ADVERTISEMENT
Palli Vilum Palan in Tamil

பல்லி விழும் பலன்கள் தமிழில் | Palli Vilum Palan in Tamil

பல்லி விழும் பலன்கள் தமிழில் | Palli Vilum Palan in Tamil

Palli Vilum Palan in Tamil

Palli Vilum Palan in Tamil: பல்லி என்றால் நவகிரகங்களில் கேதுவை குறிக்கப்படுகிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரன் உடலாகும். பல்லி கத்துவது முதல், அவை நமது உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

பல்லி விழும் பலன்கள் : பொதுவாக நம்மில் அனைவரது வீடுகளிலும் பல்லி காணப்படும். நமது வீட்டின் சுவர்களிலும், இடுக்குகளிலும், ஜன்னல் மற்றும் கதவுகளில் இயல்பாக பல்லி உலாவி கொண்டிருக்கும். எவ்வளவு நுண்ணியிரினங்கள் நமது வீடுகளில் காணப்பட்டாலும் பல்லி சொல்லுக்கும் நம் மீது பல்லி விழுவதற்கும் முன்னோர்கள் முன்கூட்டியே காரணங்களை கண்டறிந்து வைத்துள்ளனர். இதகைய பல்லியை கௌளி என்றும் குறிப்பிடுவார்கள்.

நம் கும்பிடும் ஒன்பது கிரகணங்களில் கேது பகவான் பல்லியை குறிக்கிறது. எதனால் அவசியம் பல்லி விழும் பலன்களை தெரிந்து வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. நமது உடல் பாகங்களில் எந்தெந்த பகுதிகளில் பல்லி விழுந்தால் என்ன நன்மைகள் வரப்போகிறது அல்லது எந்த வகைகளில் நமக்கு நஷ்டமோ, தீமைகளோ நேரப்போகிறது என்பதை ஒவ்வொன்றாக பாப்போம்.

பல்லி விழும் பலன்கள் : முன்க்காலத்தில் பல்லி விழும் பலன்கள் மற்றும் பல்லி கத்தும் பலன்களை அறிய கௌளி சாஸ்திரம் கற்பார்கள்.பழம்பெரும் இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் கூட மனிதர்களுக்கு வரும் எதிர்வினைகளை முன் கூட்டியே அறிய வைக்கும் ஒரு உயிரினங்களில் சிறப்பானதாக பல்லி ஆனது கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் எதிர்காலத்தின் செயல்களை கடவுளே நேரில் வந்து சொல்வதாக இந்த பல்லியை தெய்வத்தின் தூதுவனாக சொல்கின்றனர்.

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

pallivilumpalan in tamil 2024 for female

பல்லி விழும் பலன்கள் | Palli vilumpalan in tamil

தலை:பல்லி தலையின் மேல் விழுந்தால் கலகம்

முகம் : பல்லி முகத்தின் மேல் விழுந்தால் உறவினர் வருகை மற்றும் தரிசனம்

புருவங்களின் மத்தி : பல்லி புருவங்களின் மத்தியில் விழுந்தால் அது அரசு வகையில் அனுகூலம்

மேலுதடு: பல்லியானது மேலுதட்டில் விழுந்தால் பணம் விரையம் ஏற்படும்.

ADVERTISEMENT

கீழுதடு: பல்லியானது கீழுதட்டில் விழுந்தால் தன லாபம்

மூக்கு : பல்லியானது மூக்கின் மீது விழுந்தால் வியாதி அல்லது வேறு சம்பவம்

வலது செவி : பல்லியானது வலது செவியின் மீது விழுந்தால் தீர்க்காயுசு

இடது செவி : பல்லியானது இடது செவியின் மீது விழுந்தால் வியாபாரத்தில் அல்லது தொழிலில் லாபம்

கண்கள் : பல்லியானது கண்களின் மீது விழுந்தால்  சிறைவாசம்

முகவாய் : பல்லியானது முகவாய்க்கட்டையின் மீது விழுந்தால் அரசாங்க தண்டனை

ADVERTISEMENT

வாய் : பல்லியானது வாயில் விழுந்தால் பயம்

கழுத்து : பல்லியானது கழுத்தின் மீது விழுந்தால் எதிரிகள் தோல்வி அல்லது நாசம்

வலது பூஜம்: பல்லியானது வலது புஜத்தில் விழுந்தால் ஆரோக்கியம்

இடது பூஜம் :   பல்லியானது இடது புஜத்தில் விழுந்தால் பெண்கள் மீது பிரியம்

வலது மணிக்கட்டு: பல்லியானது வலது மணிக்கட்டு மீது விழுந்தால் பீடை சம்பவிக்கும்

இடது மணிக்கட்டு: பல்லியானது இடது மணிக்கட்டு மீது விழுந்தால் புகழ் மற்றும் கீர்த்தி பெறலாம்

