ADVERTISEMENT
கனவு பலன்கள்

கனவு பலன்கள் || Kanavu Palangal in Tamil

கனவு பலன்கள் || Kanavu Palangal in Tamil

கனவு பலன்கள்

 

Kanavu Palangal in Tamil || கனவு பலன்கள் pdf:

கனவு பலன்கள்:-  நம் தூங்கும்போது கனவுகள் வராத இரவே இருக்காது. இதுபோன்ற கனவுகள் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். கனவுகள் சில சமயங்களில் கனவுகள் வினோதமாக இருக்கக் கூடும்.நம் வாழும் உலகிற்கு சம்பந்தமே இல்லாமல் இதுவரை நீங்கள் பார்த்திராத இடங்கள், தெரியாத முகங்கள் மற்றும் புதுமையான சூழ்நிலைகள் ஆகியவை கனவில் அடிக்கடி தோன்றும்.

ஒவ்வொரு கனவு காணும் பொழுதும் நமக்குள் ஏதோ ஒரு பதட்டங்களை உருவாக்குகிறது. ஏனென்றால்,நமக்கு பிடிக்காத ஒரு சில கனவுகளை காணும் போது அது நிஜத்தில் நடப்பது போன்ற ஒரு உணர்வு மனதில் ஏற்படுகிறது.

நாம் காண்கின்ற ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் கூறப்பட்டுள்ளது. பழங்காலத்தில் முன்னோர்கள் இது நம் வாழ்வில் நடக்க இருக்கும் ஏதோ ஒரு நிகழ்விற்கான அறிகுறிதான் கனவாக வருகின்றது என கூறியுள்ளார்கள்.அந்த நிகழ்வு நல்லதாகவும், இருக்கலாம் கெட்டதாக இருக்கலாம்.

ADVERTISEMENT

கனவு பலன்கள்:- அது வரும் கனவை பொறுத்து. வருகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு பலனும், அதுபோன்று ஒவ்வொரு தீமையும் உள்ளது. நினைவுகளின் கற்பனையை தான் சில பேர் கனவு என்று கூறுகின்றார்கள்.

உங்களுடைய மனதில் எந்த ஒரு நிகழ்வை ஆழமாக நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ!!! அந்த நிகழ்வு தான் உங்களுக்கு தூங்கும்போது கனவாக வருகிறது என சிலர் கூறுகின்றனர். இதுபோன்று எந்தெந்த நிகழ்வுகள் நம் கனவில் வந்தால் என்னென்ன நடக்கும் என்பதை பற்றிய விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1) கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால்:

நீங்கள் தூங்கும்போது உங்களுடைய கனவில் கர்ப்பமாக இருப்பது போன்று கனவுகள் கண்டாலோ அல்லது ஒரு கர்ப்பிணியை கனவில் கண்டாலோ உங்களுடைய உண்மையான நிஜ வாழ்க்கையில் உங்களுடைய குடும்ப கஷ்டங்களை பற்றி நீங்கள் அதிகமாக சிந்தித்து கவலை கொண்டு இருக்கிறீர்கள்.

2) உடலுறவில் ஈடுபடுவது போல் கனவு கண்டால்:

இன்று 20-வயதுக்கு மேல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்களுக்கு அடிக்கடி வரக்கூடிய ஒரு கனவு தான் உடலுறவில் ஈடுபடுவது போல் காணப்படும் கனவு.

இந்தக் கனவு உங்களுக்கு நெருக்கமான அல்லது மிகவும் பிடித்த நபருடன் உடலுறவில் ஈடுவது போல் கனவு வந்திருக்கலாம். இதற்கு நீங்கள் உங்கள் துணையுடன் உண்மையான மகிழ்ச்சியில் ஈடுபடவில்லை என்று பொருள். அதுமட்டுமில்லாமல்,நீங்கள் எந்த நபருடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று அதிகமாக ஆசைப்படுகிறீர்களோ அதைத்தான் கனவாக காண்கிறீர்கள். அந்த நபரின் மீது உங்களுக்கு அளவு கடந்த ஆசை உள்ளது என்றும் பொருள்.

உங்களுடைய ஞணா அதிசயங்களில் நீங்கள் ஒற்றுமையை காண்கிறீர்கள் என்பதற்கான அறிகுறி தான் இந்த கனவு.

