ADVERTISEMENT
Bajra In Tamil

Bajra In Tamil – கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள்

Bajra In Tamil – கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள்

Bajra In Tamil

கம்பு என்றால் என்ன – Bajra In Tamil:

இந்தியாவில் விளையக்கூடிய அதிக அளவு மக்களால் உண்ணக்கூடிய ஒரு சிறு தானிய வகையை சேர்ந்ததாகும் இந்த கம்பு. கம்பை பொறுத்தவரையில் எண்ணற்ற வகை உணவுகளை விதவிதமாக இதனைக் கொண்டு நாம் செய்து சாப்பிடலாம்.

அரிசி மற்றும் கம்பு இவை இரண்டும் இந்தியாவில் அதிகப்படியாக சமைக்கக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருள்களில் ஒன்றாகும். பழங்காலத்தில் இருந்த பல்வேறு வகையான தானியங்களுள் இன்றும் அழியாமல் இருப்பது இந்த கம்பு பகை மட்டும் தான்.

ஏனென்றால் இந்த கம்பு தானியத்தை பயிரிடுவதற்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகிவிடும் மேலும் இது தண்ணீர் இல்லாத பூமியிலும் விளையக்கூடிய ஒரு தானிய வகையாகும்.

மேலும் இந்த கம்பில் அதிகப்படியான உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் இதை அதிக அளவு மக்கள் தினமும் உட்கொள்கின்றனர்.

இந்தப் பதிவில் நாம் Bajra In Tamil கம்பு பற்றிய மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.

ADVERTISEMENT

Bajra in Tamil – கம்பு பயன்கள்:

கம்பை கூல் தோசை மற்றும் அதனை வேக வைத்து வருத்தும், மேலும் கம்பை ஊற வைத்து அதனை முளைகட்டியும் சாப்பிடலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் வட மாநிலத்தில் அதிகமானோர் கம்பை அரைத்து அதனை தோசை மாவு ஊற்றி சாப்பிடுகின்றனர்.

இந்தியாவில் கம்பு பயிர் தான் அதிக அளவு பயிரிடப்படுகிறது இதற்கு ஆகும் காலம் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆவதால் இதற்கு அதிக அளவு தண்ணீரும் தேவைப்படாது.

கம்பு மருத்துவ குறிப்புகள்:

அரிசியை பொறுத்தவரையில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றது. ஆனால் கம்பு என்பது ஒரே ஒரு வகை சிறுதானியத்தை சேர்ந்தது.

• கம்பை தினமும் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மற்றும் கண்களுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் நீங்கிவிடும்.

• மேலும் இந்த கம்பில் இரும்பு சத்து அதிக அளவு இருப்பதால், குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கொடுத்து வர மன வலிமையும் மற்றும் அதிக அளவு ரத்தம் ஊற வைக்கிறது.

ADVERTISEMENT

• மேலும் முளைகட்டிய கம்பு தானியத்தை சாப்பிடும் பொழுது எண்ணற்ற சிறிய நோய்களிடமிருந்து பாதுகாக்கிறது.

• வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்திற்கும் போக்குவராக இந்த கம்பு செயல் படுகிறது. குறிப்பாக வயிற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோய் வகைகளை அறவே தடுத்து நிறுத்துகிறது இந்த கம்பு.

கம்பை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்:

Bajra In Tamil – கம்பை சாதாரணமாக கூட எடுத்து சாப்பிட்டு என்றும் வாங்கலாம். இவ்வாறு தினமும் நாம் சாப்பிடுவதால் உடலில் வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவு அதிகரித்து நம்முடைய உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

தூரப்பார்வை மட்டும் கிட்ட பார்வை அல்லது பார்வை சரியாக தெரியாதவர்கள் இந்த கம்பை அதிகளவு சாப்பிட்டு வர கண் சம்பந்தமான பிரச்சினைகள் குறையும் ஏனென்றால் கம்பில் வைட்டமின் ஏ அதிக அளவு காணப்படுகிறது.

கம்பி தினமும் சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்புகள் குறைய உதவுகின்றது. மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளும் இந்த கம்பு மூலம் சரி செய்யலாம்.

