You are currently viewing Tamil Nadu History in Tamil – தமிழ்நாடு உருவான வரலாறு

Tamil Nadu History in Tamil – தமிழ்நாடு உருவான வரலாறு

தமிழ்நாட்டின் சிறப்புகள் || Tamilnadu history in tamil

Tamil Nadu History in Tamil
Tamil Nadu History in Tamil

Tamil Nadu History in Tamil:- தமிழ்நாடு வரலாறு என்பது ஆசிய கண்டத்தில் இந்திய நாட்டில் தமிழ்நாடு என்னும் மாநிலம் உருவான கதை ஆகும். சொல்லின் பொருள் மக்கள் வாழும் நிலமாகும். மூவேந்தர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் பல பகுதிகள் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என பிரிக்கப்பட்டிருந்தது. பண்டைய தமிழர்களின் நாகரிகமும் வாழ்க்கை வரலாறு மிகவும் பழமையானவையாகும். தமிழ்நாட்டின் வரலாறு கிட்டத்தட்ட “6000-ஆண்டுகள்” முற்பட்டது. பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு சங்க இலக்கியங்களும், ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுகளும், தொல்லியல் ஆய்வுகளும் நமக்கு பெரிதும் உதவிக்கின்றது.

பண்டைய தமிழக வரலாறு || Tamil Nadu History in Tamil pdf

ஐவகை நிலங்கள்:

Tamil Nadu History in Tamil:- தமிழக நிலப்பகுதியை பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என ஐந்து வகையாக பிரித்து வாழ்ந்தனர். இந்த நிலங்களில் மாறுபடும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அங்கங்கு வாழும் மக்கள் பழக்க வழக்கங்கள், உடை, உணவு, பண்பாடு முதலியவற்றில் வேறுபட்டு காணப்பட்டனர்.

குறிஞ்சி நில மக்கள்:

Tamil Nadu History in Tamil:- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். குறிஞ்சி நிலம் என்பது ஓங்கி இருந்த மலைப்பகுதி, மலையை விட சற்று உயரம் குறைந்த பகுதி ஆகும். இங்கு வாழும் மக்கள் மலைப்பகுதியில் இருப்பதால் விவசாயம் செய்ய போதுமான சூழ்நிலைகள் கிடையாது. இதனால் காய், கனி, கிழங்கு, தேன் மற்றும் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்தனர். இவையே, இவர்களின் முக்கிய உணவுப் பொருட்களாக இருந்தது. இலைகளையும், தலைகளையும், மரபட்டைகளையும் உடைகளாக அணிந்து கொண்டு வாழ்ந்தனர்.

முல்லை நில மக்கள்:

Tamil Nadu History in Tamil:- காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். இங்கு வாழும் மக்கள் ஆடு, மாடுகளை மேய்த்து நீர் வளம் உள்ள சில இடங்களில் சாமை, வரகு போன்ற பயிர்களை பயிரிட்டு உணவு உண்டு வாழ்ந்தனர். ஆடு, மாடுகளில் கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய், மோர் ஆகியவற்றை பக்கத்தில் உள்ள மருத நில மக்களுக்கு விற்று அவர்களுக்கு, தேவையான உணவுப்பொருட்கள், ஆடை, அணிகலன்கள் அனைத்தையும் வாங்கி வருவார்கள்.

மருதநில மக்கள்:

Tamil Nadu History in Tamil:- வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நில பகுதி ஆகும். இந்த நிலத்தில் நீர் வளம் அதிகமாக இருப்பதால் இங்கு வாழும் மக்கள் இருக்கும் இடங்களை பயன்படுத்தி அதில் உணவுப் பொருட்கள் தரும் பயிர்களை பயிரிட்டு பயிர்களை பிறருக்கு பண்டமாற்றும் முறையில் வழங்கி வளம் பெறுகின்றனர். குறிப்பாக பருத்தியை பயிரிட்டு நெசவு நெய்யவும், கைத்தொழில் கற்று பழகவும் பெரிதும் பயனுள்ளதாக பயிரிட்டு வந்தனர். மருதநில மக்கள் இசைக்கலை, நடன கலை, ஓவியக்கலை முதலிய கலைகளில் சிறப்பாக திகழ்ந்தனர். இதனால் மருத நில மக்கள் நாகரிகத்தீலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர்.

நெய்தல் நில மக்கள்:

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம் ஆகும். இவர்களின் தொழில் மீன் பிடித்தல், முத்து குளித்தல் சங்கு எடுத்தல் போன்றவை ஆகும். இவர்கள் தங்கள் பொருள்களை பக்கத்தில் உள்ள மருத நில மக்களுக்கு விற்று தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஆடைகளை பெற்று வருகின்றனர்.

