ADVERTISEMENT
மூக்கிரட்டை கீரை பயன்கள்

மூக்கிரட்டை கீரை பயன்கள் || Mookirattai Keerai Benifits in Tamil

மூக்கிரட்டை கீரை பயன்கள் || Mookirattai Keerai Benifits in Tamil

மூக்கிரட்டை கீரை பயன்கள்

Mookirattai keerai benifits in tamil in english:

மூக்கிரட்டை கீரை பயன்கள்:  நம் நாட்டில் ஏராளமான மூலிகைகள் உண்டு.அதிலும் குறிப்பாக கீரைகளை சமைத்து சாப்பிடுவதில் நம் தமிழர் பழங்காலங்களில் இருந்தை பின்பற்றி வந்துள்ளனர். இந்த கீரைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.

இந்த மூக்கிரட்டை கீரையை பெரும்பாலும் யாரும் கேள்வி கூட பட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், இது ஒன்றும் அரிய வகை கீரை கிடையாது. சாதாரணமான கீரை தான் ஆனால், இன்று நம்மில் பல பேருக்கும் இது தெரிவதில்லை அதுதான் முக்கிய காரணம்.

அந்த வகையில் பார்க்கும் பொழுது மூக்கிரட்டை கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அதைப் பற்றிய விரிவான விவரங்களை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

ADVERTISEMENT

மூக்கிரட்டை கீரையின் தோற்றம் || mookirattai keerai tamil:

மூக்கிரட்டை கீரையை நாம் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. சாதாரணமாக நம் வயல்கள் மற்றும் சாலை ஓரங்களில் தரையோடு கொடி போல் படர்ந்திருக்கும் ஒரு கீரை வகை தான்.இது பச்சை நிறத்தில் காணப்படும்.பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.

மூக்கிரட்டை கீரை பயன்கள்:

1) புற்றுநோய் குணமடைய:

மூக்கிரட்டை கீரை பயன்கள்:  நம் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் சில வகை மாற்றங்கள் மற்றும் வைரஸ் தொற்றுகளால் புற்றுநோய் உண்டாகிறது‌. தற்போது புற்று நோய்க்கு ஏராளமான நவீன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தாலும்,அதில் விரைவாக பலன் கிடைப்பதில்லை.

இந்த மூக்கிரட்டை கீரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக புற்றுநோய் பாதிப்பு விரைவில் குணமாகிறது. இந்த கீரையில் புற்றுநோயை குணமாக்கும் வேதிப்பொருள் உள்ளது.

2) சுவாச நோய்கள் குணமடைய:

சில வகை கிருமிகளால் உடலில் ஏற்படும் ஒரு வகை நோய் தான் காச நோய்.இந்த காச நோய் நேரடியாக நுரையீரலை பாதிக்கிறது. அதுமட்டுமில்லாமல், சிலருக்கு ஒவ்வாமை மற்றும் காற்றும் மாசுபாடுகளால் ஆஸ்துமா போன்ற நோயும் ஏற்பட்டு அதுவும் நுரையீரலை பாதித்து சுவாசிக்கும் போது பலவகை பிரச்சனையை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற சுவாச பிரச்சனை நோய் உள்ளவர்களுக்கு இந்த மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டு, வேர்களை பக்குவம் செய்து சாப்பிடுவதன் மூலமாக இதற்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

3) உடல் எடையை குறைக்க:

மூக்கிரட்டை கீரை பயன்கள்: நம் உடலில் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் பொழுது கொழுப்பு கட்டிகள் அதிகரிக்கிறது. தற்போது இருக்கும் காலகட்டங்களில் கொழுப்பு உணவுகளை சாப்பிடும் அளவிற்கு வேலை பார்ப்பது கிடையாது.

இதனால், உடம்பில் கொழுப்புகள் அதிகளவு சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கிறது.இதற்கு மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதன் மூலமாக உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும்.

4) மலட்டுத்தன்மை நீங்க:

இன்று இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்கள் போன்றோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மலட்டுத்தன்மை இருக்கிறது.இதன் காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றன.

ADVERTISEMENT

இதற்கு மூக்கிரட்டை கீரையை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என இருபாலருக்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

5) சிறுநீரக கோளாறு சரி செய்ய:

நம் உடல் சீராக இயங்குவதற்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதுபோன்றுதான் சிறுநீரகமும் ஆரோக்கியமாக இருப்பது மிக மிக முக்கியம். இப்போது சிறுநீரகங்களில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகிறது.

குறிப்பாக, சிறுநீரக கல் சிறுநீரக எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இதற்கு, மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளை குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. இதனால், சிறுநீரகங்களில் கற்கள் கரைந்து, சிறுநீர தொற்றுநோய்கள் போன்ற பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

6) மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய:

தினசரி மலம் கழிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது‌. ஆனால், சிலருக்கு மலம் கழிப்பதில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது, இதற்கு காரணம் சாப்பிடும் உணவுகள் செரிமானமாகாமல் தேங்கி இருப்பது தான்.

ADVERTISEMENT

இதற்கு, மூக்கிரட்டை கீரையுடன், மஞ்சள், சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து கூட்டு செய்து சாப்பிடுவதன் மூலமாக வயிற்றின் புண்களை குணமாக்குவதோடு, செரிமான சக்தியை அதிகரிக்கிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்குகிறது.

7) கண் ஆரோக்கியத்திற்கு:

மூக்கிரட்டை கீரை பயன்கள்:தற்போது இருக்கும் காலகட்டங்களில் சிறியவர்கள், இளைஞர்கள் பெண்கள் என அனைவருக்கும் பார்வையில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் பயன்படுத்தக்கூடிய செல்போன்கள் தான்.

ஏனெனில், தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த செல்போன்களை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.அதனால், பார்வை மங்குகிறது. வாழும் வயதில் பார்வை இழந்தால் வயதான காலங்களில் மிகவும் கடினப்படும் நிலை ஏற்படும்.

இதற்கு சிறந்த தீர்வாக மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்றாக காய வைத்து, அதனை பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு, மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் கண்கள் தொடர்பான அத்தனை குறைபாடுகளும் சரியாகிவிடும்.

ADVERTISEMENT

8) இரத்தத்தை சுத்திகரிக்க:

இன்றைய காலகட்டங்களில் நாம் சாப்பிடும் உணவுகளில் ஏராளமான நச்சுப் பொருள்கள் கலந்த நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால், நம் இரத்தத்தில் கலக்கும் நச்சுக்களால் இரத்தத்தில் கிருமிகள் நிறைந்து உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

இதற்கு சிறந்த தீர்வாக மாதத்திற்கு இரண்டு முறையாவது மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர்களை காய வைத்து, நன்றாக அரைத்து பொடி போல் செய்து கொண்டு,மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கழிவுகள் அனைத்தும் நீங்கி இரத்தம் சீராக இயங்கும்.

9) ஆர்தரைடிஸ்:

இன்று நடுத்தர வயது உடையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக காணப்படும் ஒரு நோய் தான் ஆர்த்ரைடிஸ்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு மற்றும் அதன் சார்ந்த தசை பகுதியில் அனைத்தும் விரைப்புத்தன்மையுடன் காணப்பட்டு அதிகளவு வலியை உண்டாக்குகிறது. இதற்கு மூக்கிரட்டை கீரை இலைகளை நன்றாக அரைத்து பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பூசி வந்தால் விரைவாக குணமடையும்.

ADVERTISEMENT

10) ஈரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு:

மூக்கிரட்டை கீரை பயன்கள்: நமது உடலில் இருக்கும் ஒரு முக்கியமான உள்ளுறுப்பு தான் ஈரல். இதில்,பல்வேறு நச்சுக்கள் கலப்பதனால் உடலில் தீங்கு ஏற்படுகிறது. இதற்கு, மூக்கிரட்டை கீரையை நன்றாக சமைத்து சாப்பிட்டு வரும் நேரத்தில் ஈரலில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் அழிந்து நன்றாக பலன் பெறும்.

ஈரலில் உண்டாகக்கூடிய எந்த ஒரு குறைபாடுகளையும் போக்கும் தன்மை கொண்டது. அதிகளவு பித்த நீர் சிறப்பை ஊக்குவிக்கிறது. பல்வேறு விதமான நோய்கள் உடம்பை தாக்குவதில் இருந்து பாதுகாக்கிறது.

மூக்கிரட்டை கீரை பொடி எப்படி சாப்பிடுவது:

மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்றாக காய வைத்து அரைத்து பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை, இளம் சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் நீங்குகிறது.

