Pongal Wishes In Tamil 2023 || பொங்கல் வாழ்த்துக்கள் 2023
பொங்கல் என்றால் என்ன:
Pongal Wishes In Tamil 2023: உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய கலாச்சாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை பின்பற்றும் வகையில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாடு பகுதிகளில் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகையாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
விவசாயம் மற்றும் கால்நடைகளை பூஜித்தல் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவங்களை எடுத்துரைத்தல் போன்ற விஷயங்களை ஒற்றுமை உணர்வோடு கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும்.
பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம்:
தைப்பொங்கல் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளானது தென்னிந்தியாவில் உள்ள தமிழகத்தில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பொங்கல் முதலில் ஒரு அறுவடை திருவிழாவாகும். இது சூரியன் மற்றும் கால்நடைகளுக்கு விவசாயம் அவர்கள் அளித்த பங்களிப்பிற்காக நன்றி தெரிவிக்கும் விதத்திலும் பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது.
விவசாயிகளின் உழைப்பையும் விளைச்சல் மிகுதியையும் போற்றுகிறது மேலும் விவசாயத்தில் விளைச்சல் தரும் செழுமையைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்து இயற்கைக்கு நன்றி செலுத்துவதும் இந்த பொங்கல் திருநாளில் நடைபெறும்.
பொங்கல் திருநாளில் சடங்குகள் மற்றும் மரபுகள்:
பொங்கல் திருநாள் அன்று பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை தூக்கி எறியும் விதமாக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் உங்களின் முதல் நாளாக இன்று வீடுகள் அனைத்தையும் சுத்தம் செய்து புதிய பூக்களை கொண்டு அலங்கரித்து கொண்டாடுகிறார்கள்.
உலகிலேயே தமிழர்கள் மட்டும்தான் பண்டைய காலத்தில் இருந்து தம்முடைய உழவு தொழில்களுக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு தங்களுடைய நன்றிகளை சொல்லும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடுகின்றனர்.
விவசாயிகள் மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைவரும் சூரியனுக்கு நன்றி கூறும் வகையில் நாம் இந்த தைத்திருநாளை கொண்டாடி வருகின்றோம். மேலும் இந்த இனிமையான நாளில் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்தும் கொண்டாடுவது தமிழர்களின் தனிச்சிறப்பு எடுத்துரைக்கிறது.
பொங்கல் பண்டிகை விவரங்கள்:
• பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டியாகும்.
• பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள் தைப்பொங்கல் பண்டிகை ஆகும்.
• பொங்கல் பண்டிகை மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல் தினமாக கொண்டாடப்படுகிறது.
• பொங்கல் பண்டிகையின் நான்காம் நாள் உழவர் திருநாள் என நான்கு நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
Pongal Wishes in Tamil – பொங்கல் வாழ்த்துக்கள் கவிதைகள்:
போகி பண்டிகை:
பொங்கல் தினத்தின் முதல் நாளான போகி பண்டியில் பழைய துணிகளை தூக்கி எறிந்து மற்றும் அவைகளை தீயிட்டு எரித்தும் மக்கள் தங்களுடைய வீடுகளை சுத்தம் செய்தும் மேலும் அழகான பூக்களின் மூலம் வீடுகளை அலங்கரித்தும் கொண்டாடுகின்றனர்.
தைப்பொங்கல் பண்டிகை:
பொங்கல் திருநாளின் இரண்டாவது நாளாக தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதுவே பொங்கல் பண்டிகையின் மிக முக்கிய நாளாகும். மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிவார்கள். மேலும் அவரவர்களுடைய ஊர்களில் சிறப்பான விளையாட்டுக்கள் மற்றும் எண்ணற்ற போட்டிகளையும் நடத்தி மகிழ்வார்கள்.
இந்த பொங்கல் தினத்தில் சூரிய பகவானை தங்களுடைய நன்றிகளை தெரிவிக்கும் வகையில் களிமண், பானை, மஞ்சள் மற்றும் மா இலைகளால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்படும்.
