ADVERTISEMENT

தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-வகுப்பு வரை பொது தேர்வு எப்போது? || Tamilnadu 1 to 9-th Annual Exam 2024 Update

Tamilnadu 1 to 9-th Annual Exam 2024 Update

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வு போன்ற தேர்வுகளை விரைவாக முடிக்க தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே, 11-மற்றும் 12-ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதுபோன்று, மார்ச் 26-ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை எப்போது தேர்வு தொடங்கும், எப்போது முடியும் என்ற அறிக்கையும் தமிழக பள்ளி கல்விதுறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வாக்குப்பதிவிற்கான பள்ளி மற்றும் கல்லூரிகளை பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39-தொகுதிகளிலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே நேரத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற இருப்பதினால் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏப்ரல் 2-வது வாரமே முதல் வாக்குச்சாவடி அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள முழு ஆண்டு தேர்வை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழலில் தற்போது அனைத்து பள்ளிகளும் உள்ளது.

இதனை குறித்து பள்ளிகளில் விசாரணை நடத்திய நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடித்தால் சிறந்தது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply