மூக்கிரட்டை கீரையின் தீமைகள் || Mookirattai Keeraiyin Benifits in Tamil
Mookirattai keeraiyin benifits in tamil || மூக்கிரட்டை கீரை எப்படி இருக்கும்:
மூக்கிரட்டை கீரையின் தீமைகள்:- மூக்கிரட்டை கீரை சாதாரணமாக நம் வயல்களில் மற்றும் சாலை ஓரங்களில் தரையோடு படர்ந்து கிடக்கும் ஒரு கீரை வகையாகும். பச்சை நிறத்தில் காணப்படும். பூக்கள் ஊதா நிறத்தில் காணப்படும். இதில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் உள்ளது. என்னதான் நன்மைகள் எல்லா பொருள்களிலும் இருந்தாலும் அதிலும் சில தீமைகள் இருக்கக்கூடும். அப்படி இந்த மூக்கிரட்டை கீரையிலும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சில ஆபத்துக்கள் உள்ளது.
மூக்கிரட்டை கீரை என்றால் என்ன? || மூக்கிரட்டை கீரை in english:
மூக்கிரட்டை கீரையின் தீமைகள்:- இந்தக் கீரையின் இலைகள் பச்சை நிறமாகவும், இதன் பூக்கள் ஊதா நிறத்திலும் காணப்படும். மூக்கிரட்டை கீரையில் அராசிட்டிக் அமிலம், ரெனாய்டுகள், லிக்னன்கள் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகிறது.
பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் இதை மருந்து பொருளாக பயன்படுத்தாமல் இதை ஒரு உணவாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தக் கீரையை பொறித்தோ அல்லது கடைந்தோ சாப்பாட்டில் கலந்த சாப்பிடலாம்.
இது ஒரு ஆயுர்வேத மூலிகையாகவும் கருதப்படுகிறது. உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மூக்கிரட்டை கீரை மருத்துவ குணங்கள் || மூக்கிரட்டை கீரை பயன்கள் என்ன?
1.புற்றுநோயை தடுக்க உதவுகிறது:
மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதனால் உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. நம் உடம்பில் ஏற்படும் தொற்று வியாதிகளை சரி செய்து, உடல் திசுக்களை ஒழுங்குபடுத்தி, உடலில் ஏற்படும் முதுமை தன்மையை நீக்கி, இளமையை தக்க வைக்க உதவுகிறது.
2. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது:
ஒரு மனிதனின் உடலுக்கு இதயம் நலமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் சிறுநீரகம் நலமும் முக்கியம். எனவே, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளை நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு 3-டம்ளர் தண்ணீர் ஊற்றி 1-டம்ளர் அளவுக்கு வரும் வரை நன்றாக காய்ச்சி வாரத்தில் 2-முறை குடித்து வந்தால் சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது.
அதுமட்டுமில்லாமல், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
3. கண் பார்வையை தெளிவுபடுத்த:
மூக்கிரட்டை கீரையின் தீமைகள்:- தற்போது கண்களில் கிட்ட பார்வை, எட்ட பார்வை, பார்வை தெளிவாக தெரியவில்லை போன்ற பல பிரச்சனைகள் கண்களில் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு எல்லாம் மூக்கிரட்டை செடியின் வேரினை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை இளம் சூடான நீரில் நன்றாக கலந்து குடித்து வந்தால் கண்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமடையும். கண்களும் மிகத் தெளிவாக தெரியும்.
4.மலட்டுத்தன்மையை நீக்க:
சில தம்பதியினருக்கு உடல்நிலை சரியான நிலையில் நலமாக இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். இது போன்ற மலட்டுத்தன்மையை நீக்க மூக்கிரட்டை கீரையை வாரத்தில் ஒரு முறையாவது சமைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மை நீங்கும்.
5.உடல் எடையை குறைக்க:
சிறுகுறிஞ்சான், மிளகு, நெருஞ்சில், சீரகம், திப்பிலி, மூக்கிரட்டை கீரை ஆகியவற்றையெல்லாம் சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து உடலிற்கு அழகு சேர்க்கும்.
6. மலச்சிக்கலை சரி செய்ய:
தினசரி மலம் கழிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் இருந்தாலும் சிலருக்கு தினமும் காலையில் மலம் கழிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு மூக்கிரட்டை கீரையை தினமும் பொறியியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதினால் வயிற்றில் செரிமானம் அதிகளவில் நடைபெறுகிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகி விடுகிறது.
