Thanjai Periya Kovil History In Tamil – தஞ்சாவூர் பெரிய கோவில் வரலாறு
தஞ்சாவூர் பெரிய கோவில்:
Thanjai Periya Kovil History In Tamil: இந்தியாவின் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் இந்த தஞ்சாவூர் பெரிய கோவில் ஆனது அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள கட்டிடக்கலையின் அதிசயம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வம்சங்களில் ஒன்றான சோழர்களின் பெருமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக இன்றளவும் நிலைத்து நிற்கின்றது.
தஞ்சாவூர் பெரிய கோவிலின் வளமான வரலாறு, நேர்த்தியான கைவினை திறன் மற்றும் பல்வேறு வகையான ஆன்மீக அதிசயங்கள் நிறைந்ததால் இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா செல்பவர்களையும் விரும்பி இருக்கிறது.
சோழர்களின் வம்சம் மற்றும் கலாச்சாரம்:
தமிழ்நாடு மற்றும் இன்றைய கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் சோழப்பேரரசு 9 மற்றும் 13 நூற்றாண்டுக்கு இடையில் மிகவும் செழிப்புடன் ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.
சோழர்களின் ராணுவ வலிமை, கடல் வணிகம், மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற தென்னிந்திய வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையாக இந்த தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியுள்ளனர். சோழர்கள் எண்ணற்ற கோயிலை கட்டி இருந்தாலும் அவர்களின் கட்டப்பட்ட சகாப்தம் தஞ்சாவூர் பெரிய கோவில் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஏனெனில் இவ்வுலகிலேயே எவரும் செய்ய முடியாத மிகப்பெரும் சாதனைகள் இக்கோவிலில் கட்டிடக்கலை வழியாக சோழர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலின் பிறப்பு:
சோழ வம்சத்தின் மிக முக்கியமான ஆட்சியாளர்களில் ஒருவரான முதலாம் ராஜராஜ சோழன் நாள் நியமிக்கப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் அப்போது வாழ்ந்த மன்னர்களின் வெற்றிகளை கொண்டாடவும், அக்காலத்தில் கட்டிடக்கலை கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தவும் ஒரு பெரிய நினைவுச் சின்னமாக இது கட்டப்பட்டிருக்கலாம்.
மேலும், கோவிலின் கட்டுமானம் கிபி 1003 இல் தொடங்கி கிபி 1010ல் நிறைவடைந்து இருக்கிறது. இவ்வளவு பெரிய கோவிலை கட்டு முடிக்க வெறும் ஏழு ஆண்டுகள் மட்டுமே எடுத்துக் கொண்டார்கள். மேலும் முழுமையான திட்டமிடுதல் மற்றும் திறமையான கைவினை கலைஞர்கள் சிற்பிகள் பொறியாளர்கள் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த குழுவானது சோழர்களிடம் இருந்திருக்கின்றது.
தஞ்சாவூர் பெரிய கோவிலின் கட்டிடக்கலை சிறப்பு:
தஞ்சாவூர் பெரிய கோவில் ஆனது அதன் விமானத்துடன் அல்லது கோபுரத்துடன் இரவு சுமார் 200 அடி உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றது. இந்த கோவிலில் அமைந்துள்ள வடிவமைப்புகள் அனைத்தும் பிரமிடு வடிவ கட்டமைப்புகள், சிக்கலான செதுக்கப்பட்டுள்ள சிலைக,ள் மற்றும் மிகப்பெரிய கோபுரம் நுழைவாயில்கள் ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கோவில் அமைந்துள்ள பலாகம் அல்லது கோவிலின் சுற்றுவட்ட சுமார் 29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவிலின் சன்னதிக்குள் சிறு சிறிய மண்டபங்கள் மற்றும் பெரிய நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் உள்ள கருவறையில் சிவபெருமானின் மிகப்பெரிய தோற்றம் பிரகதீஸ்வரர் என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. அப்போதைய திறமை வாய்ந்த கைவினை கலைஞர்களைக் கொண்டு சுமார் 13 அடி உயரத்திற்கு சிவபெருமானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிலையானது ஒரு கிரானைட் கற்கள் வகையை சார்ந்ததாகவும், சிவபெருமானின் மகத்துவத்தை காட்டும் வகையில் 13 அடி என்ற வடிவத்தில் இது கட்டப்பட்டுள்ளது.
