ADVERTISEMENT
Kamarajar history in Tamil

Kamarajar history in Tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு

Kamarajar history in Tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு

Kamarajar history in Tamil

காமராசர் வாழ்க்கை வரலாறு:

Kamarajar history in Tamil: தமிழகத்தின் ஒரு மிகச்சிறந்த முதலமைச்சர் என்றால் அது காமராஜர் என்று பலராலும் அறியப்பட்ட ஒன்று. கல்வி என்ற ஒற்றை சொல்லை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்வதற்கு வழி வகுத்ததால் இவர் “கல்விக்கு கண் திறந்த காமராஜர்” என்று அழைக்கப்படுகிறார்.

காமராசர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் நாட்டு மக்கள் முன்னேறுவதற்கு என்ன வழியோ அதனை தம் வாழ்நாள் முழுவதும் செய்து வந்ததால் இவர் “தென்னாட்டு காந்தி” என்றும் அழைக்கப்படுகிறார்.

மக்களுக்காக எண்ணற்ற நலன்களை செய்த காமராசரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரின் வாழ்க்கை வரலாற்றையும் மேலும் அவர் நடத்திய ஆட்சி முறை பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம்.

Biography of kamarajar in Tamil

• காமராஜரின் பிறந்தநாள் – ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் வருடம் பிறந்தார்

• காமராஜர் பிறந்த ஊர் – இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம்

ADVERTISEMENT

• காமராஜரின் படிப்பு – இளம் வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியவில்லை

• காமராஜரின் பெற்றோர் – குமாரசாமி மற்றும் சிவகாமி

• காமராஜரின் இறப்பு – அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 1975 ஆவது வருடம்

காமராஜரின் பிறப்பு: 

குமாரசாமி நாடார் மட்டும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி காமராஜர் மகனாக பிறந்தார். தம்முடைய இளம் வயதிலேயே அவருடைய தந்தை இறந்ததால் அவரால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

காந்தி பற்றிய முழு தகவல்கள்

காமராஜர் என்னும் பெயர் வர காரணம்:

Kamarajar history in Tamil: குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு நீண்ட நாள் குழந்தை இல்லாமல் பிறந்தார் காமராஜர். மேலும் குமாரசாமி நாடார் தம்முடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் மூலம் இவர் பிறந்தார் என கருதி “காமாட்சி” என்று பெயர் சூட்டினார். ஆனால் அவருடைய தாயார் சிவகாமி அம்மையார் அவ்வாறு அழைக்காமல் “ராஜா” என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் நாளடைவில் காமாட்சி என்ற பெயர் “காமாட்சி + ராஜா = காமராஜர்” இரண்டு பெயர்களும் ஒன்றாக இணைந்து காமராஜர் என்று ஆனது.

ADVERTISEMENT

காமராஜரின் ஆரம்ப கால வாழ்க்கை:

காமராஜரின் தாயாரான சிவகாமி அம்மையாருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் அதில் ஒருவரான கருப்பையா நாடார் என்பவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். காமராஜர் இளம் வயதிலேயே தம்முடைய தந்தையை பிரிந்ததால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதுவும் அவருடைய மாமாவான கருப்பையா நாடார் துணிக்கடையிலேயே வேலையில் சேர்ந்தார்.

காமராஜரின் அரசியல் ஈடுபாடு:

kamarajar history in tamil pdf: துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் சுதந்திர போராட்டப் பேச்சுக்களை கேட்பதில் ஆர்வமாக இருந்தார், அப்போது வரதராசலூர் நாயுடு, சத்தியமூர்த்தி மற்றும் திரு வி கா ஆகியோரின் தேச பெருந்தலைவரின் அரசியல் பேச்சைக் கேட்டு அவருடைய மீது கொன்ற பற்று காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

மேலும், 1920 ஆம் ஆண்டு காமராஜரின் தன்னுடைய 16 வது வயதில் “காங்கிரஸ்” கட்சியில் ஒரு சிறு தொண்டனாக சேர்ந்து நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எண்ணற்ற விடுதலை போராட்டத்தில் இறங்கி செயல்பட தொடங்கினார்.

