ADVERTISEMENT
Thyroid Symptoms Women's in Tamil

தைராய்டு அறிகுறிகள் பெண்கள் || Thyroid Symptoms Women’s in Tamil

தைராய்டு அறிகுறிகள் பெண்கள் || Thyroid Symptoms Women’s in Tamil

Thyroid Symptoms Women's in Tamil

தைராய்டு அறிகுறிகள் பெண்கள்:

தைராய்டு அறிகுறிகள் பெண்கள்:- தைராய்டு பிரச்சனை தற்போது பெண்களிடையே அதிக அளவு காணப்படும் பிரச்சனையாக இருக்கிறது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளை போலவே தைராய்டு சுரப்பிகளையும் கட்டுப்படுத்துவது நம் உடலுக்கு மிக மிக முக்கியமான ஒன்று.

நமது உடலில் முக்கியமான ஹார்மோன்களின் உற்பத்திக்கு இந்த தைராய்டு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. தைராய்டு உறுப்பு நமது கழுத்தின் முன்புறத்தில் பட்டாம்பூச்சி வடிவத்தில் காணப்படும் உறுப்பு ஆகும்.

இந்த தைராய்டு பிரச்சனைகளை எப்படி சரி செய்வது எந்தெந்த உணவு முறைகளை மேற்கொண்டால் இதிலிருந்து நாம் விடுபடலாம் போன்ற பல்வேறு செய்திகளை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தைராய்டு வர காரணம்:

தைராய்டு பிரச்சனை வருவதற்கான முக்கிய காரணம் உடலில் அயோடின் சத்து குறைபடுதான். தைராக்ஸின் உற்பத்திக்கு தேவையான அயோடின் சத்து மிகவும் அத்தியாவசியமானது. இந்த தைராய்டு குறைபாட்டை போக்க அயோடின் கலந்த உப்பை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கழுத்துப் பகுதியில் கட்டி,அதிக அளவு உடல் பருமன் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறுகின்றனர்.

ADVERTISEMENT

தைராய்டால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்:

* உடலில் உள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை இந்த தைராய்டு உருவாக்குகிறது.

* தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவில் காணப்பட்டால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்க கூடும்.

* அதுபோன்று தைராய்டு ஹார்மோன்கள் அதிக அளவு காணப்பட்டால் உடல் எடையை குறைக்க கூடும்.

* இதனால் தைராய்டு அளவை நமது உடலில் சமமான அளவில் பராமரித்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

* இது போன்ற அறிகுறிகள் தற்போது பெண்களிடையே பொதுவாக அதிக அளவு காணப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

* இதை முன்கூட்டியே தடுப்பது மிகவும் நல்லது. கண்டுகொள்ளாமல் விட்டால் ஏற்படும் விளைவுகள் மிகவும் ஆபத்தானது.

ADVERTISEMENT

* உலகில் 8-பெண்களில் ஒருவருக்கு இந்த தைராய்டு பிரச்சனை ஏற்படுவதாக ஆய்வுகளில் கூறுகின்றனர்.

தைராய்டு அறிகுறிகள்:

1) சருமம் பாதித்தல்:

தைராய்டு பிரச்சனையில் காணப்படும் பொதுவான ஆரம்ப கால அறிகுறி உங்களது கழுத்துப் பகுதியை சுற்றி உள்ள தோள்கள் கருமை நிறத்தில் மாறுவது தான்.

இந்த தைராய்டு சுரப்பியானது முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பணியை செய்கின்றது. இதனால், T-3 மற்றும் T-4 போன்ற அளவுகளில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படும் தருணத்தில் வறண்ட சருமம், எண்ணெய் சருமம்,உச்சந்தலையில் அரிப்பு மற்றும் நகங்கள் உடையக்கூடிய தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

2) மாதவிடாய் தாமதம்:

தைராய்டு பிரச்சனையின் அறிகுறி வழக்கமாக பெண்களுக்கு மாதத்தில் ஏற்படக்கூடிய மாதவிடாய் தாமதமாக ஏற்படும். இதற்கு தைராய்டு சுரப்பியில் ஏற்படும் இடையூறுகள் தான் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.இதை கவனித்து முறையாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

இதன் காரணமாக 35-வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்தி கூறுகின்றனர்.

3) உடல் சோர்வு:

உடல் சோர்வாக இருப்பது தைராய்டு பிரச்சனையின் முக்கிய அறிகுறியாகும். இதன் காரணமாக இந்த தசைப் பலவீனம், இதயத்துடிப்பு மற்றும் நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ADVERTISEMENT

சோர்வு என்பது தைராய்டு பிரச்சனையின் விளைவாக ஏற்படக்கூடும்.தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சிறிய வேலை செய்வதற்கு கூட மிகவும் சோர்ந்து போய் காணப்படுவார்கள்.

இப்படி இருக்கும் தருணத்தில் இது எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கவில்லை என்றால் தைராய்டு பிரச்சினை ஏற்படக்கூடும்.

4) வியர்த்தல்:

தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி வியர்வை ஏற்படும். ஏன் ஒரு சில நேரங்களில் ஃபேன் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது கூட வேர்க்கும்.இதை உடனடியாக மருத்துவமனைகளில் போய் ஆய்வு செய்து கொள்வது நல்லது.

