ADVERTISEMENT
The CSK player who came into form in action at the time of the start of IPL 2024

ஐ.பி.எல் 2024 தொடங்கும் நேரத்தில் அதிரடியாக பார்முக்கு வந்த சி.எஸ்.கே அணியின் வீரர் – The CSK player who came into form in action at the time of the start of IPL 2024

ஐ.பி.எல் 2024 தொடங்கும் நேரத்தில் அதிரடியாக பார்முக்கு வந்த சி.எஸ்.கே அணியின் வீரர் || மிகுந்த மகிழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் – The CSK player who came into form in action at the time of the start of IPL 2024

The CSK player who came into form in action at the time of the start of IPL 2024

 The CSK player who came into form in action at the time of the start of IPL 2024:- கடந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக சிறந்த பேட்டிங் திறமையை கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்திய அஜின்கயா ரகானே அதன் பிறகு எந்த ஒரு இந்திய தொடர்களிலும் எடுக்கப்படாமல் பார்மவுட் நிலையில் இருந்தார்.

இதனால், சென்னை ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இப்போது அவர்களின் வருத்தத்தை போக்கும் விதமாக இன்னும் 10-நாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்கும் நிலையில் இருக்கும் போது மீண்டும் அஜின்கயா ரகானே ஃபார்முக்கு வந்திருப்பது சி.எஸ்.கே ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ipl 2024 csk trending news:

The CSK player who came into form in action at the time of the start of IPL 2024

ரஞ்சி டிராபி தொடரில் இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் விளையாடி கொண்டுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224-ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதன் பிறகு களம் இறங்கிய விதர்பா அணி 105-ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகியது. இதனால், இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணி 119-ரன்கள் முன்னிலை என்ற நிலையில் களம் இறங்கியது.

மும்பை அணி இரண்டாவது நாள் ஆட்டம் நேரம் முடிவில் வெறும் இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து 142-ரன்கள் குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய மும்பை அணியின் கேப்டன் அஜின்கையா ரகானே அரை சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை இரண்டாவது நாளில் 58-ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

ADVERTISEMENT

இதன் மூலம் தனது பேட்டிங் ஃபார்மை மீண்டும் மீட்டெடுத்துள்ளார் ரகனே. அதுவும் இன்னும் சரியாக ஐ.பி.எல் தொடருக்கு 10-நாட்கள் இருக்கும் நிலையில் ரகானே ஃபார்முக்கு வந்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால், கடந்த சீசனில் சி.எஸ்.கே அணிக்காக நம்பர் 3-வது இடத்தில் களம் இறங்கிய ரகானே அதிரடியாக அட்டகாசமான இன்னிங்ஸை விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதிலும், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக மும்பை மண்ணில் அதிரடியாக ஆடிய ஆட்டம் சி.எஸ்.கே அணியின் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒரு தருணம்.

2024 ipl csk playing XI squad:

தற்போது நடக்கும் ரஞ்சி தொடரில் 6-போட்டிகளில் விளையாடிய அஜிங்கயா ரகானே வெறும் 115-ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், இறுதிப் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் அரை சேதம் அடித்து கேப்டன் நாக் ஆடியுள்ளார்.

எப்போதும் பயிற்சிக்கு முதல் வீரராக வரும் ரகானே ஒரு நாள் கூட பயிற்சிக்கு வராமல் இருந்ததில்லை. இது குறித்து ரகானே பேசும்போது கிரிக்கெட் வீரர்கள் ஃபார்முக்கு வருவது எப்படி ஒரு இயல்பான செயலோ, அதுபோல்தான் ஃபார்மவுட் ஆவதும் இயல்பு.

இதனால், வீரர்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. நாம் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டாலே நாம் பார்மிற்கு வந்துவிடலாம் என்று கூறினார். இந்த முறை சி.எஸ்.கே அணிக்காக என்னுடைய சிறந்த ஆட்டத்தை கண்டிப்பாக வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply