துத்தி இலை தீமைகள் || Thuththi Keerai Benifits in Tamil
துத்தி இலை தீமைகள்: “உணவே மருந்து மருந்தே உணவு” என்று நம் முன்னோர்கள் கூறி இயற்கையில் கிடைக்கும் காய்,கனிகள் மற்றும் மூலிகைச் செடிகளை வைத்து ஏராளமான மருத்துவ குணங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிக மூலிகைகள் காணப்படும் நாடாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
நம் வீட்டின் முன்பு சாதாரணமாக ஒரு செடி முளைத்து இருந்தாலும் அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது இன்று யாருக்கும் தெரிவதில்லை. அப்படிப்பட்ட செடிகளில் ஒரு அற்புதமான மூலிகை செடி தான் இந்த துத்தி மூலிகை செடியாகும். இந்த துத்தி மூலிகை பயன்படுத்தி உடம்பில் ஏற்படும் ஏராளமான பிரச்சனைகளை இயற்கையாகவே நாம் சரி செய்யலாம். அதைப்பற்றி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துத்தி இலை பயன்கள்:
1) தோல் வியாதிகளுக்கு:
உடலை பாதுகாக்கும் முக்கிய பணியை செய்வதுதான் தோல் இந்த தோளில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. குறிப்பாக சொரி சிரங்கு, படர்தாமரை, ஸ்கின் அலர்ஜி, தோல் அரிப்பு போன்ற ஏராளமான நோய்கள் தோளில் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் பாக்டீரியாக்களும் நுண்ணீயிரிகளும் தான்.
துத்தி விதைகளை நன்றாக பொடி செய்து 10-கிராம் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். 120-மில்லி பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடம்பில் ஏற்படும் கருமை, தோல் வியாதி போன்ற அனைத்து வியாதிகளும் நீங்கும்.
2) பற்கள் ஈறுகள் பலமாக:
துத்தி இலை தீமைகள்: சிலருக்கு வைட்டமின் சத்து குறைபாடல் ஈறுகளில் இரத்த கசிவு, வீக்கம், பல்வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட துத்தி இலைகளை சுத்தம் செய்துவிட்டு நன்றாக நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
அந்த மிதமான வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும்.
3) முகப்பருக்கள் நீங்குவதற்கு:
எண்ணெய் கலந்த பொருட்களை அதிக அளவு நாம் சாப்பிடும் பொழுது உடம்பில் கொழுப்புகள் சேர்ந்து மலச்சிக்கல் மற்றும் முகத்தில் பருவுகள் அதிக அளவில் ஏற்படுகிறது.
முகப்பருவுகள் ஏற்படுவதால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு முகம் பார்க்க அசிங்கமாக தெரிகிறது. இதற்கு துத்தி செடியின் வேரின் மேல்பட்டையை நன்றாக உரித்து அதனை அரைத்து நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி முகப்பருக்கள் இருக்கும் இடத்தின் மீது தடவி வந்தால் பருவுகள் அனைத்தும் கொட்டிவிடும்.
4) துத்தி இலை ஆண்மை || ஆண்மை குறைபாடு நீங்க:
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற சில காரணங்களால் ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது. பல ஆண்களுக்கு விந்து நீர்ந்து போய் உயிரணுக்கள் குறைந்து குறைந்த பாக்கியம் ஏற்படாமல் இருக்கிறது.
இதுபோன்று பிரச்சனை உள்ள ஆண்கள் துத்திப் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து பசும்பாலில் போட்டு மிதமான சூட்டில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடம்பில் வெப்பம் தணிந்து தாது விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அடர்த்தியாகும்.
5) நீர்க்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கு:
துத்தி இலை தீமைகள்: தற்போது இருக்கும் கோடை வெயிலில் தாக்கத்தினால் சிலருக்கு வயிற்று கடுப்பு மற்றும் நீர் கடுப்பு அதிக அளவு ஏற்படுகிறது. இதற்கு காரணம் உடம்பில் சரியான அளவு நீர்த்தத்து இல்லாததுதான்.
நீர்க்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள் துத்தி விதைகளை 10-கிராம் அளவில் ஊறவைத்து சிறிது கற்கண்டு சேர்த்து மாலையில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட்டு வந்தால் இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
6) மூலநோய் குணமாக || மூல நோய்க்கு துத்தி இலை எப்படி பயன்படுத்துவது:
மூல நோயினால் ஏற்படும் துன்பத்தை மற்றவர்கள் அதை அனுபவிக்கும் போது தான் உணர்ந்து கொள்ள முடியும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாக துத்தி பயன்படுகிறது. துத்தி இலைகளை நிழலில் காயவைத்து அதனை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த பொடியை காலை, மாலை என இருவேளை ஒரு டீஸ்பூன் தூளை சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம், உள்மூலம், மூல புண்கள், மூலக்கடுப்பு போன்ற மூல சம்மந்தமான அனைத்து நோய்களும் நீங்கிவிடும். நோய் முழுமையாக குணமடைய சில நாட்கள் இதை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
7) அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு சரியாக:
துத்தி இலை தீமைகள்: நாம் சாப்பிடும் உணவுகள் சில நேரத்தில் நன்றாக செரிமானம் ஆகாமல் காணப்படுகிறது. ஆனால், இது முழுமையாக இல்லாமல் ஒரு சில நேரத்தில் உடலுக்கு ஒத்துக்காத சில உணவுகளை அதிகம் நாம் உண்ணும் பொழுது அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கை ஏற்படுகிறது.
இத்தகைய பிரச்சினைக்கு துத்தி இலைகளை நன்றாக சாறு செய்து அதற்கு சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
8.சிறுநீர் பிரிவதற்கு:
நம் உடல் இயங்வதற்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதுபோன்று தான் முக்கியமான உறுப்புகளில் ஒன்று இரண்டு சிறுநீரகங்களும் சரியான முறையில் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளுக்கு சரியான முறையில் சிறுநீர் கழிப்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
ஒரு சிலர் தண்ணீர் குறைவாக குடிப்பதாலும், அதீத உடல் வெப்பத்தாலும் சிறுநீர் கழிப்பதில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். சரியாக சிறுநீர் கழிக்காமல் இருந்தால் எதிர்காலங்களில் சிறுநீரக நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, சிறுநீரில் கல் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு, துத்தி இலையை ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக பிரியும். சிறுநீரக நோய் போன்ற எந்த நோய்களும் வராது.
துத்தி இலை பொடி எப்படி சாப்பிடுவது:
துத்தி இலைகளை பறித்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக தூய தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும். அதனோடு நான்கு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக மை போல அரைத்துக் கொண்டு மோரில் கலந்து தொடர்ந்து 4-நாட்கள் குடித்தால் 9-வகையான மூலமும் குணமடையும்.
துத்தி இலையை பச்சையாக சாப்பிடலாமா:
பொதுவாக துத்தி இலைகளை தமிழகத்தில் அடிக்கடி சமைத்து அல்லது பச்சையாக சாப்பிடும் பழக்கம் உண்டு. துத்தி இலையின் ஒவ்வொரு பாகத்திலும் மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகள் உள்ளது.
துத்தி இலை சாறு:
துத்தி இலை தீமைகள்: துத்தி இலை சாரினை கசாயம் போல் வைத்து காய்ச்சலுக்கு குடித்தால் மிகவும் நல்லது. ரத்த வாந்தி போன்ற பிரச்சனைகள் இருக்கும் நபர்கள் துத்தி இலை சாறு மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடும் போது ரத்த வாந்தி போன்ற பிரச்சனைகள் குணமடையும்.
நீண்ட நாட்கள் ஆறாமல் புண்கள் இருந்தால் துத்தி இலைகளை நன்றாக நசுக்கி அதனுடன் மஞ்சள் மற்றும் புளியுடன் கலந்து போட வேண்டும்.
துத்தி இலை விளக்கெண்ணெய்:
மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அதன் மீது வைத்து கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணையில் நன்றாக வதக்கி ஒற்றடம் கொடுத்து அதே சூட்டில் வைத்து கட்ட வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் பருப்புடன் துத்தி இலைகளை கலந்து சமையல் செய்து சாப்பிடுவது மூலம் வீட்டு வைத்தியம் முறையாகும்.
துத்தி இலை சாப்பிடும் முறை || துத்தி இலை தீமைகள் pdf:
துத்தி இலை தீமைகள்: துத்தி இலைகளை நன்றாக சுத்தம் செய்துவிட்டு வெந்நீரில் கொதிக்க வைத்து கசாயம் போல் தினமும் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமடையும்.சிறுநீரக கல்,சிறுநீர எரிச்சல், சிறுநீர் பிரிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகும்.
துத்தி இலைகளை நன்றாக பொடி செய்து பாசிப்பருப்பு, வெங்காயம், வரமிளகாய் கலந்து சாம்பார் செய்து நெய்யில் வதக்கி சாதத்துடன் சாப்பிட வேண்டும்.
மருத்துவ குறிப்பு || துத்தியின் மருத்துவ குணங்கள்:
துத்தி இலையின் பயன் என்ன?
சிறுநீர் தொடர்பான தொற்று நோய்கள், சிறுநீர் பாதையை ஒழுங்கு செய்து சிறுநீர் நன்றாக பிரிவதற்கு துத்தி இலையின் சாறுகள் பயன்படுகிறது. காய்ச்சல் ஏற்படும் தருணத்தில் துத்தி இலை சார்களை கசாயம் போல் வைத்து குளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இரத்த வாந்தி போன்ற பிரச்சனை இருக்கும் நபர்கள் சர்க்கரையுடன் துத்தி இலை சாற்றை கலந்து குடித்தால் இரத்த வாந்தி குணமடையும்.
துத்தி இலை எப்படி சாப்பிட வேண்டும்? || துத்தி இலை சாப்பிடும் முறை:
துத்தி இலை தீமைகள்: நரம்புகளை அகற்றிய துத்தி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை கரைத்த மாவுடன் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம். ஆனால், தோசையாக சுட்டு சாப்பிடும் போது அதன் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
துத்தி இலை தோசையை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமானது. இது போன்ற சாப்பிட்டு வரும் தருணத்தில் மூலநோய் போன்ற நோய்கள் குணமடையும்.
Read Also:- மூக்கிரட்டை கீரையின் தீமைகள்