Abdul Kalam life history in Tamil || அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
Abj Abdul Kalam Life History In Tamil: “கனவு காணுங்கள்” என்ற தம்முடைய ஆழ்ந்த சிந்தனையின் மூலம் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடுபட்டவர் ஏபிஜே அப்துல் கலாம். மேலும் இந்திய நாட்டின் பதினோராவது குடியரசு தலைவராக பணியாற்றியவர்.
இந்தியாவின் முதல் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் ஏவுகணைகளை புதுப்பித்த தொழில்நுட்ப வல்லுனர், இந்திய விஞ்ஞான அறிவியலின் வளர்ச்சித் தந்தை, மிகச் சிறந்த ஆசிரியர் என்று எண்ணற்ற பெருமைக்குரிய அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Biography of Abdul Kalam history in Tamil
அப்துல் கலாமின் பிறந்தநாள் – 15/10/1931
அப்துல் கலாமின் பெற்றோர் பெயர்கள் – ஜைனுலாப்தீன் – ஆஷியம்மா
அப்துல் கலாம் பிறந்த ஊர் – தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம்
அப்துல் கலாமின் படிப்பு – இயற்பியல், இளங்கலை, விண்வெளி, பொறியியல் படிப்பு, டி ஆர் டி ஓ விஞ்ஞானி
அப்துல் கலாம் இறப்பு – 27/07/2015
அப்துல்கலாமின் பிறப்பு:
அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஆகஸ்ட் 15ஆம் நாள் 1931 வது வருடம் ஜைனுலாபாத்தின் மற்றும் தாய் ஆசி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அப்துல் கலாம் அவர்கள் ஐந்தாவது மகனாக பிறந்தார். குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக இளம் வயதிலேயே வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.
Abdul Kalam life history in Tamil: அவ்வாறு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோதே தம்முடைய பள்ளி படிப்பையும் முடித்த கலாம். அவருடைய தந்தையின் தொழிலிலும் பங்களிக்கும் பொருட்டு, பத்திரிக்கை மற்றும் செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் வேலைகளிலும் ஈடுபட்டார்.
அப்துல்கலாமின் ஆரம்ப கால பள்ளி படிப்பு:
ஆரம்பத்தில் அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு சிறிய தொடக்கப் பள்ளியில் தம்முடைய பள்ளி படிப்பை தொடங்கினார். ஆனால் அவரது குடும்பத்தில் நிலவி வரும் வறுமை காரணமாக அதனை முழுமையாக தொடர முடியாமல் தன்னுடைய தந்தையின் தொழிலான செய்தித்தாள் விநியோகம் செய்வதற்கு உதவி வந்தார்.
அப்துல்கலாமின் கல்லூரி வாழ்க்கை:
அதற்குப் பின்னர் அப்துல் கலாம் அவர்கள் திருச்சியில் உள்ள ஜெயின் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து தம்முடைய கல்லூரி படிப்பை படித்து முடித்தார். பின்னர் 1954 ஆம் ஆண்டு கல்லூரியின் மிக சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இயற்பியல் இளங்கலை என்னும் பட்டத்தை பெற்றார்.
அப்துல் கலாம் அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே விண்வெளியை பற்றி அதிக ஆர்வம் இருந்ததால் எம் ஐ டி யில் விண்வெளி பொறியியல் படிப்பை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். அதில் வெற்றி அடைந்த அப்துல் கலாம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு டி ஆர் டி டி ஓ வில் ஒரு மிகச் சிறந்த விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அப்துல் கலாம்.
அப்துல்கலாமும் விண்வெளி பயணமும்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடமான ஐஎஸ்ஆர்ஓ ஆராய்ச்சி குளத்தில் 1960 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் பயணத்தை தொடர்ந்தார். மேலும் அங்கு சேர்ந்து உடனையே இந்திய ராணுவத்திற்காக தாம் ஒரு சிறிய ஹெலிகாப்டரின் உருவாக்கி அதனை இந்திய ராணுவத்திற்கு பரிசாகவும் வழங்கினார்.
முதன்முதலாக 1980 ஆம் ஆண்டு ரோகிணி ஒன்று என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து அதனை விண்ணில் வெற்றிகரமாக ஏவ செய்தார். இதன் மூலம் முதன்முதலில் இந்தியா தனது முதல் செயற்கை கொலை விண்ணில் செலுத்தியது. இந்தப் பெருமையானது அப்துல் கலாமை மட்டும் சேராமல் இந்திய நாட்டிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
அப்துல்கலாமின் வாழ்க்கை பயணம்:
Abdul Kalam life history in Tamil: 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் அப்போது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் அப்பொழுது அதன் எதிர்க்கட்சியாக இருந்த இந்திய காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டு கட்சியின் பேராதரவுடன் 11 வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை அதாவது 2007 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பணியாற்றிய இவர் மக்கள் அனைவராலும் மக்களின் ஜனாதிபதி என அழைக்கப்பட்டார். மேலும் இவர் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்பே இந்திய அரசு இவருக்கு மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தது.
