பெண்கள் உடல் எடை குறைக்க || Women’s Weight Lose Tips in Tamil
பெண்கள் உடல் எடை குறைக்க tamil:
பெண்கள் உடல் எடை குறைக்க:- பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பொழுது அழகான தோற்றத்தில் காட்சியளிக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு அதிக அளவு எடை கூடி சற்று பருமனாக காணப்படுகின்றனர். இது ஒரு சிலருக்கு சகஜமாகவும், இன்னும் சிலருக்கு பார்ப்பதற்கு அருவெறுப்பாகவும் காணப்படுகிறது.
இதுபோன்று எடை கூடி காணப்படும் பெண்களுக்கு இயற்கையாகவே நம் வீடுகளில் உள்ள பொருட்களைக் கொண்டு எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உண்டு. அதைப்பற்றி விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
5 நாட்களில் உடல் எடை குறைய:
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுதல்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின்கள்,நார் சத்துக்கள்,புரதங்கள்,கார்போஹைட்ரேட் போன்றவை காணப்படுகிறது.இது இயற்கையில் நாம் சாப்பிடும் பொழுது உடலுக்கு எந்த ஒரு தீங்கை விளைவிக்காமல் ஆரோக்கியமான உணவுகள் ஆகும்.
இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகளவு காணப்படுகிறது. இதனால், இதை சாப்பிடுவதன் மூலமாக நோய்களை எதிர்த்து போராடுகிறது. அதன் காரணமாக உடம்பில் கெட்ட கொழுப்புகள் சேருவதை தடுக்கிறது.
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியும். ஆனால், பிரசவம் முடிந்த 6-மாத காலங்கள் பெண்கள் உடற்பயிற்சி செய்வது தவறான செயலாகும்.
ஏனென்றால், பிரசவம் நிறைவடைந்த பெண்கள் உடற்பயிற்சி செய்வதனால் அது சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை என ஒவ்வொரு பிரசவத்திற்கு சில வித்தியாசங்கள் உண்டு. அதற்கேற்றது போல் தான் உடற்பயிற்சி செய்ய முடியும்.
உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக இளம் தாய்மார்கள் யோகா, தியானம் போன்ற நிலைகளில் இருப்பதனால் மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
சிறந்த தூக்கம்:
பெண்கள் கண்டிப்பாக தூங்குவது மிகவும் முக்கியம். பொதுவாக பகலில் தூங்கினால் ஊளைச்சத்து ஏற்பட்டு உடல் எடை அதிகமாகும். ஆனால், பிரசவத்திற்கு பிறகு உள்ள காலங்களில் நன்றாக தூங்கினால் மட்டுமே ஆரோக்கியமான மற்றும் பழைய உடல் நிலையை திரும்பப் பெற முடியும்.
தாய்ப்பால் கொடுப்பது:
இன்று பெரும்பாலான பெண்கள் நினைக்கும் ஒரு தவறான செயல் தான் தாய்ப்பால் கொடுத்தால் உடல் எடை கூடும் என்று நினைக்கின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்க ஒரு தவறான செயல். ஏனென்றால், தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாக தாயின் எடை எப்பொழுதும் அதிகரிக்காது. அதுமட்டுமில்லாமல், தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாக அவர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக காணப்படும்.
மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்:
உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள் மன அழுத்தத்தை குறைப்பது மிகவும் முக்கியம். இந்த மன அழுத்தம் “கார்டிசொல்”எனப்படும் பசியை தூண்டும் ஹார்மோனை உடலில் அதிகரிக்க செய்யும்.
இதற்கு யோகா,உடற்பயிற்சி போன்ற செயல்களை செய்வதன் மூலம் ஓரளவுக்கு மன அழுத்தம் குறைந்து மனம் நிம்மதியாக காணப்படும்.
தண்ணீர் குடிக்கலாம்:
பெண்கள் உடல் எடை குறைக்க:- உணவிற்கு முன்பு அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமாக அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப்பிடுவதை தவிர்க்க முடியும். அதுமட்டுமில்லாமல்,தண்ணீர் நம் உடம்பில் இருக்கும் அதிகளவு தேவையில்லாத கலோரிகளை அழிப்பதற்கும் மிகவும் உதவுகிறது.
உணவிற்கு முன்பாக தண்ணீர் குடிப்பவர்களின் உடல்நிலை 44-சதவீதம் வேகமாக குறைகிறது என மருத்துவ ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
யோகா செய்தல்:
யோகா செய்வதன் மூலம் உடல் எடையை நிச்சயமாக கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க முடியும். இது மனதிற்கு நிம்மதியாகவும் இருக்கும்.
அதுவும் உடல் எடையை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இரண்டு முக்கியமான ஆசன முறைகள் உண்டு.அவை,
1. புஜங்காசனம்
2. திரிகோணாசனம்
கிரீன் டீ குடிக்கலாம்:
நம் சாதாரணமாக பாலில் போடும் டீ,காபி போன்றவற்றில் கொழுப்பு சத்துக்கள் அதிகமாக காணப்பட்டு. இது உடல் எடையை அதிகரிக்க கூடும். ஆனால்,கிரீன் டீ குடிப்பதன் மூலமாக அதில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதில் காணப்படுகிறது.
இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 அல்லது 4 முறை கிரீன் டீ குடித்தால் உடல் எடை கட்டுப்பாட்டுகள் இருக்கும். இது உடலுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்:
பெண்கள் உடல் எடை குறைக்க:- பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக அதில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் உடம்பில் சேர்ந்து அதிக அளவு கலோரியை உடலில் செலுத்துகிறது. இதனால், இது போன்ற உணவுகளை தவிர்க்கும் பட்சத்தில் பெண்களுக்கு தேவையற்ற கலோரிகள் உடம்பில் சேர்வதை தடுக்க முடியும்.இதனால், உடல் எடையை குறைத்து கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க முடியும்.
மாதவிடாய் அல்லது ஹார்மோன் மாற்றம்:
மாதவிடாய் தாமதம் மற்றும் சரியான நாட்களில் நடைபெறாமல் இருப்பதால் பெண்களுக்கு உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.
இந்த ஹார்மோன் மாற்றங்களால் உடலில் அதிகளவு வீக்கங்கள் காணப்படலாம்.அதுமட்டுமில்லாமல், கெட்ட கொழுப்புகள் கரைவதை இது முற்றிலும் பாதிக்கும்.
மெனோபாஸ் மற்றும் பெரிமெனோபாஸ் பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடல் எடை குறைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
நிரந்தரமாக உடல் எடை குறைய:
* நிரந்தரமாக உடல் எடையை குறைக்க முதலில் நாம் மேற்கொள்வது நடைப்பயிற்சி மற்றும் ஓடுதல் போன்றவை ஆகும்.
* இதன் மூலமாக இரண்டு மாதங்களிலேயே 10-கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்:
* குடைமிளகாய்
* முருங்கைக்காய்
* முட்டைகோஸ்
* பாகற்காய்
* வாழைத்தண்டு
இதுபோன்ற காய்கறிகளை உணவில் அடிக்கடி நீங்கள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.
உடல் எடை குறைய டிப்ஸ்:
உடல் எடையை எளிமையாக குறைப்பதற்கு உலர் பழங்கள், முட்டை, வேக வைத்த காய்கறிகள், மோர் போன்ற உணவு வகைகளை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பழங்கள் சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள நீர் சத்து அதிகமாக காணப்படுகிறது. இதனால், உடலுக்கு தேவையான ஆற்றலையும் அது வழங்குகிறது.
பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சி:
* உடல் எடையை குறைக்க முதலில் நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.
* ஓடுதல்,புஸ்தப் செய்தல் போன்ற மிகவும் எளிமையான உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் எடையை மிக விரைவில் குறைக்க முடியும்.
உடல் எடை குறைய உணவு அட்டவணை || 10 நாளில் உடல் எடை குறைய:
உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம்?
உடல் எடையை எளிமையாக குறைப்பதற்கு உலர் பழங்கள், முட்டை, வேக வைத்த காய்கறிகள், மோர் போன்ற உணவு வகைகளை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பழங்கள் சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள நீர் சத்து அதிகமாக காணப்படுகிறது. இதனால், உடலுக்கு தேவையான ஆற்றலையும் அது வழங்குகிறது.
சீரகம் மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்?
சீரகப்பொடி மட்டுமே வைத்து உடல் எடையை குறைக்க முடியும். சீரகப் பொடியை நீரில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடையை எளிமையாக குறைக்க முடியும்.
இதுமட்டுமில்லாமல், சீரகப் பொடியை சூப்புடன் ஒரு டீஸ்பூன் அளவு கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை மிக வேகமாக குறையும்.
உடல் எடை குறைய தேன் எப்படி சாப்பிட வேண்டும்?
பெண்கள் உடல் எடை குறைக்க:- வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பருகினால் உடல் எடை குறையும். ஏனென்றால், தேனில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு காணப்படுகிறது. இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இதன் காரணமாக உடம்பில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் வெளியேறுகிறது. நம் உடலை பாக்டீரியா எதிர்ப்பு பண்பு தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
Read Also:- சுகர் அறிகுறிகள் பெண்கள்