பாலை நில மக்கள்:

மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். இங்கு முழுமையாக வறட்சி நிலை காணப்படுவதால் இவர்களால் பயிரிட முடியாது. இதனால் வழிப்பறி செய்தும் பிறர் நிலங்களில் களவு செய்தும் பொழுதை போக்கினர். மக்களை கள்வர் நிலைமைக்கு தள்ளுவது இந்த பாலை நிலம் ஆகும்.

நிலங்கள் உருவான வரலாறு:

பண்டைய தமிழகத்தில் கடற்கரையில் உருவாகும் நகரங்கள் “பட்டினம்” என பெயர் பெற்றிருந்தது. எடுத்துக்காட்டாக : காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் போன்றவை இதற்கு சான்றுகள் ஆகும். சிற்றூர்கள் “பாக்கம்” என அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக : பட்டினம் பாக்கம், கோடம்பாக்கம், மீனம்பாக்கம் நுங்கம்பாக்கம், சேப்பாக்கம்.

Tamil Nadu History in Tamil:- பண்டைய சேர நாடு என்பது இன்றைய கேரளா பகுதிகளும், தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகள் ஒன்று சேர்ந்தது ஆகும். சேலம், கோவை பகுதிகள் “கொங்குநாடு” என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் காவிரி, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி போன்ற ஆறுகள் பாய்கின்றன. நெய்தல் நிலத்தில் அமைந்த பகுதிகள் “குப்பம்” என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக : நொச்சிக் குப்பம், மஞ்சக் குப்பம், மந்தார குப்பம்.

பண்டைய கால மக்களின் பழக்க வழக்கங்கள் :

• பண்டைய கால மக்கள் தீ மூட்ட ‘கற்களை’ பயன்படுத்துவது போன்ற எளிய வழியை கடைபிடித்தனர்.

• நேரத்தையும், காலத்தையும், சூரியன், நிலவு, விண்மீன்கள், கோள்கள், மலர்கள் பூக்கும் வேலை முதலியவற்றை கொண்டு கணக்கிட்டனர்.

• இறந்தவர்களை தாழியில் இட்டு புதைப்பது போன்ற வழக்கங்களை கொண்டிருந்தனர்.

• வீட்டிற்க்கு வந்த விருந்தினர்களை வெளியே வந்து வழி அனுப்புவது போன்ற பழக்கவழக்கங்களை அப்போது இருந்தே கடைபிடித்தனர்.

பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகள்:

  • திணை நில தெய்வ வழிபாடுகள் :

1. குறிஞ்சி – முருகன்.

2. முல்லை – திருமால்.

3. மருதம் – இந்திரன்.

4. நெய்தல் – வருணன்.

5. பாலை – கொற்றவை.

  • இயற்கை வழிபாடு

ஞாயிறு, நிலவு, நெருப்பு.

  • நடுகல் வழிபாடு

போரில் விழும் இறந்த வீரர்களுக்கு வழிபாடு செய்வது தான் நடுக்கல் வழிபாடு.

பண்ணடைய மக்களின் ஆடை, அணிகலன்கள்:

  1. ஆண்கள் – இடையில் ஒரு துணியும், மேலே ஒரு துண்டும், ஒரு சிலர் மேல் சட்டையும் அணிந்தனர். இந்த மேல் சட்டை “கஞ்சுகம்” எனப்பட்டது.
  2. பெண்கள் – பட்டு, பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை அனைவரும் அணிந்தனர். மெல்லிய இலைகளால் நெய்யப்பட்ட ஆடைகள் பாம்பின் சட்டையை போன்றும், புகையை போன்றும், பாலாவி போன்றும் இருந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
  3. துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் கலையையும் பழந்தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர். துணி தைப்பவரை “துன்னக்காரர்” என்று அழைத்தனர்.
  4. சிறுவர்கள் அணிந்த அணிகலன்கள் – “ஐம்படைத்தாலி”.
  5. பெண்கள் அணிந்த அணிகலன்கள் – சிலம்பு, மேகலை, குழை, மோதிரம், கடகம்.

பழங்கால மக்களின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுக்கள்:

• பழங்கால தமிழர்கள் ஏறுதழுவுதல், மற்போரிடல், கோழிச் சண்டை, ஆட்டுக்கிடாய் சண்டை போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றதை சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகிறது.

• யானைச் சண்டையும் புழக்கத்தில் இருந்தது.

• பெண்களின் விளையாட்டுக்கள் – அம்மானை, கழங்காடல், பந்தாடுதல் ஓரையாடுதல், பல்லாங்  குழி.

