ADVERTISEMENT
பழமொழி நானூறு நூல் குறிப்பு

பழமொழி நானூறு நூல் குறிப்பு – Pazhamozhi Naanooru

பழமொழி நானூறு நூல் குறிப்பு – Pazhamozhi Naanooru

பழமொழி நானூறு நூல் குறிப்பு

பழமொழி நானூறு நூல் குறிப்பு: பழமொழி நானூறு அதன் சிறப்பு பாயிரத்தையும் கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியார் அமைந்த பழமொழி நானூறு (401) பாடல்களைக் கொண்ட நீதி நூல்கள் ஆகும்.

சங்கம் மருவிய கால தமிழ் நூல் ஒன்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானவே முன்றுறையர் மற்றும் முன்றுறை அரையனார் எனும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் இவற்றை பழமொழி நானூறு என்று பெயர் பெற்று உள்ளது.இவற்றில் கூறப்படும் பழமொழிகள் இலக்கியம் அனைத்தும் சார்ந்தவர் ஆகும். சங்க காலத்தினை பற்றி இந்த நூலில் அதிக தகவலை தருகின்றன. இதன் காலம் கிபி நான்காம் நூற்றாண்டு என கருதப்படுகிறது.

பழமொழி நானூறு விளக்கம்:

பழமொழி நானூறு நூல் குறிப்பு: ஒரு கதையோ வரலாற்று நிகழ்வு காட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி கட்டுபடுவதாலும் நானூறு பாடல்களைக் உடையதாலும் பழமொழி நானூறு என்று பெயர் பெற்றது.

பழமொழி நானூறு உள்ளடக்கம் :

இந்த நூலின் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளது. அந்த தலைப்பில் கீழ் வரும் பாடல் எண்ணிக்கையிலும் இதோ பார்க்கலாம்.

1. கல்வி
2. கல்லாதார்
3. அவையில்
4. அறிவுடைமை
5. ஒழுக்கம்
6. இன்னா செய்யாமை
7. வஎகஉளஆமஐ
8. பெரியாரைப் பிழையாமை
9. புகழ்களின் கூறுபாடு
10. சான்றோர் இயல்பு
11. சான்றோர் செய்யகை
12. கீழ்மக்கள் இயல்பு
13. கீழ் மக்கள் செய்யகை
14. நட்பின் இயல்பு
15. நட்பில் விளக்கு
16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல்
17. முயற்சி
18. கருமம் முடித்தல்
19. மறை பிறர் அறியாமை
20. தெரிந்து செய்தல்
21. பொருள்
22. பொருளை போற்றுதல்
23. நன்றியில் செல்வம்
24. உள்
25. அரசியல்பு
26. அமைச்சர்
27. மன்னரை சேர்ந்தொழுகல்
28. பகைத்திறம்
29. படை வீரர்
30. இல் வாழ்க்கை
31. உறவினர்
32. அறம் செய்தல்
33. ஈகை
34. வீட்டு நெறி

ADVERTISEMENT

பழமொழி நானூறு வேறு பெயர்கள்:

பழமொழி, உலக வசனம்

பழமொழி நானூறு ஆசிரியர்:

ஆசிரியர்: முன்றுரை அரையனார்
பாடல்கள்: 400
பா வகை: வெண்பா

பல மொழி நானூறு புராண குறிப்புகள்:

பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து (பா.258) – இராமாயணம்
அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (பா.235) – பாரதம்
பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா (பா.357) – பாரதம்
ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன் [பா.184] – மாவலி
உலகந்தாவிய அண்ணலே (பா.178) – உலகம் அளந்த வாமானன்
சான்றுகள்

இவை அனைத்தும் புராணக் குறிப்புகள் பழமொழி நானூறில் இடம் பெற்றுள்ளன.

மூன்றுறை அரையனார் எந்த நூற்றாண்டு:

மூன்றுறை அரையனார் என்பவர் கிபி 301 -400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத் தமிழ் புலவர்ஆவர். இவரை இயற்றிய நூல் பழமொழி நானூறு.

பழமொழி என்பது என்ன:

பழமொழிகள் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுகூர்மையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றது. இவைகள் பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வளர்க்கவும் நாட்டுப்புறவியலின் ஒரு கூராகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளை சுருக்கமாகவும் தெளிவுடன் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன.

