ADVERTISEMENT
சிறந்த தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள்

சிறந்த தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள்

சிறந்த தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள்

சிறந்த தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள்

 

1. இவன் வாளுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
தேள்

2. பிடுங்கலாம் நட முடியாது அது என்ன?
தலைமுடி

3. உடம்பில்லா ஒருவன் 10 சட்டை அணிந்து இருப்பான் அவன் யார்?
வெங்காயம்

4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பானவன் யார்?
கரும்பு

ADVERTISEMENT

5. மரத்தின் மேல தூங்கும்போது மலைப் பாம்பு அல்ல அது என்ன?
விழுது

6. சிறகடித்துப் பார்ப்பவனை சமாதானத்திற்கு உதாரணம் என்று சொல்வார் அவன் யார்?
புறா

7. வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
உளுந்து

8. சின்ன மீசைக்காரன் மியாவ் ஓசைக்காரன் அவன் யார்?
பூனை

9. தொட்டு பார்க்கலாம் ஆனா எட்டி பார்க்க முடியாது அது என்ன?
முதுகு

10. பற்கள் இருக்கும் ஆனால் கடிக்க மாட்டான் அவன் யார்?
சீப்பு

ADVERTISEMENT

11. உறைக்குள் இருக்கும் உயிரை பறிக்கும்?
கத்தி

12. நான் போகாத பொந்துக்குள்ள என் தம்பி புகுந்து விட்டான்?
ஊசி நூல்

13. வாய் என்று கூப்பிடும் போ என்று சொல்லும் ஆனால் வாய் திறந்து பேசாது?
தொழிற்சாலை சங்கு

14. மூன்று கொம்பு மாடு ஒரு கொம்பால் முட்டுது?
நெருஞ்சி முள்

15. கணுக்கால் நீரில் கரடி நீச்சல் அடிக்குது?
தவளை

16. பேப்பர் கிடையாது வாய்ப்பாடு தெரியாது கணக்கிலோ புளி அது என்ன?
கால்குலேட்டர்

ADVERTISEMENT

17. பணத்தை அள்ளித் தருவதாக கூறி பணத்தை எல்லாம் அள்ளிக் கொள்ளும் பூதம் என்ன?
லாட்டரி சீட்

18. உலகம் எங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறேன் அவன் யார்?
கடல் அலை

19. உள்ளே இருந்தால் ஓடி திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும்?
மீன்

20. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார்?
மஞ்சள்

தமிழ் விடுகதைகள்

21. இடி இடிக்கும் மின்னல் வண்ணம் மழை பெய்யாது அது என்ன?
பட்டாசு

22. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கிய வரை சீரழிப்பான் அவன் யார்?
மீன் வலை

ADVERTISEMENT

23. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது அது என்ன?
பாம்பு

24. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும் அது என்ன?
மிருதங்கம்

25. அடித்து நொறுக்கி அணில் போட்டால் ஆவியாக தோன்றிய அழகாய் மணக்கும் அது என்ன?
சாம்பிராணி

26. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல வேகமாய் ஓடும் மான் அல்ல கால்கள் உண்டு மனிதன் அல்ல அது என்ன?
சைக்கிள்

27. உலகம் எங்கும் சுற்றும் அவனை யாரும் கண்டதில்லை அவன் யார்?
காற்று

28. கையை வெட்டுபவர் கழுத்தை வெட்டுபவர் காலை வெட்டுபவர் அவர் யார்?
தையல்காரர்

ADVERTISEMENT

29. தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ என்ன பூ?
உப்பு

30. கோவிலுக்கு போனேன் கும்பிடு போட்டேன் பூவில்லாத இலை போற்றி வைத்தேன் பழுக்காத காயை பணிந்து வைத்தேன் விதை இல்லா கனியை வேண்டி வைத்தேன் அது என்ன?
பூ இல்லாத இலை வெற்றிலை, பழுக்காத காய் தேங்காய், விதை இல்லாத கனி வாழைப்பழம்

31. தங்கச்சி மின்வாள் அண்ணன் மத்தளம் கொட்டுவான் அம்மா தண்ணீர் தெளிப்பான் அவர்கள் யார்?
மின்னல் இடி மழை.

32. ஒரு மாதத்தின் பெயர் கொண்ட பூ?
டிசம்பர் பூ

33. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம் மூத்த பெண் ஆற்றிலே நடு பெண் காட்டிலே கடைசி பன் வீட்டிலே அவைகள் என்ன?
ஆற்றில் முதலை
காட்டில் உடும்பு
வீட்டில் பல்லி

34. வாடையில் வாடாத நீர் ஒருவரும் குடிக்காத நீர் அது என்ன?
கண்ணீர்

ADVERTISEMENT

35. தலை போனால் மறைக்கும் இறைப்போனால் குறைக்கும் கால் போனால் குதிக்கும் மூன்று ஒன்று சேர்ந்தால் முந்தி ஓட்டம் பிடிக்கும் அது என்ன?
குதிரை

36. ஆயிரம் பேர் அனுபவித்தாலும் ஆரவாரம் இராது அவர்கள் யார்?
எறும்பு கூட்டம்

37. நாள் மூளை கிணறு நவரத்தின கிணறு எட்டிப்பார்த்தல் சொட்டு தண்ணீர் இல்லை அது என்ன?
அச்சு வெல்லம்

38. நடைக்கு உவமை நலனுக்கு தூதுவன் அவன் யார்?
அன்னம்

39. நாள் மூல சதுக்கம் 50 பேர் அடக்கம் அது என்ன?
தீப்பெட்டி

40. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவர் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
தேன்கூடு

ADVERTISEMENT

41. முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை கடை இரண்டை ஐந்தருவி ஜீவனுக்கு கட்டுவது யார் இரண்டு மூன்று திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே முதலும் கடைசியும் சேர்ந்தால் கையில் அந்த பெண் மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
கண்மணி

42. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்?
வெண்டைக்காய்

43. தொட்டுவிட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்திடுவான்?
மருதாணி

44. முள் இருந்தும் குத்தாதவன் யார்?
கடிகாரம்

45. அச்சில்ல சக்கரம் அசைந்தாடும் சக்கரம் அணிந்தால் அழகாகும் பெண்ணின் கரம் அது என்ன?
வளையல்

46. ஓடுமாம் சாடுமாம் ஒற்றை காலில் நிற்குமாம் அது என்ன?
கதவு

ADVERTISEMENT

47. தட்டு தட்டாய் மல்லாந்திருக்கும் ஒரு சொட்டு தண்ணீர் ஒட்டாது?
தாமரை இலை

48. நன்றாக சுமை தாங்கும் நன்றாக உதை உதைக்கும்?
கழுதை

49. அகற்றுவான் அலர்வான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
நாக்கு

50. உடம்பெல்லாம் சிவப்பு இவருடைய கொடுமை பச்சை அவன் யார்?
தக்காளி

விடுகதைகள் மற்றும் விடைகள்

51. இரவும் பகலும் ஓய்வில்லை படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
இதயம்

52. தொட்டுவிட்டால் மூடிக்கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
தொட்டால் சுருங்கி செடி

ADVERTISEMENT

53. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும் காயாப் கண்ணுக்கு தெரியாது இது என்ன?
வேர்க்கடலை

54. நீல நிற மேடையிலே கோடி மலர் காயுது?
விண்மீன்கள்

55. தாடிக்கார அரசனுக்கு காடெல்லாம் சொந்தம் அவன் யார்?
சிங்கம்

56. மழையோடு வந்து மலையோடு சென்று ஓடும் இதற்கு வாழ்வு ஒரு நாள் மட்டுமே?
ஈசல்

57. தொட முடியாத உயரத்தில் தொடர்ந்து வரும் ராணி பகலில் வெளிவராத தேனி அவள் யார்?
நிலவு

58. நாம் சாப்பிடுவதற்கு வாங்கும் ஒரு பொருளை கடைசி வரை சாப்பிட முடியாது அது என்ன?
தட்டு

ADVERTISEMENT

59. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன்?
சூரியன்

60. கடைசி வார்த்தையில் மானம் உண்டு முதல் வார்த்தையின் நன்மைக்காக இருந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
பட்டு துணி

61. ஒரு அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன?
பற்கள்

62. பாலாற்றின் நடுவே கருப்பு மின் தெரியுது அது என்ன?
கண்கள்

63. ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல சூடு கொடுக்கும் தீயல்ல பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?
சூரியன்

64. சிவப்பான பெட்டிகள் கருகுமணி முத்துக்கள் அது என்ன?
பப்பாளி விதைகள்

ADVERTISEMENT

65. வானத்தில் பறக்கும் பறவை இது ஊரையே சுமக்கும் பறவை அது என்ன?
விமானம்

66. கடுகு மடிக்க இலை இல்லை யானை படுக்க இடம் உண்டு அது என்ன?
சவுக்கு மரம்

67. விடிந்தவுடன் வேலையில் இறங்குவான் வேலை முடிந்தவுடன் மூளையில் கிடப்பான் அவன் யார்?
விளக்கமாறு துடைப்பான்.

68. மணல்விழியில் ஓடும் தண்ணீரில் கேட்காத கப்பல் அது என்ன?
ஒட்டகம்

69. கையுண்டு கழுத்து உண்டு தலை உண்டு உயிரில்ல அது என்ன?
சட்டை

70. கட்டின மாம்பழம் திட்டுன்னு விழுகுது கண்டவன் ரெண்டு பேரு எடுத்தவன் 10 பேரு திண்டவன் பதினாறு வேறு ருசி பார்த்தவன் ஒருத்தன் அது என்ன?

ADVERTISEMENT

கண்டவன் ரெண்டு பேருனா கண்ணு எடுத்தவன் 10 பேர் என்றால் இரு கை விரல்கள் திண்டவன் 16 நா பல்லு ருசி பார்த்தவன் ஒருத்தன் நாக்கு

சிறந்த தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள்

71. வெளியிலே பறந்திருக்கும் வெள்ளை பூ பூத்திருக்கும் கணியம் சிவந்திருக்கும் கவிஞருக்கும் விருந்தாகும் அது என்ன?
கோவைப்பழம்

72. ஓடி இருப்பான் பிச்சை ஒருநாள் கண்டறியான் காடோரிவான் தீர்த்தக்கரை சேர்வான் தேட நடக்கும்ங்கால் நாள் உண்டு நல் தலை ஒன்றொன்று படுக்கும்போது அவை இல்லை பார் அது என்ன?
ஆமை

73. எங்க அக்கா சிவப்பு குளித்தால் கருப்பு அது என்ன?
அடுப்புக்கரி

74. பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்கு கின்ற பாம்புகள்?
புடலங்காய்

75. கிண்ணம் போல் பூ பூக்கும் பானை போல் காய் காய்க்கும்?
பூசணிக்காய்

ADVERTISEMENT

76. உள்ளே செல்வதற்கு எளிதாகவும் வெளியே வருவதற்கு கடினமாகவும் இருக்கும் அது என்ன?
பிரச்சனைகள்

77. இளமையில் உயரமாகவும் முதுமையில் குள்ளமாகவும் மாறுபவன் யார்?
மெழுகுவர்த்தி

78. ஒரு அறையின் அனைத்து இடங்களையும் இதனால் நிரப்ப முடியும். ஆனால் எந்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளாது அது என்ன?
மணி ஓசை

79. ஒற்றைக்கல் ஆட்டக்காரன் ஒய்யார ஆட்டக்காரன் ஓயும் போது மண் சேர்வான் அவன் யார்?
பம்பரம்

80. படிக்காத சோறு கொதிக்காத குழம்பா அது என்ன?
பொங்கல் சட்னி

Leave a Reply