சி.எஸ்.கே அணியின் கேப்டன் மாற்றப்பட்டது ஏன்? || உண்மையை உடைத்த பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் – Why CSK captain was changed – coach Stephen Pluming breaks the truth
2024 ஐ.பி.எல் தொடரின் 17-ஆவது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில் நேற்று சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. மகேந்திர சிங் தோனி 2008-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரைகிட்டத்தட்ட 15-ஆண்டு காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியை வழிநடத்திய மகேந்திர சிங் தோனி தற்போது கேப்டன் பகுதியில் இருந்து விலகி உள்ளார்.
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என கேப்டனாக இருந்த காலத்தில் இதுவரை, 10-முறை ஐபிஎல் ஆட்டத்தின் இறுதிப் போட்டிக்கு சென்னை அணியை வழிநடத்தி சென்று அதில் 5-முறை கோப்பையை வென்றுள்ளார். இந்த நிலையில் நான் தற்போது அவருக்கு 42 வயதை தொடங்கிவிட்டது. அதுமட்டுமின்றி, அவருடைய கடைசி ஐபிஎல் சீசன் ஆக இது இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை அணியை அடுத்து வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் சி.எஸ்.கே அணி நிர்வாக மத்தியில் ஒரு கேள்விக்குறியாக இருந்தது.அந்த வகையில் தான் தற்போது ருத்ராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் முதல் ஐபிஎல் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனது. இந்த போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது ரசிகர்களே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த மகேந்திர சிங் தோனியை மாற்றியது ஏன் என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய ஸ்டீபன் பிளம்மிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான தருணம் என தோனி கருதி காரணத்தினால் இந்த முடிவு சி.எஸ்.கே நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனியின் ஆலோசனைப்படியே ருத்ராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நாங்கள் தேர்வு செய்தோம். வருங்கால திட்டங்களை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நாங்கள் ஜடேஜாவை கேப்டன்னாக நியமித்ததில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம்
இதனால், ஜடேஜாவும் ருத்ராட்ஜை கேப்டனாக நியமிக்கும் முடிவுக்கு முழுமையாக ஆதரவு கொடுத்துள்ளார். இந்த சீசனில் தோனியின் உடல் தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுபோன்று ருத்ராஜ் கெய்க்வாடுடன் தோனியின் அனுபவமும் சிறந்து காணப்படும்.இந்த முறையும் சிறப்பாக செயல்பட்டு நாங்கள் கோப்பையை வெல்வோம் என நம்புகிறோம். மேலும் தோனி இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறினார்.