Amma Kavithaigal Tamil-அம்மா அன்பு கவிதை
கோவிலுக்கு செல்லாமல்
கைக்கூப்பி வணங்காமல்
உன் ஆசையை நிறைவேற்றும்
ஒரு தெய்வம் அம்மா!
வானத்தில் உதிக்கும் சூரியனுக்கு கூட
இரவில் ஓய்வுண்டு.
ஆனால் தாய்க்கு என்றுமே
ஓய்வில்லை
என் தாயே
உயிரில் கலந்த உறவே
உன் மடி வேண்டும்
நான் படுத்துறங்க.
அம்மா என் சகலமும் நீ…
அம்மா நான் நிதம் தேடும் உயிர் நீ…
அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே.
பாலூட்டி சீராட்டி பசி மறந்து
என்னை காத்தாயே!
அம்மா என நான் அழைக்கும்
ஒரு சொல்லுக்கு.
நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய்
பத்து மாதம் வரை அல்ல
உன் ஆயுள் காலம் வரை.
அம்மா கவிதைகள்
உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.
ஆரம்பம் முதல் கடைசி வரை மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு, அது அம்மாவின் அன்பு மட்டுமே.
இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு.
மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் அம்மா என்று.
வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதே வாழ்க்கை!
அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் ஒரு அனாதைதான்.
ஒரே வரம் அம்மா
இந்த வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரே வரம் அம்மா உனக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.
மூச்சுள்ளவரை காப்பேன்
மூச்சடக்கி ஈன்றாய் என்னை என் மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்.
இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி உன் முகம் தான் அமோ அன்னையர் தின வாழ்த்துகள்.
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்.
ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை.
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை.
வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக.
மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது
வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை.
அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்.
நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா.
இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்.
நான் உன்னுடன்
இருக்கும் பொழுது
என் பிரச்சனை
எப்போதும் மறந்து
விடுகிறேன் செல்லமே
அம்மா
எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை
கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
அம்மா
ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு
ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது
உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே
ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக
இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது
தாய் மடியைக்
காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை
அம்மா
இந்த நேரத்திலும்
தன்னை பற்றி
கவலைகொள்ளாமல்
நமது ஆரோக்கியத்தில்
அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு
பாசம் தான்
தாய்மை
உன்னை அணைத்து
பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம்
என் கையில் என்று.
இந்த உலகில்
பாசம் எனும்
தீராத ஒளி
பரவி நிற்க
அம்மா எனும்
தீபம் தான்
காரணம்
அம்மா பாசம் கவிதைகள்
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
அன்னை என்றொரு
உறவு இல்லாவிடில்
அனாதை தான்
அனைவருமே
தரணியெங்கும்
தேடினாலும்
தாயைப்போல
ஓர் உன்னத
உறவு கிடைக்காது
கோடிகளாலும்
வாங்க முடியாத
ஒரே விசயம்
அம்மாவின் அன்பு
இந்த உலகத்தின் உயிர்மூச்சாய்
அனைத்து உயிர்களின் சுவாசமாய்
வாழ்க்கையின் உயிரோட்டமாய்
பிரபஞ்சத்தின் ஆணிவேராய் இருப்பவள் அம்மா
அம்மா கவிதை 20 வரிகள்
மனிதர்களுள் மேன்மையானவளாய்
தெய்வங்களே வணங்கிடும் தெய்வமாய்
நடமாடும் அழகு தேவதையாய்
அன்பின் திருவுருவமாய் விளங்குபவள் அம்மா
பத்துமாதம் தன் பொன் வயிற்றில்
பத்திரமாய் எனை சுமந்து
வலிகள் பல தாங்கி
பத்திரமாய் எனை பெற்றெடுத்தவள் அம்மா
அந்தி பகல் கண் உறங்காது
அவளது உதிரத்தையே பாலாக்கி
தன் வாழ்வைத் துறந்து
எமக்காய் வாழ்பவள் அம்மா
பசி தூக்கம் இழந்து
உற்றார் உறவினரை மறந்து
அவள் நலம் பாராது
தன் குழந்தைகளுக்காய் வாழ்கின்ற தேவதை
தான் அறிவிலியாய் இருந்தாலும்
தன் பிள்ளை உயர்ந்தவனாய் விளங்க
சிறந்தவற்றை எல்லாம் அவனிற்கு அளித்திட
கடினமாய் உழைக்கும் உழைப்பாளி
எங்கே பார்த்தாலும் காதலர்கள்,
என்னை தான்
காதல் செய்ய யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்
காத்திருந்தால் எனக்காக சாப்பிடாமல்
என் அம்மா.
அம்மா மகள் கவிதை வரிகள்
நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்
வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை.
இறைவன் எனக்கு கொடுத்த
முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா.
பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,
இனி என்றுமே சுமக்க நினைக்கிறன்
என் நெஞ்சில் அம்மா.
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்
இன்னும் குழந்தையாக.
நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,
வேறு அமிர்தம் நான் கண்டதில்லை
அம்மா.
கண்களை மூடி பார்த்தாலும்,
கண்களை திறந்தாலும், கனவிலும்..
என் அன்னையே..
அவள் எப்போதும் நினைப்பது
என்னையே.
தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்.
தமிழில் அம்மா என்ற சொல்
எப்படி வந்தது என்று தெரியாது..
ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம்
அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்.
என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்.
அம்மா தியாகம் கவிதைகள்
கல்லறையில் உறங்க சொன்னால்
கூட உறங்குவேன்.. அம்மா நீ
வந்து தாலாட்டு பாடினால்.
உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!
பத்து மாதம் சுமை, ஒரு மணிநேரம் வலி,
அனைத்தும் மறந்தாள்..
குழந்தையின் முதல் அழுகை
சத்தம் கேட்டதும்.. அம்மா.
முகத்தை காணும் முன்பே
நேசிக்க தெரிந்தவள் தாய் மட்டுமே.
நான் பார்த்த முதல் அழகியும் அவளே..
எனது உலக அழகியும் அவளே
என் அம்மா.
உலக அதிசயம் காண ஆர்வமில்லை..
அன்னையே உன்னை கண்ட பின்.
தாய் கவிதை 10 வரிகள்
அம்மா அழகு என்றால் நீ..
அம்மா என்று அழைப்பதில்
அழகும் அழகு பெறுகிறது.
அழுக்கு தேகம், கலைந்த கூந்தல்,
கிழிந்த சேலையிலும் கடவுளாக
தோன்றுகிறாள் அம்மா.
கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்..
வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்..
மறுபிறவி பெற்று உனக்கு
உயிர் தருகிறாள் அன்னை.
அன்னையின் அன்பில் அரவணைக்கப்பட்ட
அனைவருமே அன்பானவர்கள்..
அறிவானவர்கள்.. அழகானவர்கள்.!
நேசிக்கும் உறவுகள் யாவும்
நம் அம்மா ஆக முடியாது.
வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தாலும் நாம் ரசிப்பது
நிலவை தான்..
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே.
எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
எல்லா அம்மாக்களுக்கும்
நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.
துன்பங்கள் வரும் தருணம்
தாயின் மடி சொர்க்கம்.
தாயை வணங்குவோம்
தாய்மையை போற்றுவோம்.