5) பசியின்மை:

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பசி என்பது சிறிதளவு கூட ஏற்படாது. அப்படி எவ்வளவுதான் பசித்தாலும் சிறிதளவு உணவு மட்டுமே சாப்பிட முடியும்.

6) தூக்கமின்மை:

தைராய்டு பாதிப்பு தூக்கத்தை அதிகளவு பாதித்து தூக்கமின்மையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது போன்ற பிரச்சினைகளை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக பரிசானை செய்வது மிகவும் அவசியம்.

7) உடல் ஆரோக்கியம்:

தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பதட்டம்,நடுக்கம், எரிச்சல், தீவிர மனநிலை மற்றும் கவலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகளில் நினைவாற்றல் இழப்பு, செறிவின் அளவு குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

தைராய்டு டெஸ்ட் || thyroid symptoms test:

தைராய்டு அறிகுறிகள் பெண்கள்:- TSH சோதனை என்பது இரத்த ஓட்டத்தில் TSH அளவை கணக்கிடும் ஒரு வழக்கமான இரத்த பரிசோதனை ஆகும். உறுதியான தைராய்டு பிரச்சனையை கண்டறிவதற்கான உங்கள் முதல் பரிசோதனை இதுதான். TSH சாதாரணமாக 0.4 – 4.0 mlU/L இருக்க வேண்டும்.

தைராய்டு முற்றிலும் குணமாக || how to control thyroid in female:

தினமும் அதிகாலையில் தேங்காய் பூ சாப்பிடுவதன் மூலமாக தைராய்டு சுரப்பு குறைபாட்டை முற்றிலும் குணமடைய செய்கிறது. உடலுக்கு தேவையான மினரல்ஸ் அனைத்தும் தேங்காய் பூவில் அதிக அளவு காணப்படுவதனால் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால், மலச்சிக்கல் உள்ளவர்கள் கூட தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தைராய்டு விளைவுகள்:

தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் திடீரென உடல் எடை குறைதல், உடம்பில் எரிச்சல் ஏற்படுதல், தோள் பகுதிகள் வறண்டு காணப்படுதல், உடல் சோர்வடைதல், தசை பலவீனமாதல், நினைவாற்றல் இழப்பு, மலச்சிக்கல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகளில் காணப்படுவார்கள்.

தைராய்டு கட்டி அறிகுறிகள்:

தைராய்டு அறிகுறிகள் பெண்கள்:- தைராய்டு கட்டி ஏற்பட்டால் கழுத்தில் வலி ஏற்படாத கட்டிகள் உருவாக கூடும். கரகரப்பான குரல் தன்மை,கழுத்து வலி, வறண்ட தொண்டை, மூச்சு விடுவதில் அல்லது எச்சில் விழுவதில் சிரமங்கள், மூன்று வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து இருமல் காணப்படுதல் போன்ற ஏதேனும் ஒரு அறிகுறிகள் இருந்தால் கூட சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்களுக்கு தைராய்டு புற்றுநோய் உள்ளதா என்பதை பரிசோதிப்பது மிகவும் முக்கியம்.

மருத்துவ குறிப்பு || thyroid symptoms in female treatment:

தைராய்டு உள்ளவர்கள் என்ன பழம் சாப்பிடலாம்?

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் வைட்டமின்-C,B-6, நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. தைராய்டால் பாதிக்கப்பட்ட நரம்புகளை இது பராமரித்து சீராக்குகிறது.இதனால், தைராய்டு உள்ளவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த தீர்வை தருகிறது.

ADVERTISEMENT

தைராய்டு எந்த அளவு இருக்க வேண்டும்?

தைராய்டு அறிகுறிகள் பெண்கள்:- ஒரு லிட்டர் ரத்தத்தில் 0.5 முதல் 5-மில்லி வரை தைராய்டு இருக்க வேண்டும் என ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தத்தில் டி.எஸ்.ஹெச் அளவு என்பது தைராய்டு சுரப்பி சரியாக உள்ளதா அல்லது இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

தைராய்டு அறிகுறிகள் என்னென்ன ||தைராய்டு நோயின் அறிகுறி என்ன?

தைராய்டு நோய்க்கான அறிகுறிகள்:

* முகம்,கால்கள் வீக்கம் அடைவது

* உடல் சோர்வடைவது

* உடல் பருமன்

* பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்

* முடி உதிர்தல்

ADVERTISEMENT

* பசியின்மை

* தூக்கமின்மை

* கழுத்தின் முன் பகுதி கருமை நிறத்தில் காணப்படுதல்

* வியர்த்தல்

தைராய்டு இருந்தால் என்ன சாப்பிட கூடாது?

தைராய்டு அறிகுறிகள் பெண்கள்:- முக்கியமாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். இது போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சினை ஏற்படக்கூடும்.

இதனால், இது போன்ற உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதேபோன்று தைராய்டு பிரச்சினை ஏற்கனவே இருந்தாலும் இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

Read Also:- மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்

Leave a Reply