• நகர்ப்புற மக்கள் இயல், இசை, நாட்டிய, நாடகம் போன்றவற்றை கண்டு பொழுதை போக்கினர்.

• ஏறுதழுவுதல் – ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு முல்லை மற்றும் மருத நிலங்களில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வின் உயிர் மூச்சில் கலந்தது ஆகும்.

• ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தமிழரின் அடையாளமாக ஒரு வீர விளையாட்டாக இன்றளவும் தமிழக மக்களால் போற்றப்படுகிறது.

ஜல்லிக்கட்டு என பெயர் வர காரணம் || ஜல்லிக்கட்டின் சிறப்புகள்:

“சல்லி” என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற புளியங் கொம்பினால் செய்யப்பட்ட வளையத்தை குறிக்கும் பொருள் ஆகும்.

• அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த “சல்லி நாணயங்களை” துணியில் முடிந்து மாற்றி கொம்பில் கட்டுவார்கள்.

• மாட்டை கட்டித்தழுவி வெற்றியடையும் வீரருக்கு பணம் முடிப்பு சொந்தமாகும். இந்த காலத்தில் “சல்லிக்கட்டு” என்னும் பெயர் பேச்சு வழக்கில் “ஜல்லிக்கட்டு” என்று அழைக்கப்படுகிறது.

• ஏறுதழுவுகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் எந்த ஒரு ஆயுதங்களையும் பயன்படுத்தி விளையாடுவது இல்லை.

• ஏறுதழுவுதல் விளையாட்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வார்கள்.

• அன்பும், வீரமும் கலந்து ஒன்று சேர்ந்த விளையாட்டாக “ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு)” என்னும் விளையாட்டு தமிழகத்தில் 2000-ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பழந் தமிழர் உணவு முறைகள்:

• பண்டைய தமிழர்கள் பெரும்பாலும் இயற்கை உணவே அதிகம் உட்கொண்டனர். அதுவே, உடலை பாதுகாக்கும் மருந்தாகவும் இருந்தது.

• அவரவர், வசிக்கும் இடத்திற்கு ஏற்ப உணவு முறை வேறுபட்டது.

• காய்கனி, இறைச்சி வகை போன்ற இருவகை உணவையும் உட்கொண்டு வாழ்ந்தனர்.

• நெற்சோற்றை, நண்டு, மீன் கரியுடனும், வேட்டையடி கொண்டு வரும் மாமிசத்துடன் சேர்த்து உண்டனர்.

• கடுகு, கருவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்கும் பழக்கம் அன்றைய காலகட்டத்திலும் நடைமுறையில் இருந்துள்ளது.

• அப்போது மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய் போன்றவற்றில் ஊறுகாய் போடும் பழக்கமும் இருந்துள்ளது.

• அரிசி, திணை, வரகு, கம்பு, கொல்லு, எள்ளு, சோளம் போன்றவற்றையும் சமைத்து உண்டனர்.

பழந்தமிழரின் தொழில்கள்:

• பழங்காலத்தில் தச்சுத் தொழில் அதிகமாக இருந்தது. தேர், வண்டி, நாவாய்கள், படகுகள், வீடுகளுக்கான தூண்கள், கதவுகள், கட்டில்கள் முதலிய பல பொருட்கள் மரத்தினாலும், பிற பொருள்கள் கொண்டும் செய்யப்பட்டன.

• இரும்பாலும், பொன்னாலும் கருவிகள் நகைகள் போன்றவை செய்யப்பட்டது.

• நெய்தல் நில மக்கள் உப்பு வணிகத்தில் சிறந்தது விளங்கினர். மீன்பிடி தொழில் மிக அதிக அளவில் காணப்பட்டது.

பழந்தமிழரின் தமிழரின் கலைகள் :

• இயல், இசை, நாட்டிய, நாடகம், ஓவியம், சிற்பம் போன்ற ஏராளமான கலைகளும் அவற்றிற்கான இலக்கண நூல்களும் தொன்மை தமிழகத்தில் பரவி கிடந்தது.

• ஐவகை நிலத்திற்கும் தனித்தனியே பண்வகை, யாழ், பறை போன்றவை இருந்தது. பாணன், பாடினி இசைக்கலைஞர்களும் சிறப்பு பெற்று இருந்தார்கள்.

• மண்ணாலும், மரத்தாலும், தங்கத்தாலும் ஆன சிற்பங்களை செதுக்குவதில் வல்லமை பெற்றிருந்தனர்.

