சனிப்பெயர்ச்சி பலன்கள் || 12-ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ள குறிப்பாக ஜாதகத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என்ற இரண்டு பெயர்ச்சியின் முறையில் ஜாதகத்தில் ராகு,கேது போன்ற காலங்களின் நிலைகளை குறிப்பிடுகின்றனர்.
இந்த வகையில் தான் சனி பகவான் கும்ப ராசியில் சூரியன் உடனான கூட்டணியில் மார்ச் 16-ஆம் தேதி உதயமாகினார். இந்த சனி பகவான் உதயமான காரணத்தினால் சில ராசிக்காரர்கள் புகழின் உச்சத்தை அடையப் போகின்றனர்.
கும்ப ராசியில் உதயமாகிய சனி பகவான் குரோதி தமிழ் புத்தாண்டில் சில ராசிக்காரர்களை கோடீஸ்வரராக கூட மாற்றலாம்.
இது போன்று ஒவ்வொரு ராசிக்கும் சனி பகவான் எந்த வீட்டில் குடியிருக்கிறார், எவ்வாறு ஆட்சி புரிகிறார்.அதனால், என்னென்ன பலன்கள், எவ்வளவு தீமைகள் போன்ற அனைத்து தகவல்களையும் இந்த தொகுப்பில் நாம் விரிவாக பார்க்கலாம்.
சனிபகவான்:
சனி பகவான் ஒருவரின் ராசியில் 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சச்சரிக்கும் காலங்களில் துன்பங்கள் அனைத்தையும் நீங்கி மகிழ்ச்சிகளை ஏற்படுத்துவார். ஏழரை சனி ஆரம்பமாகும் நிலையில் சனி பகவான் ஜென்ம சனி, பாத சனி, விரைய சனி என பலவிதமான துன்பங்களை ஏற்படுத்துவார்.
கண்ட சனி, அர்தாஷ்டம சனி, அஷ்டம சனி என அனைத்து வகையில் துன்பங்களை ஏற்படுத்தினாலும் இறுதியில் ஒரு நல்ல காரியங்களை ஏற்படுத்திக் கொடுப்பார்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2024:
1.மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:
இந்த வருடம் மேஷ ராசி நபர்களுக்கு 11-வது மற்றும் 12-வது வீட்டில் சனி பகவான் குடியிருக்கிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் 10 மற்றும் 11-ஆம் வீட்டிற்கு அதிபதியாக சனி இருக்கிறார். இந்த ஆண்டுக்கான சனி பெயர்ச்சியால் உங்களுடைய நிதி நிலை வலுவாக காணப்படும்.
இதன் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் அதிக லாபம், பண வரவு, ஆதாயம் போன்றவை பெற முடியும். இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
2. ரிஷபம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு 9 மற்றும் 10-ஆம் வீட்டிற்கு அதிபதியாக சனி பகவான் காணப்படுகிறார். இதனால், இந்த ஆண்டில் உங்களுடைய சனி பெயர்ச்சி உங்களது 10-ஆம் வீட்டில் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரிஷப ராசி நபர்களுக்கு ஆண்டு முழுவதும் சனி பெயர்ச்சியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
இதன் காரணமாக நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு செயல் மற்றும் செயல்படும் ஒவ்வொரு துறையிலும் பல வெற்றிகளை பெற முடியும். பெரிய உத்தியோகத்தில் இருக்கும் நபர்கள் வேலையில் அதைவிட பதவி உயர்வு கிடைத்து முன்னேற வாய்ப்பு உள்ளது. சுயதொழில் செய்பவர்கள் நல்ல லாபம் ஈட்டி முன்னேறுவார்கள்.
3. மிதுனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:
மிதுன ராசி நபர்களுக்கு 8 மற்றும் 9-ஆம் வீட்டில் சனி அதிபதியாக ஆட்சி புரிகிறார். இதன் காரணமாக இந்த வருடம் சனி பகவான் 9-ஆம் வீட்டில் குடியிருக்கிறார்.இதனால், இந்த ஆண்டு முழுவதும் சனிப்பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தையும், பாக்கியத்தையும் ஏற்படக்கூடிய நல்ல ஆண்டாக அமையக்கூடும். நிதி ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான வாழ்க்கையின் சிக்கல்களில் அதிக அளவு மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்படும்.
4. கடகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:
சனிப்பெயர்ச்சி பலன்கள்: கடக ராசி நபர்களுக்கு சனி பகவான் 7 மற்றும் 8-ஆம் வீட்டில் அதிபதியாக குடியிருக்கிறார்.இதன் காரணமாக இந்த வருடம் முழுவதும் சனிப்பெயர்ச்சி உங்களுடைய 8-ஆம் வீட்டில் அஷ்டம சனியாக செயல்பட உள்ளார்.இதனால், இந்த வருடம் உங்களுக்கு அதிர்ஷ்ட மற்றும் சுப காரியங்கள் நடைபெற சற்று தாமதம் ஏற்படலாம்.
வேலைகளிலும் சில சிக்கல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பல ஏற்றத்தாழ்வு மாற்றங்கள் காணப்படலாம். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களுடன் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
5. சிம்மம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:
சிம்ம ராசி நபர்களுக்கு சனி பகவான் 6 மற்றும் 7-வது வீட்டில் ஆட்சி புரிகிறார். இதன் காரணமாக சனிப்பெயர்ச்சி உங்களுடைய 6 மற்றும் 7-வது வீட்டில் ஆட்சி செய்யும் நிலைமை ஏற்படுகிறது. இதனால்,நீங்கள் கூட்டு வியாபாரம் செய்யும் நபர்களாக இருந்தால் நீங்கள் பல சவால்களை கடந்து செல்ல நேரிடும்.
செலவுகள் அதிகமாகலாம்.இந்த வருடம் முழுவதும் வணிகம் மற்றும் வேலை செய்பவர்கள் கொஞ்சம் நிதானமாக தான் செய்ய வேண்டும். சில, பல மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
6. கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:
கன்னி ராசி உள்ள நபர்களுக்கு சனி பகவான் 5 மற்றும் 6 வீட்டில் குடியிருக்கிறார்.இதன் காரணமாக 5 மற்றும் 6 வீட்டில் அதிபதியாக சனி ஆட்சி புரிகிறார். இதனால், இந்த ஆண்டு சனி பெயர்ச்சியினால் உங்கள் தொழிலில் அதிக அளவு நீங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வருமானம் ரீதியாக ஆண்டு முழுவதும் சிறப்பாக காணப்படும். இந்த ஆண்டு சனி பெயர்ச்சி உங்களுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கும்.
7. துலாம் சனி பெயர்ச்சி பலன்கள்:
துலாம் ராசி நபர்களுக்கு சனி பகவான் 5 இடத்தில் ஆட்சி செய்கிறார். இதன் காரணமாக உச்சத்தில் காணப்படுகிறார்.இதனால், உங்களுக்கு எந்த விதமான கெடுதலும் ஏற்படாது. அதிக அளவு நன்மை நடைபெறும்.
அதுபோன்று வேலையில் முன்னேற்றம் காணப்படும். வேலை இல்லாதவர்களுக்கு கூட புதிதாக வேலைகள் கிடைக்க வாய்ப்பு அதிகம். திருமண தடைகள் அனைத்தும் நீங்கும்.
இந்த ஆண்டு சனி பெயர்ச்சி உங்களுக்கு பலவிதமான நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் ஏற்படுத்தப் போகிறது தொழில் ரீதியாக பண வரவுகள் அதிகமாக காணப்படும். தொழில் நன்றாக வளர்ச்சி அடையும்.
8. விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்கள் :
விருச்சிக ராசி நபர்களுக்கு 4-ஆம் இடத்தில் அர்த்தாஷ்டம சனி இந்த வருடம் ஆட்சி புரிவதனால் உங்கள் உடல் நல ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான காரியங்களில் அதிக அளவு தோல்வியையும் சந்திக்க நேரிடும். நன்மைகளைப் பெற முற்றிலும் கடினப்படுவீர்கள். அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
9. தனுசு சனி பெயர்ச்சி பலன்கள்:
தனுசு ராசிக்கு கிட்டத்தட்ட ஏழரை ஆண்டு காலமாக சனி தனுசு ராசிக்காரர்களை ஒரு உலுக்கு உலுக்கி ஆட்டி படைத்தது. தற்போது தனுஷ் ராசி நபர்களுக்கு சனி பகவான் 3-வது வீட்டில் சஞ்சாரம் சகானிய சனியாக ஆட்சி புரிவதால் பல நன்மைகள் ஏற்படும்.
இனிமேல் துன்பங்கள், கவலைகள் அனைத்தும் நீங்கி கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். வராத பணம் கூட உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு சிறந்த சிந்தனையும், வழியும் கிடைக்கும்.
கொடுத்த கடன்கள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். தீராத பிணியில் நீங்கள் இருந்தால் அது அனைத்தும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வை பெறுவீர்கள். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏராளமாக கூடும்.
10. மகரம் சனி பெயர்ச்சி பலன்கள்:
சனிப்பெயர்ச்சி பலன்கள்:மகர ராசி நபர்களுக்கு சனி பெயர்ச்சி இரண்டரை ஆண்டு காலமாக ஏழரை சனியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜென்ம சனி விலகி ஒரு சில வகையில் நிம்மதி ஏற்பட்டாலும், வருமானம் அதிகரித்தாலும்,வீட்டில் குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட நேரிடும்.
இதனால், குடும்பத்தில் அனைவரும் உங்களை வெறுக்கும் சூழல் ஏற்படலாம் அல்லது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நீங்கள் முக்கியத்துவம் தரும் நிலைமை கூட ஏற்படும்.
11. கும்பம் சனி பெயர்ச்சி பலன்கள்:
இந்த ஆண்டு கும்ப ராசி நபர்களுக்கு சனி பெயர்ச்சி ஜென்ம சனியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால், தலைக்கு மேல் சனி ஏறி இருப்பது போல பல வகை சோதனைகள் ஏற்படும். கடின உழைப்புக்கான வாய்ப்பு கூட உங்கள் கையை விட்டுப் போகும் நிலை ஏற்படலாம்.
இதனால் உங்களது நிலையில் சற்று நிதானமாக யோசித்து முடிவுகள் எடுப்பது மிகவும் நல்லது.வீட்டில் இருப்பவர்கள் கூட உங்களை புரிந்து கொள்ளாமல் பேச நேரிடும்.
12. மீனம் சனி பெயர்ச்சி பலன்கள்:
மீனம் ராசி நபர்களுக்கு இந்த ஆண்டு ஏழரை சனி தொடங்கியுள்ளது. 12-ஆம் வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு ஏற்படும் பலன்கள் மாறுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மன நிம்மதி கெடும் வகையில் ஏதேனும் ஒரு நிகழ்வுகள் நடைபெறும்.
நிம்மதியாக தூங்கக்கூட முடியாத நிலைமை, அதிக அளவு மன உளைச்சல் போன்றவை உண்டாகும். அதிகளவு திடீர் செலவுகள் ஏற்பட்டு, அதை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கும் நிலைமை கூட ஏற்படலாம். அதே சமயம் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026:
எந்த ராசிக்கு ஏழரை சனி நடக்கிறது?
சனிப்பெயர்ச்சி பலன்கள்: இந்த வருடம் மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி அதிக அளவு நடக்கிறது.கிட்டத்தட்ட ஏழரை ஆண்டு காலமாக சனியின் பிடியில் சிக்கித் தவித்த தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவடைகிறது.அதே நேரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.
சனிபகவான் யார்?
சனீஸ்வரர் என்பவர் ஜோதிடத்தில் கூறப்படும் நவகிரகங்களில் ஒருவராவார். இவர் சூரிய தேவன்-சாயாதேவி என்ற தம்பதியினருக்கு பிறந்தவர் என்று இந்து தொன்மவியலின் அடிப்படையில் கூறப்படுகிறது. இவருடைய வாகனம் காகம் என கூறப்படுகிறது.
பஞ்சம சனி என்றால் என்ன?
சனிதேவர் ராசிக்கு 5-ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் நிலை தான் பஞ்சம சனி என்று அழைக்கப்படுகிறது. இந்த சனியானது தெளிவான சிந்தனைகளை போக்கி, மனதில் தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கி, ஒரு தேவையற்ற முடிவை எடுக்க வழி வகுக்கிறது.
சிம்ம ராசி கண்டக சனி என்ன செய்யும் 2024?
சனிப்பெயர்ச்சி பலன்கள்: சிம்மராசிக்காரர்களுக்கு 2024-ஆம் ஆண்டு கண்டக சனி ஆனது தொழிலில் நல்ல வருமானத்தை ஏற்படுத்தித் தரும். வாழ்க்கையில் எண்ணற்ற மகிழ்ச்சிகளை உண்டாக்கி கண்ட சனியாக இருந்தாலும் சனி பகவானின் நேரடி பார்வையின் காரணமாக யோகம் ஏற்படும். வருமான ரீதியாக நிதி நிலைமை அதிகளவு காணப்படும்.
Read Also:- கனவு பலன்கள்