கட்டிடம் மற்றும் சிற்பக் கலையின் அற்புதங்கள்:
தஞ்சாவூர் பெரிய கோவில் அதன் சோர்கள் மற்றும் மண்டபங்களை மிகவும் நேர்த்தியான வடிவத்திலும் அவை அனைத்தும் உயர்ந்த கட்டிடங்களாகவும் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள சிற்பங்கள், புராண காட்சிகள், வான மனிதர்கள், தெய்வங்கள் மற்றும் தெய்வங்களை சித்தரிக்கும் படங்களும் வரையப்பட்டுள்ளன.
கோவிலில் உள்ள சோர்களில் இருக்கும் சிற்பங்கள் அனைத்தும் சோழ வம்சத்தின் காட்சிகளை சித்தரிக்கின்றன. காலத்தில் வாழ்ந்த சோழர்களின் வாழ்க்கை முறை கலாச்சாரம் மற்றும் அவர்களின் சகாப்தம் அல்லது சாதனைகள் அனைத்தும் இந்த சிற்பத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிற்பங்களும் மிகவும் இனிப்பான முறையில் கவனிக்கப்பட்டு செதுக்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் பாதுகாப்புடன் இருக்கும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது உண்மையிலேயே உடம்பை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு உலக அளவில் கிடைக்கப்பட்டுள்ள அங்கீகாரம்:
• தஞ்சாவூர் பெரிய கோவில் இதுவரை சுமார் ஆயிரம் வருடங்களை கடந்து நிற்கும் ஒரு மிகப்பெரிய கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கக்கூடிய கோவில் ஆகும்.
• எத்தனையோ படையெடுப்புகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் இன்றளவும் எந்த ஒரு சேதமும் இல்லாமல் நிலைத்து நின்று கொண்டிருக்கின்றது.
• பல நூற்றாண்டுகளாக தஞ்சாவூர் பெரிய கோவில் அதன் கட்டிடக்கலை பெருமையை பாதுகாக்க பல்வேறு சீரமைப்பு மற்றும் பழுது பார்ப்பவர்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
• கோவிலின் வரலாறு மற்றும் கலாச்சாரம் முக்கியத்துவம் அங்கீகரிக்கும் வகையில் இக்கோவில் 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
• இப்படிப்பட்ட யூஸ்கோவின் மதிப்பு மிக்க பாராட்டானது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேலும் ஒரு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
தஞ்சாவூர் பெரிய கோவிலின் கலாச்சார முக்கியத்துவம்:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் அனைத்து தரப்பு பக்தர்களும் வந்து வழிபடும் தளமாகவும், யாத்திரை ஸ்தலமாகவும் தொடர்கிறது. மேலும் இங்கு பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மாதவிலக்கு மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் போன்ற பல்வேறு கலாச்சாரம் மற்றும் மத சம்பந்தமான நிகழ்வுகள் இக்கோவிலின் வளாகத்தில் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் இக்கோவிலில் உள்ள கலைகளை உயிருடன் வைத்திருப்பதற்கு மேலும் உதவுகிறது. மேலும் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் கோவிலின் கட்டமைப்பு மற்றும் சோழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக அமைகின்றது.
தஞ்சாவூர் பெரிய கோவில் முழுமையான வரலாறு
Thanjai Periya Kovil History in Tamil : பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும் தன்மை உடையது. கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்றது என்று சொல்லலாம். அதனால் தான், இதை `ஆர்க்கிடெக் மார்வெல்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.
தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது.
சுல்தான்களின் தாக்குதல்கள், மாலிக்குகளின் படையெடுப்புகள், மேலை நாட்டினரின் பீரங்கிகள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நில நடுக்கம் ஆகியவற்றைக் கடந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோயிலுக்கு நாளை குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது.
தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010ல் ராஜராஜனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் தஞ்சை மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது.
பிறகு, தி.மு.க ஆட்சியில் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தஞ்சைப் பெரியகோயிலில் ஓதுவார்களால் தீந்தமிழ்த் தேவாரம் முழங்க, பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, குடமுழுக்கு ஏற்பாடுகளையும் பெரியகோயில் பற்றிய அபூர்வ தகவல்களையும் அறிந்துகொள்வோம்!
கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான். ராஜராஜன் காலத்தில் இக்கோயில், `ராஜராஜேஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில், பெரியகோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
பிற்காலச் சோழர்களும் தஞ்சாவூரும்! – ThanjaiPeriya Kovil History in Tamil
Thanjai Periya Kovil History in Tamil : கி.பி 1003 – 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது. இதை சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000 டன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள். 216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
குடமுழுக்கின்போது கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், கோபுரக் கலசம் ஆகிய 5 இடங்களிலும் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மந்திரம் சொல்லப்படும்; தமிழுக்குத் தகுந்த முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது.