ADVERTISEMENT

3) உயரத்திலிருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால்:

நம்மில் பலருக்கு உயரமான கட்டிடங்கள் அல்லது வேறு ஏதும் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு வந்திருக்கும். இந்த கனவு சற்று பதட்டமாகவும் இருக்கும். இதற்கு உங்களது நிஜ வாழ்வில் நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக எடுத்த முடிவுகள் தவறாக இருக்கக் கூடும் என அறிவுறுத்துவதற்காக வரும் கனவாகும்.

இதனால், நம் வாழ்க்கையில் சில பல கஷ்டங்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக, அதிகமான குழப்பத்தில் நீங்க உள்ளதை இந்த கனவு சுட்டிக்காட்டுகிறது.

4) தெய்வம் அல்லது இறைவன் கனவில் வருவது போல் கனவு கண்டால்:

கனவு பலன்கள்:-  உங்களுடைய கனவில் தெய்வம் வருவது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ஒரு வியாபாரம் அல்லது தொழில் செய்தால் அதில் முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் நீண்ட நாட்களாக மனதில் நினைத்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்.

5) இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்:

இறந்து போனவர்கள் யாரேனும் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுக்கு கூடிய விரைவில் ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கப்போகிறது என்றும், நீங்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள் என்றும் அர்த்தம்.

* இறந்து போன அப்பா கனவில் வந்தால்:

இறந்து போன உங்களுடைய அப்பா உங்களது கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு பிரச்சனை சரியாகும் என்று அர்த்தம்.

* இறந்து போன அம்மா கனவில் வந்தால்:

இறந்து போன உங்களுடைய அம்மா கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்க குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று பொருள்.

ADVERTISEMENT

* இறந்து போன தாய் மற்றும் தந்தை கனவில் வந்தால்:

இறந்து போன தாய் மற்றும் தந்தையை நீங்கள் கனவில் கண்டால் கனவு கண்ட நபருக்கு வர இருக்கும் மிகப்பெரிய ஆபத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டி அதை எச்சரிப்பதற்காக வந்துள்ளார்கள் என்று அர்த்தம்.

* தான் இறந்துவிட்டது போல் கனவு கண்டால்:

நீங்கள் தானே இறந்து விட்டது போல் கனவு கண்டால் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், இந்தக் கனவிற்கு எதிர்மறையாக நமக்கு பலவித நன்மைகள் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று பொருள்.

அதுமட்டுமில்லாமல், அந்தக் கனவு நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கக்கூடும்.

* இறந்தவர்கள் நம்முடைய கனவில் வந்து அழுதால்:

உங்களது நண்பரோ அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒரு நபரோ உங்களுடைய கனவில் வந்து அழுவது போல் நீங்கள் கனவு கண்டால் அது நல்லது கிடையாது.

உடனடியாக அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுதல் மிகவும் நல்லது.

ADVERTISEMENT

* இறந்து போனவர்களை தூக்கி செல்வது போல் கனவு கண்டால்:

இறந்து போன எந்த ஒரு நபரையும் தூக்கி செல்வது போல் கனவு கண்டீர்கள் என்றால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

* இறந்தவர்கள் கனவில் வந்து ஆசீர்வதித்தால்:

இறந்து போன உங்களுக்கு நெருக்கமான யாராக இருந்தாலும் உங்களுடைய கனவில் வந்து ஆசிர்வாதம் செய்வது போல் நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய எல்லாவித கஷ்டங்களும் குறைந்து நன்மைகள் ஏற்படும் என்று பொருள்.

* இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல் கனவு கண்டால்:

இறந்து போன உங்களுடைய நண்பர்கள் அல்லது யாரேனும் நெருக்கமான சில உறவுகள் உங்களிடம் பேசுவது போல் கனவு கண்டால் நீங்கள் இருக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உதவ சில நபர்கள் வருவார்கள் என்று அர்த்தம்.

* இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல் கனவு வந்தால்:

இறந்து போனவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு செல்வங்கள் வந்து சேரும், மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று அர்த்தம்.

* இறந்தவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவது போல் கனவு வந்தால்:

உங்கள் குடும்பத்தில் இறந்து போன யாரேனும் ஒருவர் வீட்டில் வந்து தூங்குவது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்திலிருந்து நீங்கள் தப்பித்து விட்டீர்கள் என்று பொருள்.

அதுபோன்று சவப்பெட்டியை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு நெருக்கமான நபர்கள் இறந்து போக போகிறார்கள் என்று அர்த்தம்.