• கூத்துக்கலை பண்டைய காலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கலையாக இருந்தது. கூத்தர் விரலியர் போன்ற பல கலைஞர்கள் சிறப்புடன் வாழ்ந்து பொற்காலம்.

• வேத்தியல் கூத்து – மன்னருக்குரிய கூத்து.

• பொதுவியல் கூத்து – மற்றோர்க்குரிய கூத்து.

தமிழகத்தின் இடைக்கால வரலாறு || history of tamilnadu – Tamil Nadu History in Tamil

Tamil Nadu History in Tamil:- தமிழகத்தில் 1 முதல் 4-ஆம் நூற்றாண்டு வரை சோழர்கள் ஆட்சி செய்து வந்தனர். சோழ வம்சத்தின் முதல் மற்றும் முக்கியமான அரசன் “கரிகால சோழன்” ஆவார்.

• கரிகால சோழனின் முயற்சியினால் தான் காவிரி ஆற்றின் குறுக்கே “கல்லணை” என்னும் மிகப்பெரிய அணை கட்டப்பட்டது.

• பண்டைய தமிழக வரலாற்றில் சோழர் பேரரசு பெரும்பாலான பங்கு வைக்கிறது. இதற்கு காரணம், சோழ வம்சத்தின் மன்னர்கள் புதிய புதிய கோயில்களை வித்தியாசமான முறையில் கட்டுவதில் புகழ்பெற்றவர்கள்.

• இவர்களின், கோயில் கட்டளை கலைக்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

• 4-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து சுமார் கிட்டத்தட்ட “400 ஆண்டுகளுக்கு” தமிழ்நாட்டை பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

• பல்லவ மன்னர்களின் மிகவும் பெருமைமிக்க மற்றும் தலைசிறந்த தலைவர்கள் “முதலாம் மகேந்திரவர்மன்” மற்றும் அவரது மகன் “நரசிம்மவர்மன்” ஆகியோர் கொடி கட்டி பறந்தனர்.

• இது போன்று பழங்கால தமிழகம் பல புகழ் பெற்ற பெருமைமிக்க வரலாற்று அடையாளங்களை கொண்டுள்ளது.

தமிழகத்தின் மன்னர் கால வரலாறு

பல்லவ மன்னர்கள் கால வரலாறு – Tamil Nadu History in Tamil:

• பல்லவ மன்னர்களின் மிகவும் பெருமைமிக்க மற்றும் தலைசிறந்த தலைவர்கள் “முதலாம் மகேந்திரவர்மன்” மற்றும் அவரது மகன் “நரசிம்மவர்மன்” ஆகியோர் கொடி கட்டி பறந்தனர்.

• கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி செய்தனர். அதற்கு முன்பு 2-ஆம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்களின் அடையாளம் கூட தமிழகத்தில் தென்படவில்லை.

• சுமார் 550-ஆண்டுகளில் ‘சிம்ம விஷ்ணு’ என்ற அரசன் ஆட்சி காலத்திலேயே பல்லவரின் புகழ் மிகவும் மேலோங்கி இருந்தது.

• சோழர்களை அடிமைப்படுத்தி தமிழகத்தின் தென் பகுதியான “காவிரி ஆறு” போன்ற பல பகுதிகளை பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

• காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு தென்னிந்தியாவின் பல பகுதிகளை முதலாம் நரசிம்ம வருமன் மற்றும் பல்லவ மன்னன் (இரண்டாம் நந்திவர்மன்) போன்ற பல பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

• திராவிட கட்டிடக் கலைகள் பல்லவர்களின் ஆட்சி காலத்தில் மிகவும் புகழ்பெற்று மற்றும் உயரிய நிலையில் இருந்தது. இதற்கு சான்றாக யுனெஸ்கோவினால உலக பாரம்பரிய இடம் எனப்படும் கடற்கரை கோவில் “இரண்டாம் நரசிம்மவர்மன்”அரசனால் கட்டப்பட்டது.

• சீனாவில் உள்ள பௌத்த மதத்தின் மிகப்பெரிய கொள்கையான சென் பிரிவையை நிறுவியவர் “போதிதர்மர்”ஆவார். இவர் ஒரு பல்லவ வம்சத்தின் இளவரசர் என்று பல்வேறு அடையாளங்கள் குறிப்பிடுகின்றன.

• முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சி காலத்தில் ‘இரண்டாம் புலிகேசி’ என்ற பல்லவ பேரரசு மீது படையெடுத்தார். மகேந்திரவர்மனின் மகனாகிய நரசிம்மவர்மன் யாரும் எதிர்பாராத விதமாக சாளுக்கியர் மீது படை எடுத்து அவர்களது கோட்டையை கைப்பற்றி தனது வசம் ஆக்கிக் கொண்டார்.

