ADVERTISEMENT
கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம்

கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம் || Pregnancy Symptoms in Tamil

கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம் || Pregnancy Symptoms in Tamil

கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம்

Pregnancy symptoms in tamil || Very early signs of pregnancy 1 week in tamil:

கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம்:- திருமணமான பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆசைதான் கர்ப்பம் அடைதல் இந்த நிகழ்வை அறிந்தவுடன் பெண்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுவார்கள்.

இன்றைய காலகட்டங்களில் கூட பெண்கள் கர்ப்பம் தரித்தால் எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். ஒரு சில பேர் மாதவிடாய் சுழற்சி சிறிது நாட்கள் தள்ளிப் போனாலே கர்ப்பம் அடைந்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஆனால், உடலில் ஏற்படக்கூடிய ஒரு சில மாற்றங்கள் கூட மாதவிடாய் சுழற்சி தள்ளி போக வாய்ப்புள்ளது. இதனால், கர்ப்பம் அடைந்தால் பெண்களுக்கு ஒரு சில ஆரம்ப கால அறிகுறிகள் காணப்படும். இதுபோன்ற, அறிகுறிகள் காணப்பட்டால் தான் அவர்கள் முழுமையாக கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்று அர்த்தம்.

இதுபோன்ற அறிகுறிகள் என்னென்னவென்று இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப அறிகுறிகள் எப்போது தெரியும்:

கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம்:- கர்ப்ப காலங்களில் ஹார்மோன்களின் அளவு அதிகமாக காணப்படும்.இதனால், தலை வலி ஏற்படும்.சில பெண்களுக்கு கர்ப்பம் அடைந்த ஒரு வாரத்தில் அதிக அளவு தலைவலி ஏற்படும். இன்னும் சில பெண்களுக்கு ஒரு சில வாரங்களுக்கு பிறகு கூட ஏற்படலாம்.

ADVERTISEMENT

கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகள் || கர்ப்ப அறிகுறிகள் 1 வது வாரம்:

1) மாதவிடாய் தள்ளிப் போவது:

ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால் முதல் அறிகுறியே அவரின் மாதவிடாய் தள்ளிப் போவதுதான் இதுதான் கர்ப்பத்தின் முதல் அறிகுறி ஆகும்.

இதில் இன்னொரு சிக்கல் உள்ளது மாதவிடாய் தாமதமாக தள்ளிப் போனால் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று நினைத்து விடக்கூடாது.ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் வேறு மாற்றங்களாலும் மாதவிடாய் தாமதமாக ஏற்படும்.

அதனால்,மாதவிடாய் தாமதம் ஆனால் நீங்கள் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்தி பரிசோதனை செய்து பார்ப்பதும் மிகவும் அவசியம். அதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும் தருணத்தில் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து பார்ப்பது அதைவிட சிறந்தது.

2) உடல் சோர்வு:

கர்ப்பம் அடைந்த ஆரம்பகளிலேயே பெண்கள் அதிக அளவில் உடல் சோர்வாக காணப்படுவார்கள் சில பெண்களுக்கு பாதங்களில் வீக்கம் ஏற்படும்.அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.

உடலில் சோர்வு அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளலாம். முடிவுகளில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

இதுபோன்ற சோர்வு நிலையை போக்க உடற்பயிற்சி,யோகா, நடை பயிற்சி, தூக்கம் போன்ற போன்ற நிகழ்வுகளை செய்யலாம்.

ADVERTISEMENT

3) தலைவலி:

கர்ப்பம் தரித்த முதல் வாரத்திலேயே அதிக அளவு தலைவலி ஏற்படலாம். இதிலும் ஒற்றை தலைவலி பிரச்சினை உள்ள பெண்களுக்கு தலை வலி அதிக கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.

கர்ப்ப காலங்களில் தலைவலி அதிக அளவில் காணப்பட்டால் யூகலிப்டஸ் எண்ணையை உபயோகப்படுத்தலாம். இந்த எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் தலைவலி குறையும்.

இது போன்ற தருணங்களில் தலைவலி மற்றும் வேறு ஏதேனும் பிரச்சனைகளை ஏற்பட்டால் நாம் நேரடியாக எந்த ஒரு மருந்துகளையும் பயன்படுத்தாமல் மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

30 நாட்கள் கர்ப்ப அறிகுறிகள் || 35 நாள் கர்ப்பம் அறிகுறிகள்:

4) வாய் கசப்பு:

கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம்:- கர்ப்பத்தின் முதல் வாரத்தில் பெண்கள் எதை சாப்பிட்டாலும் வாய் கசக்கும். இதை நன்றாக உணரலாம். இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் ஏற்படும்.