ADVERTISEMENT

ஸ்தனம் : பல்லியானது ஸ்தனங்களின் மீது விழுந்தால் பாப சம்பவம்

வயிறு : பல்லியானது வயிற்றின் மீது விழுந்தால் தானியங்களின் மூலம் லாபம்

மார்பு : பல்லியானது மார்பின் மீது விழுந்தால் தனலாபம்

நாபி : பல்லியானது நாபியின் மீது விழுந்தால் ரத்தினங்கள் வகையில் லாபம்

தொடை : பல்லியானது தொடை மீது விழுந்தால் தந்தை உடல் அசௌகரியம்

முழங்கால் : பல்லியானது முழங்கால் மீது விழுந்தால் சுகம்

ADVERTISEMENT

கணுக்கால் : பல்லியானது கணுக்கால் மீது விழுந்தால் சுபம்

பாதம் : பல்லியானது பாதங்களின் மீது விழுந்தால்  பிரயாணம்

புட்டம் : பல்லியானது புட்டத்தின் மீது விழுந்தால் சுபம்

நகங்கள் :  பல்லியானது நகங்கள் மீது விழுந்தால் தன நாசம்

ஆண்குறி :  பல்லியானது ஆண் குறி மீதி விழுந்தால் தரித்திரம்

கூந்தல் : பல்லியானது கூந்தல் மீது விழுந்தால் மரணம் குறித்த பயம்

ADVERTISEMENT

முதுகு மீது பல்லி விழுதல்:

முதுகின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

கண் பகுதியில் பல்லி விழுந்தால்:

கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்

பல்லி விழும் பலன் – தோள்:

தோளின் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். தோளின் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

ADVERTISEMENT

பல்லி விழும் பலன் – பிருஷ்டம்:

பிருஷ்டம் இடது பக்கத்தில் பல்லிவிழுந்தால் செல்வம் உண்டாகும். பிருஷ்டம் வலது பக்கத்தில் பல்லிவிழுந்தால் சுகம் உண்டாகும்.

கபாலம் பகுதியில் பல்லி விழுந்தால்:

கபாலம் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலம் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் கதனம் உண்டாகும்.

கணைக்கால் பகுதியில் பல்லி விழுதல்:

கணுக்கால் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.

ADVERTISEMENT

பல்லி விழும் பலன் – மூக்கு – Mooku Palli vilumpalan :

மூக்கு இடது பக்கத்தில் பல்லி-விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும்

மணிக்கட்டு பகுதியில் பல்லி விழுந்தால்:

மணிக்கட்டு இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.

பல்லி விழும் பலன்கள் – தொடை (Lizard Falling On Thigh)

தொடை இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

ADVERTISEMENT

நகம் மீது பல்லி விழுந்தால்:

நகம் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

காது (Lizard Falling On ears)

காது இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். காது வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.

மார்பு

மார்பு இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். மார்பு வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.

ADVERTISEMENT

பல்லி விழும் பலன் – கழுத்து (Lizard Falling On Neck)

கழுத்து இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்து வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.

உதடு மீது பல்லி விழுதல்

உதடு இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். உதடு வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும்.

முழங்கால் – பல்லி விழும் பலன்கள்

முழங்கால் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்கால் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.

ADVERTISEMENT

பாத விரல் – பல்லி விழும் பலன்கள்

பாத விரல் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். பாத விரல் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.

கை மீது பல்லி விழுந்தால்

இடது கையின் மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கையின் மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

கை விரல் மீது பல்லி விழுதல்

இடது கையின் விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கையின் விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும்.

ADVERTISEMENT

பாதம் – பல்லி விழும் பலன்கள்

பாதம் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.

பல்லி விழும் பலன் – தலை:

தலையின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்.

பல்லி விழும் பலன் – நெற்றி:

நெற்றியின் இடது பக்கத்தில் பல்லிவிழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கத்தில் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.

ADVERTISEMENT

வயிறு பகுதியில் பல்லி விழுந்தால்:

வயிற்றின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் தானியம் சேரும்.

கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நம் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவையில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது.இதனால்தான் ஊர்வன வகையான உயிரினங்களில் ஒலியை எழுப்பும் சிறப்பு சக்தியை பல்லிக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளார். பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் எனவும் நம் இதிகாசங்கள் கூறுகின்றன. பல சிறப்புக்கள் மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின்பு பல அர்த்தங்கள் உள்ளது.

நம் வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினாள் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினாள் தீயவை நடக்கும் என்று கூறுவதும் இதனாலேயே. அதேபோல பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு. முக்காலத்தில் காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் இதன் சிறப்பை பாருங்கள்.

