ADVERTISEMENT
Palani Murugan Temple

Palani Murugan Temple – பழனி முருகனின் கோவில் வரலாறு

Palani Murugan Temple – பழனி முருகனின் கோவில் வரலாறு

Palani Murugan Temple

Palani Murugan temple history – பழனி முருகனின் கோவில் வரலாறு: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இருக்கக்கூடிய முருகன் கோவில் மூன்றாவது படை வீடாகும். இந்த கோவிலில் உள்ள சிலையானது போகர் என்னும் சித்தரால் வடிவமைக்கப்பட்டு சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக உள்ளது.

பழனி முருகன் கோவில் அமைந்துள்ள இடம்:

இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு திசையில் சுமார் 58 கிலோமீட்டர் தூரத்தில் பழனி நகரம் இருக்கின்றது. கொடைக்கானல் நகரத்திற்கு வடக்கு திசையிலையும், உடுமலைப்பேட்டை தெற்கு திசையில், பழனி மலை அமைந்துள்ளது. மதுரைக்கு வட மேற்கிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

பழனி முருகன் வரலாறு:

சிவபெருமான் ஞானப்பழத்தின் தனித்துவம்

Palani Murugan Temple: ஒரு நாள் நாரதர் அவர்கள் தனக்கு கிடைத்த ஞானப்பழத்தை அவர் சாப்பிடாமல் சிவபெருமான், பார்வதி அம்மையார் அவர்களுக்கு பலத்தை சாப்பிடும் படி கொண்டு வந்து கொடுத்தனர்.

அப்போது சிவபெருமானிடம் பார்வதி அம்மையார் அவர்கள் இந்த ஞான பலத்தை தன் குமரனுக்கும், விநாயகனுக்கும் பிரித்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அப்போது சிவபெருமான் இந்த பலத்தை பிரித்து சாப்பிட்டால் அதன் தனித்துவம் போய்விடும். ஆனால் இந்த பழத்தை ஒருவர் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சொன்னார்.

ADVERTISEMENT

அவ்வப்போது சிவபெருமான் தனது மகன்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். அதில் யார் இந்த உலகத்தை மூன்று முறை முதன் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு தான் இந்த ஞானப்பழம் என்று சொன்னார்.

முருகன் ,சிவபெருமான் சொன்ன உடனே தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை உடனே சுற்றி வந்தார். விநாயகர் அவர்கள் தனது பெற்றோரே தனது உலகம் என்று கருதி அவர்களை சுற்றி வந்து ஞான பலத்தை வாங்கிக் கொண்டார்.

palani murugan – இதனால் ஏமாற்றம் அடைந்த முருக பெருமான் கோபப்பட்டு அனைத்தையும் விட்டுவிட்டு எனக்குன்னு ஒரு இடம் எனக்குன்னு ஒரு மலை என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து போய்விட்டார். அப்போது அவர் வந்து நின்ற இடம் தான் பழனி. அவ்வப்போதிருந்து ஸ்ரீபழனி மலை என அழைக்கப்படுகின்றன.

முருகன் மயில் மீது ஏறி இத்தலம் வந்தார். அவரை சமாதானம் செய்வதற்கு அம்பிகை அவரை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அம்பிகை அவர்களை பின்தொடர்ந்தே வந்தார் முருகன் இத்தலத்தில் நின்றார்.

அம்பிகை அந்த முருகனை சமாதானம் செய்தால். ஆனாலும் முருகன் விடாப் பிடியாக நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன் என்று முருகன் சொல்லிவிட்டார்.

Palani Murugan Temple: பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டு. முருகப்பெருமான் பழனி மலைக்கு குழந்தை வடிவத்தில் வந்ததால் அவர் குழந்தை வேலப்பர் என பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். மேலும் பழனி வந்த பொழுது அவ்வையார் அவர்கள் முருகப்பெருமான் ஞானப்பழத்திற்காக கோபித்துக் கொண்டதை பார்த்தவர் பழம் நீயே ஞான வடிவானவன் என்று கூறினார்.இதன் பெயரை பிற்காலத்தில் பழனி என மாறியது.

ADVERTISEMENT

பழனி மலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன் அவர் பெரிய திராசின் மூலம் பழனி மலையும் இடும்பன் மலையும் தூக்கிக் கொண்டு வந்தார் என்று புராணங்களில் கூறப்படுகின்றன.

இக்கோவில் பழனி என்று அழைக்கப்படுவது காரணம் ,சிவனும் ,பார்வதியும் இளைய மகன் முருக பெருமானே ஞானப்பழம் நீ என அழைத்ததன் காரணமாக பழனி என்று பெயர் சூட்டப்பட்டது.

முருகனின் சிலையை உருவாக்கிய போகர்:

போகர் தமிழ்நாட்டில் பிரபலமான சித்தர் ஆவர். இவர் நவபாசன முருகன் சிலை பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அகத்தியர் தன்னை நாடிவரும் மக்களுக்கு, பஸ்பம், பிள்ளை போன்ற பல நோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கொடுத்தனர்.