காமராஜர் கட்சியில் மேன்மேலும் வளர்தல்:

ஆரம்பத்தில் காமராசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது பொதுக்கூட்டங்களுக்கு செல்வது மற்றும் அங்கு பேசும் அரசியல் தலைவர்களின் பேச்சைக் கேட்பது என்று இருந்தார். பின்னர் அவரின் அதீத அரசியல் ஈடுபாடு காரணமாக நேரடியாக கட்சியில் இறங்கத் தொடங்கினார் காமராஜர்.

perunthalaivar kamarajar history in tamil – மேலும், காங்கிரஸ் கட்சிக்காக கொடி கட்டுவதில் இருந்து தொடங்கி மக்களுக்கு கொடுக்கப்படும் துண்டு பிரச்சாரங்களை தாமே இறங்கி அனைவருக்கும் விநியோகிக்க தொடங்கினார். இவரது ஆர்வத்தை பார்த்த காங்கிரஸ் கட்சியானது அவருக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை அளித்தது.

அப்போதைய காலகட்டங்களில் காமராஜர் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்காமல் கட்சி மற்றும் கட்சி பணிகள் என்று ஓடிக்கொண்டே இருந்ததால் அவருடைய பெற்றோர் அவருடைய வாழ்க்கை கெட்டி விடுமோ எனக் கருதி அவரை கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் காமராஜருக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் அவர் வீட்டிலேயே இருப்பார் எங்கும் செல்ல மாட்டார் என்று கருதி அவருக்கு திருமண பேச்சு நடைபெற்றது ஆனால் அதனை அடியோடு தவிர்த்து விட்டார் காமராஜர்.

காமராஜர் முதல் முறையாக சிறை செல்லுதல்:

அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்பின் மீதான இறக்குமதி வரி விண்ணை தொடவே, காந்தியடிகள் உப்பிற்கு எதிராக உப்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தார். மேலும் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற படியும் அவர் செய்தார்.

1930 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்த ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் என பெயரிடப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டவர்.

மேலும் அந்த சிறையில் ஒரு வருட காலம் வரை தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

காமராஜரின் அரசியல் முன்னேற்றம்:

அதன் பின்னர் காமராஜர் எண்ணற்ற கட்சிப் பணிகளை செய்து, 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக சத்தியமூர்த்தியும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக காமராஜரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1940 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து ஒன்றின் வழக்கில் காமராஜர் முக்கிய கைதியாக சேர்க்கப்பட்டார். அப்போது வழக்கறிஞராக இருந்த வரதராசு நாயுடு என்பவரின் வழக்காடும் திறமையால் காமராஜரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் காமராசர் விடுதலை பெற்றார்.

ADVERTISEMENT

அதற்குப் பின்னரும் மேலும் பல வழக்குகளில் கைதான காமராஜர் 9 மாதங்கள் வரை சிறையில் இருந்தார்.

1942 ஆம் ஆண்டு புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டதால் 3 ஆண்டுகள் வரை சிறை செல்லும் நிலை ஏற்பட்டது.

காமராஜர் தமிழக முதல்வர் ஆகுதல்:

அப்போது கட்சி தலைமையில் இருந்த ராஜாஜி அவர்கள் அரசியலில் இருந்த பல்வேறு சிக்கல்கள் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. மேலும் 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுப்பிரமணியன் என்பவரை எதிர்த்து காமராஜர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இந்த வாக்கெடுப்பில் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்:

காமராஜரின் ஆட்சியில் தான் முதன் முதலில் இலவச கல்வி மற்றும் மாணவர்களுக்கான சீருடை மேலும் மதிய உணவு திட்டம் ஆகிவற்றை அறிமுகப்படுத்தினார்.

அப்போது நாட்டில் மூடப்பட்டு கிடந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் திறந்து, மேலும் 17 ஆயிரம் புதிய பள்ளிக்கூடங்களில் திறக்க வைத்தார்.

இதனால் இவரை மக்கள் அனைவரும் “கல்வி கண்கள் காமராஜர்” என்று அழைக்கின்றனர்.

ADVERTISEMENT

kamarajar history in tamil: அப்போது உள்ள காலகட்டத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது எண்ணி வேதனை உற்றார். மேலும் வறுமையின் காரணமாகவும் பசியின் காரணமாகவும் சிறு குழந்தைகள் வேலைக்கு செல்வதை உணர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை 27 ஆயிரம் அளவிற்கு அதிகரித்தார் காமராஜர்.

முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் மதிய உணவு திட்டத்தை செயல்பட தொடங்கி வைத்தார். அப்பொழுது மாணவர்கள் ஒருவேளை உணவுக்காக பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள் முதலில் ஒரு பள்ளியில் மட்டும் தொடங்கிய காமராஜர் பின்பு 4 பள்ளிகளுக்கு இந்த திட்டம் செயல்படும்படி விரிவு படுத்தினார்.

இதனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை கண்டு ஆர்வமற்ற காமராஜர், பின்னர் நாடு முழுவதும் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

முதலில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. அதுவரை 180 நாட்கள் வரை செயல்பட்ட பள்ளிக்கூடங்கள் அனைத்தும் 200 நாட்கள் வரை உயர்த்தப்பட்டது.

அவருக்குப் பின் 1980 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் நாடு முழுவதும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.

ADVERTISEMENT

காமராஜரின் பொன்மொழிகள் மற்றும் கவிதைகள்:

• நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.

• தாய்மார்கள் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது.

• எந்தவித அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் மற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாத அதிகாரம் என்றும் நிலைக்காது.

• ஒரு பெண் படிப்பது ஒரு குடும்பத்திற்கு படிப்பதற்கு சமம் என்பதாகும்.

காமராஜரும் தமிழ்நாடு:

• காமராஜர் பதவியேற்றதும் முதலில் நாட்டு முன்னேற்றம் மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்ற கல்வி தொழில் ஆகிய வீட்டிற்கு முன்னுரிமை அளித்தார்.

• நாட்டில் பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கையை முதலில் அதிகரித்தார். மேலும் மாணவர்களின் நலன் கருதி அதே உணவு திட்டத்தையும் செயல்படுத்த தொடங்கினார்.

ADVERTISEMENT

• காமராஜர் ஆட்சியில் தான் முதல் முதலில் எண்ணற்ற அணைகள் கட்டப்பட்டன. அதில் முக்கியமானதாக, பவானி திட்டம், மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய் திட்டம், வைகை அனைத்திட்டம், ஆழியாறு பாசன திட்டம், காவேரி டெல்டா வடிகால் வாரியத் திட்டம், பரம்பிக்குளம் மற்றும் கிருஷ்ணகிரி அரணியாறு ஆகிய நதித்திட்டங்களை ஆரம்பித்தும் அதனை நிறைவேற்றியும் காட்டினார்.

• உலகிலேயே முதல் முறையாக குடிநீருக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் உள்ள மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தொட்டி பாலம் ஒன்றை காமராஜர் கட்டிக் கொடுத்தார். இதுதான் இன்றளவும் உலகின் மிகப்பெரிய தொட்டி பாலமாக இருந்து வருகிறது.

• மேலும் நாட்டில் எண்ணற்ற தொழிற்சாலைகள் மற்றும் உருக்கு ஆலைகள் இரும்பு பெட்டி ஆலைகள் ஆகியவற்றை கொண்டு வந்தார்.

காமராஜர் கொண்டு வந்த தொழிற்சாலைகளின் பெயர்கள்:

1. நெய்வேலியில் முதல் முதலில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது.

2. பாரத மிகு மின் உற்பத்தி நிறுவனம் செயல்படுத்தப்பட்டது.

3. சென்னையில் உள்ள மணலி என்ற சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.

5. நிலக்கரி புகைப்பட சொல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

6. மேலும் மருத்துவ பணிக்காக கிண்டி அரசு மருத்துவமனையில் சோதனை கருவிகள் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

7. மேட்டூரில் காகித தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

8. பெரம்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை

9. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரத் கேவி எலக்ட்ரிகல்ஸ்.

ADVERTISEMENT

10. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம்.

11. ஊட்டியில் உள்ள கச்சா ஹிட் பிலிம் தொழிற்சாலை.

12. கிண்டி டெலிபோன்டர் தொழிற்சாலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு – தேசத்தந்தை:

• காமராஜர் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.

• தன் வாழ்வில் திருமணம் கூட செய்யாமல் மக்களின் முன்னேற்றம் மற்றும் கட்சியின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பணிகளை செய்து வந்தார்.

• நாட்டில் இளைஞர்களின் முன்னேற்றத்தை காத்தில் கொண்டு ராமராஜர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பில் சேர்ந்தார்.