7. இரத்தத்தை சுத்திகரிக்க:
மூக்கிரட்டை கீரையின் தீமைகள்:- மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர் போன்றவற்றை நன்றாக காய வைத்து அவற்றை தூள் செய்து சூடான நீரில் வேகவைத்து மாதத்தில் ஒரு முறை குடித்து வந்தால் ஊரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.
8. தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் தொற்றுகள் உள்ளவர்கள் மூக்கிரட்டை கீரையின் வேரை நன்றாக சுத்தம் செய்து சுத்தம் செய்த அரைத்து பாதிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம்.
மூக்கிரட்டை கீரை தீமைகள்:
• உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்து அதற்காக ஏதேனும் மருந்துகள் தினசரி நீங்கள் சாப்பிட்டு வந்தால் இந்த மூக்கிரட்டை கீரையை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
• ஏனெனில், இந்த கீரையில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். இதனால், தினசரி மருந்து சாப்பிடும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகு இந்த கீரையை சாப்பிட வேண்டும்.
• இந்த மூக்கிரட்டை கீரை நீரை அதிகளவில் உடம்பில் இருந்து வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால், இதை அதிக அளவில் நாம் சாப்பிடுவது மூலம் நம் உடலில் உள்ள நீர்கள் அனைத்தும் வெளியேறும் அபாயம் ஏற்படும். இதனால், நம் உடம்பில் நீர் சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
• இது இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. எனவே, நம் உடம்பில் தொடர்ந்து இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் மூலமாக இதயத்தில் இதய சம்பந்தமான கோளாறுகள் ஏதேனும் ஏற்பட காரணமாக இருக்கிறது.
• கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த கீரையை சாப்பிடுவது நல்லது என எந்த ஒரு மருத்துவ ஆய்விலும் கூறவில்லை. ஆகையால், இந்த மூக்கிரட்டை கீரையை சாப்பிடுவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனையை கேட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.
• இது போன்று இந்தக் கீரை மட்டுமில்லாமல், எந்த ஒரு கீரையும் இரவு நேரங்களில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது செரிமானமாகாமல் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமையும்.
• அதுபோன்று கீரைகளை சூடுபடுத்தி சாப்பிடுவதனால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிக அளவு உள்ளது.
• மது அருந்தி விட்டு கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
• எத்தனால் அலர்ஜி உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், தோல் சம்பந்தமான பிரச்சனைகளை இது அதிக அளவில் உண்டு பண்ணும்.
• ஒரு நாளில் அதிகமாக இந்த கீரை சாப்பிடும் பட்சத்தில் சிலருக்கு சேராமல் வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
mookirattai keerai || மருத்துவ குறிப்பு:
மூக்கிரட்டை பொடி பயன்கள் || மூக்கிரட்டை கீரை பொடி எப்படி சாப்பிடுவது?
மூக்கிரட்டை கீரையின் தீமைகள்:- முதுமை காலத்தில் ஏற்படக்கூடிய வாத நோய்களை சரி செய்ய மூக்கிரட்டை பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சளி, தொண்டை வலி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் மூக்கிரட்டை இலையை நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் விரைவில் குணமாகும்.
மூக்கிரட்டை கீரையின் வேர்கள் மரவள்ளிக்கிழங்கு போல் காணப்படும். இதை காய வைத்து பொடி செய்து சுடு தண்ணீரில் கலந்து குடித்தாலும் குணமாகும்.
மூக்கிரட்டை கீரை வேறு பெயர்கள்:
• புட்பகம்
• மூக்குறட்டை
• மூக்கிரட்டை
• ரத்தப் புட்பிகா
• புனர் நாவா
இது போன்ற பெயர்களால் மூக்கிரட்டை கீரை அழைக்கப்படுகிறது.
மூக்கிரட்டை கீரை சூப்:
மூக்கிரட்டை கீரையின் தீமைகள்:- மூக்கிரட்டை கீரை நன்றாக வெந்ததும் அதில் தட்டிய 2-பூண்டு, சீரகப்பொடி, மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த முறையில் தான் மூக்கிரட்டை கீரை சூப் தயார் செய்ய வேண்டும்.
Read Also:- நாவல் பழம் தீமைகள்