ADVERTISEMENT
வரகு அரிசி பயன்கள்

வரகு அரிசி பயன்கள் || Varagu Rice Benifits in Tamil

வரகு அரிசி பயன்கள் || Varagu Rice Benifits in Tamil

வரகு அரிசி பயன்கள்

Varagu Rice Benifits in Tamil:

வரகின் தோற்றம்:

வரகு அரிசி பயன்கள்: வரகு ஆப்பிரிக்க கண்டத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டது. இது சிறு தானிய வகைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு, 7-அடுக்கு தோல் உண்டு. இது வறட்சி நிலம் என அழைக்கப்படும். நஞ்சை நிலங்களில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.

இதன் விதைகள் ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத்திறன் மிக்கது. இதனை ஆடு, மாடுகள், பறவைகள் போன்ற உயிரினங்களால் சாப்பிட முடியாது.

அன்றைய காலகட்டங்களில் கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களை கொண்டு சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். இது போன்ற சிறு தானிய வகைகளில் ஒன்று தான் இந்த வரகும்.

சிறுதானியங்களில் அதிகளவு நார்ச்சத்து,கால்சியம், புரதம்,வைட்டமின்கள்,இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.

வரகு அரிசி பயன்கள்:

1) இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:

மனித உடல் சீராக இயங்குவதற்கும், உடல் பாகங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதயம் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு, சத்து மிக்க உணவுப் பொருள்களை சாப்பிடுவது மிகவும் அவசியம்.

ADVERTISEMENT

இந்த வரகு அரிசியை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து சாப்பிடுவதன் மூலமாக இதயத்திற்கு தேவையான சத்துக்கள் மற்றும் பலம் கிடைக்கிறது. இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

2) நீரிழிவு நோய் குணமடைய:

இன்று உலகில் பலருக்கும் ஒரு முக்கியமான நோயாக இருப்பது தான் நீரிழிவு நோய். இந்த நீரிழிவு நோயை இயற்கையாக கட்டுப்படுத்த நம் உடலில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது.

இந்த இன்சுலின் சுரப்பிற்கு வரகரிசி கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளை தினமும் அல்லது 2-நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

3) உடல் எடையை குறைக்க || Varagu rice benifits in tamil for weight loss:

தற்போது இருக்கும் காலகட்டங்களில் யாரும் பெரிதாக இயற்கை உணவை சாப்பிடுவது கிடையாது. துரித உணவை சாப்பிடும் போது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து உடல் எடை அதிகரிக்க தொடங்குகிறது.

இதற்கு,நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். கொழுப்பு கட்டிகளை கரையக்கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது அவசியம். இந்த கொழுப்பு கட்டிகளை கரைக்கக் கூடிய வேதிப்பொருள் வரகரிசியில் அதிக அளவு காணப்படுகிறது. வரகு அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தினசரி காலை அல்லது மதியம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை மிக விரைவில் குறையும்.

4) ஆண்மை குறைபாடுகளை சரி செய்கிறது:

தற்போது இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை ஆண்மை குறைபாடு.இதற்கு, அதிக அளவு மன அழுத்தம் மற்றும் கவலைகள் தான் காரணமாக இருக்கிறது.

ADVERTISEMENT

இதற்கு, வரகு அரிசியால் சமைக்கப்பட்ட உணவுகளை தினமும் காலை அல்லது மதியம் வேலைகளில் சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் ஆண்மை குறைபாடு சரியாகிவிடும்.

5) ஊட்டச்சத்து:

வரகு அரிசி பயன்கள்: நமது உடல் நிலை சீராக செயல்படுவதற்கும், உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஊட்டச்சத்து மிகவும் அவசியம்.

ஊடலுக்கு தேவையான தாதுக்கள், வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் இந்த வரகரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இந்த வரகரிசியால் சமைக்கப்பட்ட உணவுகளை வாரத்திற்கு 2 அல்லது 3-முறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இயற்கையாகவே கிடைக்கிறது.

6) மலச்சிக்கல் குணமடைய:

உடலில் நீர் சத்து குறைவதால் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளையும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

வரகு அரிசியால் சமைக்கப்பட்ட உணவை வாரத்திற்கு 3 அல்லது 4-முறை சாப்பிடுவதன் மூலம் வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புண்கள் மிக விரைவில் ஆறும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளும் தீரும்.

7) புரதச்சத்து:

உடல் எடை மெலிவாக காணப்படுபவர்கள், உடலின் சராசரி எடையை விட குறைவாக இருப்பவர்கள் அனைவரும் இந்த வரகு அரிசியால் செய்யப்பட்ட உணவை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வரும் வேளையில் உடலில் உள்ள ஆற்றல்களும், சக்திகளும் அதிகரித்து உடல் எடையை கூடும்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல்,உடல் சோர்வு அடையாமல் நீண்ட நேரம் புத்துணர்ச்சியாக காணப்படும்.

8) சிறுநீரக கோளாறு சரியாக:

மற்ற காலங்களை விட கோடைகாலத்தில் மிகவும் தாகம் ஏற்படும் தருணம் உருவாகிறது. இந்த காலகட்டங்களில் வரகரிசியால் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகளவு உட்கொள்வதன் மூலம் தாகம் தணிந்து, சிறுநீரகங்களில் ஏற்படும் கல்கள் கரைகிறது.

சிறுநீரில் உடலில் ஏற்படும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு சிறுநீரகங்கள் சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது.

9) இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது:

உடல் சீராக இயங்குவதற்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அது போன்று இதயத்திற்கு இரத்தம் சீராக செல்வது மிக மிக முக்கியம். ஏனென்றால், இரத்தத்தின் மூலமாகத்தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சென்று அடைகிறது.

