IPL-2024 CSK vs RCB Dream-11 முதல் போட்டிக்கான இரு அணிகளின் Playing-XI கணிப்பு
ஐபிஎல்-2024 17-வது சீசன் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. 17-வது சீசனில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றது. இதுவரை முதல் 21-போட்டிக்கான அட்டவணை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு, காரணம் இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுவதனால் மீதி போட்டிக்கான அட்டவணை பிறகு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருக்கும் நிலையில் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
2008-ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பல சிக்கல்களில் இருந்து வெற்றிகரமாக வழி நடத்திய மிகவும் பொறுப்பான மற்றும் புகழ்பெற்ற கேப்டன் தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களுக்கு சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
2022-ஆம் ஆண்டு சில போட்டிகளில் ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார் தோனி. ஆனால் அதில் சிறப்பாக ஜடேஜா செயல்படதா காரணத்தினால் மீண்டும் தானே கேப்டன் பதவியை ஏற்றார். அதுபோன்று தோனி காயம் அடைந்த சில போட்டிகளில் சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்று உள்ளார்.
தற்போது சென்னை அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜாவுக்கு பிறகு இளம் வீரரான ருத்ராஜ் நான்காவது கேப்டனாக சிஎஸ்கே அணியை வழிநடத்த உள்ளார். ருத்ராஜ் கெய்க்வாடிற்கு பெரிய சவால்களும், பெரும் பொறுப்புகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழி நடத்துவதால் பல சிரமங்களும் காத்திருக்கிறது.
இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கேப்டனாக முதலில் விளையாடும் அவருக்கு இது ஒரு சோதனையாக கூட இருக்கலாம். இதுபோன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் Playing-XI குறித்தும் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கிறது. தோனி(impact) வீரராக விளையாடக் கூட வாய்ப்புள்ளது. அல்லது முழு போட்டியிலும் கூட விளையாடுவார். இதுபோன்று பல எதிர்பார்ப்புகள் இருக்கும் முதல் போட்டியில் இரு அணிகளுக்கான Playing-XI முன்னோட்டத்தை தற்போது பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
ருத்ராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்தரா, அஜின்கயா ரஹானே, டேரில் மிட்சல் (அ) மொயின் அலி,ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாகர், ஷர்துல் தாகூர், மகேஷ் தீக்ஷனா (அ) மதீஷ் பத்திரனா, முஸ்தஃபீஷிர் Impact player– சமீர் ரிஸ்வி, முகேஷ் சௌத்ரி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:
ஃபாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் பட்டிதார், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), அல்ஸாரி ஜோசப், முகமது சிராஜ், கரன் சர்மா, ஆகாஷ் தீப். Impact Player-அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், விஜய்குமார் வைஷாக்.
Dream-11 பிளையிங் லெவன் கணிப்பு || First ipl Match Dream-11 Player Prediction:
இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அங்கமாக திகழ்வது Dream-11 விளையாட்டு தான். அதனுடைய, முதல் போட்டிக்கான வீரர்கள் கணிப்பை பற்றி இப்போது பார்க்கலாம்.
1. விக்கெட் கீப்பர் – மகேந்திர சிங் தோனி
2. பேட்ஸ்மேன்கள் – விராட் கோலி, ருத்ராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்தரா,ஃப் டூ பிளேசிஸ்.
3. ஆல் ரவுண்டர்கள் – ரவீந்திர ஜடேஜா, கேமரூன் கிரீன், க்ளைன் மேக்ஸ்வெல்.
4. பந்துவீச்சாளர்கள்- தீபக் சாகர், முஸ்தஃபீஷி ரஹ்மான், முகமது சிராஜ்.