தமிழகத்தில் 640-நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி || போட்டி போடும் அரசியல் கட்சிகள் – அனல் பறக்கும் அரசியல் களங்கள்
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7-கட்டங்களால் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும்,அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போட்டியிட உள்ளது.
அதன்படி பார்க்கும்பொழுது தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தும் மிக விரைவாக முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு என பல பணிகளை செய்து முடித்த தலைவர்கள் தற்போது பம்பரம் போல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றனர். தற்போது, தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் அளிக்கும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வந்துள்ளது.
இந்த வகையில் தான் தமிழகத்தில் பா.ஜ.க, தி.மு.க போன்ற கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கு 40-நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு அனுமதி பெற்றுள்ளது.
பா.ஜ.கவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்:
பா.ஜ.கவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்தியநாத், ஓ.பி.எஸ், டிடிவி தினகரன்,ராமதாஸ் அன்புமணி, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 29-கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர மதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்:
திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா போன்ற 40-பேர் இடம் பெற்றுள்ளனர்.