தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு || கோவையில் அண்ணாமலை தென் சென்னையில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டி
தற்போது பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை விரைவில் முடித்து ஏப்ரல் 2-வாரத்திற்குள் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளும், ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக கட்சி சார்பாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளரின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் நெல்லையில் நாயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் தாமாக.விற்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியல்:
1. தென் சென்னை – தமிழிசை சௌந்தர்ராஜன்
2. மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
3. கோவை – அண்ணாமலை
4. கன்னியாகுமரி – பொன் ராதாகிருஷ்ணன்
5. கிருஷ்ணகிரி – நரசிம்மன்
6. நீலகிரி – எல்-முருகன்
7. நெல்லை – நாயினார் நாகேந்திரன்
பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக மற்றும் அ.ம.மு.க தொகுதிகள்:
அ.ம.மு.க தொகுதிகள்:
• அ.மா.மு.க கட்சி டி.டி.வி தினகரனின் சார்பில் திருச்சி மற்றும் தேனி தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
• த.மா.கா.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, ஈரோடு போன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளது
• தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
• இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
• புதிய நிதி கட்சி வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறது.
• இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கையில் போட்டியிட உள்ளது.
• ஓ.பி.எஸ்.சின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளது.
பா.ம.க கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
பா.ஜ.க கட்சியின் கூட்டணியில் பாமக கட்சி போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, தருமபுரி விழுப்புரம், கள்ளக்குறிச்சி,சேலம் போன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.