பெண் கல்வியின் கட்டுரைகள் – Pen Kalvi Katturai In Tamil
நம் மொழியில் இருக்கும் அனைத்து உயிர்னங்களுக்கும் பெண் என்கின்ற தாய்மையை போற்றுகின்றன. “பெண்கள் நம் நாட்டின் கண்கள்” இந்த வாசகத்துக்கு ஏற்ற போல் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியலும், பொருளாதாரமும் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு ஒரு நல்ல சமுதாயம் உருவாக பெண்களின் பங்கு வகுகின்றது. அப்படிப்பட்ட நம் நாட்டு பெண்களுக்கு என்ன நன்மையில் கிடைக்கிறது என்று நாம் பார்க்கலாம்.
பெண் கல்வி கட்டுரையின் குறிப்பு சட்டகம்:
1. முன்னுரை
2. பெண் புலவர்களின் சிறப்பு
3. பெண் கல்வியால் கிடைக்கும் நன்மைகள்
4. இன்று பெண் கல்வியின் நிலைமைகல்
5. முடிவுரை
முன்னுரைகள்:
Pen Kalvi Katturai In Tamil:- இந்திய பெண்கள் நம் சமூகத்தில் தன் பெற்றோருக்கு நல்ல மகளாகவும், தன் உடன் பிறந்தவர்களுக்கு, நல்ல சகோதரியாகவும், கணவனுக்கு நல்ல மனைவியாகவும், தன் குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் இருக்கின்றன.
நம் ஆண்களுக்கு கிடைக்கும் கல்விகள் அவர் ஒருவருக்கு மட்டுமே அந்த கல்வி பயன்படும். ஆனால் பெண்கள் பெரும் கல்விகள் அவளுக்கு மட்டும் இல்லாமல் அவளை சுற்றி இருக்கும் நண்பர்கள்,குழந்தைகள், சகோதரர்கள், போய் சேருகின்றன. அந்த பெண்ணின் சந்ததிகளையும் குடும்பத்தையும் போய் செல்கின்றன.
பெண் புலவர்களின் சிறப்புகள்:
Pen Kalvi Katturai In Tamil:- பண்டைய காலங்களில் இந்த பூமியை ஆண்ட அரசர்களும் கவிதைகள் கூறும் புலவர்களும் இவர்கள் மட்டுமே சிறப்பாக புகழ்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இந்த பூமியில் நல்ல கருத்துக்களை நல்ல செயல்களை எடுத்துக் கூறிய புலவர்களில் ஒருவர் ஔவையார்,வெண்னிகுயத்தியார், காவற்பெண்டு, நற்பசலையார், பொன்முடியார் போன்ற பெண் புலவர்கள் நம் உலகில் இருந்து வந்தனர்.
பெண் கல்வியால் கிடைக்கும் நன்மைகள்:
பெண்கள் கல்வி கற்றுக் கொள்வதால் அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான பல்வேறு நன்மைகள் கிடைப்பதை காணலாம். அரசியல் ஆட்சி புரிவதற்கு முன் தங்களுடைய நலன்களை பெற்றுக் கொள்வதற்கும் கல்விகள் உதவுகிறது. நான் பெண்களின் வளர்ச்சி பற்றி அறியாத சில மூடர்கள் பெண்களை அடுப்பூதும் சமைப்பதும் துணிகளை துவைப்பது மட்டுமே இருக்க வேண்டும்.
பெண்களைப் படிக்க அனுப்பாமல் வீட்டிலேயே வேலை செய்ய கூறுகின்றனர். பெண்கள் இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு பல போராட்ட வீரர்கள் மகாகவி பாரதி, கல்விக்கண் திறந்த காமராஜர் கர்மவீரர், போன்ற தலைவர்களால் பெண்களுக்கு கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்களின் கல்வி முக்கியத்துவமாக இருப்பதாக எடுத்துரைப்பதற்காக கொண்டுவரப்பட்டன.
பாரதிதாசன் பாடல் மூலம் பெண் கல்வி குறள்:
கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்
அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் ! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை !
இன்று பெண் கல்வியின் நிலைமைகள்:
நம் பெண்கள் கல்வியை கற்றதால் நம் உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் தடம் பதித்துள்ளார். விளையாட்டுத்துறையில் பி.வி. சிந்து, ஆராய்ச்சி துறையின் கல்பனா சாவ்லா போன்ற பெண்மணிகள் உள்ளனர்.
இந்திரா காந்தி, ஜெயலலிதா, ஜான்சி ராணி, அகல்யா பாய், போன்ற பெண் தலைவர்கள் நம் நாட்டை ஆட்சி செய்து வந்தனர் நம் ஆண்களுக்கு நிகராக பல பெண்கள் அனைத்து துறைகளிலும் பல சாதனைகள் படைத்து இருக்கின்றனர்.
முந்தைய காலங்களில் ஆண்கள் மட்டுமே வருமானம் அதிகமாய் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது நம் பெண்கள் அவர்கள் கல்வி அறிவு கற்றதால் இந்த பெண்களும் நம் ஆண்களுக்கு சமமாக இன்றைய காலங்களில் அதிக வருமானம் சம்பாதித்து வருகின்றனர் இதனால் நம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.
நம் பெண்கள் கிராமப்புறங்களில் தன் வருமையின் காரணமாக பல பெண்கள் அவர்களின் கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு உள்ளனர்.இதுபோன்ற பல்வேறு தடைகள் இந்த பெண்களுக்கு இருக்கின்றன.
முடிவுரை:
வளர்ந்து வரும் பல வெளிநாடுகள் பல பெண்கள் குழந்தைகளுக்கு தேவையான சுதந்திரம் பாதுகாப்பு மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நம் நாடுகள் மற்றும் வீட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் கல்வி பெற வேண்டும். நம் பெண்களுக்கு தெய்வமாக வழிபடவும் நம் கல்வி அறிவு பெரவும் செய்துள்ளோம். நம் பெண்கள் இந்திய சமுதாயத்தின் விதைகள் நன்றாக இருந்தால் செடி கண்டிப்பாக வளர்ந்து கனிகளை தரும் வீட்டு அழகு படுத்தும் பெண்கள் உலகை அழகாக நம் பெண்கள் கல்வியை ஊத்துவிப்போம்.