Tamil Nadu History in Tamil:- சாளுக்கியர் மற்றும் பல்லவர்கள் இடையே இருந்த பகை 750-ஆம் ஆண்டில் சாளுக்கியர்கள் மறையும் வரை 100-ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இருந்தது.

பல்லவர் கால சிற்பக் கலைகள்:

• 7-நூற்றாண்டை சேர்ந்த மாமல்லபுரம் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது.

• முதலாம் நரசிம்மவர்மன் மற்போரில் சிறந்தவன் ஆதலால் “மாமல்லன்” என்பது அவருடைய சிறப்புப் பெயர் ஆகும். இதனால் தான் அந்த பகுதிக்கு “மாமல்லபுரம்” என பெயர் இடப்பட்டது.

• அங்கு ஐந்து ரதங்கள் உள்ளதால் அதற்கு “பஞ்சபாண்டவர்கள் இரதங்கள்” எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

“அர்ச்சுனன் தபசு” என்கிற பாறையின் மீது மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் மிகவும் உயிரோட்டமாக இருப்பது போல் அமைந்துள்ளது. இவை “புடைப்பு சிற்பங்கள்” என்று அழைக்கப்படுகிறது.

• அதுமட்டுமின்றி, அந்த பாறையில் “ஆகாய கங்கை” பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ள தளத்தில் மழை காலங்களில் மழை நீர் பாய்ந்து வருவது உண்மையிலேயே ஆகாய கங்கை ஓடி வருவதைப் போல இருக்கும்.

• பல்லவர் கால சிற்பக் கலைகள் நான்கு வகைப்படும் : 1. குடைவரைக் கோயில்கள், 2. கட்டுமான கோயில்கள், 3. ஒற்றை கல் கோவில்கள், 4. புடைப்பு சிற்பங்கள். இந்த நான்கு வகையான சிற்ப கலைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம் ஆகும்.

பல்லவர் கால ஓவியக்கலைகள்:

• சங்ககாலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்து போக தொடங்கியது.

• இவ்வாறு, மறைந்து அழிந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள் தான்.

• 7-நூற்றாண்டில் தமிழகத்தை ஆட்சி செய்த முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஒரு சிறந்த ஓவியன் ஆவார்.

• கல்வெட்டுகள் இவனை, “சித்திரகாரப்புலி” என புகழ்கின்றன.

“தட்சிண சித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னர் உரை எழுதியுள்ளார்.

பாண்டிய மன்னர் கால வரலாறு :

• தெற்கு பகுதியில் ஆட்சி செய்த களப்பிரர் ஆட்சியை வீழ்த்திய பெருமையுடைய வீரமிக்க பாண்டிய மன்னன் தான் ‘கடுங்கோன்’.

• பாண்டியர்களின் ஆட்சியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் கடுங்கோன் மற்றும் அவரது மகன் மாறவர்மன் அவனி சூளாமணி.

• பாண்டியரின் ஆட்சியை சேரநாடு வரைக்கும் விரிவு படுத்திய பெருமை “சேந்தன்” என்னும் பாண்டிய மன்னனை சேரும்.

• 13-ஆம் நூற்றாண்டில் அப்போது ஆட்சி செய்த பாண்டிய பேரரசு மிகவும் செல்வமிக்க, பெருமைமிக்க பேரரசு என்று “மார்க்கோ போலோ” பாண்டியன் பேரரசைக் குறிப்பிட்டுள்ளார்.

• சில ஆண்டுகள் கழித்து பல்லவர் ஆட்சிக்கு பல்வேறு தடங்கள்களை பாண்டிய பேரரசு ஏற்படுத்தியது.

• காவிரி ஆற்றங்கரையில் நடந்த போரில் முதலாம் வரகுணன் பல்லவர்களை தோற்கடித்து பாண்டியர்களின் ஆற்றலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினான்.

பாண்டிய கால சிற்பங்கள்:

• பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட குகை கோவில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

• இவற்றுக்கு சான்றுகளாக, திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் மற்றும் கோவில்பட்டிக்கு மேற்கே உள்ள ‘கழுகுமலை வெட்டுவான்’ கோவிலில் அமைந்துள்ள சிற்பங்கள் ஆகும்.

சோழர்கால வரலாறு:

• பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் இடையே ஏற்பட்ட சண்டையை பயன்படுத்தி 850-ஆம் ஆண்டு “விசயாலய சோழர்” தஞ்சாவூரை கைபற்றி சோழர் ஆட்சிக்கான தற்கால அடித்தளத்தை ஏற்படுத்தினார்.

