேயருக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் காந்தியடிகள்.
• காந்தியடிகளின் அஹிம்சை வழி போராட்டத்தை கண்டு வியந்து போன ஆங்கிலேயர்கள் கடைசியாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தது.
• 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி காந்தியடிகள் நாதுரம் கோட்சேவால் என்னும் நபரால் மாலை 5 மணி 17 நிமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
[…] காந்தி பற்றிய முழு தகவல்கள் […]
[…] காந்தி பற்றிய முழு தகவல்கள் […]
[…] காந்தி பற்றிய முழு தகவல்கள் […]
[…] காந்தி பற்றிய முழு தகவல்கள் […]
[…] காந்தி பற்றிய முழு தகவல்கள் […]