இந்த வரகரிசி இரத்தத்தின் அளவை அதிகரிப்பதோடு இரத்தத்தை சுத்தப்படுத்தி, அது சீரான ஓட்டத்தை பெறுவதற்கு உதவி செய்கிறது.

10) புண்கள் குணமடைய:

வரகு அரிசி பயன்கள்: உடலில் பல வகையான காரணங்களால் புண்கள், காயங்கள் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு, வரகரிசி கஞ்சியை குடிப்பது மூலம் அதில் உள்ள சத்துக்கள் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்படும் தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றும் தன்மை கொண்டது. அதுமட்டுமில்லாமல், பாதத்தில் உருவாகும் பித்த வெடிப்புகளையும் சரி செய்கிறது.

ADVERTISEMENT

வரகு அரிசி தீமைகள்:

• நீரிழிவு நோயாளிகள் வரகு அரிசியை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு தோல் வறட்சி, தோல் எரிச்சல், தோல் அரிப்பு,தோளில் தேமல் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.

• வரகு அரிசி அதிக அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமான கோளாறுகள் ஏற்படுகிறது. இதனால் வாந்தி, குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது

• உடல் எடை மெலிந்து காணப்படுபவர்கள் இந்த வரகரிசி அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு, காரணம் இதில் நார்ச்சத்து அதிக அளவு காணப்படுகிறது.இது உடல் எடையை குறைக்க கூடும்.

• கருவுற்ற பெண்கள் வரகரிசியால் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இந்த வரகரிசி சாப்பிடுவதன் மூலமாக பிறக்கும் குழந்தைக்கு நீர் சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, வரகு அரிசி சாப்பிடுவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

• சரும பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.ஏனென்றால், தோளில் அரிப்பு, எரிச்சல், சொரி, சிரங்கு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த வரகரிசி சாப்பிடுவதனால் இதைவிட அதிக அளவு பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது.

ADVERTISEMENT

வரகு அரிசி எப்படி சமைப்பது || வரகு அரிசி in English

தேவையான பொருட்கள்:

• தண்ணீர் – தேவையான அளவு

• வரகரிசி – தேவையான அளவு

• தயிர் – தேவையான அளவு

• சீரகம் -1/2 டீஸ்பூன்

• கருவேப்பிலை – சிறிதளவு

• பச்சை மிளகாய் – 1

ADVERTISEMENT

• உப்பு – தேவையான அளவு

• உளுந்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

• எண்ணெய் – 1 டீஸ்பூன்

• கடுகு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வரகு அரிசி பயன்கள்: வரகரிசியால் சாப்பாடு செய்ய முதலில் அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு குக்கர் எடுத்து அதில் அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒரு 5-விசில் வரும் வரை வேக வைத்து விட்டு இறக்கி விட வேண்டும்.

ADVERTISEMENT

ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு கருவேப்பிலை,சீரகம், பச்சை மிளகாய், தயிர் போன்றவற்றை விழுதாக அரைத்து அதை சாதத்தில் கொட்டி கிளற வேண்டும்.

அதன் தொடர்ச்சியாக உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அது நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு,கருவேப்பிலை ஆகிய மூன்றையும் சேர்த்து தாளித்து அதில் சாதத்தை கொட்டி நன்றாக கலந்து கிளற வேண்டும்.

அதன் பிறகு அதனை இறக்கி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

வரகு அரிசி உணவுகள்:

1. வரகரிசியை பயன்படுத்தி தயிர் சாதம், தக்காளி சாதம், பிரியாணி, புளி சாதம் போன்றவை சமைக்கலாம்.

2. வரகு அரிசியால் கார பொங்கல் மற்றும் இனிப்பு பொங்கல் சமைக்கலாம்.

ADVERTISEMENT

3. வரகு அவல்

4. இந்த வரகு அவலை பயன்படுத்தி கார அவல், மசாலா அவல், அவல் இனிப்பு உருண்டை, இனிப்பு, அவல் பாயசம் போன்றவை சமைக்கலாம்.

5. வரகை கஞ்சியாக கிண்டி உப்பு சேர்த்து அதனுடன் கருவாடு மண்டி வைத்து சாப்பிடலாம்.

பனிவரகு அரிசி பயன்கள்:

பனி வரகு அரிசியில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கரைக்கிறது.

இதனால், இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டம் சென்று மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இந்த வரகு சராசரியாக 75-நாட்கள் முதல் 90-நாட்களுக்குள் வளரும் தன்மை கொண்டது. இது ஒரு தமிழனின் பாரம்பரிய உணவு வகையாகும்.

ADVERTISEMENT

மருத்துவ குறிப்பு:

வரகு அரிசி எப்படி இருக்கும்?

வரகு அரிசி பயன்கள்: வரகு அரிசியை நம் நெல்லரிசி போன்று சாதமாக சமைத்து சாப்பிடலாம். இதனுடன், குழம்பு, ரசம் போன்றவை சேர்த்தும் சாப்பிடலாம். இதனை, காளனுடன் சேர்த்து பிரியாணியாகவும் சமைத்து சாப்பிடலாம்.

வரகு அரிசியின் பயன்கள் என்ன?

• கல்லீரலின் செயல்பாடுகளை விரைவாக செயல்பட தூண்டுகிறது. கண் நரம்பு நோய்களை தடுக்கும் பணியை செய்கிறது.

• மூட்டுவலியை குறைக்க பெரிதும் உதவி செய்கிறது.

• நிணநீர் சுரப்பிகளை ஒழுங்குபடுத்துகிறது.

• பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.

Read Also: மூக்கிரட்டை கீரை பயன்கள்

ADVERTISEMENT

Leave a Reply