ADVERTISEMENT
Uppu Satyagraha History in Tamil

உப்பு சத்தியாகிரகம் வரலாறு – Uppu Satyagraha History in Tamil

உப்பு சத்தியாகிரகம் வரலாறு – Uppu Satyagraha History in Tamil

Uppu Satyagraha History in Tamil

Uppu Satyagraha History in Tamil:- காந்தியடிகள் உப்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்த பொழுது அவருடைய வயது 61 ஆக இருந்தது. சுதந்திரத்துக்கு முன் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்காலத்தில் உப்பின் மீது விதிக்கப்பட்ட கடுமையான வரியை எதிர்த்து சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி தண்டியில் உப்பு சத்தியாகிரகம் என்னும் யாத்திரை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் வேதாரண்யக் கடலில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதைப் பற்றிய தகவல்களை இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

உப்பின் மீதான வரி:

மக்களிடம் உப்பின் தேவை அதிகமாக காணப்படுகிறது என்பதை நன்கு அறிந்த ஆங்கிலேய அரசாங்கம் உப்பின் மீதான வரியை விரித்தது. அந்த காலகட்டத்தில் உப்பிற்கும், மதுவிற்கும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால், இந்திய மக்களைப் பொருத்தவரை அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கிடைத்த ஒரே உப்பு சோடியம் குளோரைடு உப்பு தான். பணக்காரர்கள் முதல் ஏழை வரை அன்றாட உணவில் உப்பு மிகவும் தேவையான பொருளாக இருந்தது.

இதுமட்டுமின்றி, இயற்கையாக கிடைக்கும் வேற எந்த உணவுப் பொருள்களிலும் இந்த உப்பு சத்து இருக்காது. அதே, நேரத்தில் உப்பின் தேவை அதிகமாக காணப்பட்டதால் உப்பின் மீது விதிக்கப்பட்ட வரிக்கு பெரும் பிரச்சனை இந்தியாவில் உருவானது.

உப்பு சத்தியாகிரகத்தின் நோக்கம்:

Uppu Satyagraha History in Tamil:- இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசாங்கம் உப்பின் மீது வரியை விதித்து இந்திய மக்களுக்கு பெரும் துன்பத்தினை ஏற்படுத்தியது. இதனால், இதனை மீறும் விதமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே உப்பு காய்ச்ச தொடங்கினர்.

ADVERTISEMENT

இதன், முக்கிய நோக்கம் அரசாங்கத்திற்கு எந்த காரணம் கொண்டும் வரி கட்டக்கூடாது என்பதாகும்.

உப்பு சத்தியாகிரக ஆரம்பம்:

உப்பு சத்தியாகிரகம் 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் விடியற்காலை 6.30 மணி அளவில் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள “சபர்மதி” என்னும் ஆசிரமத்தில் இருந்து சுமார் 375-கி/மீ தூரம் மேற்கொண்ட பயணம் ஆகும். இந்தப் பயணத்தில் 78-பேருடன் தண்டி வரை நடை பயணம் மேற்கொண்ட காந்தியடிகள் தண்டியில் ஒரு கைப்பிடி உப்பை எடுத்து இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றார்.

உப்பு சத்தியாகிரகத்தின் திட்டங்கள்:

Uppu Satyagraha History in Tamil:- உப்பு சத்தியாகிரகத்தில் பயணம் மேற்கொண்ட எல்லாரிடமும் ஒரு பை இருந்தது. அந்த பையில் மாற்றுத் துணியும், ஒரு பத்திரிகையும், தண்ணீர் குடுவையை கோர்க்க ஒரு ஊசி வைத்திருந்தார்கள்.

இந்த பயணத்தில் ஒரு நாளைக்கு 15-கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு பயணம் செய்தார்கள். இந்த பயணத்தில் மேற்கொள்வதற்கு முன்னதாக வழி அமைப்பது மற்றும் பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு போன்ற ஏற்பாடுகளை செய்ய யாத்திரைக்கு முன்பே ஒரு கூட்டம் அங்கு சென்று அந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்து இருந்தார்கள்.

தர்ஷனா போராட்டம்:

  • 1930-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி போராட்டம் இந்தியாவில் மிகத் தீவிரமான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் காந்தியடிகள் ‘வைசிராய் இர்வின் பிரபுக்கு’ கடிதம் எழுதி அனுப்பினர் அந்த கடிதத்தில் தர்ஷனாவில் உற்பத்தி செய்த உப்புக்களை தன்னுடைய ஆதரவாளர்கள் கைப்பற்றினார்கள் என்று எழுதியிருந்தார்.
  • அதன் பிறகு மறுநாளே காந்தியடிகள் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • என்னதான் காந்தியடிகள் கைது செய்யப்பட்டாலும் மே 21-ம் தேதி அவர்கள் திட்டமிட்டபடி சுமார் 2500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தர்ஷனாவில் படையெடுத்து வந்தார்கள். இதனால், பிரிட்டிஷ் போலீசார் உப்பு கைப்பற்ற வந்த இந்தியர்களை கடுமையான முறையில் தாக்கினார்கள். ஆங்கிலேயர்களின் இந்த கொடிய செயல் மிகப்பெரிய பேரலையாக மாறியது.
  • ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், குழந்தைகளும் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மிக தீவிரமாக பரவிய உப்பு சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி வந்தனர்.
  • என்னதான் ஆங்கில அரசு கைது செய்தாலும், அடித்து துன்புறுத்தினாலும் தங்களது போராட்டம் வெற்றி பெறும் வரை பின்வாங்குவதில்லை என்ற முடிவில் இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இருந்தார்கள்.
  • இதன் விளைவாக 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 90-ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு, 1000-த்துக்கும் மேற்பட்டோர் ஆங்கிலேயர்களின் தாக்குதலுக்கு பலியாகினார்கள்.

தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் || வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் || திருச்சி உப்பு சத்தியாகிரகம்

தமிழகத்தில் ராஜகோபாலச்சாரியார் தலைமையில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை மேற்கொண்ட உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஏ.என்.சிவராமன், ஜி.ராமச்சந்திரன், துரைசாமி, கல்கி சதாசிவம், கோயம்புத்தூர் இராஜாஜி, ஓ.வி.அழகேசன், ஜி.கே.சுந்தரம், ரா.வெங்கட்ராமன், மட்டப்பாறை பிள்ளை போன்றோர் கலந்துகொண்டு உதவினார்கள்.

இந்த போராட்டத்தின் விளைவாக இராஜாஜி, சர்தார் வேதாரண்யம் பிள்ளை போன்ற பலர் கைது செய்யப்பட்டு 6-மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

உப்பு சத்தியாகிரகத்தின் முடிவு || சட்ட மறுப்பு இயக்கம் முக்கியத்துவம்

1930-ஆம் ஆண்டு பிரித்தானியாரால் லண்டனில் ஒரு வட்ட மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் எந்த காங்கிரஸ் தலைவரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், 1931-ஆம் ஆண்டு மீண்டும் மார்ச் 5-ஆம் தேதி ‘திகதி லாட் இர்வினோடு’ காந்தியடிகள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

இந்த ஒப்பந்தம் டெல்லி உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தை முடிவு செய்தார். இதன் பின்னர், 1931-ஆம் ஆண்டு லண்டனில் இரண்டாம் வட்ட மேசை மாநாடு நடைபெற்ற வேளையில் காந்தியடிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்தியா திரும்பிய காந்தியடிகள் ‘சட்டமறுப்பு இயக்கத்தை’ மீண்டும் தொடங்கினார்.

அதன்பிறகு, பிரித்தானியர்கள் மிகவும் கடுமையான சட்டங்களை ஏற்படுத்தினர். இதனால், 1933-ஆம் ஆண்டு மே மாதம் “சட்ட மறுப்பு இயக்கம்” ரத்து செய்யப்பட்டது. இறுதியாக 1934-ஆம் ஆண்டு மே மாதம் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

உப்பு சத்தியாகிரகத்தின் நினைவுச் சின்னங்கள்:

• தண்டி நடை பயணம் 75-ஆண்டுகள் நிறைவேறிய நிகழ்வு குறித்து அஞ்சல் தலை ஒன்று 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவை “இந்திய ஐந்து ரூபாய்” மதிப்புகளை கொண்டது ஆகும்.

• “இந்திய ரிசர்வ் வங்கி” தண்டின் பயணத்தை நினைவு கூறும் வகையில் “ஐந்து ரூபாய்” மதிப்புள்ள பணத்தில் காந்தியடிகள் மற்றும் தொண்டர்களுடன் தண்டியாத்திரை மேற்கொண்ட படம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

• உப்பு சத்யாகிரகத்தை நினைவு கூறும் வகையில் வேதாரண்யம் வடக்கு வீதியில் “உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடம்” ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“இராஜாஜி நினைவு பூங்கா” ஒன்று வேதாரண்யம் மேல வீதியில் இராஜாஜி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டக் குழுவினர் தங்கி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

• இராஜாஜி சிறையில் அடைக்கப்பட்டிருந்த உப்புத் துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இருக்கும் “சிறை” இன்றளவும் பராமரிக்கப்படுகிறது.

• இராஜாஜி வேதாரண்யத்தில் உப்பு அள்ளிய இடத்தில் “நினைவுத்தூண்” ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

• இதுபோன்ற, நினைவுச் சின்னங்கள் உப்பு சத்தியாகிரகத்தை நினைவு கூறும் வகையில் தமிழகத்தில் வேதாரண்யத்தில் காணப்படுகிறது.

இந்தியாவில் நடைபெற்ற முக்கியமான போராட்டங்களில் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக இடம் பெறுவது இந்த “உப்பு சத்தியாகிரகம்” போராட்டம் ஆகும்.

உப்பு சத்தியாகிரகம் பற்றிய குறிப்புகள்:

தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்? || தென் இந்தியாவில் உப்பு சத்தியகிரகத்தை முன்னின்று நடத்தியது யார்?

ராஜகோபாலச்சாரியார் தலைமையில் உப்பு சத்தியாகிரக போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

தண்டி எந்த மாநிலத்தில் உள்ளது?

தண்டி இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ‘நவ்சாரி’ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை கிராமம் ஆகும்.

உப்பு சட்டம் என்றால் என்ன?

Uppu Satyagraha History in Tamil:- 1882-ஆம் ஆண்டு “உப்புச் சட்டம்” ஆங்கிலேயருக்கு உப்பின் சேகரிப்பிற்கும், உற்பத்திக்கும் ஒட்டுமொத்த உரிமையை கொடுத்தது. பின்னர், நாளடைவில் உப்பின் தேவை மக்களிடையே அதிகமாக காணப்பட்டதால் உப்பு கிடங்குகளில் “உப்பின் மீது வரி” விதிகபட்டு உப்பு சட்டத்தை மீறுவது ஒரு குற்ற செயலாகவும் கருதப்பட்டது.

சென்னையில் உப்பு சத்தியாகிரகம்:

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி சென்னை, திருவல்லிக்கேணியில் 3-மணி நேரம் நடந்த மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இராமேஸ்வரத்தில் உப்பு சத்தியாகிரகம் செய்ய முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உப்பு சட்டத்தை மீறியதற்காக அபராதம் செலுத்திய முதல் பெண் “ருக்மணி லட்சுமிபதி” ஆவார்.

Read Also:- காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply