ADVERTISEMENT
இனிமேல் வாரத்தில் 5-நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்குமா?

இனிமேல் அனைத்து சனிக்கிழமையும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை – இனிமேல் வாரத்தில் 5-நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்குமா? || அரசின் திடீர் முடிவு? என்ன காரணம்?

இனிமேல் அனைத்து சனிக்கிழமையும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை – இனிமேல் வாரத்தில் 5-நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்குமா? || அரசின் திடீர் முடிவு? என்ன காரணம்?

இனிமேல் வாரத்தில் 5-நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்குமா?

இனிமேல் வாரத்தில் 5-நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்குமா?:- தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் வாரத்தில் கட்டாயம் 6-நாட்கள் செயல்பட்டு வருகிறது. இதில், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாதத்தில் இருக்கும் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

5-நாட்கள் வேலைக்கு ஒப்புதல்:

இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் சங்கத்தினர் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் வங்கி வேலை நாட்கள் வாரத்தில் 5-நாட்களாக மாற்ற வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இதனை ஏற்றுக் கொண்ட இந்திய வங்கிகள் சங்கம் இது தொடர்பாக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரசு ஒப்புதல் தரும் பட்சத்தில் வங்கிகள் இனிமேல் வாரத்தில் 5-நாட்கள் மட்டுமே செயல்படும். இதே சமயத்தில் வங்கி ஊழியர்களின் பணி நேரம் கூடுதலாக 40-நிமிடங்கள் தினசரி நீடிக்கப்பட உள்ளது. அதாவது, காலை 9:30 மணி முதல் மாலை 5.45 மணி வரை வங்கியில் கட்டாயம் வேலை செய்ய வேண்டும்.

பெண் ஊழியர்களுக்கு சிக் லீவ்:

வங்கியில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழை வழங்காமல் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சிக்(sick leave)லீவ் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஒரு பெண் ஊழியர் ஓய்வு பெற்றாலோ அல்லது பணியில் இருக்கும் போது இறந்தாலோ அவருக்கு இருக்கும் பிரிவிலேஜ் விடுமுறைக்கான தொகை அதிகபட்சமாக 250-நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சம்பள உயர்வுக்கு ஒப்புதல்:

இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடத்திய பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். அதில் குறிப்பாக, வங்கி ஊழியர்களின் சம்பளத்தை ஆண்டு தோறும் 17% உயர்த்துவது குறித்த ஒப்பந்தம் பேசப்பட்டது.

இதன்படி 2024 நவம்பர் 1-ஆம் தேதி முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 8-லட்சம் வங்கி ஊழியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள்.

வேலைக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு:

வாரத்தில் 5-நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் தான் அரசு முடிவு எடுக்கக்கூடும்.

இதனால், அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகள் செயல்படாது என்பது வேலைக்கு செல்லக்கூடிய வங்கி வாடிக்கையாளர்களை பெரிதாக பாதிக்கும். ஏனெனில், வார நாட்களில் வேலைக்கு செல்வோர் வங்கி சார்ந்த பணிகளை சனிக்கிழமை தான் மேற்கொள்வார்கள்.

இதனால், அரசு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இதை பற்றி முழுமையாக முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது பெரும்பாலான வங்கிப் பணிகளை டிஜிட்டல் முறையிலேயே நம்மால் மேற்கொள்ள முடியும் என்றாலும் குறிப்பிட பணிகளுக்காக நாம் வங்கிகளை தேடி செல்ல வேண்டியது அவசியமாக இருக்கிறது. எனவே, அரசு இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

Leave a Reply