ADVERTISEMENT

மூக்கிரட்டை கீரை எப்படி சாப்பிடுவது:

மூக்கிரட்டை கீரையை பறித்துக் கொண்டு அதை நன்றாக சுத்தம் செய்து அம்மியில் வைத்து மை போன்று அரைத்து கொள்ள வேண்டும். அதனை உருண்டையாக நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடை போல தட்டி சாப்பிடலாம்.

இதனை காலை,மாலை என இரு வேலையும் தொடர்ந்து 7-நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் அனைத்தும் குணமடையும்.

மூக்கிரட்டை வேர் பயன்கள்:

மூக்கிரட்டை கீரை பயன்கள்: மூக்கிரட்டை வேறு நன்றாக அரைத்து பொடி போல் எடுத்துக்கொள்ள வேண்டும் இது ரத்த சோக இதே பாதிப்பில் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மூக்கிரட்டை வேரை நீரில் வேகவைத்து அதை குடித்து வந்தால் இரத்த சோகை, சளி போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

ADVERTISEMENT

இந்த மூக்கிரட்டை வேரை சற்று இடித்து விளக்கெண்ணையில் போட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

மூக்கிரட்டை கீரை சூப்:

மூக்கிரட்டை கீரையை நன்றாக வேக வைக்க வேண்டும். அதில் தட்டிய சிறிதளவு பூண்டு, சீரகப்பொடி, மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு, கொதிக்க வைத்த நீரை இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். இதுதான், மூக்கிரட்டை கீரை சூப். மூக்கிரட்டை கீரை கிடைக்காத நபர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதனை பயன்படுத்தி சூப் செய்து குடிக்கலாம்.

மூக்கிரட்டை சூரணம் பயன்கள்:

மூக்கிரட்டை கீரை பயன்கள்: இந்த மூக்கிரட்டை கீரையை தொடர்ந்து சாப்பிடும் தருணத்தில் உடல் எடையில் சில வகை மாற்றங்கள் ஏற்படலாம். மூக்கிரட்டை கீரை பொடியானது உடல் எடையை எதிர்த்து, இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

ADVERTISEMENT

புற்றுநோய் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அளிக்கக் கூடிய சக்தி இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு.

மூக்கிரட்டை கீரை தீமைகள்:

• இந்த மூக்கிரட்டை கீரையை அதிக அளவு சாப்பிடும் போது உடலில் உள்ள நீரை வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளது. இதனால், இதை அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது.

• அளவுக்கு அதிகமாக சாப்பிடும் தருணத்தில் உடலில் உள்ள நீரிழப்பிற்கு காரணமாக அமையுவதோடு, நீர் சத்துக் குறைபாடும் ஏற்படுகிறது.

• பால் ஊட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த மூக்கிரட்டை கீரையை சாப்பிடுவதனால் பயனுள்ளது என்று எந்த ஒரு ஆய்விலும் கூறுவர் கூறப்படவில்லை.இதனால், இந்த மூக்கிரட்டை கீரையை சாப்பிடும் முன்பு மருத்துவரின் ஆலோசனை பெற்ற சாப்பிடுவது மிகவும் நல்லது.

ADVERTISEMENT

• கீரையை சமைத்தால் அப்போதே சாப்பிட்டு முடித்து விட வேண்டும் அதனை வைத்து சூடேற்றி சாப்பிடும் தருணத்தில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

• கீரைகளை மது அருந்தி விட்டோ அல்லது இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், கீரைகள் அவ்வளவு எளிதில் செரிமானம் ஆகாது.

இதனால் இரவு நேரங்களில் சாப்பிட்டு நாம் தூங்கும்பொழுது செரிமானமாகமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

• ஏற்கனவே வேறு எதுவும் மருந்து, மாத்திரை சாப்பிடும் நபர்கள் இந்த மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ADVERTISEMENT

•முக்கியமாக எத்தனால் அலர்ஜி உள்ளவர்களும் இந்த கீரை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

• இந்தக் கீரையை அதிக அளவு சாப்பிடும் தருணத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்து இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இதனால்,இதயத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

mookirattai keerai botanical name:

• Punarnava

• Boerhavia diffusa

ADVERTISEMENT

Read Also:- மூக்கிரட்டை கீரையின் தீமைகள்

Leave a Reply