அவை தான் கௌளி சாஸ்திரம். பல்லிக்கு சில சக்தியானது இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதுபோல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

பல்லி விழுந்தால் பரிகாரம்:

ADVERTISEMENT

Palli Vilum Palan in Tamil :பல்லி விழுந்தால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என பழைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. உங்களது உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே தெய்வங்களின் படத்திற்கு முன்பாக திருவிளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்வதும் நல்லது.

சிவபெருமானுக்குரிய ம்ரித்யுன்ஜெய மந்திரத்தை ஜெபிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும். சித்த வைத்தியத்தில் மருந்தாகவும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும் பசு மாட்டிலிருந்து பெறப்படும் 5 விதமான பொருட்களில் செய்யப்படும் பஞ்சகவ்யா திகழ்கிறது. பசுமாட்டின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்பதால் பசு மாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யாவை உண்பதால் பல்லி நம்மீது விழுந்ததால் ஏற்படும் தோஷமாணது நீங்குகிறது.

வசதி மிகுந்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலே பரிகாரமாக இருப்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கின்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவம். மேலும் அந்த பல்லியானது உருவத்தோடு சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காண முடியும். தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவத்தை தொடுவதால் நமது மீதுள்ள ராகு – கேது, சனி போன்ற கிரகங்களின் தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கும்.

பல்லி விழும் பலன்கள் : நமது முன் வினைப் பயன் காரணமாகத் தான் பல்லி நது மீது விழுகிறது.. அதனால் முதலில் பல்லி நம் மீது விழுந்தால் தூய்மையான நீரினால் நீராடி விட்டு,  பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைப்பது நல்லது. இதன் மூலம் நமது மனதில் இருக்கும் பயம் மற்றும் குறைகள் அகலும். மேலும் ஆலயம் சென்று வழிபட்டு விட்டு வந்தால் நிம்மதி அதிகரிக்கும்.

மேலும் காஞ்சிபுரத்தில் அமைந்து இருக்கும் வரதராஜ பெருமாள் கோவில் பல்லிக்கு உகந்த கோவிலாக கருதப்படுகிறது. அங்கே அமைந்துள்ள தங்கம் மற்றும் வெள்ளியில் உள்ள பல்லி சிலையை நாம் தொடுவதால் ஏதாவது தீய அசம்பாவிதங்கள் மற்றும் தோஷங்கள் நீங்குவதாக காலம் காலமாக நம்பப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலும் பல்லியை வழிபடுகின்றனர். அதனால் அருகில் இருப்பவர்கள் அங்கேயும் கூட சென்று வழிபடலாம்.

ADVERTISEMENT

காஞ்சீபுரம் வரதாரஜப் பெருமாள் கோவில் பல்லி வரலாறு:

Palli Vilum Palan in Tamil :ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். உரிய வயதில் கல்வி கற்க, இருவரும் கௌதம ரிஷியின் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டனர். இருவரும் முறையாகப் பாடம் பயின்று வந்தனர். குருவுக்குச் சேவை செய்வதே பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து குரு வார்த்தைக்கு மறு வார்த்தையின்றித் தங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தனர். கௌதம ரிஷி செய்யும் பூசைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், தீர்த்தம் முதலியன கொண்டு வருவார்கள்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் கெளதம முனிவரிடம் வித்தை பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழங்கள், மலர்கள், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.

ஒருநாள் அவர்கள் கொண்டுவந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டுவந்து கெளதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதை பெற்றுக்கொண்டபோது அதிலிருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது.

அதைக்கண்டு கடும் கோபமுற்ற கெளதம முனிவர் அவர்கள் இருவரையும் நோக்கி பல்லியாகக்கடவது என்று சாபமளித்தார். இதனால் கவலையடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, தங்களை மன்னித்து, பாவ விமோசனமும் கூற வேண்டும் என வேண்டினர்.

உடனே முனிவர் சாந்தமடைந்து, இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதராஜ பெருமாளை தரிசிக்க சந்நிதியில் நுழையும்போது சாபம் அகலும் என்று கூறினார்.

ADVERTISEMENT

அதன்பின் ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்திற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர். குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், கஜேந்திரன் யானை வடிவில் இத்தலத்தில் நுழைந்தவுடன் இவர்களின் சாபம் அகன்றது.

இந்த பல்லிகளை தங்கம் மற்றும் வெள்ளியில் இன்றளவும் நாம் வரதராஜப் பெருமாள் சன்னதிக்கு அருகில் தரிசிக்கமுடியும். இதைத்தொட்டு வணங்குபவர்களுக்கு பல்லி விழுவதால் ஏற்படக்கூடிய சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

கனவு பலன்கள் | Kanavu Palangal in Tamil

Leave a Reply