ஸ்ரீகாளஹஸ்தி கோயில் வரலாறு – Sri kalahasti Temple History In Tamil
காளஹஸ்தி கோவில் சிறப்புகள்:
Sri kalahasti Temple History In Tamil: புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவர் தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழன் மகனும் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற மன்னர்களில் ஒருவர் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் ஆகும். இந்த கோவிலில் சிலந்தி, பாம்பு, யானை, இவை மூன்றும் சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் இக்கோவிலில் (காலஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயரை நாம் கேட்டவுடன் முதலில் நினைவிற்கு வருவது ராகு கேது பரிகார பூஜை செய்யும் தலங்கள்தான் ஞாபகம் வரும். ஆண்கள் பெண்கள் அவர்கள் திருமணங்கள் தடை பெற்று இருக்கும் நபர்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் இங்கு ராகு கேது பரிகார பூஜை செய்ய வருகின்றனர். பஞ்சபூதங்களின் வாழ்விற்காக இந்த திருத்தலம் 500 வருடங்களுக்கும் மேல் கட்டப்பட்ட பழமையான கோவில் என்று கூறுகின்றனர்.
இந்த கோயிலின் வரலாற்றை நாம் கேட்கையில் இப்படியும் ஒரு பக்தி இருக்கும் என்கிற அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. சைவத் தலமான ஸ்ரீ காலகஸ்தியில் சிவபெருமான் காலத்தினால் என்ற பெயரோடு ஞானப் பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.
பல நூறு வருடங்களுக்கு முன் வனத்தில் இருந்த காட்டில் சிவபெருமானே சிலந்தி ஒன்று வந்து வழிபடுமாம். மழையில் நனைந்து கொண்டிருந்த சிவபெருமானே கண்ட அந்த சிலந்தி உமிழ்நீரில் இருந்து உருவாகும் வலையை பின்னி வைத்ததாம். அப்போது அங்க பேந்த கனமழையில் சட்டுனு திடீரென்று இடிஒன்று எடுத்ததில் அந்த சிலந்தி வலை எரிந்து சாம்பலானது. அதைப் பார்த்த சிலந்தி தாங்கி கொள்ள முடியாமல் உடனே இறந்து போனதாம். சிவபெருமான் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய பார்த்து சிலந்திக்கு உடனே முத்தி கொடுத்தாராம்.
ராமேஸ்வரம் ராமநாதன் கோயில் |
சிவபெருமானை நாகம் வழிபடுதல்:
இக்கோயிலில் தினம் நாகம் ஒன்று வந்து சிவன் லிங்கத்தை ஆரத்தழுவி மானிக்கங்களை கட்கி சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபடும். அதன் பின்னர் வரும் யானையை தன் தும்பிகையால் நீரை உறிஞ்சி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும். பூ மலர்களை பறித்து வந்து அர்ச்சனை செய்கின்றன.
Sri kalahasti Temple History In Tamil – சிவன் லிங்கமேல் நாகம் மாணிக்கங்களை கக்கி வைத்திருந்தனர் யானை மலர்களை பறித்து கொண்டு வந்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யும் பொழுது நாகத்தின் மாணிக்கங்கள் எல்லாம் கீழே விழுந்து சிதறி உடைந்து உள்ளன. தினமும் இதுபோல நடந்து கொண்டிருக்க அந்த நாகத்திற்கு சந்தேகம் வந்தன.
யானை தினந்தோறும் இப்படி அர்ச்சனை செய்வதை நாகம் ஒருநாள் பார்த்து விட்டன. பார்த்தவுடன் நாகத்திற்கு யானை மீது பயங்கரமான கோபம் வந்துள்ளது. இதனால் யானையின் தும்பிக்கையில் நாகம் சென்றுவிட்டது யானையின் மூச்சு அடைக்க செய்துள்ளது.
யானையின் தும்பிக்கையில் நுழைந்த பாம்பு யானை சுவாசிக்க முடியாமல் ஒரு பாரின் மீது மோதி கீழே விழுந்து நாகமும் யானையும் இரண்டும் இறந்து போனது. இருவர்கள் பக்தியை மிச்சிய சிவபெருமான் அவர்களுக்கும் முக்தியை கொடுத்தார் என்று புராணத்தில் கூறப்படுகிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வரலாறு |
இந்த கோயிலின் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே யானை இரண்டு தந்தங்களும் இடையில் பாம்பும் பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பதை பார்த்திருக்கலாம்.