இந்த பொங்கல் பானையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி, வெள்ளம், மற்றும் பால் ஆகியவை நிரப்பப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டு, மேலும் பொங்கலோ பொங்கல் என்று கூறி மகிழ்ச்சியில் கொண்டாடுவார்கள்.
மாட்டுப் பொங்கல்:
பொங்கல் தினத்தில் மாட்டுப்பொங்கல் என அழைக்கப்படும் மூன்றாவது நாள் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும், கால்நடைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த மாட்டுப் பொங்கல் தினத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றை குளிப்பாட்டி அவற்றிற்கு புதிய மாலைகள் அணிவித்து மேலும் உடல் முழுவதும் வண்ணப் பொடிகள் மூலம் அலங்கரித்தும் சிறப்பு உணவுகள் அளித்தும் கொண்டாடப்படுகிறது.
மேலும் இந்த மாட்டுப் பொங்கல் தினத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பந்தயங்களில் மாடுகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு கொண்டாடப்படுவதன் மூலம் கிராமப்புறத்தில் வசிக்கும் மனிதர்களுக்கும் அவர்கள் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கும் இடையேயான நெருங்கிய பிணைப்பை காட்டுகிறது.
காணும் பொங்கல்:
பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதாவது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கவும் குடும்பத்துடன் கூடி மகிழவும் மக்கள் அனைவரும் பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய வீட்டிற்கு சென்று விழாக்களை கொண்டாடுவதும் பட்டங்கள் பறக்க விடுவதிலும் போன்ற விளையாட்டுகளை ஒரே இடத்தில் கோடி மகிழ்வது காணும் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.
பொங்கல் தினத்தின் சிறப்புகள்:
பொங்கல் பண்டிகை என்பது ஒரு சடங்குகள் மட்டுமல்ல இது ஒரு மகிழ்ச்சி ஒற்றுமை மற்றும் விருந்தினர்களை ஒன்று சேர்க்கும் பண்டிகை ஆகும். பொதுவாக பொங்கல் பண்டிகையில் பாரம்பரிய இனிப்பு பொருட்களான வெள்ளம் அரிசி மற்றும் பருப்பு ஆகியவை ஒன்று சேர்க்கப்பட்டு அவை பொங்கல் பானையில் இட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது.
இந்த சுவையான உணவுகள் அனைத்தும் தங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து அளித்து கொடுக்கப்படுகிறது.
எல்லை கடந்த பொங்கல் பண்டிகை:
பொங்கல் பண்டிகை எனது தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை இது கர்நாடகா ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய வெவ்வேறு மாநிலங்களும் பொங்கல் என்ற பெயர் அல்லாது வேறு பெயர்களில் இவை கொண்டாடப்படுகின்றது.
பழக்கவழக்கங்கள் மற்றும் செய்முறைகள் ஆகியவை மாறுபட்டாலும் விழாக்களில் கொண்டாடப்படும் அறுவடை பயிர்கள் மற்றும் நன்றி உணர்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது.
இந்தியாவின் முதுகெலும்பு என்று கருதப்படும் விவசாய பண்டிகையை கொண்டாடப்படும் முக்கிய தினமாக இந்த பொங்கல் பண்டிகை வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகை உங்களுடைய வாழ்த்துக்களை உங்கள் நண்பர்களுக்கு தற்போது தெரிவிக்கும் விதமாக கீழே பொங்கல் பண்டிகை கவிதைகள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
2023 பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள்:
Bhogi Pongal Wishes 2023
Mattu Pongal Wishes In 2023
பொங்கல் வாழ்த்து கவிதை | Pongal Wishes In Tamil
Pongal Wishes In Tamil
Pongal Wishes In Tamil 2023 – இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2023
பொங்கல் வாழ்த்துக்கள் 2023 – Pongal Wishes In Tamil
மேலும் படிக்க: பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை |