ADVERTISEMENT
அஸ்வகந்தா தீமைகள்

அஸ்வகந்தா தீமைகள் || Benifits Of Ashwagandha in Tamil

அஸ்வகந்தா தீமைகள் || Benifits Of Ashwagandha in Tamil

அஸ்வகந்தா தீமைகள்

Benifits of Ashwagandha in Tamil:

அஸ்வகந்தா தீமைகள்:  அஸ்வகந்தா மூலிகைகளின் “ராஜா” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அஸ்வகந்தா ஒரு மூலிகை பொருளாகும். அஸ்வகந்தா மூலிகை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம். ‘அஸ்வம்’ என்றால் வஞமொழியில் “குதிரை” என்று பொருள் ‘கந்தம்’ என்றால் “கிழங்கு” என்பது பொருள். அஸ்வகந்தாவின் இலையினை நுகர்ந்து பார்த்தால் குதிரையின் வாசம் வருமாம் அதனால்தான், இதை அஸ்வகந்தா என்று வடமொழியில் கூறுகின்றனர். அஸ்வகந்தாவின் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அஸ்வகந்தாவின் பயன்கள் || அஸ்வகந்தா பயன்கள் என்ன?

1) இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:

உயர் இரத்த அழுத்தம், மார்பு வலி போன்றவற்றை குறைக்கிறது. உடலின் கெட்ட கொழுப்புகளை சீராக பராமரிக்கிறது. இதனால், இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு போன்ற ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது.

2) பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் || ashwagandha benifits for female:

இனப்பெருக்கத்தின் போது ஹார்மோன்களின் குறைபாடுகளின் காரணமாக கருவுறாமை, ஆண்மை மற்றும் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. அஸ்வகந்தா மன அழுத்தத்தை குறைத்து இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.

ADVERTISEMENT

இனப்பெருக்க ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது. கார்டிசோலின் அளவை குறைத்து அட்ரீனல் சுரப்பிகளை வலிமைப்படுத்துவதில் அஸ்வகந்தாவில் உள்ள சத்துக்கள் மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது.

3) ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

ஆண்களுக்கு ஆண்மை குறைபாட்டை போக்கும் மருந்துகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக அஸ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது.இனப்பெருக்க ஆரோக்கியத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்துவதற்கும் அஸ்வகந்தா ஒரு இயற்கையான மருந்தாக சித்த மருத்துவத்தில் பார்க்கப்படுகிறது.

இந்த மூலிகை செடியில் டெஸ்டோஸ்டிரோன் அதிகளவு சக்தி வாய்ந்த காணப்படுகிறது என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தி, கருவுறுதலை அதிகரிக்கக்கூடும்.

4) முடி வளர்வதற்கு:

DHEA-எனப்படும் ஒரு வகை இயற்கை ஹார்மோனின் உற்பத்தியை அஸ்வகந்தா அதிக அளவு தூண்டுகிறது. இதன் மூலம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை இருக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ADVERTISEMENT

இதன் மூலமாக வளமான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை உடம்பில் செயல்படுத்துகிறது.

5) சரும அழகிற்கு உதவுகிறது:

அஸ்வகந்தா தீமைகள்:  அஸ்வகந்தா வேரில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன்கள் மற்றும் ஆன்ட்டிமைக்ரோபியல் பண்புகள் அதிக அளவு காணப்படுகிறது. இவை, சருமத்தில் உண்டாகும் தொற்றுகள் மற்றும் முகப்பருவிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

அதுமட்டுமின்றி கொலாஜனை அதிகரித்து சருமத்தை இளமையோடு வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

6) அஸ்வகந்தா பவுடர் முகத்திற்கு:

அஸ்வகந்தா பொடியை தயிர் அல்லது பால் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட்டு போல் குலைத்துக் கொள்ள வேண்டும். இதை, கழுத்து, முகம்,கை போன்றவற்றில் நன்றாக தேய்த்து முகத்தை மசாஜ் செய்தது போல் வைத்துக்கொண்டு 30-நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருக்க மிகவும் உதவுகிறது.

அஸ்வகந்தா நன்மைகள்:

• குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதுகெலும்பு மற்றும் மூட்டுகள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

• பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே ஆரோக்கியமான இனப்பெருக்க ஹார்மோன்களை தூண்டுவதில் பெரும் பங்கு வைக்கிறது.
மன அழுத்தத்தை குறைத்து, உளவியல் செயல்முறைகளை அமைதிப்படுத்துகிறது.

• தைராய்டு சுரப்பிகளின் வளர்ச்சியை சீராக பராமரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணியை செய்கிறது.

• நிம்மதியான தூக்கத்தை உடலுக்கு அளிக்கிறது.

• உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ADVERTISEMENT

• அட்ரீனல் சுரப்பிகள் சீராக செயல்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

• தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், தசை கூடுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அஸ்வகந்தா மாத்திரையின் பயன்கள் || ashwagandha tablet uses in tamil:

அஸ்வகந்தா தீமைகள்:  அஸ்வகந்தா மாத்திரை மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. இதனால், தனி நபரின் மன அழுத்தத்திறனை மேம்படுத்தலாம்.

மன அழுத்தம் அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனின் (ACTH) சுரப்பை அதிகரிக்கும் பணியை செய்கிறது. இது உடலில் உள்ள கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது.

அஸ்வகந்தா தீமைகள்:

அனைத்து மூலிகைகளிலும் எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இருக்கக்கூடும். அது போல தான் இந்த அஸ்வகந்தாவிலும் சில தீமைகள் இருக்கிறது.

1) கர்ப்பிணிப் பெண்கள் அஸ்வகந்தா சாப்பிடலாமா:

ADVERTISEMENT

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் அஸ்வகந்தா மூலிகை பொருளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அஸ்வகந்தா மூலிகையை பயன்படுத்துவது கூடாது.

2) வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்:

அஸ்வகந்தா மூலிகை அதிகளவு பயன்படுத்தினால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் போன்ற ஏராளமான பிரச்சனைகள் அஸ்வந்த மூலிகை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது உண்டாகும்.

3) கல்லீரலை பாதிக்கும்:

மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அஸ்வகந்தா மூலிகை பொருளை நாம் எடுத்துக் கொண்டாலோ அல்லது மருத்துவர் கூறிய அளவிற்கு மேல் சாப்பிட்டாலும் நமது உடலில் அதிக அளவு பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

அதிலும், குறிப்பாக அஸ்வகந்தா மூலிகை அதிக அளவு பயன்படுத்துவதனால் கல்லீரல் வீக்கம், கல்லீரல் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

4) ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாமா:

அஸ்வகந்தா தீமைகள்:  சிலருக்கு உடலில் ஒவ்வாமை பாதிப்பு அதிக அளவு காணப்படும். இதனால், இந்த அஸ்வகந்தா மூலிகை பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, தோல் சம்பந்தப்பட்ட நோய்களான சொரி சிரங்கு, தோல் அரிப்பு, தோல் அலர்ஜி, தோலில் ஏற்படும் புண் மற்றும் தோல் வறட்சி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அஸ்வகந்தா மூலிகையை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

5) பிற மருந்துகள் சாப்பிடுபவர்கள் சாப்பிடக்கூடாது:

வேறு ஏதும் உடம்பில் பிரச்சினை இருந்து அதற்கான ஆங்கில மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு மருந்துகள், மயக்க மருந்துகள் போன்ற பிற மருந்துகளை சாப்பிடும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அஸ்வகந்தா மூலிகை பொருளை சாப்பிடுவது கூடாது.

அஸ்வகந்தா தமிழ் பெயர் || ashwagandha tamil name:

அஸ்வகந்தா தீமைகள்: அமுக்கிரி, அமுக்கிராவுக்கு அஸ்வகந்தி அமுக்குரவி, அஸ்வகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, அசுவம் கிடிச்செவி ஆகிய பெயர்கள் அஸ்வகந்தாவிற்கு உண்டு.

அஸ்வம் என்றால் வடமொழியில் ‘குதிரை’ என்று பொருள்.கந்தம் என்றால் ‘கிழங்கு’ என்பது பொருள்

ADVERTISEMENT

அஸ்வகந்தா ஆண்மை:

ஆண்களுக்கு ஆண்மை குறைபாட்டை போக்கும் மருந்துகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக அஸ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது.இனப்பெருக்க ஆரோக்கியத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்துவதற்கும் அஸ்வகந்தா ஒரு இயற்கையான மருந்தாக சித்த மருத்துவத்தில் பார்க்கப்படுகிறது.

இந்த மூலிகை செடியில் டெஸ்டோஸ்டிரோன் அதிகளவு சக்தி வாய்ந்த காணப்படுகிறது என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தி, கருவுறுதலை அதிகரிக்கக்கூடும்.

மருத்துவ குறிப்பு || அஸ்வகந்தா மருத்துவ குணங்கள்:

அஸ்வகந்தா சூரணம்:

அஸ்வகந்தா தீமைகள்: அஸ்வகந்தாவின் வேறு பொடியை நன்றாக பாலுடன் கலந்து எடுத்துக் கொள்வது ஆண் மலட்டுத்தன்மை மற்றும் விரைப்புத்தன்மையை சீராக்க உதவுகிறது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை முற்றிலும் நீக்குகிறது.

அஸ்வகந்தா லேகியம் கிடைக்கும் இடம்:

அஸ்வகந்தா லேகியம் நாட்டு மருந்து கடைகளில் அதிக அளவு கிடைக்கிறது.

அஸ்வகந்தா விலை:

• அஸ்வகந்தா பவுடர் 1-கிலோ – 885-ரூபாய்

• 200 கிராம் பவுடரின் விலை – 200 ரூபாய்

ADVERTISEMENT

• 400 கிராம் பொடியின் விலை – 501 ரூபாய்

அஸ்வகந்தா பொடி எப்படி சாப்பிட வேண்டும்?

அஸ்வகந்தா தீமைகள்:  அஸ்வகந்தா பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் மன அழுத்தம் குணமாகும். அஸ்வகந்தா பொடி அல்லது வேரை பயன்படுத்தலாம். இதனை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி அதில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தினந்தோறும் இதை எடுத்துக் கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபட பெரிதும் உதவுகிறது.

Read Also:- மூக்கிரட்டை கீரையின் தீமைகள்

Leave a Reply