தமிழகத்தில் திடீரென மதுபான கடைகள் மூடல் என்ன காரணம்? || அதிர்ச்சியில் மது பிரியர்கள்…!!!
தமிழகத்தில் திடீரென மதுபான கடைகள் மூடல் என்ன காரணம்:
இந்தியாவில் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வுகளை விரைவாக முடிக்கும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகளை மிகவும் விரைவாக ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் முடிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய புதிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் ஏப்ரல் 2-வது வாரத்திற்குள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சீரமைத்து சுங்க சாவடிகளை அமைத்து ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் தேர்தல் நடக்க எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை,ஒட்டி திடீரென மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணம் தமிழகத்திலும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற இருப்பதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி இருக்கிறது.
இந்த நிலையில் தினம் தினம் சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகளை மூட தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை 6-மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 6-மணி வரை மதுபான கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோன்று, தேர்தல் முடிந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் அன்றைய தினத்திலும் மதுபான கடைகளை மூட உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.