இது போன்ற வாய் கசப்புகளை குணப்படுத்த மூலிகை டீ போன்ற பானங்களை அருந்தலாம். குளிர்காலங்களில் துளசி டீ அல்லது கருப்பு மிளகு மற்றும் கிராம்பு டீ போன்ற பானங்களை குடிப்பதனால் நன்மை ஏற்படும்.

இதை தவிர கர்பத்தின் முதல் வாரத்தில் மனநிலையில் அதிக அளவு மாற்றங்கள் ஏற்படலாம்.

ADVERTISEMENT

5) முதுகு வலி:

கர்ப்பம் தரித்த முதல் வாரத்தில் பெண்கள் உடலின் பல பாகங்களில் பலி ஏற்படுவதை உணர முடியும். குறிப்பாக, முதுகு மற்றும் வயிற்று வலிகளை நன்றாக உணரலாம்.

ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு காரணமாக இது போன்ற வலிகள் ஏற்படுகிறது. இருப்பினும் இது மாதவிடாய் அல்லது உடம்பில் வேறு ஏதாவது பிரச்சனைகளின் காரணமாக கூட ஏற்படலாம்.

கர்ப்பம் அல்லது மாதவிடாய் இல்லாத நிலைமையிலும் உங்களுக்கு வலி ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்து தகவல்களை பெறுவது மிகவும் முக்கியம்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலியை தவிர முழங்காலுக்கு மேல் அல்லது பின்புறத்தில் அதிக அளவு வலியை உணர முடியும்.

15 நாள் கர்ப்ப அறிகுறிகள்:

6) வயிற்றுப் தசை பிடிப்புகள்:

ஒரு பெண் கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகளை பற்றி ஆராய்ச்சி செய்யும்போது மருத்துவர்கள் கூற்றுப்படி,ஒரு சில பெண்களுக்கு வயிற்று தசைப்பிடிப்புகளை உணர முடியும் என்று கூறுகின்றனர்.

அதே சமயத்தில் ஒரு சில பெண்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளும் கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களிலேயே காணப்படும்.

ADVERTISEMENT

7) தலை சுற்றுதல், வாந்தி:

கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம்:- ஒரு சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்த ஓரிரு வாரங்களில் எந்த உணவு சாப்பிட்டாலும் ஒவ்வாமல் தலை சுற்றுதல்,மயக்கம், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இதன் காரணமாக புளிப்பு சுவை உடைய உணவுகளை அதிகளவு சாப்பிட விரும்புவார்கள். இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து பார்க்கலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் மருத்துவரை சந்தித்து நீங்கள் உங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

40 நாட்கள் கர்ப்ப அறிகுறிகள்:

மேற்கூறிய அறிகுறிகளில் உங்களுக்கு ஏதேனும் ஒன்று காணப்பட்டால் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளலாம்.அந்த பரிசோதனையில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து நீங்கள் தகவல்களை கேட்டு பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியம்.

கர்ப்ப அறிகுறிகள் 2-வது வாரம்:

உடல் சோர்வு ஒரு பெண்ணுக்கு ஏற்படும் தருணத்தில் அது கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் குழந்தையை வளர்க்க உடல் அதிக அளவு ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளும். இதனால், பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படும்.

கர்ப்பம் உறுதி செய்வது எப்படி?

கர்ப்பம் அடைந்த பெண்கள் மாதவிடாய் தள்ளிப் போவதன் மூலமாக எளிதாக கண்டுபிடிக்க முடியும். கருத்தரித்த 11-நாட்களுக்குப் பிறகு இரத்த பரிசோதனைகள் மூலமாக அல்லது சில நாட்களுக்கு பிறகு சிறுநீர் பரிசோதனை மூலமாக கர்ப்பத்தை உறுதியாக கண்டறிய முடியும்.

வீட்டில் நீங்கள் கர்ப்ப பரிசோதனை கருவியை கொண்டு பரிசோதனை செய்து கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு, மருத்துவர் அணுகி அவர்களிடம் பரிசோதனை செய்து தகவல்களை பெறுவது மிகவும் முக்கியம்.ஏனெனில், ஐந்து கர்ப்பங்களில் ஒன்று கருச்சிதைவில் முடிவடைகிறது.

ADVERTISEMENT

கர்ப்பத்தை உறுதிப்படுத்த அதிகபட்ச நாட்கள் என்ன?

கர்ப்ப அறிகுறிகள் 1-வது வாரம்:- பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்பட்டால் அல்லது சீரற்ற முறையில் இருக்கும் தருணத்தில் அவர்கள் 30-முதல் 45-நாட்களில் கர்ப்ப பரிசோதனையை செய்து பார்க்கலாம். பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலம் தள்ளி போனாலோ அல்லது கருவுற்றதற்கான ஏதேனும் அறிகுறிகள் காணப்படும் போது இந்த பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம்.

Read Also:- உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

 

Leave a Reply