ADVERTISEMENT

IPL-2024 சிஎஸ்கே அணியின் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விலை திடீரென குறைப்பு || 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் இன்று முதல் தொடக்கம் மகிழ்ச்சியில் சி.எஸ்.கே ரசிகர்கள்

IPL-2024 சிஎஸ்கே அணியின் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விலை திடீரென குறைப்பு

ipl trending news in tamil:

ஐபிஎல் 2024-ஆம் ஆண்டு 17-வது சீசன் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசைப்புயல்கள் கலந்துகொண்டு கோலாகலமான முறையில் பிரமாண்டமாக தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 174-ரன்கள் என்ற இமாலய இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.

அதன் பிறகு, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 174-ரன்கள் என்ற இமாலய இலக்கை ஷேஷ் செய்து இந்த வருடத்திற்கான முதல் ஐபிஎல் போட்டியின் வெற்றியை பதிவு செய்தது.

இந்த வருடம் சென்னை அணி விளையாட உள்ள அனைத்து போட்டிகளின் டிக்கெட்களும் ஆன்லைன் மூலமாகவே விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே சென்னை அணி நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ADVERTISEMENT

அதுபோன்றுதான் முதல் போட்டிக்கான டிக்கெட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்தது. ஆனால் இணையதளம் திடீரென முடங்கிய காரணத்தினால் ஓரிரு நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது. இதனால், பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால், பிளாக்கில் டிக்கெட்டுகள் கூடுதல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் இரண்டாவது போட்டியான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்தப் போட்டி வருகிற மார்ச்-26 (செவ்வாய்க்கிழமை) அன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தற்போது இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை 1,700-ரூபாய் முதல் 7,500-ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது.முதல் போட்டியில் டிக்கெட்டின் விலை ரூ.1,700-ல் இருந்து, 7,500ரூபாயாக நிர்ணயித்த நிலையில், தற்போது இந்த போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.

 

Leave a Reply