நாட்டுக் கம்பு சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்:

• குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்து விட்டால், இந்த கம்பு தினமும் சாப்பிட்டு வருவதால் அதனை அதிகரிக்க முடியும் என்பது மருத்துவர்கள் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

ADVERTISEMENT

• மேலும் பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போகுதல் மற்றும் மாதவிடாயின் போது அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படுவதை கம்பு சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

• கம்பை பொதுவாக கூழ் வடிவத்தில் உணவு சமைத்து சாப்பிடும் பொழுது, வயிற்றில் ஏற்படும் வலி குறைவதோடு மட்டுமல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட புற்று நோய்களையும் தடுக்கிறது.

• தினம்தோறும் கம்பு சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஏற்பட்ட வெப்பம் தணிந்து உடல் சாதாரண குளிர்ச்சி நிலையில் இருக்கும்.

தினமும் கம்பு சாப்பிடுவதால் என்னென்ன நோய்கள் குணமாகும்:

1. நீரிழிவு நோய்கள்

2. இதய நோய்கள்

3. ரத்த அழுத்தம்

ADVERTISEMENT

4. இதய நோயுடன் தொடர்புடைய மற்ற வியாதிகள்

• தினமும் நாம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து உள்ள பொருட்களை அதிகளவு சாப்பிட்டு வந்தாலே போதும் நீரிழிவு நோய் குறையும்.

• கம்பை தினமும் சாப்பிடுவதால் அதில் இருக்கும் புரத சத்துக்கள் குரலில் உள்ளே சென்று, மெதுவாக செயல்பட தொடங்கும். இதனால் அதிக நேரம் பசி எடுக்காத நிலை உண்டாகும்.

• இவ்வாறு இருப்பதால் உடலுக்குத் தேவையான நீர் அந்த கம்பின் வழியாக சென்று நீரிழிவு நோயை தடுக்கிறது.

கம்பை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா:

பொதுவாக இந்த கம்பை ஆறு மாத குழந்தைகள் இருந்து குழந்தைகளுக்கு கஞ்சி போன்ற செய்து உணவாக கொடுத்து வரலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் உடலுக்கு வலுவாகவும் இருக்கிறது.

தற்போது உள்ள காலத்தில் குழந்தைகள் தொலைபேசியை பார்த்துக் கொண்டு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். தினமும் ஒரு புடி அளவிற்கு கம்பை குழந்தைகள் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் பி ஆனது நம்முடைய உடலில் அதிக அளவு சுரக்கப்பட்டு தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்து தூக்கத்தை ஏற்படுத்த வழி செய்கிறது.

ADVERTISEMENT

காலையில் எழுந்தவுடன் முளைகட்டிய கம்பை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கலாம் மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கம்பை சாப்பிடுவதால் உடலில் உள்ள பித்த அமிலங்களின் சுரப்பை குறைத்து பித்தப்பை கல் உருவாவதை குறைக்கிறது.

கொழுப்பை குறைக்கும் கம்பு:

தற்போது உள்ள காலகட்டத்தில் கொழுப்பினால் அதிக அளவு இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுகின்றது.

எனவே நாம் அதிக அளவு நார்சத்து கொண்ட பொருட்களை தினமும் நம்முடைய உடலில் எடுத்துக் கொள்வதால் உடல் ஏற்படும் கொழுப்புப் பொருட்கள் சீக்கிரம் கரைந்து உடலில் கொழுப்புகள் தங்குவதை தடுக்கும்.

கம்பை தினமும் சாப்பிட்டு வருவதால் உடலுக்குத் தேவையான கலோரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, நீண்ட நேரம் பசி இல்லாமல் வைத்திருக்கும் இதனால் நம் உடலில் ஏற்படும் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் வேகமாக கரைய தொடங்கி விடும்.

மேலும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த கம்பு ஒரு தலையாய மருந்தாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்படுவதால் இந்த ரத்த சோகை எனும் நோய் ஏற்படுகிறது இதனை நாம் கம்பு தினமும் சாப்பிட்டு வர உடனே சரி செய்து விடலாம்.

Read Also:

ADVERTISEMENT

Leave a Reply