• சோழர்களின் ஆதிக்கத்தை அதிகளவில் விரிவு படுத்தியவர் விசயாலய சோழர் மகன் “முதலாம் ஆதித்யா”ஆவார்.

• முதலாம் பராந்தக சோழன் பாண்டியநாடு முழுவதும் சோழப் பேரரசு ஆட்சியை விரிவுபடுத்தினார்.

• ராஜராஜ சோழன் மற்றும் அவரின் மகனாகிய முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக சோழர்கள் ஆசியாவில் கவனிக்கத்தக்க வீரர்களாக மாறினார்.

• குறிப்பாக, தெற்கு பகுதியில் மாலத்தீவுகளில் இருந்து வடக்கில் வங்காளத்தில் உள்ள கங்கை ஆற்றங்கரை பகுதிகள் வரை சோழர்களின் ஆட்சி பரவி கிடந்தது.

• தென்னிந்தியாவின் தீவுகற்ப்பம் மற்றும் இலங்கையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள், மாலத்தீவுகள் ஆகிய பகுதிகள் ராஜராஜ சோழனால் வெற்றி கொண்டு கைப்பற்றப்பட்டது.

சோழர் கால சிற்பங்கள்:

• கற்சிற்பங்கள் அமைக்கும் கலை சோழர் காலத்தில் மிக விரைவாக வளர்ச்சி பெற்றது. இதற்கு சான்றாக, முதலாம் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் காணப்படுகின்ற சிற்பங்கள் ஆகும்.

• முதலாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகம், சிங்கமுக கிணறு அதில் பொறிக்கப்பட்ட உருவங்களும் சான்றுகள் ஆகும்.

• இரண்டாம் இராஜராஜ சோழனால் “தாராசுரம் ஐராவதீசுவரம்” கோவில் கட்டப்பட்டது.

• சோழர் கால இறுதியில் திருவரங்க கோயிலில் அமைக்கப்பட்ட சிற்பங்களில் வெளிப்படும் முகபாவனைகள் சோழர்கால சிற்பக்கலை நுட்பத்திற்கு சிறந்த சான்று ஆகும்.

• சோழர் காலத்தில் தான் மிகுதியான தெப்பத்திருமினியம் உருவாக்கப்பட்டது எனவே சோழர் காலம் “செப்புத் திருமேனிகளின் பொற்காலம்” என அழைக்கப்படுகிறது.

சோழர்கால ஓவியங்கள்:

• சோழர் கால பெருமைமிக்க ஓவியங்களை தஞ்சை பெரிய கோவிலில் காணலாம்.

• அதுமட்டுமின்றி கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலிலும் ஏராளமான ஓவியங்கள் பதிக்கப்பட்டுள்ளது.

விஜயநகர நாயக்கர் காலம்:

• 14-ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானகத்தில் பற்றுதல் காரணமாக இந்துக்கள் இடையே பகை உணர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்துக்கள் ஒன்றாக இணைந்து விஜயநகர பேரரசு என்ற புதிய பேராசை உருவாக்கினார்.

• விஜயநகர பேரரசை உருவாக்கியவர்கள் ஹரிஹரா மற்றும் புக்கா ஆகியோர் ஆவர். புர்காவின் ஆட்சியில் தான் விஜயநகர பேரரசு மிகுந்த செழிப்பையும் தனது வளர்ச்சியை தொடங்கியது.

• மதுரை ஆட்சி செய்த நாயகர்களில் மிகவும் பிரபலமானவர் திருமலை நாயக்கர் ஆவார். கலை மற்றும் கட்டிடக்கலைக்கு பாதுகாப்பு அளித்து மதுரை சுற்றி இருந்த பழைய சின்னங்கள் புதிய கட்டமைப்புகளுக்கு திருமலை நாயக்கர் மறு கட்டமைப்பு செய்தார்.

• 1659-ஆம் ஆண்டு திருமலை நாயக்கர் மறைவிற்குப் பிறகு மதுரை நாயக்கரின் பேரரசு முடிவுக்கு வந்தது.

விஜயநகர மன்னர் கால சிற்பங்கள்:

• விஜயநகர மன்னர் காலத்தில் தான் உயர்ந்த கோபுரங்களும் அவற்றில் கதைகளான சிற்பங்கள் மிகுதியாகவும், தரமானதாகவும் உருவாக்கப்பட்டது.

• தெலுங்கு மற்றும் கன்னட பகுதிகளுடன் அதிக அளவில் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால் அந்நாட்டு சிற்பக்கலையின் தாக்கம் தமிழக சிற்பங்களிலும் ஏற்பட்டது.