இந்த சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பினைகளை போக்கும் அருமருந்தாக உள்ளது. பகுத்தறிவின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணம் அடைந்து வந்தனர்.

முருகன் சிவபெருமான், பார்வதியின் வரலாறு:

Palani Murugan Temple: சிவபெருமான் உமா தேவியின் முருகனைப் பிரிந்த துயரம் தாங்காமல் திருவாவினன் இல்லம் வந்து முருகனே பழம் நீ என்று அழைத்தனர்.

பழனி கோவில் மேலே மலைக்கு செல்லும் நடை பாதையில் உள்ள
சிவன் பார்வதி விநாயகர் முருகன் சிலைகள் உலகம் சுற்றும் போட்டியை குறிக்கின்றன. முருகன் கோவிலுக்கு தெற்கு மலையில் கைலாசநாதர் கோயில் காணப்படுகின்றன.

ADVERTISEMENT

அது இறைவியும் முருகனே பின்தொடர்ந்து வந்து சமாதானம் செய்வதும் உணர்த்தின்றது. பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்திய முனிவர் தனது சீடனின் இடும்பா சூரன் கயலுக்கு சென்று முருகனுக்கு

Palani Murugan Temple: அருகே உள்ள கந்தன் மலையில் சிவசக்தி வடிவேலு சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற இரண்டு சிகரங்களை கொண்டு வந்து வழிபட செய்யுமாறு அறிவுறுத்தினர்.
அகத்தியரின் உத்தரவின் படி இடும்பாசுரன் பெரும் பக்தரா இருந்ததால் அவர் தனது மனைவி இடுங்குடன் கயலுக்கு வந்து ஒரு பெரிய பிரமாதண்டத்தில் இருபுறமும் சிவஹரியையும் சக்தி கிரியையும் தோளில் சுமந்து கொண்டு வந்தார்.

சிவகிரி மலையில் ஒரு சிறுவன் கையில் சிறு தலையுடன் நிற்பதை இடும்பன் கண்டான். சிறுவனை மலையை விட்டு கீழே இறங்கி வருமாறு இடும்பன் கட்டளையிட்டான் அச்சிறுவன் இது எனக்கு சொந்தமானது என்று கூறி அச்சிறுவன இடும்பன் தாக்க முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இடும்பன் அந்தசிறுவனை தாக்கம் செய்தார். அப்போது அவர் கீழே விழுந்தார் இடும்பன் மனைவியும் அகத்திய முனிவரும் பிரார்த்தனை செய்ய ஓடிவந்து அவருக்கு சிறுவனாக வந்த முருகன் இடும்பை உயிர் பெற்றார்.

முருகப்பெருமான் இடும்பனின் அன்பின் பக்தியும் பார்த்து இடும்பைக்கு தனது காவல் தெய்வம் என்று பட்ட அளித்தார். தன் சன்னதிக்கு வரும் அனைத்து பக்தர்களையும் இடும்பனை போலவே , பால், பன்னீர் , பூ, ஆகியவற்றை வழங்கி அருள் பாலிப்பதாக வாக்களித்தார். அன்று முதல் முருகன் கோவிலில் காவடி எடுக்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெற்றது.

மழையில் இருக்கின்ற முருகப்பெருமானை வழிபட செய்வதற்கு முன்னால் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இடும்பன் சன்னதியை முதலில் வழிபட செய்ய வேண்டும். பிறகு முருக பெருமானை தரிசிக்க செல்வார்கள்.

ADVERTISEMENT

பழனி முருகன் கோவிலின் படிகளின் எண்ணிக்கை:

பழனி முருகன் கோவிலுக்கு கீழிருந்து மேலாக செல்வதற்கு இரண்டு வகையான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதலில் செல்லக்கூடிய படிக்கட்டுகள் அக்காலத்தில் மேலே கோவில் கட்டுவதற்காக யானைகளை வைத்து பொருட்களை ஏற்றி சென்றதால் இது யானை பாதை என்று அழைக்கப்படுகிறது.

பழனி முருகன் கோவிலின் படிகளின் எண்ணிக்கை : 690 படிக்கட்டுகள் உள்ளன

ஸ்ரீ பழனி முருகன் தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள்:

முருகப்பெருமானின் உருவ சிலைக்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை சந்தனம், விபூதி ,பஞ்சாமிர்தம் ,நல்லெண்ணெய், பன்னீர், இதை மட்டும் உபயோகப்படுத்துகின்றனர்.
இவைகள் பன்னீர், சந்தனம் மற்றும் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுவன. சந்தனமும், பன்னீரமும் ,மட்டும் தான் முடி முதல் கால் வரை அபிஷேகம் செய்கின்றார்கள் .

முருகப் பெருமான் ஒரு நாளைக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் அலங்காரம் செய்துள்ளார்கள். இது ஐந்து நிமிடங்கள் முதல் 8 நிமிடங்களுக்குள் மட்டுமே செய்து முடிக்கப்படும். முருகப்பெருமான் சிலையை சுற்றி எப்போதும் ஒரு சுகந்த மனம் எப்போதும் வந்து கொண்டே இருக்கும்.

