கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.11,000 வழங்கப்படும் || மத்திய அரசின் அதிரடியான திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்திய பெண்களுக்கு மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் தற்போது கொண்டுவரப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சுயதொழில் செய்யும் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் போன்ற அனைவருக்கும் ஏராளமான சலுகைகளும் திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இது போன்ற திட்டங்களில் ஒன்றுதான் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு “பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா திட்டம்”. இந்தத் திட்டத்தின் படி கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு முறைகளில் ரூ.11,000 நிதி உதவி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும், பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் சமவிகிதத்தில் தரப்படுகிறது.
இந்தத் திட்டம் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2017-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் பெண்கள் கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை என மூன்று தவணைகளில் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
எப்படி பயன்பெறலாம்:
இந்த திட்டத்தின் பயன்பெற இதனுடைய அதிகாரப்பூர்வமான இணையதளம் https://pmmvy.wcd.gov.in என்ற இணையதளத்தில் பக்கத்திற்கு சென்று அதில் குடிமகன் உள்நுழைவு என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதில் உங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் ஒரு படிவம் திறக்கப்படும்.
அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்துவிட்டு தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு, சமர்ப்பி என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு புதிய பதிவு எண் கிடைக்கும். உங்களது விண்ணப்பம் சரிபார்த்த பிறகு நிதி உதவி உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதுபோன்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் உங்களது அருகில் உள்ள சுகாதார மையம் அல்லது அங்கன்வாடி மையத்திற்கு சென்று பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை நிரப்பி விட்டு தேவையான ஆவணங்களை அதில் இணைக்க வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படும் அதை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பணம் வங்கி கணக்கில் ஏறாமல் விட்டால் இந்த ரசிகை மூலம் தான் நீங்கள் சரிபார்க்க முடியும்.
தேவையான ஆவணங்கள்:
கருவுற்ற பெண்ணின் ஆதார் அட்டை, முகவரி சான்றிதழ், குழந்தை பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பான் கார்டு, ஜாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், மொபைல் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவை இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஆகும்.
இதற்கான தகுதி:
இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் பயன் பெற விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக கட்டாயம் இருக்க வேண்டும். கருவுற்ற பெண்ணின் வயது-19 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பயன்பெற முடியும்.