உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் || High Blood Pressure Symptoms in Tamil
உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்:
High Blood Pressure Symptoms in Tamil:- உயர் இரத்த அழுத்தம் என்பது நமது உடலில் ஏற்படக்கூடிய எளிமையான உயிரைப் பறிக்கக் கூடிய கொலையாளி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், உலகத்தில் பெரும்பாலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அதற்கு காரணம் மற்றும் அறிகுறிகள் இல்லாமல் இறந்து விடுகின்றனர்.
இது அவர்களின் தமனிகளை சேதப்படுத்திகிறது. இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது திடீரென ஏற்படுவதனால் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
உயர் இரத்த அழுத்தம் என்பதை ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. இதயம் துடிக்கும் தருணத்தில் இரத்தக் குழாய்களின் வழியே பாயும் இரத்தத்தின் வேகமே பிளட் பிரஷர் அதாவது இரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் என்பது தமனிகளின் சுவர்களுக்கு எதிராக இரத்தம் அதிகப்படியான உடலுக்கு செல்லும் நிகழ்வாகும்.இது உடலில் உள்ள தமனிகளை பாதிக்கும் தன்மை கொண்டது. உங்களுக்கு இது போன்ற நிலை காணப்பட்டால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக வேலையை செய்கின்றது என்று காரணம்.
இரத்த அழுத்தத்தை சுகாதார வல்லுநர்கள் பாதரச மில்லி மீட்டரில் அளவிடுகின்றனர். ஒரு மனிதனுக்கு இரத்த அழுத்தம் என்பது 130/80 mm/mg அதற்கு அதிக அளவு இருக்கும் பொழுது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்:
உயர் இரத்த அழுத்தத்தின் வகைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1) முதன்மை உயர் இரத்த அழுத்தம்:
இந்த முதன்மை நிலை இரத்த அழுத்தம் என்பது மிகவும் பொதுவான நிலையாகும். இது வாழ்க்கை முறை மற்றும் போதிய உடற்பயிற்சி முறை காரணமாக வயதான காரணங்களால் ஏற்படுகிறது.
2) இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்:
குறிப்பிட்ட மருந்துகள் அல்லது வெவ்வேறு மருத்துவ நிலைமைகளை உட்கொள்வதன் மூலமாக இந்த நிலை ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது:
உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று உடனடியாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதற்கு ஒரு சில காரணங்களை கூறுகின்றன. அவற்றைப் பார்க்கலாம்.
* ஆரோக்கியமற்ற உணவு மற்றும் கொழுப்பு சேர்ந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
* மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற செயல்களை அதிகளவில் சேர்வதன் மூலமாகவும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
* உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு இல்லாமையும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.
* சிறுநீரக நோய்,தூக்கத்தில் மூச்சு திணறல், சிறுநீரக வாஸ்குலர் நோய், புகையிலை போன்ற சில மருந்துகளும் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்:
* பெண்கள் மற்றும் சில ஆண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டால் மூக்கில் இரத்த கசிவு ஏற்படும்.
* இதயத்துடிப்பு மற்றும் தலைவலி ஆகியவை உண்டாகும்.
* பக்கவாதம் ஏற்படும்.
* சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக தொற்று நோய்கள் உருவாகும்.
* மாரடைப்பு மற்றும் கண் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
* புறத்தமனி நோய் மற்றும் வாஸ்குலர் டிமென்சியா போன்ற நோய்கள் ஏற்படும்.
* கர்ப்ப காலங்களில் சிக்கல்கள் உண்டாகும்.
* இரத்தத்தில் ஏற்படும் சில வகை மாற்றங்களால் லேசான தலை சுற்றுதல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஒரு சில நேரங்களில் ஏற்படக்கூடும். இந்த தருணத்தில் இரத்த அழுத்த நிலையை சோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
* தூக்கமின்மை – இரத்த அழுத்தமான நமது இயல்பு நிலையை தொந்தரவு செய்யக்கூடிய ஒரு வேலையை ஏற்படுத்தும். இது ஒருவரின் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி இனிமையான தூக்க நிலையை கெடுத்து விடும்.
* முகம் சிவப்படைதல் – ஒருவரின் இரத்த அழுத்தம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும் பொழுது முகத்தில் தோள்கள் அனைத்தும் சிறந்த காணப்படும். அதிக இரத்த அழுத்தம் காரணமாக முகத்தில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைவதன் காரணமாக இந்த அறிகுறிகள் தோன்றும்.
