ADVERTISEMENT
20 Easy Thirukkural in Tamil

20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் பொருள்கள்- 20 Easy Thirukkural in Tamil

  20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் பொருள்கள்- 20 Easy Thirukkural in Tamil

20 Easy Thirukkural in Tamil

 

20 Easy Thirukkural in Tamil திருக்குறள் உலகப் பொதுமறை நூல் என்று அனைவராலும் போற்றப்படும் நூலாகும். திருக்குறள் 1330 திருக்குறளில் பற்றி பார்க்கலாம். பள்ளி மாணவர்களின் முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை அனைவராலும் இந்த திருக்குறள் மிக சுலபமாக கற்றுகொள்ள இருக்கின்றது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் எளிமையான முறையில் அவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளது. நாம் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர். கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்கள்தான்.

 

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள் விளக்கம்:
எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாவது போல ஒட்டுமொத்த உலகிற்கு இறைவன் முதன்மையானவர் ஆவார்.

ADVERTISEMENT

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள் விளக்கம்:
அன்பு இல்லாதவன் தான் பார்ப்பதெல்லாம் தனக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். அன்பு உடையவன் தனக்கு சொந்தமானதை பிறருக்கு உரியதாக்குவான்.

3. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

பொருள் விளக்கம்:
இவ்வுலகில் எந்த ஒரு அறத்தையும் அழித்தவர்கள் அதிலிருந்து வெளிவர வழி இருக்கிறது, ஆனால் ஒருவர் நமக்கு செய்த உதவியை மறந்தவர்க்கு வழியில்லை.

4. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள் விளக்கம்:
ஒருவர் முன்பு செய்த நன்மையை மறப்பது அறம் அல்ல. அவர் செய்த தீமை, செய்தவுடன் மறந்து விடுவதுதான் அறம்.

ADVERTISEMENT

5. பொறுத்தல் இறப்பினை என்றும் -அதனை
மறத்தல் அதனினும் நன்று.

பொருள் விளக்கம்:
பிறர் தீமையை பொறுத்துக் கொள்வது நல்ல குணம், ஆனால் தீமையை மறப்பதும், தீமை செய்தவரை மறப்பதும் இன்னும் நன்மை தரும்.

6. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

பொருள் விளக்கம்:
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

7. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பொருள் விளக்கம்:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

ADVERTISEMENT

8. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

பொருள் விளக்கம்:
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

9. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

பொருள் விளக்கம்:
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

10. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

பொருள் விளக்கம்:
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

ADVERTISEMENT

Easy Thirukkural in Tamil

11. அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்

பொருள் பொருள்:

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சா திருத்தல் மடத்தன்மையாகும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மையாகும்.

12. அறிவுடையார் எல்லாம் உடையார் -அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

பொருள் பொருள்:

அறிவுடையவர்கள் தம் அறிவினாலே எல்லாம் உடையவராக கருதப்படுவார்கள். அறிவில்லாதவர்க்கு எது இருந்தும் எல்லாம் இருந்தும் அவர் இல்லாதவரே.

ADVERTISEMENT

13. இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.

பொருள் பொருள்:

செய்யும் தவறுகளை இடித்து உரைக்கும் சான்றோர்களோ அல்லது பெரியவர்களோ இல்லாத மன்னன் ஆயினும் தனிமனிதனாயினும் பகைவன் என ஒருவன் இல்லாமலே தானாகவே கெடுவான்.

14. காலம் கருதி இருப்பர்; கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள் பொருள்:
உலகத்தையே ஆழ நினைப்பவர் அதற்கான தக்க தருணம் வரும் வரை அதை எதிர்பார்த்து சோர்வின்றி காத்திருப்பர்.

15. குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

ADVERTISEMENT

பொருள் பொருள்:
ஒருவரின் நல்ல குணங்களையும் அவரின் கெட்ட குற்றங்களையும் அளவிட்டு பார்த்து அவற்றில் எது மிகுதியோ அவற்றை வைத்தே அவரை அறிய வேண்டும்.

16. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

பொருள் பொருள்:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்

17. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பொருள் பொருள்:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

18. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

ADVERTISEMENT

பொருள் பொருள்:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

19. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள் பொருள்:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

20. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள் பொருள்:
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .

Leave a Reply