ADVERTISEMENT

• தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்த காமராஜர் அவர் ஒரு வார்த்தை சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரையே நியமித்து விடலாம் என்ற அந்த அளவிற்கு அவர் ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜர்:

1. 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் முதலில் காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.

2. அதன், பின்னர் வந்த இரண்டாவது தேர்தலில் அதாவது 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் காமராஜர்.

3. பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மூன்றாவது முறையாக காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.

காமராஜரும் விவசாயிகளுக்கு செய்து நன்மையும்:

காமராஜர் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 10,000 மேற்பட்ட பம்பு செட்டுகள் மற்றும் மின்சாரம் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நாலடிவில், வந்த கலைஞர் ஆட்சியில் மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நாடு முழுவதும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழக அரசின் காமராஜர் நினைவு சின்னங்கள்:

1. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் சிலைகள் வைக்கப்பட்டது.

2. சென்னையில் உள்ள கிண்டியில் காமராஜரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.

3. தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் தொடர்பான வாழ்க்கை வரலாற்று படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மேலும் காமராஜருக்கு மணிமண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

காமராஜரின் வேறு சில பெயர்கள்:

• தென்னாட்டு காந்தி

• படிக்காத மேதை

• வைக்கம் வீரர்

ADVERTISEMENT

• பெருந்தலைவர்

• கர்மவீரர்

• கல்விக்கு கண் திறந்தவர்

காமராஜரின் ஆட்சியை பற்றி சில வரிகள்:

• இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த குறிப்பிடத்தக்க முதலமைச்சர்கள் ஒருவராக காமராஜர் தம் ஆட்சியின் மூலம் இந்திய மக்களுக்கு அனைவருக்கும் தனியாக தெரிந்தார்.

• கல்விக்கு கண் திறந்த காமராஜர் தமிழகத்தை 9 ஆண்டு காலம் வரை ஆட்சி செய்து வந்தார்.

• மன்னர் காலத்தை தவிர்த்து காமராஜர் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பலராலும் அறியப்பட்டது.

ADVERTISEMENT

• காமராஜர் ஆட்சியில் தான் முதன் முதலில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

• எண்ணற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், ஏழைகளுக்கு நல்லது செய்து வந்த காமராஜரின் இறப்புக்கு பின்னர் “பாரத ரத்னா” என்னும் விருது 1976 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு முழு தகவல்கள்:

• ஜூன் மாதம் 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்த நாளான அன்று நாட்டின் “கல்வி வளர்ச்சி நாளாக “தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

• அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 2020 ஆம் வருடம் கன்னியாகுமரியில் காமராஜரின் பெயரில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

• சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் “காமராஜர் அரங்கம்” ஒன்றை தமிழக அரசு நிதி உள்ளது.

• மேலும் இவரை கௌரவப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் அவருடைய திருவுருவ சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

• சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையம் ஒன்றில் காமராஜரின் பெயரை சூட்டி பெருமை படுத்தி உள்ளது.

• மேலும் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இவரின் முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

காமராஜரின் எளிமை குணம்:

kamarajar history in tamil pdf download: காமராஜர் தான் முதலமைச்சராய் இருந்த ஒன்பது ஆண்டு காலமும் தனக்கென்று ஒரு வீட்டை கூட கட்டிக் கொள்ளவில்லை. அவர் இதுவரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆடைகள் அணிவதிலும் எளிமையே பின்பற்றி வந்தார் கதர் சட்டை மற்றும் புதிய எண்ணமும் காணப்படுவார். எண்ணற்ற பெரும் பிரச்சினைகளை எளிமையாக தீர்த்து வைக்கும் தன்னலமற்ற எண்ணங்களைக் கொண்டிருந்தார்.

காமராஜரின் மறைவு:

அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 1975 ஆம் ஆண்டு காமராஜர் இவ் உலகை விட்டு மறைந்தார். சாதாரணமான தோற்றமும் தன்னலமற்ற வாழ்க்கையும் வாழ்ந்த காமராஜர் அவர்கள் இந்த உலகை விட்டு சென்றாலும் அவர் நடத்திய ஆட்சி இந்த உலகம் உள்ளவரை பேசப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

Read Also: 

History tamil

ADVERTISEMENT

3 comments

Leave a Reply