• கோவில் மண்டபங்களில் மிகுதியான சிற்பத் துண்களும், இசை கற்றுநூண்கள் வடிவமைக்கப்பட்டது.

• ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்கள், குதிரையின் மீது அமர்ந்த நிலையில் குதிரைகள், முன் கால் தூக்கிய நிலையில் நிற்பது போன்ற காட்சிகள் இவர்கள் கால சிற்பங்களில் இடம்பெற்றுள்ளது.

• தமிழகத்தில் மதுரையில் உள்ள “மீனாட்சி அம்மன்” கோவில் நாயக்கர் மன்னரால் சீர்செய்யப்பட்ட கோவிலாகும்.

ஐரோப்பியர்கள் வருகை:

• இவ்வாறு இந்தியாவில் பல மன்னர்களின் ஆட்சி மாறி மாறி நிலவிக் கொண்டிருக்கும் பொழுது பிரான்சுக்காரர்கள் இந்தியாவிற்குள் நுழைய ஆரம்பித்தார்கள்.

• 1664-ஆம் ஆண்டு இந்தியாவில் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனி வணிகத்திற்காக உருவாக்கப்பட்டது. அதற்காக அவர்கள் ஔரங்கசீப் அரசிடம் பிராச்சு அதிகாரிகள் 1666-ஆம் ஆண்டு அனுமதி பெற்றனர்.

• 1739-ஆம் ஆண்டு காரைக்கால் பகுதியை கைப்பற்றியதன் மூலம் “ஜோசப் ப்ரான்கோஸ் டூப்லெக்ஸ்” பாண்டிச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

• 1740-ஆம் ஆண்டு ஆஸ்திரிய உரிமைக்காக ஐரோப்பியாவில் போர் ஏற்பட தொடங்கியது.

• 1746-ஆம் ஆண்டு ‘லா போர்டோனைஸ்’ தலைமையில் வந்த பிராச்சு படையினர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை போரிட்டு வென்று தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.

• 1748-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்தது.

• 1763-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம்படி கர்நாடகத்தின் நவாப்பாக முகமது அலி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

• 1765-ஆம் ஆண்டு இதன் விளைவாக இந்தியாவில் முதன்முதலாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி – Tamil Nadu History in Tamil:

• 1773-ஆம் ஆண்டு ஆங்கிலே நாடாளுமன்ற சீரமைப்பு சட்டம் (கிழக்கிந்திய கம்பெனி சட்டம்) உருவாக்கப்பட்டது.

• அடுத்த 10-ஆண்டுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி அடைய தொடங்கியது.

• 1766-ஆம் ஆண்டு முதல் 1799-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேய – மைசூர் போர்கள் நடைபெற்றது.

• 1772-ஆம் ஆண்டு முதல் 1818-ஆம் ஆண்டு வரை ஆங்கிலே-மராத்திய போர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளை ஆங்கில கம்பெனி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர பெறும் திருப்புமுனையாக இருந்தது.

• 1755-ஆம் ஆண்டு முதல் 1767 – ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 12 – ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்கள் புலித்தேவனின் மரணத்தால் முடிவுக்கு வந்தது.

• 1799-முதல் 1802-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பாளையக்காரர் போரின்போது கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு 1799-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

• 1858-ஆம் ஆண்டு முதல் பிராத்தானிய அரசு இந்தியாவில் நேரடியாக ஆட்சி செய்வதாக முடிவு செய்தது. ஆரம்ப காலங்களில் அரசாங்கம் தனிமையாக செயல்பட்டது.

• 1876-ஆம் ஆண்டு முதல் 1877 – ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகாணத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது.

• 1878-ஆம் ஆண்டு பெய்த பருவமழையினால் சென்னை மாகாணத்தின் பஞ்சம் முடிவு வந்தது.

• 1880-ஆம் ஆண்டு பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவுகளின் விளைவால் பஞ்ச குழுமம் என்ற குழுமம் அரசாங்கத்தால் நிறுவப்பட்டு பேரழிவுகளுக்கான நிவாரண கொள்கைகள் வகுக்கப்பட்டது. பஞ்ச நிவாரண நிதியாக 1.5-மில்லியன் ரூபாய் அரசாங்கம் ஒதுக்கியது.

• 1892-ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் 1909-ஆம் ஆண்டு மிண்டோ- மார்லி சீர்திருத்தம் போன்ற சட்டங்கள் மதராஸ் மாகாண சட்ட மேலவையை நிறுவுவதற்கு வழி செய்தது.

• 1921-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் தொகுதி தேர்தல் நடைபெற்றது.

