ADVERTISEMENT
குரு பெயர்ச்சி பலன்கள் 2024

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 || Guru Peyarchi 2024 to 2025 Tamil

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 || Guru Peyarchi 2024 to 2025 Tamil

குரு பெயர்ச்சி பலன்கள் 2024

குரு பெயர்ச்சி:

குரு பெயர்ச்சி பலன்கள் 2024:- ஆண்டுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சி நடைபெறுவது என்பது ஐதீகம். இருந்தாலும், இது சில மாதங்கள் அதிசாரமாகவும், சில மாதங்கள் வக்ரகதியிலும் குரு பகவான் செல்வார். குரு பகவானின் கோச்சாரப்படி 2,5,7,9,11-இல் சஞ்சரித்ததனால் நன்மை செய்வார் என்று கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன் மட்டும் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை. இதற்கு, காரணம் ஜாதகத்தில் உள்ள தசா புத்திகளும், கிரகங்களும் தான். குரு பகவான் மேஷ ராசியில் அவதரிக்கிறார். இதனால்,மே 1-ஆம் தேதி பிற்பகல் 1-மணிக்கு மேல் குரு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சியால் மேஷம், கடகம், கன்னி,விருச்சிகம், மகரம் போன்ற ராசிக்காரர்கள் அதிகளவு பலன் பெறுகின்றனர்.ரிஷபம், மிதுனம், சிம்மம் துலாம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் சுமாரான பலன்களை பெறுகின்றனர்.

இதற்கு பல பரிகாரங்கள் செய்ய நேரிடும் குரு பெயர்ச்சி நாள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பயன் எவ்வாறு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1) மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பல்வேறு செல்வ செழிப்புகள் மற்றும் மகிழ்ச்சிகள் உண்டாகும்.பணம் தொடர்பான வரவுகள் அனைத்தும் கிடைக்கப்பெறும். பதவி உயர்வும், மரியாதையும் அதிகமாகும்.சுயதொழிலை பொறுத்தவரையில் நிதி நிலையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு வெளிநாடுகளுக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

2) ரிஷபம்:

மே 1-தேதியிலிருந்து குரு மேஷ ராசிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர உள்ள காரணத்தினால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்கள் மற்றும் மகிழ்ச்சிகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற மதிப்புகள் அதிகரிக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கலாம். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். திருமண வாழ்க்கையில் எண்ணற்ற மகிழ்ச்சிகள் கிடைக்கும்

3) மிதுனம்:

குருவின் இடப்பெயர்ச்சி காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு சில முன்னேற்றங்கள் ஏற்படலாம். ஆனால், சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதுவும் பண பற்றாக்குறை காரணமாக தான் பிரச்சனைகள் உருவாகும்.செலவுகள் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை.திருமண வாழ்க்கையில் சில, பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

4) கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு நினைத்தது அனைத்தும் கைகூடி வரும் தருணம். இது உங்கள் தொழிலில் நீங்கள் நினைத்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். நீங்கள் கடினமாக உழைத்ததற்கான பலன் இந்த சமயத்தில் கைகூடி வரும். இதன் மூலம் உங்களுக்கு தைரியமும், துணிச்சலும் அதிகமாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

5) சிம்மம்:

குரு பெயர்ச்சி நகர்வு காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு தொட்டது அனைத்தும் வெற்றியில் முடியும். வேலை செய்யும் இடத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு பதவி உயர்வு பெற முடியும். சுய தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான சில உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். குறிப்பாக, கூற வேண்டுமானால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

6) கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய தருணம். உங்களது சமூகத்தில் உங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.உங்களது குல தெய்வங்களின் ஆதரவு மற்றும் அருளை முழுமையாக நீங்கள் பெற்று வெற்றி பயணத்தை தொடங்கும் நேரம்.

ADVERTISEMENT

அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் பதவிக்கான வாய்ப்புகள் அதிகமாக வரும். உடன் பிறந்த உறவுகள் மூலம் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு விரிசல்கள் இருந்தால் அவை அனைத்தும் நீங்கும்.

7) துலாம்:

குரு பெயர்ச்சி பலன்கள் 2024:- துலாம் ராசிக்காரர்களுக்கு இது சற்று மோசமான காலம் என்று கூறலாம். ஏனென்றால், வியாபாரத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

நீங்கள் யாரேனும் ஒருவருக்கு கடன் கொடுத்திருந்தால் அதை வாங்குவதற்கு கூட மிகவும் சிரமப்பட வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவரின் உறவில் சண்டைகள் ஏற்பட்டு வாக்குவாதங்கள் நடைபெறலாம்.

8) விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணத்தடைகள் இருந்தால் நீங்கும். திருமணங்கள் கூடிய விரைவில் நிச்சயிக்கப்படும். உங்கள் தொழிலில் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்படும்.

புதிதாக ஏதாவது ஒரு வேலையை நீங்கள் தொடங்க நினைத்தால் அதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

9) தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கஷ்டப்பட்டாலும் அதற்கான பலனாக சிறந்த வெற்றிகளை பெறுவார்கள். இருப்பினும் சில உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ADVERTISEMENT

சில,பல மன உளைச்சல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.உங்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவரைப் பற்றி அடிக்கடி நீங்கள் நினைத்து கவலைப்படும் தருணம் உங்கள் மனதில் தோன்றலாம்.

10) மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நகர்வு காரணமாக தூரத்து சொந்தத்தில் இருந்து சில உறவினர்கள் வீட்டிற்கு வரலாம். திருமணம் நடைபெறாமல் இருக்கும் நபர்களுக்கு திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

படிப்பு மற்றும் கல்வி போன்ற நிகழ்வுகளுக்காக உங்கள் குழந்தைகளை நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பும் நிலையும் ஏற்படலாம். குரு இடப்பெயர்ச்சி மாற்றம் காரணமாக தந்தை செய்யும் தொழிலில் அதிகளவு வளர்ச்சி ஏற்பட்டு முன்னேற வாய்ப்புள்ளது.

11) கும்பம்:

குரு பகவான் கும்ப ராசிக்காரர்களுக்கு 4-ஆம் வீட்டில் ஆட்சி செய்வதன் காரணமாக சிறிது மனக்கவலைகள் ஏற்படக்கூடும்.தேவையற்ற செலவுகள் அதிகமாக வர நேரிடும் தருணத்தில் உங்களை செலவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

நிதி நிலைமையில் அதிக அளவு கவனம் தேவை. ஜோதிடர்கள் அல்லது ஆசிரியர்கள் மற்றும் புத்தகங்களை வெளியிடுபவர்களுக்கு, குரு பெயர்ச்சி நன்மையை தரும்.

12) மீனம் || குரு பெயர்ச்சி 2024 to 2025 meenam:

மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றிகளை பெற முடியும். இந்த சமயத்தில் ஊடகம்,எழுத்து போன்ற துறையில் வேளையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

ADVERTISEMENT

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முடிவுக்கு வரலாம். வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை அனைத்தும் முடிவடைந்து தொழிலில் அதிகளவு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

குரு பெயர்ச்சி 2024 to 2025 || குரு பெயர்ச்சி 2025:

அடுத்த குரு பெயர்ச்சி எப்போது:

குரு பெயர்ச்சி பலன்கள் 2024:- ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் அவர்களுக்கு ஜாதக பலன் தருகிறதோ, இல்லையோ ஆனால் குரு கிரகத்தின் நற்பலன்களை கொண்டவர்கள் சிறியதாக ஒரு கஷ்டத்தை சந்தித்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.

ஜோதிடத்தில் முக்கியமாக கிரக பெயற்சிகளில் ஒன்றாக கூறப்படுவது குரு பெயர்ச்சி. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி 2024 மே 1-ஆம் தேதி தொடங்க உள்ளது.

Guru peyarchi 2024 date tamil:

குரு பெயர்ச்சி 2024 மே 1-ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால், மிகுந்த மகிழ்ச்சியும் எண்ணற்ற பலன்களையும் ஒரு சில ராசிகள் பெறலாம்.

அஷ்டம குரு என்றால் என்ன:

உத்தம குரு – கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு அனைத்து காரியத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் காரணமாக வெளிநாட்டு பயணங்களை ஏற்படுத்தும் தருணம் கூட நடைபெறலாம்.

ADVERTISEMENT

திருமணம் நடைபெற்று நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தருவார்.பணம் போன்ற விஷயங்களை கவனமும் நிதானமும் தேவை.

குரு பெயர்ச்சி என்ன தேதி? || குரு பெயர்ச்சி 2024 எப்போது?

குரு பெயர்ச்சி பலன்கள் 2024:-  ஜோதிடத்தில் முக்கியமான கிரக பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுவது தான் குரு பெயர்ச்சி.இந்த ஆண்டு குரு பெயர்ச்சி 2024 மே 1-ஆம் தேதி தொடங்க உள்ளது.

Read Also:- சனிப்பெயர்ச்சி பலன்கள்

Leave a Reply