அப்துல்கலாம் பற்றி 10 வரிகள்:
1. இந்தியாவின் “ஏவுகணை மனிதர்” என்று அழைக்கப்படுவோர் அப்துல் கலாம். இவர் தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் இந்தியாவின் மிகவும் பிரியமான குடியரசுத் தலைவர்களில் ஒருவர்.
2. இவருடைய வாழ்க்கையும் மற்றும் அவர் செய்த சாதனைகளும் உலகங்களும் உள்ள எண்ணற்ற நபர்களை ஊக்கப்படுத்துகின்றது.
3. அறிவியல் துறையில் இவர் ஏற்படுத்திய பங்களிப்பும் அவருடைய கல்வித் திறமையும் மேலும் அவருடைய அசைக்க முடியாத அறிவியல் ஈடுபாடும் எண்ணற்ற ஏவுகணைகளை விண்ணில் செலுத்த உதவியாய் இருந்தது.
4. அப்துல் கலாம் அவர்கள் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார். மிகவும் பக்தியுடன் தம் முஸ்லிம் தர்மத்தை பின்பற்றினார்.
5. அப்துல் கலாம் அவர்கள் சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர். இவருடைய தந்தை ஒரு படகு உரிமையாளர் மற்றும் உள்ளூரில் பேப்பர் போடும் வேலையையும் செய்து வந்தார்.
6. இவருடைய பள்ளி இடைநிலை படிப்பு திருச்சியில் உள்ள ஜெயின் ஜோசப் கல்லூரியில் படித்து முடித்தார். ஏரோநாட்டிகளில் அவருக்கு இருந்த அதிக ஆர்வம் காரணமாக இயற்பியல் துறையில் பட்டம் பெற ஊருக்கு வலியுறுத்தது.
7. டாக்டர், ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாழ்க்கையானது இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை மேம்பாட்டு திட்டங்களில் முக்கிய பங்கு வகுத்துக் கொடுத்தது.
8. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “ஐ எஸ் ஆர் ஓ“ வில் முதல் முறையாக உள்நாட்டு ஏவுகணை ஒன்று டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் சாதனையால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
9. மேலும் இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படி அவரது தலைமைக்கு கீழ் அக்னி மற்றும் ப்ரித்வி தொடர் ஏவுகணைகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு அவை நாட்டின் பாதுகாப்பிற்கு மேம்படுத்தப்பட்டது.
10. டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அறிவியல் சாதனை மட்டுமில்லாமல் கல்வி மற்றும் இளைஞர்களின் அதிகாரம் ஆகியவற்றையும் ஆர்வமாக அவ்வப்போது எடுத்துரைத்துக் கொண்டே இருந்தார்.
அப்துல் கலாமின் மாணவர்களின் பங்களிப்பு:
Abdul Kalam life history in Tamil: மாணவர்களுக்கு தேசிய பெருமித உணர்வை தூண்டும் வகையில் பணியாற்றி வந்தார். மேலும் மாணவர்களுடன் அடிக்கடி உரையாடுதல் அவர்களுக்கு ஊக்கம் அளித்தல் போன்ற உரைகளையும் வழங்கினார். மேலும் மிகப்பெரிய கனவுகளை காண வேண்டும் என்ற எண்ணங்களையும் ஊக்குவித்தார்.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பணிவும் எளிமையும் தாராள மன உறுதியும் அனைத்து தரப்பு மக்களிடமும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே வந்தது. உலகம் முழுவதிலும் உள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு அவர் மீதான நம்பிக்கை மற்றும் அவரின் விடாமுயற்சியின் கருத்துக்கள் அனைத்தும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது.
அப்துல் கலாமால் இந்தியாவின் வளர்ச்சி பாதை:
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அறிவியல் முயற்சியில் சிறந்து விளங்கியது மட்டுமின்றி இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான தேவைகளையும் செய்து கொண்டிருந்தார். சமூக மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு எண்ணற்ற கருவிகளையும் செய்து உதவினார்.
வறுமை சுகாதாரம் மற்றும் கல்வி அறிவின்மை போன்ற தேசத்தில் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான பிரச்சினைகளுக்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து தீர்வும் கண்டார்.