இந்தியாவின் சுதந்திர போராட்டம்:

• அப்பொழுது, ஆங்கிலேயர்களின் கொடுமைகளை தாங்க முடியாத இந்தியர்கள் நாடு முழுவதும் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

• இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் கலந்து கொள்ள பல வீரர்கள் தாமாக முன் வந்தனர்.

• 1904-ஆம் ஆண்டு ஈரோடு பக்கத்தில் உள்ள ஒரு குறுகிய கிராமத்தில் பிறந்த “திருப்பூர் குமரன்” சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

• 1910-ஆம் ஆண்டு வாழ்ந்த “சுப்ரமணியம் பாரதியார்” புரட்சிகரமான விடுதலை உணர்வை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் பலவகை பாடல்களையும், கவிதைகளையும் எழுதி பாடியுள்ளார்.

• அந்த காலகட்டத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, வி.வி.எஸ்.ஐயர், அரவிந்தர், பாரதியார் ஆகியோர் மிகுதியான நட்புடன் இருந்தனர்.

• இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம்(INA) என்ற அமைப்பில் தமிழ்நாட்டில் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர்.

• 1935-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் தேர்தல் இந்தியாவில் நடத்தப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

• பள்ளியில் இந்தி மொழியை கட்டாயமாக்குவதில் காங்கிரஸ் அரசு தீவிரமாக இருந்த நிலையில் அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி மற்றும் சி.என்.அண்ணாதுரை அவர்கள் இணைந்து 1938-ஆம் ஆண்டு பெரும் போராட்டத்தை நடத்தினர்.

• இறுதியாக இந்தியர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு இதற்கு மேல் இங்கிருந்து ஒன்று செய்ய இயலாது என்று எண்ணிய ஆங்கிலேயர்கள், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து இந்தியாவை விட்டு முழுமையாக வெளியேறினர்.

தமிழ்நாடு வரலாறு சரித்திரம் || Tamil nadu history in essay

தமிழ்நாடு என பெயர் வர காரணம் || தமிழ்நாட்டின் முதல் பெயர் என்ன ?

• 1947-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு மெதராஸ் மாகாணம் என்பது மெதராஸ் மாநிலம் என மாற்றப்பட்டது.

• 1969-ஆம் ஆண்டு மெதராஸ் என்ற மாநிலம் தமிழர் வாழும் பகுதியாக “தமிழ்நாடு” என்ன பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் யார் ?

1956-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி “சங்கரலிங்கனார்” என்னும் விடுதலைப் போராட்ட வீரர் மெதராஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட சொல்லி உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரு போராளி ஆவார்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன ?

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை-38 ஆகும்.

இந்தியாவின் முதல் பெயர் என்ன ?

Tamil Nadu History in Tamil:- சிந்து நதியை கடந்தால் தான் இந்திய நிலப்பரப்பில் கால் பதிக்க முடியும். ஆனால், சிந்து நதிக்கு அடுத்ததாக மேற்கத்திய நாடுகள் வர்ணிக்க தொடங்க அது படிப்படியாக சிந்து என்பது இந்துஸ்தான் “இந்தியா” என உருமாற்றம் பெற்றது.

நமது மாநிலத்தின் பெயர் என்ன ? || தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது ?

• 1967-ஆம் ஆண்டு தான் மெதராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தான் நமது மாநிலத்தின் பெயர் “தமிழ்நாடு” என்று முழுமையாக மாற்றப்பட்டது.

• தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாக மக்கள் தொகையில் சென்னை முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டம் கல்வி அறிவில் முதலிடம் வகிக்கிறது.

தமிழ் மொழி முதல் முதலில் எங்கு தோன்றியது ? || தமிழ்நாடு வரலாறு புத்தகம்

• உலகின் மிகப் பழமையான நிலப்பகுதி “குமரிக்கண்டம்” அந்நில பகுதி கடல்கோளால் மூழ்கி விட்டது. குமரிக்கண்டத்தில் இருந்து தான் தமிழ் மொழி முதல் முதலில் தோன்றியது.

குறுகிய நிலையை இந்தியா எந்த நாட்டுடன் பகிர்ந்து கொள்கிறது ?

Tamil Nadu History in Tamil:- பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, நேபாளம், மியான்மர், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற  7 – அண்டை நாடுகளுடன் இந்தியா நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியா தனது நீண்ட எல்லையை பங்களாதேஷுடன் 4096-கிலோ மீட்டர் பரப்பளவை பகிர்ந்து கொள்கிறது.

Read Also:- தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்

historytamil

Today i am sharing u.s news

Leave a Reply