அன்றைய காலகட்டத்தில் ஒரு முறை அந்தணர் ஒருவர் சிவபெருமான் லிங்கத்தை பூஜித்து வந்ததாகவும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வேடன் ஒருவன் சிவபெருமானின் மேல் கொண்ட அதீத பக்தியால் பூஜை செய்ய ஆர்வம் ஏற்பட்டதாம். அந்தணர் ஒரு நாள் சிவபெருமானின் கோயிலுக்கு வராத சமயத்தில் இந்த வேடன் ஒருவன் அவன் வேட்டையாடி வைத்திருந்த மான், பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படையல் வைத்து வந்தானாம்.
ஒரு நாள் வேடன் செய்த காரியத்தை பார்த்த அந்தணர் ஐயோ சிவபெருமானே தவறு நடந்து விட்டது என்று அவர் வருந்தினார். அன்றைய இரவில் அந்தணர் கனவில் வந்து தோன்றிய சிவபெருமான் நீங்கள் நாளைக்கு ஒளிந்து இருந்து பாருங்கள் இந்த இறைச்சியை வைப்பது யார் என்று தெரியும் அப்பொழுது அவருடைய பக்தியை பாருங்கள் என்று சொல்லிவிட்டு சிவபெருமான் கனவில் இருந்து மறைந்தாராம்.
சிவபெருமான் கனவில் கூறியபடியே அந்தணர் மறுநாள் வனப்பகுதியில் ஒளிந்திருந்து காத்திருந்தனர். வேடன் அவன் வழக்கம் போல் சிவபெருமானுக்கு மான் பன்றி இறைச்சியை படைத்து வழிபாடுகள் செய்தான். அப்பொழுது சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து வடிந்தது.
இதைப் பார்த்து பதறிப் போன வேடன் அவன் எவ்வளவு முயற்சி செய்தும் சிவலிங்கத்தின் கண்ணீரில் வரும் ரத்தம் நிற்காத காரணத்தினால் சிவன் மீது கொண்ட பக்தியால் தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து சிவலிங்கத்திற்கு வைத்து விட்டான். அதன் பின்னர் சிவலிங்கத்தின் மீது வடியும் ரத்தம் உடனே நின்று விட்டது.
அதன் பின்னர் சிவலிங்கத்தின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருக்கெடுத்து வடிந்தது.
கள்ளழகர் கோவிலின் வரலாறு |
Sri kalahasti Temple History In Tamil
அதைப் பார்த்த வேடன் அதிர்ச்சி அடைந்தான் அதன் பின்னர் வேடன் அவரின் கால் கட்டை விரலால் சிவலிங்கத்தின் கண்களில் வைத்து அவருடைய இரண்டாவது கண்களை தன் வேட்டையாடும் அன்புகளால் அவர் கண்ணையே தோண்டி எடுக்க முயற்சி தான் அப்பொழுது உடனே சிவபெருமான் உடனே காட்சி கொடுத்தார்.
கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… என்றும் மூன்று முறை சிவபெருமான் கூறினாராம். அந்த காட்சியை கண்டு நெகிழ்ந்து போன அந்தணர் வேடன் பக்தியை பார்த்து அவரையே பிரமிக்க வைத்தன. எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் தங்களுடைய கண்ணையே தோன்றி வைத்த வேடனின் பக்தியை பார்த்து அந்தணர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பக்திக்கு மிஞ்சிய ஞானம் இல்லை என்று அந்தனர் உணர்ந்தார். சைவ கடவுளான சிவபெருமான் அவருக்கு இறைச்சியை வைத்து வழிபட்டாலும் கூட தன் தீவிர பக்தரான அந்த வேடன் பக்தியை ஏற்ற காரணத்தினால் பிற்காலத்தில் அந்த வேடனுக்கும் இந்த கோயிலில் இடம் கிடைத்தது. தின்னனார் என்ற வேடனின் பெயர் அவன் சிவபெருமானுக்கு தன்னுடைய கண்ணை வழங்கியதால் அவருக்கு கண்ணப்பர் என்று புகழப்பட்டது. அதனால் கண்ணப்பரையும் இந்த கோயிலில் காண முடியும்.
மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு |
காளஹஸ்தி கோவிலின் சிறப்புகள்:
இந்த கோவிலில் சிறுதுளி அளவிலும் காற்று போகாத கற்பவ கிரகத்தில் வீற்றிருக்கும் இந்த சிவலிங்கத்திற்கு ஏற்படும் தீபம் ஆனது படிப்படியாக மேல் எழும்பி அசந்து ஆடிக் கொண்டே இருக்கும். கோயிலின் உள்ளே காற்றே போகாத இடத்தில் தீபம் மட்டும் அசைந்து ஆடுவதை பார்த்து வியப்பிற்குரியது என்று விஞ்ஞானிகளே வியந்து போயினர்.
ஸ்ரீ காளஹஸ்தி கோயில் பெயர் எப்படி வந்தது:
அகத்தியர் ஒருவர் இந்த கோவில்க்கு வந்து சிவபெருமானே வழிபடு செய்தனர்.இங்க இருக்கும் விநாயகரை வணங்காமல் சென்றதும் விநாயகரை கோபம் மூட்டியது. அதனால் விநாயகர் அருகில் இருக்கும் பொன்முகலி ஆற்றின் நீரை முழுமையாக வற்றி போக செய்துவிட்டார்.
அதனால் மனம் வருந்திய அகத்திய முனிவர் அதன் பின்னர் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தளபுராணம் கூறுகின்றது. பிற் காலத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்த இந்த இடம் ஆழத்தில் சென்றதால் இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த பாதாள விநாயகரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் 20 அடி ஆழத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது.
இக்கோவிலின் பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் மிக தெளிவாக கூறுகின்றது. இங்க வரும் ஏராளமான பக்தர்களுக்கு எத்தனை குறை இருந்தாலும் அவற்றை உடனே நீக்குவதாக நம்பிக்கை உள்ளது .திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் அங்கு இருக்கும் காலஹஸ்தே நாதரை வழிபடாமல் யாரும் வீடு திரும்பவில்லை அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருகாளஹஸ்தி திருக்கோயிலும் ஒன்று என்பதை நாம் எல்லாரும் அறிய வேண்டும்.
ஸ்ரீ காளகஸ்தி கோவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலின் ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அங்கு அமைந்துள்ளன.
பிரார்த்தனைகள்:
Sri kalahasti Temple History In Tamil – ராகு கேது தோஷம் உள்ளவர்கள் திருமணம் நீண்ட காலமாக ஆகாதவர்கள் போன்ற பல பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள்.இக்கோயிலுக்கு வந்து ராகு தோஷம் கேது தோஷம் நீங்கவும் சர்பதோசம் நீங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டனர். இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி தீர்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரியாக பேச முடியாத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
காலஹஸ்தி கோவில் நேர்த்திக்கடன்:
பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி காணிக்கைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காளகஸ்தி கோவிலின் திருவிழாக்கள்:
மாசி திருநாள் திருக்கார்த்திகை வெள்ளிக்கிழமை வரும் ஊஞ்சல் விழா பொங்கல் மஹா சிவராத்திரி 10 நாட்கள் உற்சவம் தெரு பவனி சிவராத்திரி இரவு நந்தி சேவை தரிசிக்க சிறப்பு சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.
காளஹஸ்தி கோவிலின் நடை திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8:30 வரை
செவ்வாய், புதன், வியாழன், இவை மூன்று நாட்களில் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
காளஹஸ்தி கோவிலின் பரிகார நாள்:
இக்கோவிலில் ரூபாய் 500 200 100 போன்ற கட்டணத்தில் பாலபிஷேகம் செய்து ராகுக்கு பரிகாரம் செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 6 மணி வரை பரிகார பூஜைகள் செய்ய பக்தர்கள் கூட்டம் கூடுகின்றது.
தஞ்சாவூர் பெரிய கோவில் வரலாறு |