உயர் இரத்த அழுத்தத்திற்கு நீங்கள் முறையாக சிகிச்சை பெறவில்லை என்றால் அதன் விளைவுகள் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது.
உயர் இரத்த அழுத்தம் குணமாக:
* தற்போது இருக்கும் சூழ்நிலைகளில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க ஓடுதல், நடைபயிற்சி மேற்கொள்ளுதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
* நம் உடல் தசைகளை வலிமைப்படுத்த உதவி செய்யும் வால் ஸ்க்வாட்ஸ், பிளாங்க் போன்ற பயிற்சிகளின் மூலமாகவும் இரத்த அழுத்தத்தை மிக எளிதில் குறைக்கலாம்.
குறைந்த இரத்த அழுத்தம் அறிகுறிகள் || low pressure symptoms in tamil:
High Blood Pressure Symptoms in Tamil:- குறைந்த இரத்த அழுத்தத்தினால் சுயநினைவு இழப்பு,தோல் ஈரமாக காணப்படுதல், அடிக்கடி படபடப்பு ஏற்படுதல்,முறையற்ற சுவாச முறை உண்டாகுதல் போன்ற அறிவுரைகளில் ஏதேனும் ஒரு அறிகுறிகள் ஏற்பட்டால் கூட நீங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
மனிதனின் சராசரி இரத்த அழுத்தம்:
ஒரு மனிதனுக்கு அதிகபட்சமாக இரத்த அழுத்தம் 130-க்கும் மேல் இருந்தால் அவர்கள் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று அர்த்தம்.சாதாரணமாக ஒரு மனிதனுக்கு 120-ஆக இருக்க வேண்டும்.
இரத்த அழுத்தம் குறைய மூலிகைகள்:
இலவங்கப்பட்டை இரத்த அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவி செய்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உங்களது அன்றாட உணவில் பட்டையை சேர்ப்பது மிகவும் நல்லது.
உயர் இரத்த அழுத்தம் குறைய உணவு:
பிரஷர் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்?
1. பூண்டு
2. வாழைப்பழங்கள்
3.கீரைகள்
4.முழு தானியங்கள்
5.கொழுப்பு மீன்
6.சர்க்கரை இல்லாத தயிர்
7.பெர்ரி
8. பீட்
9.இனிப்பு உருளைக்கிழங்கு
10.தக்காளி
11.அவகேடோ
12.வெள்ளரி
13.கிரீன் டீ
14.பீன்ஸ்
15.ஆலிவ் எண்ணெய்
இரத்த அழுத்தம் அளவுகள்:
High Blood Pressure Symptoms in Tamil:- ஓய்வு நிலையில் இதய சுருங்கியக்கம் நிலையில் இரத்த அழுத்தம் 100-140 mmHg மற்றும் இதய விரிவு இயக்க நிலையில் 60-90 mmHg என்ற நிலைக்குள் இரத்த அழுத்தம் இருக்க வேண்டும்.
தொடர்ந்து இரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்குள் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.இதனால், மருத்துவமனைகளில் உடனடியாக இதனை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மருத்துவ குறிப்பு:
உயர் இரத்த அழுத்தம் குறைய என்ன செய்ய வேண்டும்?
தற்போது இருக்கும் சூழ்நிலைகளில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க ஓடுதல், நடைபயிற்சி மேற்கொள்ளுதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நம் உடல் தசைகளை வலிமைப்படுத்த உதவி செய்யும் வால் ஸ்க்வாட்ஸ், பிளாங்க் போன்ற பயிற்சிகளின் மூலமாகவும் இரத்த அழுத்தத்தை மிக எளிதில் குறைக்கலாம்.
BP அதிகமானால் என்ன ஆகும்?
BP அதிகமானால் மாரடைப்பு,பக்கவாதம், பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்பட நேரிடும்.
குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?
High Blood Pressure Symptoms in Tamil:- இரத்த அழுத்த அளவு குறைவதற்கு மரபணு, கர்ப்பம் அல்லது நீரிழப்பு போன்றவை காரணமாக இருக்கலாம். குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டால் அடிப்படை காரணங்களை தெரிந்து கொள்வதற்காக உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
Read Also:- பெண்கள் உடல் எடை குறைக்க