பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் – Dates Benefits In Tamil
Dates Benefits In Tamil: பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய பழ வகைகளை சார்ந்த அனைத்து பயல்களும் பழங்களும் உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாகும். அந்த வகையில் இன்று நாம் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்:
• வைட்டமின்கள்
• தாதுக்கள்
• நார்ச்சத்து
• கால்சியம்
• பொட்டாசியம்
• பாஸ்பரஸ்
• மக்னீசியம்
மேலே கூறப்பட்டுள்ளார் இந்த அனைத்து சத்துக்களும் பேரிச்சம் பழத்தில் உள்ளதால் நாம் பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் அதிக அளவு நன்மையை பெற முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்:
Dates Benefits In Tamil: பேரிச்சம் பழத்தை பொருத்தவரையில் அதில் அதிக அளவு தாதுக்கள் மட்டும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் உடலுக்கு தேவையான நார் சத்துக்களும் உள்ளது. இந்த பழத்தின் உற்பத்திக்காலம் ஒவ்வொரு வருடத்தின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும்.
மேலும் தற்போது அனைத்து வகையான கடைகளிலும் கெட்டுப் போகாத வண்ணம் வருடம் முழுவதிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் தங்களின் விரத நோன்பு முடிவிற்கு இந்த பழத்தை உண்கின்றனர். அந்த அளவிற்கு பேரிச்சம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது.
கண்பார்வை அதிகமாகும் பேரிச்சம்பழம்:
Dates Benefits In Tamil: கண்புரை மற்றும் கண் தொடர்பான வியாதிகளை ஏற்படுத்தக்கூடிய வைட்டமின் டி குறைவு இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம். மேலும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழத்தை சிறு தேனை எடுத்து அதில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் போதும் மாலைக்கண் நோய் சீக்கிரம் குணமாகிவிடும். மேலும் சிறிய ஒரு முதல் பெரியவர் வரை கண்ணிற்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் இந்த பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் சரி செய்யலாம்.
வெயில் நேரங்களை விட குளிர் நேரங்களிலேயே அதிக அளவு நோய்கள் மனிதர்கள் உடலில் ஏற்படக் கூடியதாகும். பொதுவாக பேரிச்சம்பழம் அனைத்து வகையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்குள் வரும் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது போன்ற காலங்களில் பேரிச்சம் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்:
Dates Benefits In Tamil: பேரிச்சம் பழத்தில் பொதுவாக மனித உடலுக்கு தேவையான நார்சத்து தாதுக்கள் கால்சியம் பொட்டாசியம் ஆகியவை இருப்பதால், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பேரிச்சம்பழம் விளங்குகிறது
உடலில் ஏற்படும் அதிகமான வெப்பநிலையை குறைத்து உடலுக்கு தேவைப்படும் அளவான வெப்பத்தை பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படுத்த முடியும். மேலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடும் போது உடலுக்கு தேவைப்படும் வெப்பமானது வெதுவெதுப்பாக கிடைக்கும்.
கருப்பு பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
• பலருக்கு இரத்த குறைவு அல்லது ரத்தசோகை எனும் நோய் தற்காலத்தில் அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு ரத்தசோகை ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சோர்வாகவே இருக்கும்.
• இதனை சரி செய்ய நாம் தினமும் பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தாலே போதுமானது ரத்தசோகை மற்றும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிகப்பு அணுக்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும்.
• மேலும் தொடர்ச்சியாக பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் எளிமையாக குணப்படுத்த முடியும்.
• சிலருக்கு ரத்தம் குறைவானதாக இருக்கும். மேலும் கற்பிணி பெண்கள் நாட்கள் செல்ல செல்ல அவர்களின் ரத்தம் குறைந்து கொண்டே செல்லும். எனவே பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் புதிய ரத்தம் உருவாக்கும் தோல் பகுதிகளை வழுவழுப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க முடியும்.
• மேலும் இந்த பேரிச்சம்பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் மற்றும் அதிரடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
• கண் நோய்கள் ஏற்படுத்தக்கூடிய மூளை நரம்புகளை இந்த பேரிச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் வலுவாக்க முடியும். மேலும் எண்ணற்ற நோய்களுக்கு இந்த பேரிச்சம்பழம் தீர்வாக உள்ளது.
தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக்க உதவும் பேரிச்சம்பழம்:
சிலருக்கு எலும்புகள் மற்றும் தசைகளில் அடிக்கடி வலிகள் ஏற்படும் மேலும் மழைக்காலங்களில் சூரிய ஒளி ஆனது நம் மீது படாமல் இருப்பதால் நமக்கு தேவைப்படும் வைட்டமின் டி அளவு குறைந்து காணப்படும்.
இவ்வாறு இருப்பதால் இது போன்ற நோய் உடையவர்கள் மேலும் வலுவிழுக்க கூடும். எனவே எலும்புக்களுக்கு அதிக சத்து கொடுக்கக்கூடிய இந்த பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வரலாம்.
மேலும், பேரிச்சம் பழத்தில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கு தேவைப்படும் கால்சியத்தின் அளவுகளை இதன் மூலம் அதிகரிக்க செய்யலாம்.
