நவதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள் || Nava Thaniyankal Name’s And Benifits in Tamil
Nava Thaniyam Name’s And Benifits in Tamil:
நவதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள்: நம் இன்று அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் உணவுகளின் பெயர் கூட நமக்கு சரியாக தெரிவதில்லை. ஆனால், நவதானியங்கள் என்பது “ஒன்பது வகையான” தானியங்களை குறிக்கிறது. இது போன்று என்னதான் ஒன்பது வகையான தானியங்கள் இருந்தாலும் அது என்னென்னவென்று இன்றும் சிலருக்கு தெரிவதில்லை. நவதானியங்களின் பெயர்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நவதானியம் என்றால் என்ன:
மாமிசத்துக்கு ஈடான ஒரு உணவுப் பொருள்கள் தான் நவதானியங்கள். இதில், ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இது உணவுக்கு மட்டும் பயன்படாமல் சில ஆன்மீக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கூறவேண்டுமானால், புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை சடங்குகளின் போதும், திருமண சடங்கின் போதும் பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், கோவில்களின் திருவிழாக்களில் இந்த நவதானியங்களில் முளைப்பாரி போட்டு பூஜை செய்து யாகம் வளர்க்கின்றனர்.
இந்த நவதானியத்தில் மனித உடலுக்கு தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, மாவு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், தாதுக்கள் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
நவதானியங்கள் பெயர்கள் || நவதானியம் பெயர்கள் மற்றும் பயன்கள் in english:
நவதானியங்கள்: நவதானியங்கள் மொத்தம் 9-வகைப்படும்.
1. நெல்
2. கோதுமை
3. கொள்
4. எள்ளு
5. கொண்டைக்கடலை
6. பாசிப்பயிறு
7. உளுந்து
8. துவரை
9. மொச்சை
நவதானியங்கள் நவகிரகங்கள்:
1. நெல் – செவ்வாய்
2. கோதுமை – சூரியன்
3. துவரை – சந்திரன்
4. எள் – சனி
5. கொள்ளு – கேது
6. பாசிப்பயிறு – புதன்
7. உளுந்து – ராகு
8. கொண்டைக்கடலை – குரு
9. மொச்சை – சுக்கிரன்
இவற்றை ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் ஏற்ப பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்து படைக்கப்படுகிறது.
நவதானியங்கள் பயன்கள் || நவதானிய உணவு:
1. நெல் (அ) அரிசி:
நெல்லில் இருந்து தான் அரிசி உருவாகிறது. அன்றாட வாழ்வில் இந்த அரிசி தான் நாம் அனைவரும் உணவிற்கு பயன்படுத்துகிறோம். இந்த நெல்லில் 20-மில்லி அளவு இரும்புச்சத்து காணப்படுகிறது. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்-ஈ போன்ற சத்துக்களும் இந்த நெல்லில் அதிக அளவு காணப்படுகிறது.
இந்த நெல் மற்றும் அரிசியில் பல்வேறு வகைகள் உண்டு. சீரக சம்பா அரிசி வாத நோய்களை குணமாக்க பயன்படுகிறது. அதிக அளவு பசியை ஏற்படுத்தவும் செய்கிறது. இதை அதிக அளவில் உட்கொண்டால் பித்தம் ஏற்படும்.
நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க புழுங்கல் அரிசி பயன்படுகிறது. சிவப்பு அரசியில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதனால், உடலை குறைக்கவும், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. இந்த அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் அவுலும் உடலுக்கு மிகவும் நல்லது.
2. கோதுமை:
நவதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள்: கோதுமை உணவில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ், கரோட்டின், புரதம் போன்றவைகள் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த கோதுமை உணவு பொருளை வட இந்திய மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
கோதுமை மாவை நெய் மற்றும் எண்ணெய் இல்லாமல் கூட சமைத்து நம்மால் சாப்பிட முடியும். அப்படி சாப்பிடுவதனால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டு. வட இந்திய மக்கள் இதை அதிகளவில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. கோதுமை தோசை, கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களை சாப்பிடும் போது உடல் எடையை குறைக்கவும் முடியும்.
3) கொள்ளு:
கொள்ளு என்ற நவதானியத்தில் இரும்பு சத்து, மாவு சத்து, மினரல் சத்து, பாஸ்பரஸ், அதிக அளவு தாது உப்புகள் காணப்படுகிறது. இது உடலில் உள்ள கெட்ட நீரை வியர்வை மூலமாக வெளியேற்ற உதவி செய்கிறது.
தண்ணீரில் நன்றாக கொள்ளை கொதிக்க வைத்து அந்த நீரை குடித்தால் காய்ச்சல், ஜலதோஷம், சளி போன்ற நோய்கள் சரியாகிவிடும். கொள்ளு ரசம் வைத்து அடிக்கடி சாப்பிடும் போது சிறுநீரக கற்களை கரைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
nava thaniyangal in tamil || Nava thaniyangal benifits pdf:
4. எள்ளு:
எள்ளில் வைட்டமின் பி1, வைட்டமின் சி, மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல வகையான சத்துக்கள் காணப்படுகிறது. எள்ளை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் உடலில் உள்ள இரத்தத்தை அதிகரிக்கிறது.
தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தி இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. மேலும், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
5. கொண்டைக்கடலை:
கொண்டைக்கடலையில் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை அதிக அளவு நிறைந்துள்ளது. இதில், “கிளைசீமிக் இன்டெக்ஸ்” குறைவாக காணப்படுவதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவுப் பொருளாகும்.
அதுமட்டுமில்லாமல், இரத்த சோகை பிரச்சனைகளுக்கும் கொண்டக்கடலை மிகவும் சிறந்தது. உடலை உறுதியாக்கவும், முகத்தை பளிச்சென வைத்திருக்கவும் உதவுகிறது. பெண்கள் அதிக அளவு கொண்ட கடலையை சாப்பிடுவதனால் மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்க முடியும்.
6. பாசிப்பயிறு:
பாசிப் பயரில் கால்சியம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ் போன்றவைகள் அதிக அளவு காணப்படுவதால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. மலச்சிக்கல், பித்தம் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து உடலை பாதுகாக்கிறது.
தற்போது, கோடை காலங்களில் ஏற்படக்கூடிய பெரிய அம்மை, சின்னம்மை போன்ற தொற்றுகளை சரி செய்ய பாசிப்பயறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் காய்ச்சலையும் குணப்படுத்துகிறது.
7. உளுந்து:
நவதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள்: உளுந்தில் கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் அதிக அளவு காணப்படுவதனால் இது உடல் சூட்டை குறைக்கிறது. இடுப்பு வலியை சரி செய்வதற்கும், இடுப்பு வலிமை பெறவும் பெரிதும் உதவுகிறது. கருப்பு உளுந்து பெண்களுக்கு மிகவும் நல்லது.
இதில், கூல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த விதமான நோயும் ஏற்படாது. தசை, எலும்பு, நரம்புகளுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருளாக உளுந்து காணப்படுகிறது.
8. துவரை:
துவரம் பருப்பில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் இந்த பருப்பு அதிக அளவு பயன்படுத்தினால் உடல் எடை அதிகரிக்கும்.
சரியான தகுந்த அளவு பயன்படுத்தும் போது உடல் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது. தோளில் ஏற்படும் அலர்ஜி வராமல் தடுக்கிறது. இரத்த ஓட்டத்தை ஒழுங்குப்படுத்தி சீரான நிலையில் பராமரிக்கிறது. இதய நோய் பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு காயங்கள், வலிகளை குணப்படுத்தும் மருந்தாகவும் துவரை பயன்படுகிறது.
9. மொச்சை:
மொச்சை பயிரில் நார்ச்சத்து, பொட்டாசியம், மினரல், போலெட் போன்ற சத்துக்கள் அதிக அளவு காணப்படுகிறது. இது உடலில் இரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பெரிதும் துணை புரிகிறது. திசுக்கள் மற்றும் அணுக்கள் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறது.
இதில்,போலேட் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் வராமல் தடுக்கும் உதவுகிறது. குடல் இயக்கத்தை சீரான நிலையில் பராமரிக்கிறது. செரிமானம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
மருத்துவ குறிப்பு || nava thaniyangal images:
நவதானியங்கள் ஐந்து பெயர்கள்:
நவதானியங்கள் என்பது நெல், கோதுமை, மொச்சை, துவரை, பாசிப்பயிறு, கொண்டக்கடலை,உளுந்து, எள் மற்றும் கொள்ளு என்பது ஆகும்.
நவதானியங்கள் கஞ்சி:
தேவையான பொருள்கள்:
• முளைகட்டிய உளுந்து
• முளைகட்டிய கருப்பு சுண்டல்
• முளைகட்டிய பச்சைப் பயிறு
• முளைகட்டிய கொள்ளு
•முளைகட்டிய மொச்சை
• பச்சை அரிசி
•கோதுமை
•துவரை
•எள்ளு
செய்முறை:
இவற்றையெல்லாம் ஒன்றாக பொடி செய்து சம அளவு எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை என இருவேளையும் கஞ்சி செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கி உடல் வலிமை பெறும்.
நவதானியங்கள் எத்தனை || nava thaniyam list in tamil:
நவதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள்: நவதானியங்கள் மொத்தம் 9-வகைப்படும்.அவை,
1. நெல்
2. கோதுமை
3. கொள்
4. எள்ளு
5. கொண்டைக்கடலை
6. பாசிப்பயிறு
7. உளுந்து
8. துவரை
9. மொச்சை
இவை, அனைத்துமே நவதானியங்கள் எனப்படும்.
Read Also:- திரிபலா சூரணம் பயன்கள்