ADVERTISEMENT
Suryakumar Yadav withdraws from IPL 2024 series due to injury

ஐபிஎல் 2024 தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுகிறார் சூர்யகுமார் யாதவ் || உடல்நிலை குறித்து தற்போது சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் – Suryakumar Yadav withdraws from IPL 2024 series due to injury

Suryakumar Yadav withdraws from IPL 2024 series due to injury – ஐபிஎல் 2024 தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுகிறார் சூர்யகுமார் யாதவ் || உடல்நிலை குறித்து தற்போது சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

Suryakumar Yadav withdraws from IPL 2024 series due to injury

Suryakumar Yadav withdraws from IPL 2024 series due to injury:- இந்திய கிரிக்கெட் அணியின் Mr.360° என்று அழைக்கப்படும் இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் தான் சூர்யகுமார் யாதவ். இவர் கடந்த மாதம் நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார்.

அப்போது, அந்த போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து நடைபெற்ற எந்த ஒரு தொடரிலும் சூர்ய குமார் யாதவ் பங்கேற்கவில்லை.

இதனை, தொடர்ந்து தான் சூர்ய குமார் யாதவுக்கு “ஸ்போர்ட்ஸ் ஹெரனியா” என்ற ஒரு பிரச்சனை உடலில் ஏற்பட்டது. இதனால், அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும் முழு உடல் தகுதியை இன்னும் பெறவில்லை என்று தான் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், தன்னுடைய உடல் தகுதியை கவனிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறார் சூர்யா குமார் யாதவ்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரும் தூணாக செயல்படுபவர் தான் சூர்யகுமார் யாதவ். தற்போது ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்க இன்னும் இரண்டு வார காலமே உள்ள தருணத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் கலந்து கொண்டு விளையாடுவார என்ற சந்தேகம் ரசிகர்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளிடம் எழுந்துள்ளது.

Read also:- ஐ.பி.எல் 2024 டிக்கெட் ஆன்லைன் விற்பனை மற்றும் கவுன்டர் சேப்பாக்கத்தில் நேரடி டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும்

ADVERTISEMENT

ipl 2024 players trending news:

இவற்றுகெல்லாம் பதில் கூறும் வகையில் சூர்யகுமார் யாதவ் தற்போது ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு விஷயத்தை முதலில் நான் தெளிவு படுத்த வேண்டும்.

என் உடல் தகுதி குறித்து சிலருக்கு அதிகளவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. “ஸ்போர்ட்ஸ் ஹெரனியா” என்ற பிரச்சனைக்கு தான் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதை தவிர என்னுடைய காலிலோ, உடம்பிலோ வேறு எதுவும் பிரச்சனை கிடையாது.

Mumbai Indians ipl squad playing XI:

தற்போது இருக்கும் நிலையில் என்னுடைய உடல் தகுதியை நான் தீவிரமாக பெருமாளவில் கவனித்துக் கொண்டு வருகிறேன். உங்களுடைய பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்.

விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது உங்களை களத்தில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் என்ற விளக்கத்தை ரசிகர்களுக்கும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கும் கூறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார் சூர்யகுமார் யாதவ். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நற்செய்தியாக இருந்தாலும், இன்னும் அவர் 100 சதவீதம் முழு உடற்பகுதியை பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

சூர்யகுமார் யாதவ் உடல் தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் முழுமையாக ஆராய்ந்து அனுமதி அளித்தால் மட்டுமே அவர் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ADVERTISEMENT

ஐ.பி.எல் தொடர் முடிந்த ஓரிரு நாட்களில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில், சூர்ய குமார் யாதவின் பங்கு இந்திய அணிக்காக மிக மிக முக்கியமாகும். இதனால், சூர்ய குமார் யாதவின் உடல் தகுதியில் பி.சி.சி.ஐ அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Read Also:- ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை

Leave a Reply