கூம்பைத் தலைகீழாகக் கவிழ்த்துவைத்த அமைப்பில், பெரிய கோயிலின் 216 அடி உயர விமானம் எழுப்பப்பட்டிருக்கிறது. பலகைக் கற்களை ஒன்றன்மீது ஒன்றாக இலகுப் பிணைப்பு (loose joint ) மூலம் அடுக்கப்பட்டிருக்கிறது. பெரியகோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே கற்களால் ஆனவை.
எங்குமே சுதைச் சிற்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. விமானத்தின் உச்சியில் உள்ள கலசத்துக்குக் கீழே சிகரம் போன்று இருக்கும் கல், 8 இணைப்புகளால் ஆனது.
இதற்குப் பெயர், பிரம்மாந்திரக் கல். இதன் எடை, சுமார் 40 டன். அதற்குக் கீழே இருக்கும் பலகையின் எடை, சுமார் 40 டன். அந்தப் பலகையில் எட்டு நந்திகள் வீற்றிருக்கின்றன.
அவற்றின் மொத்த எடை, சுமார் 40 டன். இந்த 120 டன் எடைதான் ஒட்டுமொத்த கோயில் கோபுரத்தையும் ஒரே புள்ளியில் அழுத்திப் பிடித்து, புவியீர்ப்பு சக்திமூலம் தாங்கி நிற்கிறது.
கோயில் அமைந்துள்ள இடம், சுக்கான் பாறையாகும். இந்த இடத்தில் குழி தோண்டி மணலை நிரப்பி, அதன்மீது கோயில் எழுப்பியிருக்கிறார்கள்.
பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்றதுதான். அதனால்தான், இதை `ஆர்க்கிடெக் மார்வெல்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.
பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்’ என்று கோயிலில் பொறித்து வைத்திருக்கிறார். ராஜராஜன். இத்துடன், கோயில் கட்டுமானத்தில் யார் யாருக்கு பங்களிப்பு உண்டு என்கிற தகவல்களையும் அப்படியே கல்வெட்டில் பொறிக்கச் செய்து, கோயிலை ஒரு ஆவணக் காப்பகமாக உருவாக்கியுள்ளனர்.
தஞ்சைப் பெரியகோயில் குறுக்குவெட்டுத் தோற்றம்&கட்டுமானம் – ThanjaiPeriya Kovil History in Tamil
Thanjai Periya Kovil History in Tamil : கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. பெரியகோயிலின் விமானம் முழுவதும் ராஜராஜன் காலத்தில் பொன் தகடுகளால் வேயப்பட்டு பொலிவுடன் காணப்பட்டது. இது பற்றிய தகவல், `ராஜ ராஜேஸ்வரமுடையார் ஸ்ரீ விமாநம் பொன் மேய்வித்தான் ராஜராஜ’ என்று குறிப்பிடப்படும் கல்வெட்டு, கோயிலில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. பிற்காலத்தில் இவை, முகலாயர்களாலும் சுல்தான்களாலும் கொள்ளையடிக்கப்பட்டன.
பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும், சிறப்புகளையும் கொண்ட தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்குத் திருவிழாவால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
குடமுழுக்கு விழா, நாளை 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை பூஜைகள் 1 – ம் தேதி தொடங்கியது. 110 யாக குண்டங்கள் கொண்டு, யாகசாலை பூஜைக்கான பந்தல் மட்டும் 11,900 சதுர அடிகள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. யாக பூஜையில் 400-க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், பண்டிதர் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் திரள்வதால், பாதுகாப்புப் பணிக்கு என 4,492 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோயில் வளாகம் மற்றும் தஞ்சை நகரப் பகுதிகள் என மொத்தம் 192 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நகர்ப் பகுதி முழுவதும் 17 இடங்களில் தற்காலிகக் காவல் உதவி மையங்களும், விழாவுக்கு வருபவர்களின் வசதிக்காக, 55 தகவல் அறிவிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 6 இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, கதவுகளுடன்கூடிய தடுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல ஒரு வழி, வெளியே செல்ல ஒரு வழி என கோயிலுக்கு மட்டுமின்றி கோயிலைச் சுற்றிலும் ஒருவழிப்பாதையில் அனுப்பப்படுவர். தீயணைப்புத்துறை சார்பில் 30 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. மேலும், அதி நவீன தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக, நகரைச் சுற்றியுள்ள புறவழிச்சாலைப் பகுதியில் 21 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் மக்களின் வசதிக்காக 225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள புதுப்பட்டினத்தில், தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் இறங்கும் மக்களை அழைத்துவந்து கோயிலுக்கு அருகாமையில் சுமார் ஒரு கி. மீ முன்னதாக இறக்கிவிடுவதற்கு, 200 பள்ளி மற்றும் தனியார்வேன்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கோயில் குடமுழுக்கு விழா பணிக்காக 1,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர் முழுவதும் 275 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 10 குடிநீர் லாரிகளைக்கொண்டு தண்ணீர் நிரப்பட்டு கொண்டே இருக்கும். 238 தற்காலிகக் கழிப்பறைகள், குப்பைகளைக் கொட்டுவதற்கு 800 குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேரும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளிச்செல்வதற்கு 25 லாரிகள் பயன்படுத்தப்படவுள்ளன. சுகாதாரப் பணிகளுக்காக 1,500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதுடன், நடமாடும் மருத்துவ சேவை மற்றும் 13 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் உள்ளே வருவதற்கு அனுமதி இல்லை.
அவர்களை அழைத்து வருவதற்காக வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. வேனில் இருந்து இறங்கி கோயிலுக்கு நடந்துசெல்லும் பக்தர்களும், வயதானவர்களும் ஓய்வு எடுக்க, காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்களுக்கு வீல் சேர் வசதி செய்யப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் மக்கள் நிற்பதற்காக, இரும்புக்கம்பிகள் கொண்டு 16 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் நிற்க முடியாதவர்களுக்காக, அந்த இடத்தில் சிறிய அளவில் அமர்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள், குடமுழுக்கு தொடர்பான நிகழ்ச்சி நிரல், அது தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ளவும்.
சத்குரு:
Thanjai Periya Kovil History in Tamil: கடந்த இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு இடங்களுக்கு செல்ல எனக்கு வாய்ப்பு என்பது கிடைத்தது. இரண்டுமே ஒரே சமயத்துடன் உருவாக்கப்பட்டவைதான், ஆனால் இப்போது அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. முதலில் நான் தஞ்சை பெரிய கோவில், அதன் பின்னர் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு சென்றிருந்தேன்.
நீங்கள் இந்த இரண்டு இடங்களையும் பார்த்திருக்கிறீர்களா? மிக்க நல்லது. தற்போது தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள தஞ்சாவூருக்கு இராஜராஜேஸ்வரம் என்ற ஒரு பெயரும் உள்ளது.
இதனைச் செய்வதற்கு எந்த வகையான ஒரு தெம்பு, ஆர்வம் நம் தமிழ் மக்கள் நெஞ்சில் குடியிருந்திருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை யோசித்து, நடத்தியும் காட்டியிருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
வெளிப்புற அழகுடனும் மிக பிரம்மாண்டமான விகிதாச்சாரத்திலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிக அற்புதமான கலைப்படைப்பு தஞ்சை பெரிய கோவில் ஆகும் . இயந்திரங்கள் எதுவுமே இல்லாதபொழுதும், பெரிய பாறைகளைக் கொண்டுவர வாகனங்களோ கிரேன்களோ இல்லாதபோது கட்டப்பட்டது இந்த கோவில். இவை அனைத்துமே மனிதனின் முயற்சியினால், வெறும் கைகளால் நடந்திருக்கிறது. இது ஒரு சாதாரண செயல் அல்ல.
இது என்ன மாதிரியான ஒரு செயல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், நான் உங்களுக்கு ஒரு எளிய வேலை தருகிறேன். இப்பொழுது நாம் ஆதியோகி ஆலயத்தை உருவாக்குகிறோம், அதற்காக ஒரு பாறையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒன்றாக இனைந்து கொள்ளுங்கள், ஆனால் உங்களிடம் இயந்திரங்கள் எதுவும் இல்லை.
உங்களுக்கு பெரிய பாறை தெரியுமா? அதன் அளவைப் பார்த்ததும் அது எப்பேர்ப்பட்ட காரியம் என்பதை நீங்கள் அதனை புரிந்துகொள்வீர்கள், ஏனென்றால் அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நம் மக்கள் அதைத்தான் செய்தார்கள்.