ADVERTISEMENT

* உங்களுக்கு நெருங்கிய யாராவது இறந்து விடுவது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு நெருக்கமான அல்லது வேண்டப்பட்ட யாராவது இறந்து விட்டது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய துன்பங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம்.

* இறந்து போன பெரியவர்கள் கனவில் வந்தால்:

செல்வ செழிப்போடு தங்களது தலைமுறைகளோடு நன்றாக வாழ்ந்து வயது முதிர்வு காரணமாக இறந்து போன பெரியவர்கள் உங்களுடைய கனவில் வந்தால் அவர்கள் உங்களை ஆசீர்வதிப்பது என்று பொருள். இதனால், உங்கள் வாழ்வில் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

* இறந்தவர்களின் சடலங்களை கனவில் கண்டால்:

இறந்து போனவர்களின் சடலங்களை உங்களுடைய கனவில் நீங்கள் கண்டால் உங்களது வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஆகும்.

* குழந்தை இறந்து போவது போல் கனவு கண்டால்:

குழந்தை இறந்து போவது போல கனவு வந்தால் கனவு கண்ட நபருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட போவதற்கான அறிகுறி ஆகும்.

* துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால்:

துர் மரணம் அடைந்த யாரேனும் உங்களது கனவில் வந்தால் உங்களுக்கு சில கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல், விபத்து, குடும்பத்தில் சண்டை,பிரிவுகள், உடல்நல குறைவு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

•இதற்கான பலன்:

இதுபோன்ற,தேவையில்லாத மற்றும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய கனவுகளை தவிர்க்க உங்களது குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது.

ADVERTISEMENT

6) யாரேனும் துரத்துவது போல் கனவு கண்டால்:

கனவு பலன்கள்:-  நமக்குத் தெரிந்த அல்லது தெரியாத சில நபர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக உங்களை துரத்துவது போன்று கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வந்திருக்கும். இதற்கு உங்களுடைய நிஜ வாழ்க்கையில் நீங்கள் எதையோ தவிர்க்க முயற்சி செய்துள்ளீர்கள், ஆனால், அது முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

இதன் காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

7) கன்று ஈன்ற பசு கனவில் வந்தால்:

பசு புதிதாக கன்று போடுவது போல் கனவு வந்தால் அது நல்லது கிடையாது. இதனால் உங்களுக்கு அதிக அளவு துன்பம் ஏற்பட நேரிடும்.

ஆனால்,கன்று ஈன்ற பசுவை கனவில் காண்பது உங்களுக்கு அதிக அளவு செல்வ வளத்தை கொடுக்கும். இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் சரி செய்ய உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை செய்தல், அன்னதானம் வழங்குதல் போன்ற தான தர்மங்களை செய்தால் பலன் கிடைக்கும்.

8) அழகிய பெண்ணை கனவில் கண்டால்:

அழகிய பெண் உங்களது கனவில் வந்தால் உங்களது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போவதற்கான அறிகுறி ஆகும்.

9.சண்டை,தகராறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது போல் கனவு கண்டால்:

சண்டைகள், தகராறு, அடிதடி போன்ற பிரச்சனைகளில் நீங்கள் மாட்டிக் கொண்டு தவிப்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் அமைதியாகவும்,எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமலும் இருக்கும்.

ADVERTISEMENT

சண்டையில் மற்றவர்கள் உங்களை அடிப்பது போன்று கனவு கண்டால் உங்களுக்கு பகைவர்கள் இல்லை என்று கூறலாம். பகைவர்கள் இருந்தாலும் அவர்கள் பகையை மறந்து உங்களுடன் நட்பாக பழகுவார்கள் பழகும் சூழ்நிலை ஏற்படும்.

10. அழகற்ற பெண் கனவில் வந்தால்:

அழகு இல்லாத ஒரு பெண் உங்களுடைய கனவில் வந்தால் குறிப்பாக திருமணமாகாத ஒரு இளைஞர் அல்லது ஆண் கனவில் வந்தால் ஒரு அழகான தேவதை போன்ற ஒரு பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவார் என்று அர்த்தம்.

11. கனவு பலன்கள் விலங்குகள்:

உங்களுடைய கனவில் ஏதேனும் ஒரு விலங்கு வருவது போல் கனவு கண்டால் உங்களுக்கு வரக்கூடிய மிக பெரிய ஆபத்துகள் மற்றும் பிரச்சனைகள் போன்றவற்றை உங்களுக்கு எச்சரிப்பதற்காக வருகிறது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சில சமயங்களில் பறவைகள்,பூச்சிகள் கனவில் வந்தால் அது உங்களுக்கு நன்மை மற்றும் செல்வ வளத்தை பெருக்கவதற்கான அறிகுறி ஆகும். இதனால், நீங்கள் எண்ணற்ற மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.

