IPL-2024 ஆர்.சி.பி அணி திடீரென பெயர் மாற்றம் அரசியல்வாதிகளின் மிரட்டலால் அதிரடி முடிவு புது பெயர் என்ன? || RCB Team Name Change
RCB Team Name Change:- அரசியல்வாதிகளின் மிரட்டலால் ஆர்.சி.பி அணி தங்கள் அணியின் பெயரை தற்போது மாற்றி உள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்வது ஆர்.சி.பி அணியின் நீண்ட கால கனவாக இருந்து வருகிறது.
இப்படி இருக்கும் சூழலில் தற்போது அணியின் பெயரை மாற்ற ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் ஆரம்பித்த 16-சீசன்களிலும் தங்களால் முடிந்த வரை கடின உழைப்பை மேற்கொண்டு என்னென்னமோ செய்தும் ஒருமுறை கூட ஐ.பி.எல் கோப்பையை வெல்ல முடியவில்லை.
கிரிஸ் கெயில், ஏபி.டிவில்லியர்ஸ், விராட் கோலி போன்ற அதிரடி நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும் கூட ஒரு பலனும் கிடைக்கவில்லை.
இது போன்ற வீரர்கள் இருந்தும் ஆர்.சி.பி அணியால் ஐபிஎல் கோப்பை வெல்ல முடியாததற்கு முக்கிய காரணம் அந்த அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் என்று கூறும் வகையில் எவரும் கிடையாது.
விராட் கோலி கேப்டனாக இருந்தபோது கேப்டன்சியில் தான் பிரச்சனை என்று சிலர் கருத்தை முன் வைத்தனர். இதனால், விராட் கோலி, டூ பிளஸியிடம் கேப்டன்சி பதவியை ஒப்படைத்தார். இருப்பினும் ஆர்.சி.பி அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அந்த அணியின் பவுலர்களின் சொதப்பல் காரணமாக எதிரணி இந்த ரன்களை ஈசியாக சேஸ் செய்து விடுகின்றனர்.
தற்போது ஆர்சிபில் உள்ள பவுலர்கள்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 16-வது சீசனில் ரிங்கு சிங் கடைசி 5-பந்துகளில், 5-சிக்சர் அடித்து கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். இதற்கு காரணமாக இருந்த யாஷ் தயாளை இந்த முறை 5-கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது ஆர்.சி.பி அணி.
வெளிநாட்டு பாவலர்கள்:
RCB Team Name Change:- என்னதான் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை வாரி வாரி கொடுக்கும் வள்ளலாக திகழும் அல்ஜாரி ஜோசப்பை 11.50 கோடிக்கு இந்த முறை வாங்கி உள்ளது. இதற்கு ஆஸ்திரேலியாவின் வேக பந்துவீச்சாளர் ஹேசில்வுட் வைத்திருந்தால் பலன் கிடைத்திருக்கும். அது போன்று இங்கிலாந்தின் சாம்கரனின் அண்ணனாகிய டாம் கரணை வாங்கி உள்ளது.
காற்று போல் சுழற்றி சுழற்றி ரன்களை வாரி வழங்குவதில் கருணனையே தோற்கடித்து விடும் டாம் கரண் இந்த முறை ஆர்.சி.பி அணியில் விளையாட உள்ளார்.
இதன் காரணமாக இந்த முறையும் ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சு சொதப்பலாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் கருத்தாக கூறப்படுகிறது. ஆகையால், இந்த முறையும் ஆர்.சி.பி அணி கோப்பை வெல்வது மிகவும் கடினம் என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
ஆர்.சி.பி அணியின் புதிய பெயர்:
RCB Team Name Change:- பெங்களூர் என்பது ஆங்கில வார்த்தை பெங்களூரு என அணி பெயரை மாற்ற வேண்டுமென லோக்கல் அரசியல்வாதிகள் கூறிய காரணத்தினால் ஆர்.சி.பி நிர்வாகம் பெயரை மாற்றி உள்ளது.
இந்த நிலையில் ஆர்.சி.பி அணி தங்கள் அணியின் பெயரை “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்” என்பதிலிருந்து “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” என மாற்றம் செய்துள்ளது.
பெயரை மாற்றியாவது இந்த முறையை கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த முறை ஆர்.சி.பி அணி கோப்பையை வெல்லுமா அல்லது மீண்டும் அது கனவாக இருக்குமா என்று…!!!
அனைத்து IPL செய்திகளும் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க