இந்த சிலையை செய்யப் போகர் எடுத்துக் கொண்ட நாட்கள் 9 வருடம் 60 நாட்கள் ஆகியன.

ADVERTISEMENT

அகத்தியர், முருகர் ,அம்பாள் ,இவர்களுடைய உத்தரவின் படி போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியை எடுத்தார் இதற்காக நாலாயிரத்துக்கும் மேல் மூலைகளை பல இடங்களிலும் போய் சென்று அதை கொண்டு வந்தார்.
81 சித்தர்கள் இந்த நவபானத்தை போகர் முன்னாடியே தயார் பண்ணினார்கள்.

போகர் இகபரத்தில் இருக்கும்போது தன் மனைவிக்கு கொடுத்த வாழ்க்கை நிறைவேற்றுவதன் மூலம் முருகனை மேற்கு திசை நோக்கி நிற்கும்படி செய்தார் இ தனால் மேற்கு மலை நாட்டில் உள்ளவர்களுக்கு குலதெய்வமாக முருகப்பெருமான் தோன்றியது.

பழனி முருகன் கோவில் நடை திறக்கும் நேரம் – Palani Murugan Temple Timings:

இந்த கோயில் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு நகரத்தில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவில் நேரம் காலை: 5:45 முதல் இரவு 9 மணி வரை நடை திறக்கப்படும்.

அலங்காரம் மற்றும் பூஜை செய்யும் நேரம் – Palani Murugan Alangaram:

நேரம் காலை : 6:40 முதல் 7:15 வரை – விழா பூஜை, சன்னியாசி அலங்காரம்

நேரம் காலை : 8 முதல் 8:30 வரை –  சிறு கால சந்தி பூஜை, வேடன் அலங்காரம்

நேரம் காலை : 9 முதல் 9:30 வரை – கால சந்தி பூஜை ,பாலசுப்பிரமணியம் அலங்காரம் – palani murugan raja alangaram

ADVERTISEMENT

நேரம் மதியம்: 12 முதல் 12:45 வரை – உச்சிக்கால பூஜை , வைத்தீகல் அலங்காரம்

நேரம் மாலை: 5:30 முதல் 6:15 வரை சாய ரட்சை பூஜை, ராஜா அலங்காரம்

நேரம் இரவு 8:30 முதல் 9 மணி வரை – இராக்கால பூஜை, புஷ்பா அலங்காரம்

கோவில் திருவிழாக்கள் நடைபெறும் மாதங்கள்:

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை ,தைப்பூசம்.

1. தைப்பூசம்
2. பங்குனி உத்திரம்
3. சூரசம்காரம்

கோவிலின் சிறப்பு:

palani murugan images: முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தும் மாலை அணிந்தோம் முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.

ADVERTISEMENT

பஞ்சாமிர்தம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.

• பழனி பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் சுமந்து நடை பயணம் வந்து முருகனை தரிசிக்கின்றார்கள்.

• பழனி முருகன் மலைக்கு தனது பக்தர்கள் பால்குடம் சுமந்து நடை பயணம் வந்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்துள்ளர்.

• பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வேல் குற்றியும் அளவு குற்றியும் நடை பயணம் வந்து அவர்கள் காணிக்கையை நிறைவேற்றினர்.

• பழனி முருகன் அடிவாரத்தை சுற்றி தங்கத்தேர் தேரோட்டம் நடைபெறும் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கத்தில் இருக்கும் முருகனை வழிபாடுகள் தரிசித்தும் செல்கின்றனர்.

பிரார்த்தனை:

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கே அதிக அளவில் முருகப்பெருமானே வழிபட செய்கிறார்கள்.

ADVERTISEMENT

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள்:

பழனி முருகன் கோவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி 2023 ஆம் வருடம் அன்று நடைபெற்றது.

பழனி முருகன் கோவிலின் விபரங்கள்:

• பழனி முருகன் கோவிலின் மூலவர் பெயர்: திரு ஆவினன்குடி, குழந்தை வேலாயுதார்

• முருகன் மலைக் கோயிலின் பெயர்: தண்டாயுதபாணி,நவபாஷாண மூர்த்தி

• முருகன் கோவிலின் தலவிருட்சம்: நெல்லி மரம்

• முருக பெருமானின் கோவில் தீர்த்தம் : சண்முக நதி

• ஆகமம் : சிவாகமம்

ADVERTISEMENT

• முருகப்பெருமானின் புராண பெயர் : திரு ஆவினன்குடி

• முருக பெருமான் இருக்கும் இடம் : பழனி மலை

• மாவட்டம் : திண்டுக்கல்

• பழனி முருகப் பெருமானின் முகவரி: அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் பழனி

கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி

தஞ்சாவூர் பெரிய கோவில் வரலாறு

Leave a Reply