12. கனவு பலன்கள் தண்ணீர்:

மிதமான வேகத்தில் தண்ணீர் பாய்ந்து வருவது போல் நீங்கள் கனவு கண்டால் வாழ்க்கையில் இருக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சனைகள் அனைத்தும் தீரப் போகிறது என்று பொருள்.

அதுபோன்று அதிகப்படியான தண்ணீர் நிரம்பி வழிவது போல் உங்களுக்கு கனவு வந்தால் மனதில் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய உணர்ச்சிகளை அடுத்தவர்களிடம் வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பொருள்.

13. உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்:

இறந்து போனார்கள் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். இறந்தவர்கள் கனவில் வந்து உங்களை ஆசீர்வதிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய எல்லா விதமான பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் நன்மைகள் ஏற்படும்.

ADVERTISEMENT

அதுபோன்று இறந்தவர்கள் உங்களுடைய கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் அது உங்களுக்கு நல்லது அல்ல உடனடியாக கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

14. கனவு பலன்கள் பணம்:

நிஜ வாழ்க்கையில் பணத்தைக் காண்பது எவ்வளவு அரிதோ அதுபோல்தான் கனவிலும் பணத்தை பார்ப்பது மிகவும் கடினம். இருப்பினும், இதுபோன்ற கனவு உங்களுக்கு வரும் தருணத்தில் உங்களுக்கு கிடைக்காத நீங்கள் அனுபவிக்காத சில விஷயங்களை நீங்கள் அனுபவிக்க போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரிவிப்பதன் அறிகுறி ஆகும்.

15. தன்னைத் தானே கனவில் கண்டால்:

உங்களை நீங்களே உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், உங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையே உங்களுக்கு அமையப் போகிறார்கள் என்று அர்த்தம்.

16. கனவு பலன்கள் நாய் கடித்தால்:

நாய் கடிப்பது போன்று உங்களுக்கு கனவு வந்தால் நீங்கள் ஏதோ ஒரு நெருக்கடியான பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இந்த பிரச்சனை வேலை செய்யும் இடம், உறவினர்கள் போன்றவர்களாலும் கூட ஏற்படலாம். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் இருக்கிறீர்கள் என்றும் பொருள்.

தெய்வம் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

தெய்வத்தை கனவில் காண்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது நீங்கள் ஒரு உயர்ந்த சக்தியுடன் அதிகம் இணைந்திருப்பதை இது குறிக்கிறது. இதுபோன்று, தெய்வங்களை நீங்கள் கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் நீங்கள் மிகப்பெரிய சவால்களை கடந்து, தடைகளை உடைத்து முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம்.

அம்மா கனவில் வந்தால் என்ன பலன்?

அம்மா உங்களது கனவில் வருவது போல் நீங்கள் கனவு கண்டால் நீங்கள் வாழ்வில் சில பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். அதுமட்டுமில்லாமல், அம்மாவின் உடல் நலம் மற்றும் வளர்ச்சியில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டும் இது மிகவும் முக்கியமான விஷயம்.

ADVERTISEMENT

கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

கனவுகள் என்பது நம் ஆழ்மனதுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வு எனக் கூறப்படுகிறது. இந்த கனவுகளில் பெரும்பாலும் நம் வாழ்க்கை அல்லது நமக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நாம் காணும் சில விஷயங்கள் தான் பெரும்பாலும் அடிக்கடி வரும். கனவு சாஸ்திரங்களின்படி, உங்களது கனவுகளில் வரும் விஷயங்கள் மற்றும் செயல்கள் உங்கள் வாழ்வில் நடக்கப் போகும் ஏதோ ஒன்றை உங்களுக்கு உணர்த்த நினைப்பதாக பொருள்.

கனவில் யானை துரத்தினால் என்ன நடக்கும்?

யானை துரத்துவது போல் உங்களுக்கு கனவு வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள போகிறீர்கள் என்று பொருள். வனத்தில் யானை துரத்துவது போல் உங்களுக்கு கனவு வந்தால் உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைவதில் சில தடைகள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.

Read Also:- கனவு பலன்கள் 

Leave a Reply