ADVERTISEMENT
Thiruvannamalai Girivalam

திருவண்ணாமலை கிரிவலம் – Thiruvannamalai Girivalam

திருவண்ணாமலை கிரிவலம் – Thiruvannamalai Girivalam

Thiruvannamalai Girivalam

கிரிவலம் திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மலைகள் சிவபெருமானாக கூறப்படுகிறது. இக்கோயிலை சுற்றி இறைவனை வலம் வருவதைப் போலவே இந்த மழையையும் வலம் வருவது வழக்கமாக இங்கு உள்ளது. இந்த மழையை சுற்றிவர இரண்டு வழிகள் உள்ளன. இந்த மலையை ஒட்டிச்செல்லும் வலிகளில் முட்கள், பாறைகள் இருப்பதால் மிகுந்த கடினமான பாதையாக அமர்ந்திருக்கிறது.

மழையின் சுற்றியுள்ள பாதையில் ஜடவருமா விக்ரம பாண்டியன் அவர்களால் கிபி 1240 இல் திருப்பணி செய்யப்பட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் மக்கள் வலம் வரும் பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம்,யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம்,குபேர லிங்கம்,ஈசான்ய லிங்கம், என்று எட்டு லிங்கங்களும் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் அவர்களின் சமாதிகள் இங்கு அமைந்துஇருக்கிறது.

திருவண்ணாமலை கிரிவலம் மக்கள் எந்த நாட்களில் வலம் வருகிறார்கள்:

மக்கள் எல்லா நாட்களிலும் மழையை சுற்றி வலம் வருகிறார்கள். முழு நிலவு வரும் நாட்களில் வலம் வருதல் சிறப்பாக நடைபெறும் என்பது கருதப்படுகிறது. திருவண்ணாமலை ஆனது இவங்களின் அழிவுகளும் அழியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. கிருதா யுகங்களில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி இருப்பதாக பலரால் நம்பப்படுகிறது.

எட்டு திக்கிலும் அஷ்ட லிங்கங்களை கொண்டு திருவண்ணாமலை நகரம் எண் கோண வடிவு அமைப்பில் காணப்படுகிறது. அஷ்ட லிங்கம் எனப்படுவது. இந்திரலிங்கம், அக்கினி லிங்கம் யமலிங்கம் நிருதிலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம், இவை அனைத்தும் தேவாரங்களில் போடப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலையின் வலம் வரும் பாதையில் தான் இவை அனைத்து லிங்கங்களும் அங்கே அமைந்துள்ளது.

இந்த திருவண்ணாமலை கோயிலின் சுற்றளவுகள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த மழையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது வரலாறு. இக்கோயிலை சுற்றி வலம் வரும்போது பக்தர்கள் இடது புறமாக நடக்க வேண்டும். ஏன் என்று கேட்டால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கத்தில் சித்தர்களும், யோகிகளும் தேவர்களும், வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. நாம் கிரிவலம் செல்லும் போது

ADVERTISEMENT

பஞ்சாச்சர நாமத்தையோ நமசிவாய,சிவாயநம (அ) திருமுறைகளையோ தேவாரம், திருவாசம என்று நாமம் உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் நாம் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நாம் நடந்து செல்ல வேண்டும், அவசரமாகவோ, இல்ல வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது. மலைவலப்பாதையில் அஷ்டலிங்கங்கள், நந்திகள், மற்றும் மேற்பட்ட குலங்கள் இங்கே உள்ளன.

திருவண்ணாமலை கோயிலின் அஷ்ட லிங்கங்கள்:

1. கிழக்கு திசையில் இந்திரலிங்கம் கிரிவலத்தில் முதலாவது லிங்கம் அமைந்துள்ளது.

2. தென் கிழக்கு திசையில் அக்னி லிங்கம், செங்கம் சாலையில் இரண்டாவது லிங்கம் அமைந்துள்ளது.

3. தெற்கு திசையில் எமலிங்கம் கிரிவலப்பாதையில இராஜகோபுரத்தில் இருந்து 3 வது கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.மூன்றாவது லிங்கம்.

4. நிருதி லிங்கம் தென்மேற்கு திசை கிரிவலப்பாதையில் 4 வது லிங்கம்.

5. வருண லிங்கம் மேற்கு திசை இராஜகோபுரத்திலிருந்து 8 வது கி.மீ. தூரம் அமைந்துள்ளது.5 வது லிங்கம்.

ADVERTISEMENT

6. வாயுலிங்கம் வடமேற்கு திசையில் கிரிவலப்பாதையில் ஆறாவது லிங்கம்.

7. குபேர லிங்கம் வடக்கு திசையில் கிரிவலப்பாதையில் 7வதாக அமைந்துள்ளதுலிங்கம்.

8. ஈசான்ய லிங்கம் வடகிழக்கு திசையில் எட்டவாது மற்றும் கடைசி லிங்கம்.

இவைகள் அனைத்தும் திருவண்ணாமலை கோவிலின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

 

சபரிமலை ஐயப்பன் வரலாறு

Leave a Reply