ADVERTISEMENT
ரூ.10 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் 4.49 லட்சம் வட்டி பெறலாம்

ரூ.10 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் 4.49 லட்சம் வட்டி பெறலாம் || அருமையான அஞ்சலக சேமித்திட்டம்

ரூ.10 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் 4.49 லட்சம் வட்டி பெறலாம் || அருமையான அஞ்சலக சேமித்திட்டம்

ரூ.10 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் 4.49 லட்சம் வட்டி பெறலாம்

ரூ.10 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் 4.49 லட்சம் வட்டி பெறலாம்:- பொது மக்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலக அலுவலகங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது போன்ற திட்டங்களின் வட்டிகளின் விகிதங்கள் மற்ற வங்கிகளை விட அதிகமாக இருப்பதால் மக்கள் இதில் அதிகளவில் விரும்பி பணத்தை சேமிக்க விரும்புகின்றனர். இதுபோன்ற தனிநபர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் “போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்”.

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் நீங்கள் ரூபாய்-1000 செலுத்தி உங்கள் வங்கி கணக்கை ஆரம்பிக்கலாம். வங்கிக் கணக்கை தொடங்கிய பிறகு நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அதில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு தொகை எதுவும் இல்லை. 5-ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் உங்களால் முதலீடு செய்ய முடியும்.

முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்றது போல் 6.9% முதல் 7.5% வரை வட்டி அதிகரித்து கொடுக்கப்படுகிறது. அதாவது, 1-ஆண்டு, 2-ஆண்டுகள் 3-ஆண்டுகள் மற்றும் 5-ஆண்டுகள் என்ற முறையில் நாம் முதலீடு செய்ய முடியும். இதற்கு 6.9%, 7.0%, 7.1%, 7.2%, 7.5% என்ற முறையில் வட்டி கிடைக்கிறது.

முதுமை காலத்தை நீங்கள் நெருங்கும் தருணத்தில் மீண்டும் இதை புதுப்பிக்க இயலும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையின் வட்டி காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகையின் மீது அவசர தேவைகளுக்கு கடனும் வாங்கிக் கொள்ளலாம்.

வங்கி கணக்கு தொடங்கி 6-மாதத்திற்கு பிறகு முதுமை காலம் அடைவதற்கு முன்னதாகவே இந்த திட்டத்திலிருந்து நாம் வெளியேறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 5-ஆண்டுகள் காலத் திட்டத்தை தேர்வு செய்பவருக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80-சியின் வரி விலக்கு கொடுக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ரூபாய் 10-லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்:

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் ரூபாய் 10-லட்ச ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் நாம் எவ்வளவு பெற முடியும் என்பதை தற்போது பார்க்கலாம். ஒரு வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 6.9% வட்டியில் உங்களுக்கு வட்டியாக மட்டும் 70,806 கிடைக்கும் அதாவது 1-ஆண்டின் முடிவில் உங்களிடம் 10,70806 ரூபாய் உங்கள் கணக்கில் இருக்கும்.

இதுவே, 2-ஆண்டுகள் நீங்கள் முதலீடு செய்தால் 7% வட்டி கிடைக்கும். எனவே, உங்களின் 10-லட்சம் ரூபாய் முதலீடுக்கு 1,48,882 ரூபாய் வட்டி கிடைக்கும்.

அதுவே, 3-ஆண்டுகளுக்கு 7.1% வட்டி கிடைக்கும். அப்படி என்றால் 10-லட்ச ரூபாய் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே, 2,35,075 ரூபாய் கிடைக்கும்.

இதுவே, அதிகபட்சமாக 5-வருடம் முதலீடு செய்யும் போது உங்களின் 10-லட்சம் ரூபாய் கிட்டத்தட்ட 4,49,948 ரூபாய் வட்டியுடன் 14,29,948 என கிடைக்கும் இந்த வட்டி தொகைக்கு வரி விலக்கு பெற நம்மால் இயலும். எனவே, உடனே நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.

Read Also:- கம்பு தீமைகள்

Leave a Reply