2002 ஆம் ஆண்டு அப்துல் கலாம் இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவரது ஜனாதிபதி பதவி ஆனது இளைஞர்களுடன் இணைவருக்கும் சிறந்து விளங்குவதற்கும் தூண்டுகோலாக அமைந்தது.
அப்துல்கலாம் பெற்ற விருதுகள்:
வருடம் | பெற்ற விருதுகள் |
1981 | பத்ம பூஷன் |
1990 | பத்ம விபூஷன் |
1997 | பாரத ரத்னா |
1997 | தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது |
1998 | வீர் சவர்கார் விருது |
2000 | ராமானுஜன் விருது |
2007 | அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் |
2007 | கிங் சார்லஸ்-II பட்டம் |
2008 | பொறியியல் டாக்டர் பட்டம் |
2009 | சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது |
2009 | ஹூவர் மெடல் |
2010 | பொறியியல் டாக்டர் பட்டம் |
2012 | சட்டங்களின் டாக்டர் |
2012 | சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது |
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் எழுதிய நூல்கள்:
1. அப்புறம் பிறந்தது ஒரு புதிய
2. அக்னி சிறகுகள்
3. இந்தியா 2020
4. குழந்தை
5. எழுச்சி தீபங்கள்
இந்தியாவின் எதிர்காலத்திற்காக எண்ணற்ற நூல்களையும் எழுதி மேலும் இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் எனவும் களம் அவர்கள் தன்னுடைய பொன்மொழிகளாலும் மற்றும் கவிதைகளாலும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
அப்துல் கலாம் இறப்பு:
ஜூலை மாதம் 2015 – ல் ஜில்லாக்கில் மாகாணத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் என்ற அரங்கில் கடைசியாக பேசிக் கொண்டிருந்த பொழுது மயங்கி கீழே விழுந்து இறந்து போனார்.
கலாம் அவர்கள் இறந்து போனாலும் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் இளைஞர்களின் தூண்டுதலான பேச்சுக்கள் இன்றளவும் அனைவரும் மனதிலும் இருக்கின்றது.
• டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் முழு பெயர் அபுல் பகிர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம். இவர் அக்டோபர் மாதம் 15 நாள் 1931இல் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
• பிறப்பிலேயே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் இவர் எளிமையான குணம் கொண்டவராய் இருந்தார்.
• டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். மேலும் இவர் தாம் ஒரு விமான ஓட்டுனர் ஆக வேண்டும் என்ற ஆசையும் வைத்திருந்தார்.
• தன்னுடைய ஆரம்ப கால கல்வி படிப்பை முடித்து பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். பின்னர் அப்துல் கலாம் அவர்கள் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் விண்வெளி பொறியியல் படிப்பை படிக்க தொடங்கினார்.
• 1960 இல் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் அதாவது DRDOb – வில் விஞ்ஞானியாக சேர்ந்தார். மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐ எஸ் ஆர் ஓ வில் இணைந்து ஏவுகணை மேம்பாட்டு திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றினார்.
• இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளான SLV – ரக செயற்கைக்கோள்கள் மற்றும் 1980ல் ரோகினி செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி அப்துல் கலாம் வெற்றி கண்டார்.
• பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்திய அரசு அவரை “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” என்று அழைக்கப்பட்டார்.
• இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளிலேயே முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் பின்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றினார்.
• 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட விருதுகள் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தப்பட்டது.
• 2002 ஆம் ஆண்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் அப்பதவியில் வகித்தார்.
• அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த பொழுது கல்வியை மேம்படுத்தியதில் அதே கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக சொல்லப்போனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலும் மேலும் இந்திய இளைஞர்களை ஊக்கப்படுத்தியும் வந்தார்.
• அப்துல் கலாம் அவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தமையால் அனைத்து தரப்பு மக்களுடனும் தொடர்பு கொள்ளும் திறனுக்காகவும் அவர் மேலும் நாட்டு மக்களிடம் அறியப்பட்டார்.
• மேலும் அறிவியல் மற்றும் விண்வெளி துறைகளில் மட்டுமல்லாதது சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இவர் எழுதிய “விங்ஸ் ஆப் பையர்” என்ற புத்தகம் உலக அளவில் மாபெரும் விற்பனை செய்யப்பட்டது.
• இந்திய மேலாண்மை கழகத்தில் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் நாள் சொற்பொழிவு ஆற்றுக் கொண்டிருக்கும் பொழுது மரணம் அடைந்தார்.
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு |
காமராஜர் வாழ்க்கை வரலாறு |
காந்தி பற்றிய முழு தகவல்கள் |
[…] அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு […]
[…] அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு […]
[…] அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு […]
[…] அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு […]
[…] அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு […]
[…] அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு […]
[…] அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு […]