ADVERTISEMENT
The problem is that apps like Google pay, Phone pay, Paytm are being used more

Google pay, Phone pay, Paytm போன்ற செயலிகள் அதிகளவில் பயன்படுவதில் சிக்கல் || புதிய திட்டத்துடன் களமிறங்கும் ஜியோ நிறுவனம் – The problem is that apps like Google pay  Phone pay Paytm are being used more

Google pay, Phone pay, Paytm போன்ற செயலிகள் அதிகளவில் பயன்படுவதில் சிக்கல் || புதிய திட்டத்துடன் களமிறங்கும் ஜியோ நிறுவனம்The problem is that apps like Google pay, Phone pay, Paytm are being used more

The problem is that apps like Google pay Phone pay Paytm are being used more:- இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை மாற்றம்‌ மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, UPI எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தாலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனை, உபயோகப்படுத்தி ஜியோ நிறுவனம் தற்போது UPI சேவையில் கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அதிகமாகும் UPI பணப்பரிமாற்று முறை:

The problem is that apps like Google pay  Phone pay Paytm are being used more:-  இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்யும் முறை பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கொரோன காலகட்டத்தில் UPI ஐடியின் செயல்பாடுகள் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலாக அதிக அளவு பணம் பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

40-கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 6-கோடிக்கு அதிகமான வணிகர்களும் அதிக அளவு UPI முறையை பயன்படுத்துகின்றனர். மொபைல் போன்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதினால் UPl ஐடிகளில் பணம் செலுத்துவது மிகவும் எளிமையாக உள்ளது.

ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்:

தற்போது இருக்கும் காலகட்டங்களில் இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தும் செயலிகளாக Google pay, phone pay, Paytm போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய திட்டத்துடன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமும் இந்த துறையில் கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Paytm-ல் எப்படி சவுண்ட் பாக்ஸ் இருப்பது போல, ஜியோ நிறுவனமும் ஜியோ சவுண்ட் பாக்சை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறிப்பாக பெட்டிக்கடை போன்ற சிறிய கடைகளை இலக்காக கொண்டு அதிக அளவு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது jio pay-சவுண்ட் பாக்ஸ் தொழில்நுட்பத்தை இணைக்கும் பணிகளை ஜியோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பணிகளில் தீவிரம் காட்டி வரும் ஜியோ நிறுவனம் Google pay, phone pay, Paytm போன்ற நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் புதிய திட்டங்களை களம் இறக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

இந்தியாவைப் பொறுத்தவரை Paytm நிறுவனம் இன்னும் சில நாட்களில் முடக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் களமிறங்குவதால் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் மிகவும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

பெரும்பாலும், சிறு வணிகர்கள் தங்களுடைய கடைகளில் Paytm சவுண்ட் பாக்சை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். Paytm நிறுவனம் வளர்ச்சி அடைய இந்த சவுண்ட் பாக்ஸ் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால், தற்போது Paytm நிறுவனத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த paytm payments bank செயல்பட தற்காலத் தடை ரிசர்வ் வங்கியால் விதிக்கப்பட்டுள்ளது.

என்னதான் paytm UPI ஐடி செயலி தொடர்ந்து செயல்பட்டாலும் ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் தடையின் காரணமாக மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் குழப்பம் அடைந்து வேறு சேவைகளுக்கு தங்களுடைய சேமிப்பு கணக்கை மாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் அதிக வளர்ச்சி அடைந்ததை பார்த்து ஜியோ நிறுவனமும் அதில் தீவிரமான கவனத்தை செலுத்தி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

Leave a Reply