ADVERTISEMENT

பழமொழி நானூறு பதிப்பித்தவர் யார்:

• பதினெண் கீழ்க்கணக்கு நூலில் உள்ள முப்பெரும் அறநூல்கள்-திருக்குறள்,நாலடியார், பழமொழி நானூறு
• தொல்காப்பியர் பழமொழியை முதுமொழி என்கிறார்.
• பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
• என் நூல்களை பதிப்பித்தவர் – செல்வ சேகர முதலியார்

நூல் பகுப்பு முறை:

1. பிரிவு ஒன்று-கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது
2. பிரிவு இரண்டு-சான்றோர்,நட்பின் இயல்பு பற்றியது
3. பிரிவு மூன்று -முயற்சி, பொருள் பற்றியது
4. பிரிவின் நான்கு-அரசர்,அமைச்சர், பாடல் பற்றியது
5. பிரிவு ஐந்து – இல்வாழ்க்கை,உறவினர், வீடு நெரி பற்றியது

தச்சிறப்பு பாயிரம்:

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்

பண்டைப் பழமொழி நானூறும் – கொண்டினிதா

முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்

இன்றுறை வெண்பா இவை

சிறந்த தொடர்கள்:

பாம்பறியும் பாம்பின் கால்
முள்ளினால் முள் களையுறுமாறு
இறைத்தோறும் ஊறுங்கிணறு
ஆயிரங் காக்கைக் கோர்கல்
திங்களை நாய் குரைத்தன்று
கற்றலின் கேட்டலே நன்று
குலவிச்சை கல்லாமல் பாகம் படும்
குன்றின் மேலிட்ட விளக்கு
நுணலும் தன்வாயால் கெடும்
முறைக்கு மூப்பு இளமை இல் (கரிகால்)

கடவுள் வாழ்த்து:

அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்

விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து

உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்

பெரியதன் ஆவி பெரிது

கல்வி:

1. சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்

கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி

உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்

‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’.

ADVERTISEMENT

2. விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்

துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு

மருள்படுவ தாயின் மலைநாட என்னை

‘பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்’.

3. ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு

ADVERTISEMENT

வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவ தில்

4. உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்றும்

கிணற்றுகத்துத் தேரைபோல் ஆகார் – கணக்கினை

முற்றப் பகலும் முனியாது
இனிதோதிக்

கற்றலின் கேட்டலே நன்று

ADVERTISEMENT

கல்லாதார்:

1. சுற்றானும் சுற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்

தெற்ற உணரார் பொருள்களை – எற்றேல்

அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை

நாவற் கீழ்ப் பெற்ற கனி

2. கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்

ADVERTISEMENT

சொல்லுங்கால் சோர்வு படுதலால் – நல்லாய்!

‘வினாமுந் துறாத உரையில்லை; இல்லை

கனாமுந் துறாத வினை

3. கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்

நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்

சொல்லால் வணக்கி வெகுண்(டு)அரு கிற்பார்க்கும்

ADVERTISEMENT

சொல்லாக்கால் சொல்லுவ தில்

4. கல்வியான் ஆய சுழிநுட்பம் கல்லார்முன்

சொல்லிய நல்லவும் தீயவாம் – எல்லாம்

இவர்வரை நாட! ‘தமரையில் லார்க்கு

நகரமும் காடுபோன் றாங்கு

அவையறிதல்:

ADVERTISEMENT

1. கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்

வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் – வேட்கையால்

வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் ! ‘தோற்பன

கொண்டு புகாஅர் அவை’.

2. ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு

இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா

ADVERTISEMENT

பெருவரை நாட! சிறிதேனும் ‘இன்னாது

இருவர் உடனாடல் நாய்’.

3. துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்

பின்னை உரைக்கப் படற்பாலான் – முன்னி

மொழிந்தால் மொழியறியான் கூறல் ‘முழந்தாள்

கிழிந்தானை மூக்குப் பொதிவு’.

ADVERTISEMENT

4. கல்லாதும் கேளாதும் கற்றாரவை நடுவண்

சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்(று) – எல்லருவி

பாய்வரை நாட! ‘பரிசழிந் தாரோடு

தேவரும் ஆற்றல் இலர்

அறிவுடைமை:

1. அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்

ADVERTISEMENT

பிறிதினால் மாண்டது எவனாம் – பொறியின்

மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன

‘அணியெல்லாம் ஆடையின் பின்’.

2. ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்

பாயிருள் நீக்கும் ‘மதியம்போல் பன்மீனும்

ADVERTISEMENT

காய்கலா வாகும் நிலா’.

3. நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே

சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்

வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட

கற்றறிவு போகா கடை

4. ஆணம் உடைய அறிவினார் தந்நலம்

ADVERTISEMENT

மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்

மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்

யானையால் யானையாத் தற்று

நான்மணிக்கடிகை

Leave a Reply