ADVERTISEMENT
கோடைகாலத்தில் ஏன் கட்டாயமாக வெள்ளரிக்காயை சாப்பிட வேண்டும் தெரியுமா

கோடைகாலத்தில் ஏன் கட்டாயமாக வெள்ளரிக்காயை சாப்பிட வேண்டும் தெரியுமா? || உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்

கோடைகாலத்தில் ஏன் கட்டாயமாக வெள்ளரிக்காயை சாப்பிட வேண்டும் தெரியுமா? || உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்

கோடைகாலத்தில் ஏன் கட்டாயமாக வெள்ளரிக்காயை சாப்பிட வேண்டும் தெரியுமா

தற்போது கோடை காலம் வந்துவிட்டது. இதிலிருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிரூட்டும் பழங்களான தர்பூசணி, எலுமிச்சை, வெள்ளரிக்காய் போன்ற பழ வகைகளை சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதில், சந்தையில் மிகவும் மலிவாக கிடைக்கும் காய்களில் ஒன்றுதான் வெள்ளரிக்காய் இதை நாம் தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைத்து கண்களுக்கு குளிர்ச்சி தரும். இது போன்ற பயனுள்ள தகவல்களை பற்றிய செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெள்ளரிக்காயின் பயன்பாடுகள் – ஊட்டச்சத்துடன் வெப்பத்தை தவிர்க்கும்:

வெள்ளரிக்காயில் தண்ணீர் மட்டும் இல்லாமல், அதிகளவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. வைட்டமின்-K, வைட்டமின்-C மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் வெள்ளரிக்காயில் அதிக அளவு நிறைந்துள்ளது.

இது எலும்பை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் அதிக அளவு உதவுகிறது. எலக்ட்ரோலைட் சமநிலைப்படுத்த பெருமளவில் உதவி செய்கிறது.

தாகத்தை குறைக்கிறது:

கோடைகாலத்தில் நம் உடலுக்கு அடிக்கடி நீர் தேவைப்படுகிறது. இந்த தாகத்தை தணிக்க வெள்ளரிக்காய் ஒரு சிறந்த உணவாகும். இதில், அதிக அளவு நீர்சத்து காணப்படுகிறது. இதனால், உடம்பில் திரவ நிலைகளின் அளவு அதிகரிக்கிறது. உடலும் குளிர்ச்சியாகவும்,புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க பெருமளவில் உதவி செய்கிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது:

வெள்ளரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இது நம் உடலின் செருமானத்திற்கு உதவுகிறது. இதை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடல் அசைவுகளுக்கும், உடல் வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. கோடை காலத்தில் நமது உடலில் நீரிழிப்பு செரிமானத்தை அதிக அளவில் பாதிக்கக்கூடும். இதனால், வெள்ளரிக்காயை நாம் சாப்பிடுவதன் மூலம் அது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ADVERTISEMENT

எடையை குறைக்க:

வெள்ளரிக்காயில் நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. வெள்ளரிக்காயில் கலோரிகள் அளவு குறைவாக காணப்படுகிறது. இவற்றை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் பசியை குறைப்பதுடன் கலோரிகள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது.

வெப்பத்தால் ஏற்படும் உடல் பிரச்சினைகளை குறைக்கிறது:

சூரிய வெப்பத்தால் நம் தோள்கள் மற்றும் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாகவும் வெள்ளரிக்காய் செயல்படுகிறது. இது புத்துணர்ச்சி ஊட்டும் உணவு வகைகளில் ஒன்றாக கருதப்பட்டு பல நன்மைகளை நம் உடலுக்கு வழங்குகிறது.

வெள்ளரிக்காயை வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு 10-நிமிடம் இரண்டு கண்களில் வைத்து எடுத்தால் கண்ணில் ஏற்படும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கி கண்ணிற்கு குளிர்ச்சி தரும்.

தோளில் குளிர்ச்சியை உருவாக்கும்:

வெயில் காலங்களில் நம் தோலில் அடிக்கடி வெடிப்புகள், அரிப்புகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த வெள்ளரிக்காயில் “சிலிக்கான் டை ஆக்சைடு” அதிக அளவு காணப்படுகிறது.

இது தோளில் நெகிழ்ச்சி மற்றும் நீரோட்டத்தை பராமரிக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் துண்டுகள் அல்லது வெள்ளரிக்காயில் உள்ள பொருள்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படும் தோல் பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி நம் உடலுக்கு குளிர்ச்சியான புத்துணர்வை தருகிறது.

எனவே, கோடைகாலங்களில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இது போன்ற காய்கறிகளை சாப்பிட்டு உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

Leave a Reply