IPL – 2024 சென்னை வந்துவிட்டார் பத்திரனா இனி சி.எஸ்.கே பந்துவீச்சில் சிரமம் இல்லை || மகிழ்ச்சியில் சி.எஸ்.கே ரசிகர்கள்
2024 ஐபிஎல் 17-வது சீசன் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஒவ்வொரு அணியில் இருந்தும் பல வீரர்கள் காயம் காரணமாகவும் சொந்த காரணங்கள் காரணமாகவும் அந்த அணியை விட்டு விலகினர். அதுபோன்றுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குட்டிமணி என்று அழைக்கப்படும் மதிஷா பத்திரனா காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட முடியாமல் போனது.
ஆனால், மதீஷா பத்திரனா தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் சென்னையில் இணைந்துள்ளார். அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் இரண்டாவது போட்டியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை தோற்கடித்தது. ஆர்.சி.பி அணிக்கு எதிரான முதல் போட்டியில் பத்திரான காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.
அந்த போட்டியில் அவருக்கு பதிலாக விளையாடியவர் வங்காளதேச இடதுகை வேதப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிஸர் ரஹ்மான் இவர் சிறப்பாக விளையாடி முக்கியமான 4-விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி, ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதனால், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிளேயிங் லெவனின் பத்திரானவுக்கு இடம் கிடைப்பதில் ஒரு சிக்கல் நிலை உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மார்ச் 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று எதிர்கொள்கிறது. இந்த நிலையில் தான் மதிஷா பத்திரனா காயத்தில் இருந்து மீண்டு மறுபடியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
சென்னை அணியில் இணைந்திருப்பதனால் அவர் நிச்சயம் ப்ளெயின் லெவலில் விளையாட வாய்ப்புள்ளது. இதனால், கண்டிப்பாக ஒரு வெளிநாட்டு வீரர் வெளியே அமர வைக்க வேண்டும். ஆனால், முஸ்தபிஷர் முதல் போட்டியில் முக்கியமான நாள் 4-விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
ரச்சின் ரவீந்திரன் மற்றும் டேரில் மிட்சல் ஆகியோரும் பேட்டிங் ஆர்டரில் பலம் சேர்த்து செட் ஆகிவிட்டனர். இதனால், மீதி இருக்கும் ஒரே வழி சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளரான இலங்கை அணியை சேர்ந்த தீக்க்ஷனாவை வெளியே அமர வைத்தால் மட்டுமே பத்திரானாவை அணியின் பிளேயிங் லெவனில் விளையாட வைக்க முடியும்.
தீக்க்ஷனாவின் ஆட்டம் தற்போது மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் கடந்த போட்டியில் 4-ஓவர்களை வீசிய தீக்க்ஷனா 36-ரன்களை சரமாரியாக கொடுத்திருந்தார். ஆனால், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இதனால், தீக்ஷனாவை தூக்குவதன் மூலம் அவருக்குப் பதிலாக ரச்சின் ரவீந்திரன் 4-ஓவர்களை வீசலாம்.
ஜடேஜா மற்றும் ரச்சின் ரவீந்தரா இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் ஓவர் வீசுவது சமமாக இருக்கும். இதனால், தீக்க்ஷனாவை அணியிலிருந்து தூக்கி விட்டு அவருக்கு பதிலாக பத்திரானவை பிளேயிங் லெவனின் விளையாட வைக்க வாய்ப்பு உள்ளது.
அதுபோன்று, முதல் போட்டியில் ரன்களை சரமாரியாக வாரி வழங்கிய துசார்தேஷ் பாண்டேவுக்கு பதிலாக இந்திய வேக பந்துவீச்சாளர் ஷர்துல் தாகுரை அணியில் சேர்ப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலமாகும்.