தஞ்சை பெரிய கோவில் மூலவர்
Thanjai Periya Kovil History in Tamil: தற்பொழுது தஞ்சை பெரிய கோவிலில் லிங்கமாக வீற்றிருக்கும் பாறையை, குஜராத்தில் உள்ள சௌராஷ்ட்ரா என்ற ஒரு இடத்தில், நர்மதா நதிக்கரையிலிருந்து கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது டன் எடையுள்ள அந்த பாறையை, விந்திய மலைகளைக் கடந்து கொண்டு வந்ததாகக் கூறுகிறார்கள். லாரிகள் எதுவுமே அப்பொழுது இல்லை.
அப்படியானால் இவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதனை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இதனைச் செய்வதற்கு எந்த வகையான ஒரு தெம்பு, ஆர்வம் நம் தமிழ் மக்கள் நெஞ்சில் குடியிருந்திருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதனை யோசித்து, நடத்தியும் காட்டியிருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர்களின் இதயத்தில் அப்படி ஒரு உறுதி, வைராக்கியம் இருந்திருக்கிறது.
கிட்டத்தட்ட சாத்தியமற்ற செயல் ஒன்றை, அவர்களை செய்யத் தூண்டியது எது? அனைத்து முயற்சிகளுக்கும் பிறகு, மனித உழைப்பால் அவர்கள் கலைநயம் மிளிரும் ஒரு மிக அற்புதமான கோவிலைக் கட்டினார்கள்.
Thanjai Periya Kovil History in Tamil : எந்த இடங்கள் பார்வையிடலாம் எனத் தெரிந்துகொள்ளவும், நம்ம தஞ்சை என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இது, அனைவருக்கும் ஒரு பயனுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கோபுரத்தின் அழகு
Thanjai Periya Kovil History in Tamil : தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் மகுடமாக வீற்றிருக்கும் விமானப்பகுதியின் எடை என்ன வென்று தெரியுமா? நிச்சயமாக நூற்று இருபது டன்களுக்கு மேல் இருக்கும். பொதுவாக கோபுரத்தின் விமானப்பகுதி சுதை சிற்பமாக வடிக்கப்படும்.
ஆனால், தஞ்சை பெரிய கோவிலின் விமானப் பகுதியை கிரானைட் கல்லால் உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக பத்து மைல் தூரத்திற்கு சரிவுப்பாதை அமைத்தார்கள், அதன் வழியாக நூற்று அறுபது அடி உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்கு எடுத்துச்சென்று வைத்தார்கள்.
அதுவும் கலைநயம் மிளிரும் அழகான வேலைப்பாடுகளுடன். அதுமட்டுமின்றி, கருவறையின் மேல் பகுதியின் முதல் அடுக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட சுவர் ஓவியங்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன, கோவில் வளாகம் முழுவதுமே நேர்த்தியான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அவர்கள் சோப்புக் கல்லை செதுக்கியிருக்கிறார்கள்; தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் கொஞ்சம் உக்கிரமானவர்கள், கிரானைட் கருங்கல்லை செதுக்கியிருக்கிறார்கள்.
சோப்புக் கல்லை செதுக்குவதை விட மிகவும் கடினமானதாக இருந்தாலும் கிரானைட்டை செதுக்கி, சிற்பங்கள் நிறைந்த ஒரு மிகச்சிறந்த கட்டமைப்பாக, கோபுரத்தின் உச்சியில் கொண்டு போய் வைத்தார்கள்.
ஆனால் கோவிலின் முக்கிய ஒரு பாகம் தோல்வியில் முடிந்தது, அவர்கள் விரும்பியபடி லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியவில்லை. அது நடக்கவில்லை.
நிறைவேறாத கனவு
Thanjai Periya Kovil History in Tamil: இன்றும் கூட, தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வதால் துரதிருஷ்டம் வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? ஆனால் இது முற்றிலும் சரியல்ல; ஓரளவு சரியானது.
இது ஒரு வகையான சிதைந்த சக்தி வடிவமாக, அதன் நிறைவைக் காணாத வடிவமாக இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு வருட உழைப்பு மற்றும் அதன் இதயப் பகுதி தோல்வியை சந்தித்தது.
எனவே இதை முயற்சித்த ராஜராஜ சோழன். இத்தகைய அற்புதமான கட்டமைப்பை உருவாக்குவதற்கு அவரின் ஒரே நோக்கம், தலைமுறை தலைமுறையாக மக்கள் இதனால் பயனடைவார்கள் என்பதுதான்.
கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி |