ஐபிஎல் 2024 இன்று தொடங்க உள்ள 17-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றது தற்போது ஐபிஎல் நிர்வாகம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஐபிஎல் தொடர் ஆரம்பித்த 2008-ஆம் ஆண்டு சீசனில் இருந்து 2023-வரை 14-ஆண்டு காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டனாக மகேந்திர சிங் தோனி மட்டுமே அணியை வழிநடத்தி வந்துள்ளார். இதில்,பத்து முறை 10-முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடை ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
தற்போது தோனிக்கு 42-வயதாகும் நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தான் மகேந்திர சிங் தோனியின் கடைசி தொடராக இருக்க கூடும் என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு காரணம், தோனி தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கும் போது நீண்ட முடியுடன் தோற்றத்தில் தான் விளையாட ஆரம்பித்தார். அது போன்று தான் தற்போது நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியிலும் தன்னுடைய முடியின் ஹேர் ஸ்டைலை வைத்துள்ளார்.
தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தற்போது தோனி விலகியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால், கடந்த வருடமே தோனியின் கடைசி சீசனாக இருக்க கூடும் என்று ரசிகர்கள் வேதனைப்பட்டனர். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் மஞ்சள் ரசிகர் படை ஏராளமாக குவிந்தனர். ஆனால், ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக இன்னும் ஒரு ஆண்டு காலம் விளையாட விரும்புகிறேன் என தோனி பேட்டியளித்தார். அந்த வகையில் பார்க்கும்போது இந்த வருடம் தான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக் கூடும்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அனியை அடுத்த தலைமுறைக்கு வழி நடத்தும் வகையில் ஒரு திறமையான வீரரை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு தற்போது மகேந்திர சிங் தோனியிடம் இருக்கிறது. இதனால், கேப்டன் பதவியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களிடம் கேப்டன் பதவி ஒப்படைத்துவிட்டு ஒரு வீரராக மட்டுமே அணியில் இந்த ஆண்டு மகேந்திர சிங் தோனி விளையாட இருக்கிறார். இதனை, ஐ.பி.எல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தோனி கேப்டன் பதவியில் இருந்து வழி நடத்த முடியாத சென்னை சூப்பர் கிங்ஸ் அனியை பார்க்க முடியவில்லை என்ற சில ரசிகர்கள் வருத்தத்தில் இணையதளத்தில் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர், இதுதான் தோனியின் கடைசி ஐ.பி.எல் சீசனாக இருக்கும் என்ற வேதனை மனதை பெருதளவு காயப்படுத்துகிறது என்றும் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்