இதய சம்பந்தமான நோய்களை குறைக்கும் பேரிச்சம்பழம்:
• இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுவதை இந்த பேரிச்சம் பழம் தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம்.
• மேலும் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி கூர்மையாக கவனிக்கும் திறன் மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் போன்றவற்றை அதிகரிக்க முடியும்.
பேரிச்சம்பழம் எப்பொழுது சாப்பிட வேண்டும்:
பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதற்கு எண்ணற்ற முறைகள் உள்ளன. ஆனால் அதனை சரியாக செய்தால் மட்டுமே பேரிச்சம் பழத்தின் அனைத்து சத்துக்களையும் நம்மால் பெற முடியும்.
• பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து அதனை எடுத்து சாப்பிடலாம்.
• இரவு தூங்க செல்வதற்கு முன்னர் ஒரு டம்ளர் பாலை காய வைத்து அதனுள் பேரிச்சம் பழத்தை ஊற வைத்து விட வேண்டும். பின்னர் காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால் உடலுக்கு அதிகப்படியான சத்தியம் நோய் எதிர்ப்பு திறனும் கிடைக்கும்.
• உடல் பருமன் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இந்த பேரிச்சம் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் போதுமானது உடல் எடை சீக்கிரம் குறைந்து விடும்.
• பேரிச்சம் பழத்தை இரவு நேரம் அல்லாதது மற்ற எந்த நேரம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் அதனை தேன் அல்லது பால் ஆகிய இரண்டுடன் கலந்து சாப்பிட்டால் மட்டுமே அது அளவு சத்துக்கள் கிடைக்கும்.
பேரிச்சம்பழம் ஆண்மை சக்தி அதிகரிப்பு:
பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். மேலும் கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தம் உருவாக்குதல் மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி ஆகியவை நன்றாக இருக்கும்.
பாலில் பேரிச்சம்பழம்:
பாலில் பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை அதிகளவு நம்மால் பெற முடியும். எனவே இரவு தூங்கும் போது அல்லது பகலிலோ பேரிச்சம் பழத்தை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.
12 நாள் தொடர்ச்சியாக பேரிச்சம் பழம் சாப்பிட்டால் என்ன குணம்:
பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்களான பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், நார்ச்சத்து, தாதுக்கள் ஆகியவை அதிக அளவில் காணப்படுவதால் இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்கள் ரத்த அழுத்தம் கண் பார்வை ஆகிய நோய்களை எளிதில் குணமாக்கலாம்.
மேலும் உடலுக்கு தேவையான ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டோடு வைத்திருக்க இந்த பேரிச்சம்பழம் உதவுகிறது. குழந்தைகளுக்கு படிக்கும் திறன் மற்றும் ஞாபகத்திறன் அதிகரிக்க இந்த பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது மிகுந்த நல்லது.
பேரிச்சம் பழத்தின் தீமைகள்:
1. எந்த ஒரு பழமாக இருந்தாலும் அதனை அளவோடு சாப்பிடுவது நல்லது. அதனைப் போல அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பேரிச்சம் பழமும் தீமையை விளைவிக்கும்.
2. பேரிச்சம்பழத்தில் அதிகப்படியான இனிப்பு சக்தி உள்ளதால் இவை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையின் அளவை அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
3. மேலும் இதனை நாம் அளவோடு இல்லாமல் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது உடலின் எடையை அதிகளவு அதிகரிப்பதோடு பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் மூளை சம்பந்தமான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
4. மேலும் சிறிய அளவு பேரிச்சம் பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் சத்து குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படியே பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது.
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பொதுவான நன்மைகள்:
1. நீரிழிவு நோய்: எலும்புகளை வலுவிழக்கு செய்யும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் எலும்பிற்கு தேவைப்படும் கால்சியல் சத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும். எனக்கு எலும்பு மற்றும் தசைகள் உறுதியாக இருக்கும்.
2. சளி மற்றும் இருமல்: குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய சளி மற்றும் இருமல் போன்ற நோய்களை இந்த பேரிச்சம்பழம் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை பாலை நன்றாக சுண்ட காயவைத்து அதை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக அதில் ஊற வைத்து பின்னர் பேரிச்சம்பழம் மற்றும் பால் இரண்டையும் சாப்பிட்டு வந்தால் சளி இருமல் குறையும்.
3. ஞாபக சக்தி அதிகரித்தல்: பேரிச்சம் பழத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளதால் மூளையில் இருக்கக்கூடிய நரம்பு மண்டங்களில் செயல் திறனை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் கூர்மையான சக்தி ஞாபகத்திறன் மற்றும் ஒருமுகப்படுத்துதல் ஆகியவற்றை அதிகரிக்கலாம்.
4. இதய சம்பந்தமான நோய்கள்: பேரிச்சம் பழத்தில் காணப்படும் பொட்டாசியம் நாம் உட்கொள்ளும் போது இதயத்தை மென்மையாக்கி மேலும் இதயத்தின் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
5. இதய நோய் மற்றும் தசை வீக்கம்: மெக்னீசியத்தின் சக்தியின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய இதயம் மற்றும் தசை சம்பந்தமான நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும்.
[…] […]
[…] […]